Search This Blog

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

Friday, August 2, 2024

ஆகஸ்ட் 3 : நற்செய்தி வாசகம்ஏரோது யோவானின் தலையை வெட்டச் செய்தான். யோவானுடைய சீடர் வந்து இயேசுவிடம் அறிவித்தனர்.✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 1-12

ஆகஸ்ட் 3  :  நற்செய்தி வாசகம்

ஏரோது யோவானின் தலையை வெட்டச் செய்தான். யோவானுடைய சீடர் வந்து இயேசுவிடம் அறிவித்தனர்.

✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 1-12
அக்காலத்தில்

குறுநில மன்னன் ஏரோது, இயேசுவைப் பற்றிய செய்தியைக் கேள்வியுற்றான். அவன் தன் ஊழியரிடம், “இவர் திருமுழுக்கு யோவான்தான். இறந்த யோவானைக் கடவுள் உயிர்பெற்றெழச் செய்தார். இதனால்தான் இந்த வல்ல செயல்களை இவர் செய்கிறார்” என்று கூறினான்.

ஏரோது தன் சகோதரனான பிலிப்பின் மனைவியாகிய ஏரோதியாவின் பொருட்டு யோவானைப் பிடித்துக் கட்டிச் சிறையில் அடைத்திருந்தான். ஏனெனில் யோவான் அவனிடம், “நீர் அவளை வைத்திருப்பது முறையல்ல” என்று சொல்லி வந்தார். ஏரோது அவரைக் கொலை செய்ய விரும்பினான்; ஆயினும் மக்கள் கூட்டத்தினர் அவரை ஓர் இறைவாக்கினர் எனக் கருதியதால் அவர்களுக்கு அஞ்சினான்.

ஏரோதின் பிறந்த நாளில் ஏரோதியாளின் மகள் அவையினர் நடுவில் நடனம் ஆடி ஏரோதை அகமகிழச் செய்தாள். அதனால் அவள் எதைக் கேட்டாலும் அளிப்பதாக அவன் ஒரு வாக்குறுதியை ஆணையிட்டு அறிவித்தான். அவள் தன் தாய் சொல்லிக் கொடுத்தபடியே, “திருமுழுக்கு யோவானின் தலையை ஒரு தட்டில் வைத்து இங்கேயே எனக்குக் கொடும்” என்று கேட்டாள். இதைக் கேட்ட அரசன் வருந்தினான்; ஆனாலும் தான் விருந்தினர்முன் ஆணையிட்டதால் அதை அவளுக்குக் கொடுக்கக் கட்டளையிட்டான்; ஆள் அனுப்பிச் சிறையில் இருந்த யோவானின் தலையை வெட்டச் செய்தான்; அவருடைய தலையை ஒரு தட்டில் வைத்துக் கொண்டு வரச் செய்து அதைச் சிறுமியிடம் கொடுத்தான். அவளும் அதைத் தன் தாயிடம் கொண்டு சென்றாள்.

யோவானுடைய சீடர் வந்து அவருடைய உடலை எடுத்துச் சென்று அடக்கம் செய்தனர்; பின்னர் இந்நிகழ்ச்சியினை இயேசுவிடம் போய் அறிவித்தனர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஆகஸ்ட் 3 : பதிலுரைப் பாடல்திபா 69: 14-15. 29-30. 32-33 (பல்லவி: 13ab காண்க)பல்லவி: எனது விண்ணப்பத்திற்கு கடவுளே பதில் மொழி தாரும்.

ஆகஸ்ட் 3  :  பதிலுரைப் பாடல்

திபா 69: 14-15. 29-30. 32-33 (பல்லவி: 13ab காண்க)

பல்லவி: எனது விண்ணப்பத்திற்கு கடவுளே பதில் மொழி தாரும்.
14
சேற்றில் நான் அமிழ்வதிலிருந்து என்னைக் காத்தருளும்; என்னை வெறுப்போரிடமிருந்தும் ஆழ்கடலிலிருந்தும் என்னை விடுவித்தருளும்.
15
பெருவெள்ளம் என்னை அடித்துக் கொண்டு போகாதிருப்பதாக! ஆழ்கடல் என்னை விழுங்காதிருப்பதாக! படுகுழி தன் வாய் திறந்து என்னை மூடிக் கொள்ளாதிருப்பதாக! - பல்லவி

29
எளியேன் சிறுமைப்பட்டவன்; காயமுற்றவன்; கடவுளே! நீர் அருளும் மீட்பு எனக்குப் பாதுகாப்பாய் இருப்பதாக!
30
கடவுளின் பெயரை நான் பாடிப் புகழ்வேன்; அவருக்கு நன்றி செலுத்தி, அவரை மாட்சிமைப்படுத்துவேன். - பல்லவி

