Sunday, May 25, 2025
மே 26 : நற்செய்தி வாசகம்உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது என்னைப்பற்றிச் சான்று பகர்வார்.✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 15: 26- 16: 4
மே 26 : பதிலுரைப் பாடல்திபா 149: 1-2. 3-4. 5-6a,9b (பல்லவி: 4a)பல்லவி: ஆண்டவர் தம் மக்கள் மீது விருப்பம் கொள்கின்றார்.அல்லது: அல்லேலூயா.
மே 26 : முதல் வாசகம்பவுல் பேசியதை ஏற்றுக்கொள்ளுமாறு ஆண்டவர் அவர் உள்ளத்தைத் திறந்தார்.திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 16: 11-15
May 26th : Responsorial PsalmPsalm 149:1-6,9 The Lord takes delight in his people.orAlleluia!
May 26th : Responsorial PsalmPsalm 149:1-6,9 The Lord takes delight in his people.orAlleluia!
May 26th : First Reading The Lord opened Lydia's heart to accept what Paul was sayingA Reading from the Acts of Apostles 16: 11-15
Saturday, May 24, 2025
மே 25 : நற்செய்தி வாசகம் தூய ஆவியாராம் துணையாளர் உங்களுக்கு அனைத்தையும் கற்றுத்தருவார். ✠ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 23-29
மே 25 : நற்செய்தி வாசகம்
தூய ஆவியாராம் துணையாளர் உங்களுக்கு அனைத்தையும் கற்றுத்தருவார்.
✠ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 23-29
அக்காலத்தில்
இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம். என்மீது அன்பு கொண்டிராதவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பது இல்லை. நீங்கள் கேட்கும் வார்த்தைகள் என்னுடையவை அல்ல; அவை என்னை அனுப்பிய தந்தையுடையவை.
உங்களோடு இருக்கும்போதே இவற்றையெல்லாம் உங்களிடம் சொல்லிவிட்டேன். என் பெயரால் தந்தை அனுப்பப்போகிற தூய ஆவியாராம் துணையாளர் உங்களுக்கு அனைத்தையும் கற்றுத் தருவார்; நான் கூறிய அனைத்தையும் உங்களுக்கு நினைவூட்டுவார்.
அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன்; என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன். நான் உங்களுக்குத் தரும் அமைதி உலகம் தரும் அமைதி போன்றது அல்ல. நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம்; மருள வேண்டாம். ‘நான் போகிறேன், பின் உங்களிடம் திரும்பி வருவேன்’ என்று நான் உங்களிடம் சொன்னதைக் கேட்டீர்களே! நீங்கள் என்மீது அன்பு கொண்டிருந்தால் நான் தந்தையிடம் செல்வதுபற்றி மகிழ்ச்சி அடைவீர்கள். ஏனெனில் தந்தை என்னைவிடப் பெரியவர். இவை நிகழும்போது நீங்கள் நம்புமாறு இப்போதே, இவை நிகழுமுன்பே, சொல்லிவிட்டேன்.
ஆண்டவரின் அருள்வாக்கு.