Search This Blog

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

Monday, October 28, 2024

அக்டோபர் 29 : நற்செய்தி வாசகம்கடுகு விதை வளர்ந்து மரமாயிற்று.✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 18-21

அக்டோபர் 29 :  நற்செய்தி வாசகம்

கடுகு விதை வளர்ந்து மரமாயிற்று.

✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 18-21
அக்காலத்தில்

இயேசு மக்கள் கூட்டத்தினரைப் பார்த்து, “இறையாட்சி எதற்கு ஒப்பாயிருக்கிறது? அதை நான் எதற்கு ஒப்பிடுவேன்? அது ஒரு கடுகு விதைக்கு ஒப்பாகும். ஒருவர் அதை எடுத்துத் தம் தோட்டத்தில் இட்டார். அது வளர்ந்து மரமாயிற்று. வானத்துப் பறவைகள் அதன் கிளைகளில் தங்கின” என்று கூறினார்.

மீண்டும் அவர், “இறையாட்சியை எதற்கு ஒப்பிடுவேன்? அது புளிப்பு மாவுக்கு ஒப்பாகும். பெண் ஒருவர் அதை எடுத்து மூன்று மரக்கால் மாவில் பிசைந்து வைத்தார். மாவு முழுவதும் புளிப்பேறியது” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.
.

அக்டோபர் 29 : பதிலுரைப் பாடல்திபா 128: 1-2. 3. 4-5 (பல்லவி: 1a)பல்லவி: ஆண்டவருக்கு அஞ்சி அவர் வழி நடப்போர் பேறுபெற்றோர்!

அக்டோபர் 29 :  பதிலுரைப் பாடல்

திபா 128: 1-2. 3. 4-5 (பல்லவி: 1a)

பல்லவி: ஆண்டவருக்கு அஞ்சி அவர் வழி நடப்போர் பேறுபெற்றோர்!
1
ஆண்டவருக்கு அஞ்சி அவர் வழிகளில் நடப்போர் பேறுபெற்றோர்!
2
உமது உழைப்பின் பயனை நீர் உண்பீர்! நீர் நற்பேறும் நலமும் பெறுவீர். - பல்லவி

3
உம் இல்லத்தில் உம் துணைவியார் கனிதரும் திராட்சைக் கொடி போல் இருப்பார்; உண்ணும் இடத்தில் உம் பிள்ளைகள் ஒலிவக் கன்றுகளைப் போல் உம்மைச் சூழ்ந்திருப்பர். - பல்லவி

4
ஆண்டவருக்கு அஞ்சி நடக்கும் ஆடவர் இத்தகைய ஆசி பெற்றவராய் இருப்பார்.
5
ஆண்டவர் சீயோனிலிருந்து உமக்கு ஆசி வழங்குவாராக! உம் வாழ் நாளெல்லாம் நீர் எருசலேமின் நல்வாழ்வைக் காணும்படி செய்வாராக. - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மத் 11: 25 காண்க
அல்லேலூயா, அல்லேலூயா!

 தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் விண்ணரசின் மறைபொருளைக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். அல்லேலூயா.

அக்டோபர் 29 : முதல் வாசகம்திருமணம் பற்றிய இம்மறைபொருள் பெரிது.திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 5: 21-33

அக்டோபர் 29 :  முதல் வாசகம்

திருமணம் பற்றிய இம்மறைபொருள் பெரிது.

திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 5: 21-33
சகோதரர் சகோதரிகளே,

கிறிஸ்துவுக்கு அஞ்சி ஒருவருக்கொருவர் பணிந்திருங்கள். திருமணமான பெண்களே, ஆண்டவருக்குப் பணிந்திருப்பது போல உங்கள் கணவருக்கு நீங்கள் பணிந்திருங்கள். ஏனெனில் கிறிஸ்து திருச்சபைக்குத் தலையாய் இருப்பது போலக் கணவர் மனைவிக்குத் தலையாய் இருக்கிறார். கிறிஸ்துவே திருச்சபையாகிய உடலின் மீட்பர். திருச்சபை கிறிஸ்துவுக்குப் பணிந்திருப்பது போல, மனைவியரும் தங்கள் கணவருக்கு அனைத்திலும் பணிந்திருக்க வேண்டும்.