32
எளியோர் இதைக் கண்டு மகிழ்ச்சி அடைவார்கள்; கடவுளை நாடித் தேடுகிறவர்களே, உங்கள் உள்ளம் ஊக்கமடைவதாக.
33
ஆண்டவர் ஏழைகளின் விண்ணப்பத்திற்குச் செவிசாய்க்கின்றார்; சிறைப்பட்ட தம் மக்களை அவர் புறக்கணிப்பதில்லை. - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மத் 5: 10
அல்லேலூயா, அல்லேலூயா! நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்குரியது. அல்லேலூயா.

ஆகஸ்ட் 3 : முதல் வாசகம்இச்சொற்கள் எல்லாம் உங்கள் செவிகளில் விழுமாறு உரைக்க ஆண்டவர் உங்களிடம் என்னை உண்மையாகவே அனுப்பியுள்ளார்.இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 26: 11-16, 24

ஆகஸ்ட் 3  : முதல் வாசகம்

இச்சொற்கள் எல்லாம் உங்கள் செவிகளில் விழுமாறு உரைக்க ஆண்டவர் உங்களிடம் என்னை உண்மையாகவே அனுப்பியுள்ளார்.

இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 26: 11-16, 24
அந்நாள்களில்

குருக்களும் இறைவாக்கினரும் தலைவர்களையும் மக்கள் அனைவரையும் நோக்கி, “இந்த ஆள் கொலைத் தீர்ப்புக்கு உரியவன்; ஏனெனில் நீங்களே உங்கள் காதால் கேட்டதுபோல, இந்நகருக்கு எதிராக இவன் இறைவாக்கு உரைத்துள்ளான்” என்று முறையிட்டனர்.

அப்பொழுது தலைவர்கள் மற்றும் மக்கள் அனைவரிடமும் எரேமியா கூறியது: “நீங்கள் கேட்ட இச்சொற்களை எல்லாம் இக்கோவிலுக்கும் இந்நகருக்கும் எதிராக அறிவிக்குமாறு ஆண்டவரே என்னை அனுப்பி யுள்ளார். எனவே, இப்பொழுதே உங்கள் வழிகளையும் செயல்களையும் சீர்படுத்திக்கொள்ளுங்கள்; உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் குரலுக்குச் செவிகொடுங்கள். அப்பொழுது உங்களுக்கு அறிவித்திருந்த தண்டனை பற்றி ஆண்டவர் தம் மனத்தை மாற்றிக்கொள்வார். இதோ, நான் உங்கள் கையில் இருக்கிறேன். நல்லது எனவும் நேரியது எனவும் நீங்கள் கருதுவதை எனக்குச் செய்யுங்கள். ஆனால் ஒன்றை மட்டும் நன்கு அறிந்து கொள்ளுங்கள்; என்னை நீங்கள் கொல்வீர்களாகில், மாசற்ற இரத்தப்பழி உங்கள் மேலும் இந்நகர் மேலும், அதில் குடியிருப்போர் மேலும் உறுதியாக வந்து விழும். ஏனெனில் இச்சொற்கள் எல்லாம் உங்கள் செவிகளில் விழுமாறு உரைக்க ஆண்டவர் உங்களிடம் என்னை உண்மையாகவே அனுப்பியுள்ளார்."

பின்னர் தலைவர்களும் மக்கள் எல்லாரும் குருக்களையும் இறைவாக்கினரையும் நோக்கி, “கொலைத் தீர்ப்பு இந்த ஆளுக்கு வேண்டாம்; ஏனெனில் நம் கடவுளான ஆண்டவரின் பெயராலேயே இவன் நம்மிடம் பேசியுள்ளான்” என்றார்கள்.

ஆனால், மக்கள் கையில் எரேமியா அகப்பட்டுக் கொல்லப்படாதவாறு, சாப்பானின் மகன் அகிக்காம் அவருக்கு உறுதுணையாய் இருந்தார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

August 3rd : Gospel The beheading of John the BaptistA Reading from the Holy Gospel according to St.Matthew 14: 1-12

August 3rd :  Gospel 

The beheading of John the Baptist

A Reading from the Holy Gospel according to St.Matthew 14: 1-12 
Herod the tetrarch heard about the reputation of Jesus, and said to his court, ‘This is John the Baptist himself; he has risen from the dead, and that is why miraculous powers are at work in him.’
  Now it was Herod who had arrested John, chained him up and put him in prison because of Herodias, his brother Philip’s wife. For John had told him, ‘It is against the Law for you to have her.’ He had wanted to kill him but was afraid of the people, who regarded John as a prophet. Then, during the celebrations for Herod’s birthday, the daughter of Herodias danced before the company, and so delighted Herod that he promised on oath to give her anything she asked. Prompted by her mother she said, ‘Give me John the Baptist’s head, here, on a dish.’ The king was distressed but, thinking of the oaths he had sworn and of his guests, he ordered it to be given her, and sent and had John beheaded in the prison. The head was brought in on a dish and given to the girl, who took it to her mother. John’s disciples came and took the body and buried it; then they went off to tell Jesus.

