Search This Blog

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

Tuesday, October 7, 2025

அக்டோபர் 8 : பதிலுரைப் பாடல் திபா 86: 3-4. 5-6. 9-10 (பல்லவி: 15b) பல்லவி: என் தலைவரே! நீரே பேரன்பும் உண்மையும் கொண்டவர்.

 அக்டோபர் 8 :  பதிலுரைப் பாடல்

திபா 86: 3-4. 5-6. 9-10 (பல்லவி: 15b)

பல்லவி: என் தலைவரே! நீரே பேரன்பும் உண்மையும் கொண்டவர்.


3

என் தலைவரே! என்மேல் இரக்கமாயிரும்; ஏனெனில், நாள் முழுவதும் உம்மை நோக்கி மன்றாடுகிறேன்.

4

உம் அடியானின் மனத்தை மகிழச் செய்யும்; என் தலைவரே! உம்மை நோக்கி என் உள்ளத்தை உயர்த்துகின்றேன். - பல்லவி

5

என் தலைவரே! நீர் நல்லவர்; மன்னிப்பவர்; உம்மை நோக்கி மன்றாடும் அனைவருக்கும் பேரன்பு காட்டுபவர்.

6

ஆண்டவரே, என் வேண்டுதலுக்குச் செவிகொடும்; உம் உதவியை நாடும் என் குரலைக் கேட்டருளும். - பல்லவி

9

என் தலைவரே! நீர் படைத்த மக்களினத்தார் அனைவரும் உம் திருமுன் வந்து உம்மைப் பணிவர்; உமது பெயருக்கு மாட்சி அளிப்பர்.

10

ஏனெனில், நீர் மாட்சி மிக்கவர்; வியத்தகு செயல்கள் புரிபவர்; நீர் ஒருவரே கடவுள்! - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

உரோ 8: 15

அல்லேலூயா, அல்லேலூயா! 

கடவுளின் பிள்ளைகளுக்குரிய மனப்பான்மையையே பெற்றுக்கொண்டீர்கள். அதனால் நாம், “அப்பா, தந்தையே” என அழைக்கிறோம். அல்லேலூயா

அக்டோபர் 8 : முதல் வாசகம் ஆமணக்கு செடிக்காக நீ வருந்துகிறாய்; நினிவே மாநகருக்கு நான் இரக்கம் காட்டாமல் இருப்பேனா? இறைவாக்கினர் யோனா நூலிலிருந்து வாசகம் 4: 1-11

 அக்டோபர் 8 : முதல் வாசகம்

ஆமணக்கு செடிக்காக நீ வருந்துகிறாய்; நினிவே மாநகருக்கு நான் இரக்கம் காட்டாமல் இருப்பேனா?
இறைவாக்கினர் யோனா நூலிலிருந்து வாசகம் 4: 1-11