திருமணமான ஆண்களே, கிறிஸ்து திருச்சபை மீது அன்பு செலுத்தியது போல நீங்களும் உங்கள் மனைவியரிடம் அன்பு செலுத்துங்கள். ஏனெனில் கிறிஸ்து திருச்சபை மீது அன்பு செலுத்தி, அதற்காகத் தம்மையே ஒப்புவித்தார். வார்த்தையாலும் நீரினாலும் அதனைக் கழுவித் தூயதாக்குமாறு இவ்வாறு செய்தார். அத்திருச்சபை, கறைதிரையோ, வேறு எக்குறையோ இல்லாமல் தூய்மையும் மாசற்றதுமாய் மாட்சியுடன் தம்முன் விளங்குமாறு இப்படிச் செய்தார்.

அவ்வாறே கணவர்களும் மனைவியரைத் தம் சொந்த உடல் எனக் கருதி அன்பு செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறார்கள். தம் மனைவியின் மீது அன்பு கொள்கிறவர், தம்மீதே அன்பு கொள்கிறவர் ஆவார். தம்முடைய உடலை எவரும் வெறுப்பதில்லை. அதைப் பேணி வளர்க்கிறார். அவ்வாறே, கிறிஸ்துவும் திருச்சபையைப் பேணி வளர்த்து வருகிறார். ஏனெனில் நாம் அவரது உடலின் உறுப்புகள். “இதனால் கணவர் தம் தாய் தந்தையை விட்டுவிட்டுத் தம் மனைவியுடன் ஒன்றித்திருப்பார்; இருவரும் ஒரே உடலாயிருப்பர்” என மறைநூல் கூறுகிறது.

இதில் அடங்கியுள்ள மறைபொருள் பெரிது. இது திருச்சபைக்கும் கிறிஸ்துவுக்கும் பொருந்துவதாகக் கொள்கிறேன்.

எப்படியும், உங்களுள் ஒவ்வொருவரும் தம்மீது அன்புகொள்வது போலத் தம் மனைவியின்மீதும் அன்பு செலுத்த வேண்டும். மனைவியும் தம் கணவருக்கு அஞ்சி வாழ வேண்டும்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

October 29th : GospelThe kingdom of God is like the yeast that leavened three measures of flourA Reading from the Holy Gospel according to St.Luke 13:18-21

October 29th :  Gospel

The kingdom of God is like the yeast that leavened three measures of flour

A Reading from the Holy Gospel according to St.Luke 13:18-21 
Jesus said, ‘What is the kingdom of God like? What shall I compare it with? It is like a mustard seed which a man took and threw into his garden: it grew and became a tree, and the birds of the air sheltered in its branches.’
  Another thing he said, ‘What shall I compare the kingdom of God with? It is like the yeast a woman took and mixed in with three measures of flour till it was leavened all through.’

The Word of the Lord.

October 29th : Responsorial PsalmPsalm 127(128):1-5 O blessed are those who fear the Lord.

October 29th :  Responsorial Psalm

Psalm 127(128):1-5 

O blessed are those who fear the Lord.
O blessed are those who fear the Lord
  and walk in his ways!
By the labour of your hands you shall eat.
  You will be happy and prosper.

O blessed are those who fear the Lord.

Your wife will be like a fruitful vine
  in the heart of your house;
your children like shoots of the olive,
  around your table.

O blessed are those who fear the Lord.

Indeed thus shall be blessed
  the man who fears the Lord.
May the Lord bless you from Zion
  all the days of your life!

O blessed are those who fear the Lord.

Gospel Acclamation Jn15:15

Alleluia, alleluia!
I call you friends, says the Lord,
because I have made known to you
everything I have learnt from my Father.
Alleluia!

October 29th : First ReadingGive way to one another in obedience to ChristA reading from the letter of St.Paul to the Ephesians 5:21-33

October 29th : First Reading

Give way to one another in obedience to Christ

A reading from the letter of St.Paul to the Ephesians 5:21-33 
Give way to one another in obedience to Christ. Wives should regard their husbands as they regard the Lord, since as Christ is head of the Church and saves the whole body, so is a husband the head of his wife; and as the Church submits to Christ, so should wives to their husbands, in everything. Husbands should love their wives just as Christ loved the Church and sacrificed himself for her to make her holy. He made her clean by washing her in water with a form of words, so that when he took her to himself she would be glorious, with no speck or wrinkle or anything like that, but holy and faultless. In the same way, husbands must love their wives as they love their own bodies; for a man to love his wife is for him to love himself. A man never hates his own body, but he feeds it and looks after it; and that is the way Christ treats the Church, because it is his body – and we are its living parts. For this reason, a man must leave his father and mother and be joined to his wife, and the two will become one body. This mystery has many implications; but I am saying it applies to Christ and the Church. To sum up; you too, each one of you, must love his wife as he loves himself; and let every wife respect her husband.

The Word of the Lord.