The Word of the Lord.

August 3rd : Responsorial PsalmPsalm 68(69):15-16,30-31,33-34 In your great love, answer me, O God.

August 3rd :  Responsorial Psalm

Psalm 68(69):15-16,30-31,33-34 

In your great love, answer me, O God.
Rescue me from sinking in the mud;
  save me from my foes.
Save me from the waters of the deep
  lest the waves overwhelm me.
Do not let the deep engulf me
  nor death close its mouth on me.

In your great love, answer me, O God.

As for me in my poverty and pain
  let your help, O God, lift me up.
I will praise God’s name with a song;
  I will glorify him with thanksgiving.

In your great love, answer me, O God.

The poor when they see it will be glad
  and God-seeking hearts will revive;
for the Lord listens to the needy
  and does not spurn his servants in their chains.

In your great love, answer me, O God.

Gospel Acclamation cf.Lk8:15

Alleluia, alleluia!
Blessed are those who,
with a noble and generous heart,
take the word of God to themselves
and yield a harvest through their perseverance.
Alleluia!

August 3rd : First Reading'This man has spoken to us in the name of the Lord'A Reading from the Book of Jeremiah 26: 11-16, 24

August 3rd :  First Reading

'This man has spoken to us in the name of the Lord'

A Reading from the Book of Jeremiah 26: 11-16, 24 
The priests and prophets addressed the officials and all the people, ‘This man deserves to die, since he has prophesied against this city, as you have heard with your own ears.’
  Jeremiah, however, replied to the people as follows:
  ‘The Lord himself sent me to say all the things you have heard against this Temple and this city. So now amend your behaviour and actions, listen to the voice of the Lord your God: if you do, he will relent and not bring down on you the disaster he has pronounced against you. For myself, I am as you see in your hands. Do whatever you please or think right with me. But be sure of this, that if you put me to death, you will be bringing innocent blood on yourselves, on this city and on its citizens, since the Lord has truly sent me to you to say all these words in your hearing.’
  The officials and all the people then said to the priests and prophets, ‘This man does not deserve to die: he has spoken to us in the name of the Lord our God.’
  Jeremiah had a protector in Ahikam son of Shaphan, so he was not handed over to the people to be put to death.

The Word of the Lord.

ஆகஸ்ட் 2 : நற்செய்தி வாசகம்இவர் தச்சருடைய மகன் அல்லவா? எங்கிருந்து இந்த ஞானம் இவருக்கு வந்தது?மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 54-58

ஆகஸ்ட் 2  :  நற்செய்தி வாசகம்

இவர் தச்சருடைய மகன் அல்லவா? எங்கிருந்து இந்த ஞானம் இவருக்கு வந்தது?

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 54-58
அக்காலத்தில்

இயேசு தமது சொந்த ஊருக்கு வந்து அங்குள்ள தொழுகைக்கூடத்தில் அவர்களுக்குக் கற்பித்தார். அதைக் கேட்டவர்கள் வியப்பில் ஆழ்ந்தார்கள். அவர்கள், “எங்கிருந்து இந்த ஞானம் இவருக்கு வந்தது? எப்படி இந்த வல்ல செயல்களைச் செய்கிறார்? இவர் தச்சருடைய மகன் அல்லவா? இவருடைய தாய் மரியா என்பவர்தானே? யாக்கோபு, யோசேப்பு, சீமோன், யூதா ஆகியோர் இவருடைய சகோதரர் அல்லவா? இவர் சகோதரிகள் எல்லாரும் நம்மோடு இருக்கிறார்கள் அல்லவா? பின் இவருக்கு இவையெல்லாம் எங்கிருந்து வந்தன?” என்றார்கள். இவ்வாறு அவரை ஏற்றுக்கொள்ள அவர்கள் தயங்கினார்கள்.