அந்நாள்களில் யோனா கடுஞ்சினங் கொண்டு ஆண்டவரிடம் முறையிட்டார். “ஆண்டவரே, நான் என் ஊரை விட்டுப் புறப்படுமுன்பே இதைத்தானே சொன்னேன்? இதை முன்னிட்டே நான் தர்சீசுக்கு ஓடிப்போக முயன்றேன். நீர் கனிவு மிக்கவர், இரக்கமுள்ளவர், மிகுந்த பொறுமையும் அளவிலா அன்பும் உள்ள கடவுள் என்பது எனக்குத் தெரியும். அழிக்க நினைப்பீர்; பிறகு உம் மனத்தை மாற்றிக்கொள்வீர் என்பதும் எனக்கு அப்போதே தெரியும். ஆகையால் ஆண்டவரே, என் உயிரை எடுத்துக் கொள்ளும். வாழ்வதை விடச் சாவதே எனக்கு நல்லது” என்று வேண்டிக்கொண்டார்.
அதற்கு ஆண்டவர், “நீ இவ்வாறு சினங்கொள்வது முறையா?” என்று கேட்டார்.
யோனாவோ நகரை விட்டு வெளியேறினார்; நகருக்குக் கிழக்கே போய் உட்கார்ந்து கொண்டார். பிறகு அவர் தமக்கு ஒரு பந்தலை அங்கே அமைத்துக் கொண்டு, நகருக்கு நிகழப் போவதைப் பார்ப்பதற்காக அதன் நிழலில் அமர்ந்திருந்தார். கடவுளாகிய ஆண்டவரது ஏற்பாட்டின்படி ஆமணக்குச் செடி ஒன்று அங்கே முளைத்தது. அது வளர்ந்து யோனாவின் தலைக்கு நிழல் தந்து அவரது மனச்சோர்வை நீக்கியது. அந்த ஆமணக்குச் செடியைக் கண்டு யோனா மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். ஆனால் ஆண்டவரது கட்டளைப்படி மறுநாள் பொழுது விடியும் நேரத்தில் ஒரு புழு வந்து அந்த ஆமணக்குச் செடியை அரிக்கவே, செடி உலர்ந்து போயிற்று.
கதிரவன் எழுந்தபின் கடவுளின் கட்டளைப்படி, கிழக்கிலிருந்து அனற்காற்று வீசிற்று. கடும் வெயில் யோனாவின் தலையைத் தாக்கவே அவருக்கு மயக்கம் உண்டாயிற்று. “வாழ்வதை விடச் சாவதே எனக்கு நல்லது” என்று அவர் சொல்லி, தமக்குச் சாவு வரவேண்டுமென்று வேண்டிக் கொண்டார்.
அப்பொழுது கடவுள் யோனாவை நோக்கி, “ஆமணக்குச் செடியைக் குறித்து நீ இவ்வாறு சினங்கொள்வது முறையா?” என்று கேட்டார். அதற்கு யோனா, “ஆம், முறைதான்; செத்துப்போகும் அளவுக்கு நான் சினங் கொள்வது முறையே” என்று சொன்னார்.
ஆண்டவர் அவரை நோக்கி, “அந்தச் செடி ஓர் இரவில் முளைத்தெழுந்து, மறு இரவில் முற்றும் அழிந்தது. நீ அதற்காக உழைக்கவும் இல்லை. அதை வளர்க்கவும் இல்லை. அதற்கு இவ்வளவு இரக்கம் காட்டுகிறாயே! இந்த நினிவே மாநகரில் இலட்சத்து இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இருக்கிறார்கள். வலக்கை எது, இடக்கை எது என்று கூடச் சொல்லத் தெரியாத இத்தனை மக்களும், அவர்களோடு எண்ணிறந்த கால்நடை களும் உள்ள இந்த மாநகருக்கு நான் இரக்கம் காட்டாமல் இருப்பேனா?” என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.

October 8th : Gospel How to pray A reading from the Holy Gospel according to St.Luke 11:1-4

 October 8th :  Gospel 

How to pray

A reading from the Holy Gospel according to St.Luke 11:1-4 

Jesus was praying in a certain place, and when he finished, one of his disciples said to him, “Lord, teach us to pray, as John taught his disciples.” And he said to them, “When you pray, say: “Father, hallowed be your name. Your kingdom come. Give us each day our daily bread, and forgive us our sins, for we ourselves forgive everyone who is indebted to us. And lead us not into temptation.”

The Word of the Lord.

October 8th : Responsorial Psalm Psalm 86:3–4, 5–6, 9–10 (R. see 15)

 October 8th : Responsorial Psalm

Psalm 86:3–4, 5–6, 9–10 (R. see 15)
Response : You are slow to anger, O Lord, and abundant in mercy.
Have mercy on me, O Lord, for I cry to you all the day long. Gladden the soul of your servant, for I lift up my soul to you, O Lord.
Response : You are slow to anger, O Lord, and abundant in mercy.
O Lord, you are good and forgiving, full of mercy to all who call to you. Give ear, O Lord, to my prayer, and attend to my voice in supplication.
Response : You are slow to anger, O Lord, and abundant in mercy.
All the nations you have made shall come; they will bow down before you, O Lord, and glorify your name, for you are great and do marvellous deeds, you who alone are God.
Response : You are slow to anger, O Lord, and abundant in mercy.
Gospel Acclamation
Alleluia
V. Alleluia.
R. Alleluia.
V. You have received the spirit of adoption as sons, by whom we cry, “Abba! Father!”
R. Alleluia.

October 8th : First reading Jonah is angry at God's mercy A reading from the book of Jonah 4:1-11