இயேசு அவர்களிடம், “தம் சொந்த ஊரிலும் வீட்டிலும் தவிர மற்றெங்கும் இறைவாக்கினர் மதிப்புப் பெறுவர்” என்றார். அவர்களுக்கு நம்பிக்கை இல்லாததால் அவர் அங்குப் பல வல்ல செயல்களைச் செய்யவில்லை.

ஆண்டவரின் அருள்வாக்கு.
.

ஆகஸ்ட் 2 : பதிலுரைப் பாடல்திபா 69: 4. 7-9. 13 . (பல்லவி: 13b)பல்லவி: ஆண்டவரே, உம் பேரன்பினால் எனக்குப் பதில்மொழி தாரும்.

ஆகஸ்ட் 2  :  பதிலுரைப் பாடல்

திபா 69: 4. 7-9. 13 . (பல்லவி: 13b)

பல்லவி: ஆண்டவரே, உம் பேரன்பினால் எனக்குப் பதில்மொழி தாரும்.
4.காரணமில்லாமல் என்னை வெறுப்போர் என் தலைமுடியை விட மிகுதியாய் இருக்கின்றனர்; பொய்க் குற்றம் சாட்டி என்னைத் தாக்குவோர் பெருகிவிட்டனர். நான் திருடாததை எப்படித் திருப்பித் தரமுடியும்? - பல்லவி

7.ஏனெனில், உம் பொருட்டே நான் இழிவை ஏற்றேன்; வெட்கக்கேடு என் முகத்தை மூடிவிட்டது.
8.என் சகோதரருக்கு வேற்று மனிதன் ஆனேன்; என் தாயின் பிள்ளைகளுக்கு அயலான் ஆனேன்.
9.உமது இல்லத்தின்மீது எனக்குண்டான ஆர்வம் என்னை எரித்துவிட்டது; உம்மைப் பழித்துப் பேசினவர்களின் பழிச் சொற்கள் என்மீது விழுந்தன. - பல்லவி

13.ஆண்டவரே! நான் தக்க காலத்தில் உம்மை நோக்கி விண்ணப்பம் செய்கின்றேன்; கடவுளே! உமது பேரன்பின் பெருக்கினால் எனக்குப் பதில்மொழி தாரும்; துணை செய்வதில் நீர் மாறாதவர். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

1 பேது 1: 25

அல்லேலூயா, அல்லேலூயா! “நம் ஆண்டவரின் வார்த்தையோ என்றென்றும் நிலைத்திருக்கும்.” இவ்வார்த்தையே உங்களுக்கு அறிவிக்கப்பட்ட நற்செய்தி. அல்லேலூயா

ஆகஸ்ட் 2 : முதல் வாசகம்ஆண்டவர் இல்லத்திலேயே மக்கள் எல்லாரும் எரேமியாவைச் சூழ்ந்துகொண்டனர்.இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 26: 1-9

ஆகஸ்ட் 2 :  முதல் வாசகம்

ஆண்டவர் இல்லத்திலேயே மக்கள் எல்லாரும் எரேமியாவைச் சூழ்ந்துகொண்டனர்.

இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 26: 1-9
யோசியாவின் மகனும் யூதாவின் அரசனுமான யோயாக்கிமுடைய ஆட்சியின் தொடக்கத்தில் ஆண்டவர் அருளிய வாக்கு:

“ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: ‘நீ ஆண்டவர் இல்லத்தின் முற்றத்தில் நின்றுகொண்டு, அங்கு வழிபாடு செலுத்த வரும் யூதாவின் எல்லா நகரினர்க்கும் சொல்லுமாறு நான் உனக்குக் கட்டளையிடும் எல்லாச் சொற்களையும் நீ அவர்களுக்கு அறிவி; அவற்றில் ஒன்றையும் விட்டுவிடாதே. ஒருவேளை அவர்கள் உனக்குச் செவிசாய்த்து அவரவர் தம் தீய வழிகளை விட்டுத் திரும்பலாம். அப்பொழுது அவர்களுடைய தீச்செயல்களை முன்னிட்டு அவர்களுக்கு நான் அளிக்க எண்ணியுள்ள தண்டனை பற்றி என் மனத்தை மாற்றிக்கொள்வேன்'.

நீ அவர்களிடம் சொல்ல வேண்டியது: ‘ஆண்டவர் கூறுவது இதுவே: நீங்கள் எனக்குச் செவிகொடாமலும், உங்களுக்குக் கொடுத்திருக்கும் என் சட்டத்தின்படி நடவாமலும், நீங்கள் செவிசாய்க்காதபொழுதும், நான் மீண்டும் மீண்டும் உங்களிடம் அனுப்பிவைக்கும் என் ஊழியர்களான இறைவாக்கினர்களுடைய சொற்களைக் கேளாமலும் இருப்பீர்களாகில், இக்கோவிலைச் சீலோவைப்போல் ஆக்குவேன்; இந்நகரை உலகில் எல்லா மக்களினத்தார் நடுவிலும் சாபக்குறியாக மாற்றுவேன்."