 October 8th :  First reading 

Jonah is angry at God's mercy

A reading from the book of Jonah 4:1-11 

It displeased Jonah exceedingly, [that God did not do the evil which he had said he would do to Nineveh], and he was angry. And he prayed to the Lord and said, “O Lord, is not this what I said when I was yet in my country? That is why I made haste to flee to Tarshish; for I knew that you are a gracious God and merciful, slow to anger and abounding in steadfast love, and relenting from disaster. Therefore now, O Lord, please take my life from me, for it is better for me to die than to live.” And the Lord said, “Do you do well to be angry?” Jonah went out of the city and sat to the east of the city and made a booth for himself there. He sat under it in the shade, till he should see what would become of the city. Now the Lord God appointed a plant and made it come up over Jonah, that it might be a shade over his head, to save him from his discomfort. So Jonah was exceedingly glad because of the plant. But when dawn came up the next day, God appointed a worm that attacked the plant, so that it withered. When the sun rose, God appointed a scorching east wind, and the sun beat down on the head of Jonah so that he was faint. And he asked that he might die and said, “It is better for me to die than to live.” But God said to Jonah, “Do you do well to be angry for the plant?” And he said, “Yes, I do well to be angry, angry enough to die.” And the Lord said, “You pity the plant, for which you did not labour, nor did you make it grow, which came into being in a night and perished in a night. And should not I pity Nineveh, that great city, in which there are more than one hundred and twenty thousand persons who do not know their right hand from their left, and also much cattle?”

The word of the Lord.

Monday, October 6, 2025

அக்டோபர் 7 : நற்செய்தி வாசகம் மார்த்தா அவரைத் தம் வீட்டில் வரவேற்றார். மரியாவோ நல்ல பங்கைத் தேர்ந்தெடுத்துக் கொண்டாள். ✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 38-42

 அக்டோபர் 7 :  நற்செய்தி வாசகம்

மார்த்தா அவரைத் தம் வீட்டில் வரவேற்றார். மரியாவோ நல்ல பங்கைத் தேர்ந்தெடுத்துக் கொண்டாள்.

✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 38-42

அக்காலத்தில்

இயேசு தம் சீடர்களுடன் ஓர் ஊருக்குச் சென்றார். அங்கே பெண் ஒருவர் அவரைத் தம் வீட்டில் வரவேற்றார். அவர் பெயர் மார்த்தா. அவருக்கு மரியா என்னும் சகோதரி ஒருவர் இருந்தார். மரியா ஆண்டவருடைய காலடி அருகில் அமர்ந்து அவர் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்தார்.

ஆனால் மார்த்தா பற்பல பணிகள் புரிவதில் பரபரப்பாகி இயேசுவிடம் வந்து, “ஆண்டவரே, நான் பணிவிடை செய்ய என் சகோதரி என்னைத் தனியே விட்டுவிட்டாளே, உமக்குக் கவலையில்லையா? எனக்கு உதவி புரியும்படி அவளிடம் சொல்லும்” என்றார்.

ஆண்டவர் அவரைப் பார்த்து, “மார்த்தா, மார்த்தா! நீ பலவற்றைப் பற்றிக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய். ஆனால் தேவையானது ஒன்றே. மரியாவோ நல்ல பங்கைத் தேர்ந்தெடுத்துக் கொண்டாள்; அது அவளிடமிருந்து எடுக்கப்படாது” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

அக்டோபர் 7 : பதிலுரைப் பாடல் திபா 130: 1-2. 3-4. 7-8 (பல்லவி: 3) பல்லவி: நீர் எம் குற்றங்களை மனத்தில் கொண்டிருந்தால், யார்தான் நிலைத்து நிற்கமுடியும்?

 அக்டோபர் 7 :  பதிலுரைப் பாடல்

திபா 130: 1-2. 3-4. 7-8 (பல்லவி: 3)


பல்லவி: நீர் எம் குற்றங்களை மனத்தில் கொண்டிருந்தால், யார்தான் நிலைத்து நிற்கமுடியும்?

1

ஆண்டவரே! ஆழ்ந்த துயரத்தில் இருக்கும் நான் உம்மை நோக்கி மன்றாடுகிறேன்;

2

ஆண்டவரே! என் மன்றாட்டுக்குச் செவிசாய்த்தருளும்; என் விண்ணப்பக் குரலை உம்முடைய செவிகள் கவனத்துடன் கேட்கட்டும். - பல்லவி

3

ஆண்டவரே! நீர் எம் குற்றங்களை மனத்தில் கொண்டிருந்தால், யார்தான் நிலைத்து நிற்கமுடியும்?

4

நீரோ மன்னிப்பு அளிப்பவர்; மனிதரும் உமக்கு அஞ்சி நடப்பர். - பல்லவி

7

இஸ்ரயேலே! ஆண்டவரையே நம்பியிரு; பேரன்பு ஆண்டவரிடமே உள்ளது; மிகுதியான மீட்பு அவரிடமே உண்டு.

8

எல்லாத் தீவினைகளினின்றும் இஸ்ரயேலரை மீட்பவர் அவரே! - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

லூக் 11: 28

அல்லேலூயா, அல்லேலூயா!

 இறைவார்த்தையைக் கேட்டு அதைக் கடைப்பிடிப்போர் பேறுபெற்றோர். அல்லேலூயா.