ஆண்டவர் இல்லத்தில் எரேமியா உரைத்த இச்சொற்களைக் குருக்களும் இறைவாக்கினரும் மக்கள் அனைவரும் கேட்டனர். மக்கள் அனைவருக்கும் சொல்லும்படி ஆண்டவர் கட்டளையிட்டிருந்த எல்லாவற்றையும் எரேமியா கூறிமுடித்தபோது, குருக்களும் இறைவாக்கினரும் மக்கள் அனைவரும் அவரைப் பிடித்து, “நீ கண்டிப்பாய்ச் சாகவேண்டும்” என்று கூச்சலிட்டனர். “இக்கோவில் சீலோவைப் போல் மாறும்; இந்நகர் குடியிருப்பாரற்றுப் பாழாய்ப்போகும் என்று ஆண்டவரின் பெயரால் நீ ஏன் இறைவாக்கு உரைத்தாய்?” என்று கூறி, ஆண்டவர் இல்லத்திலேயே மக்கள் எல்லாரும் எரேமியாவைச் சூழ்ந்துகொண்டனர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

August 2nd : GospelA prophet is only despised in his own country.A Reading from the Holy Gospel according to St.Matthew 13: 54-58

August 2nd  :  Gospel

A prophet is only despised in his own country.

A Reading from the Holy Gospel according to St.Matthew 13: 54-58.
Coming to his home town, Jesus taught the people in their synagogue in such a way that they were astonished and said, ‘Where did the man get this wisdom and these miraculous powers? This is the carpenter’s son, surely? Is not his mother the woman called Mary, and his brothers James and Joseph and Simon and Jude? His sisters, too, are they not all here with us? So where did the man get it all?’ And they would not accept him. But Jesus said to them, ‘A prophet is only despised in his own country and in his own house’, and he did not work many miracles there because of their lack of faith.

The Gospel of the Lord.

August 2nd : Responsorial PsalmPsalm 68(69):5,8-10,14 In your great love, answer me, O God.

August 2nd  : Responsorial Psalm

Psalm 68(69):5,8-10,14 

In your great love, answer me, O God.
More numerous than the hairs on my head
  are those who hate me without cause.
Those who attack me with lies
  are too much for my strength.
How can I restore
  what I have never stolen?

In your great love, answer me, O God.

It is for you that I suffer taunts,
  that shame covers my face,
that I have become a stranger to my brothers,
  an alien to my own mother’s sons.
I burn with zeal for your house
  and taunts against you fall on me.

In your great love, answer me, O God.

This is my prayer to you,
  my prayer for your favour.
In your great love, answer me, O God,
  with your help that never fails.

In your great love, answer me, O God.

Gospel Acclamation Jn8:12

Alleluia, alleluia!

I am the light of the world, says the Lord;
anyone who follows me will have the light of life.
Alleluia!

August 2nd : First Reading Jeremiah preaches in the Temple of the Lord and is threatened with deathA Reading from the Book of Jeremiah 26: 1-9

August 2nd  : First Reading 

Jeremiah preaches in the Temple of the Lord and is threatened with death

A Reading from the Book of Jeremiah 26: 1-9 
At the beginning of the reign of Jehoiakim son of Josiah, king of Judah, this word was addressed to Jeremiah by the Lord, ‘The Lord says this: Stand in the court of the Temple of the Lord. To all the people of the towns of Judah who come to worship in the Temple of the Lord you must speak all the words I have commanded you to tell them; do not omit one syllable. Perhaps they will listen and each turn from his evil way: if so, I shall relent and not bring the disaster on them which I intended for their misdeeds. Say to them, “The Lord says this: If you will not listen to me by following my Law which I put before you, by paying attention to the words of my servants the prophets whom I send so persistently to you, without your ever listening to them, I will treat this Temple as I treated Shiloh, and make this city a curse for all the nations of the earth.”’
  The priests and prophets and all the people heard Jeremiah say these words in the Temple of the Lord. When Jeremiah had finished saying everything that the Lord had ordered him to say to all the people, the priests and prophets seized hold of him and said, ‘You shall die! Why have you made this prophecy in the name of the Lord, “This Temple will be like Shiloh, and this city will be desolate, and uninhabited”?’ And the people were all crowding round Jeremiah in the Temple of the Lord.

The Word of the Lord.