Search This Blog

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

Monday, November 23, 2020

நவம்பர் 24 : முதல் வாசகம்உமது அரிவாளை எடுத்து அறுவடை செய்யும்; ஏனெனில் அறுவடைக் காலம் வந்துவிட்டது.திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம் 14: 14-20

நவம்பர் 24 :  முதல் வாசகம்

உமது அரிவாளை எடுத்து அறுவடை செய்யும்; ஏனெனில் அறுவடைக் காலம் வந்துவிட்டது.

திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம் 14: 14-20
சகோதரர் சகோதரிகளே,

யோவான் என்னும் நான் ஒரு வெண் மேகத்தைக் கண்டேன். அதன்மீது மானிட மகனைப் போன்ற ஒருவர் வீற்றிருந்தார். அவரது தலையில் பொன் முடியும் கையில் கூர்மையான அரிவாளும் காணப்பட்டன.

மற்றொரு வானதூதர் கோவிலிலிருந்து வெளியே வந்து, மேகத்தின்மீது வீற்றிருந்தவரை நோக்கி, “உமது அரிவாளை எடுத்து அறுவடை செய்யும்; ஏனெனில் அறுவடைக் காலம் வந்துவிட்டது; மண்ணுலகம் என்னும் பயிர் முற்றிவிட்டது” என்று உரத்த குரலில் கத்தினார். உடனே மேகத்தின்மீது வீற்றிருந்தவர் மண்ணுலகெங்கும் தமது அரிவாளை வீசி அறுவடை செய்தார்.

மற்றொரு வானதூதரும் விண்ணகத்தில் உள்ள கோவிலிலிருந்து வெளியே வந்தார். அவரிடமும் கூர்மையான அரிவாள் ஒன்று இருந்தது. நெருப்பின் மேல் அதிகாரம் கொண்டிருந்த இன்னுமொரு வானதூதர் பலிபீடத்திலிருந்து வெளியே வந்தார். அவர் கூர்மையான அரிவாளை வைத்திருந்தவரிடம், “உமது கூர்மையான அரிவாளை எடுத்து மண்ணுலகின் திராட்சைக் குலைகளை அறுத்துச் சேர்த்திடும்; ஏனெனில் திராட்சை கனிந்துவிட்டது” என்று உரத்த குரலில் கூறினார். ஆகவே அந்த வானதூதர் மண்ணுலகின் மீது தம் அரிவாளை வீசி மண்ணுலகின் திராட்சைக் குலைகளை அறுத்துச் சேர்த்தார்; கடவுளின் சீற்றம் என்னும் பெரிய பிழிவுக் குழியில் அவற்றைப் போட்டார். நகருக்கு வெளியே இருந்த அந்தப் பிழிவுக் குழியில் அவை மிதிக்கப்பட்டன. அந்தப் பிழிவுக் குழியிலிருந்து இரத்த வெள்ளம் ஏறத்தாழ இரண்டு மீட்டர் ஆழம், முந்நூறு கிலோ மீட்டர் தொலைக்குப் பாய்ந்தோடியது.

ஆண்டவரின் அருள்வாக்கு.

_This poor girl has made more offerings than anyone else._*A reading from the Holy Gospel according to St Luke 21:1-4*

*📖GOSPEL*

_This poor girl has made more offerings than anyone else._

*A reading from the Holy Gospel according to St Luke 21:1-4*
Looking up, he saw rich people putting their offerings into the treasury; and he noticed a poverty-stricken widow putting in two small coins, and he said, 'I tell you truly, this poor widow has put in more than any of them; for these have all put in money they could spare, but she in her poverty has put in all she had to live on.' 

*The Gospel of the Lord*

I believe in God, /...

_Response: Such is the people that seeks him,_*Psalms 24:1-2, 3-4, 5-6*

*𝗥𝗘𝗦𝗣𝗢𝗡𝗦𝗢𝗥𝗜𝗔𝗟*

_Response: Such is the people that seeks him,_

*Psalms 24:1-2, 3-4, 5-6*
1 [Psalm Of David] To Yahweh belong the earth and all it contains, the world and all who live there; 

2 it is he who laid its foundations on the seas, on the flowing waters fixed it firm. 

3 Who shall go up to the mountain of Yahweh? Who shall take a stand in his holy place? 

4 The clean of hands and pure of heart, whose heart is not set on vanities, who does not swear an oath in order to deceive. 

5 Such a one will receive blessing from Yahweh, saving justice from the God of his salvation. 

6 Such is the people that seeks him, that seeks your presence, God of Jacob. 

____ 

*🌿Before the gospel*
  
𝗔𝗟𝗟𝗘𝗟𝗨𝗜𝗔, 𝗔𝗟𝗟𝗘𝗟𝗨𝗜𝗔!  you also must be prepared, for you do not know at what hour the Son of man will return.
𝗔𝗟𝗟𝗘𝗟𝗨𝗜𝗔. 

FIRST READING*```I heard a sound coming out of heaven like the sound```*A reading from the Book of Revelation 14:1-3, 4-5*

_🍂Daily Reading for Monday November 23, 2020_

*FIRST READING*

```I heard a sound coming out of heaven like the sound```

*A reading from the Book of Revelation 14:1-3, 4-5*
Next in my vision I saw Mount Zion, and standing on it the Lamb who had with him a hundred and forty-four thousand people, all with his name and his Father's name written on their foreheads. I heard a sound coming out of heaven like the sound of the ocean or the roar of thunder; it was like the sound of harpists playing their harps. There before the throne they were singing a new hymn in the presence of the four living creatures and the elders, a hymn that could be learnt only by the hundred and forty-four thousand who had been redeemed from the world. These are the sons who have kept their virginity and not been defiled with women; they follow the Lamb wherever he goes; they, out of all people, have been redeemed to be the first-fruits for God and for the Lamb. No lie was found in their mouths and no fault can be found in them.

*The Word of the Lord*

நற்செய்தி வாசகம்*_இந்த ஏழைக் கைம்பெண் எல்லாரையும் விட மிகுதயான காணிக்கை போட்டிருக்கிறார்._*லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 1-4*

*நற்செய்தி வாசகம்*

_இந்த ஏழைக் கைம்பெண் எல்லாரையும் விட மிகுதயான காணிக்கை போட்டிருக்கிறார்._

*லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 1-4*
அக்காலத்தில் இயேசு நிமிர்ந்து பார்த்தபோது செல்வர்கள் தங்கள் காணிக்கைகளைக் காணிக்கைப் பெட்டிக்குள் போடுவதைக் கண்டார். வறுமையில் வாடிய ஒரு கைம்பெண்ணும் இரண்டு காசுகளை அதில் போடுவதைக் கண்டார். அவர், ``இந்த ஏழைக் கைம்பெண் எல்லாரையும் விட மிகுதியான காணிக்கை போட்டிருக்கிறார் என உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன். ஏனெனில் அவர்கள் அனைவரும் தங்களுக்கு இருந்த மிகுதியான செல்வத்திலிருந்து காணிக்கை போட்டனர். இவரோ தமக்குப் பற்றாக்குறை இருந்தும் தம் பிழைப்புக்காக வைத்திருந்த எல்லாவற்றையுமே போட்டுவிட்டார்'' என்றார். 

*இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.*

பதிலுரைப் பாடல்*திபா 24: 1-2. 3-4. 5-6 *பல்லவி: ஆண்டவரை நாடுவோரின் தலைமுறையினர் இவர்களே.*

*பதிலுரைப் பாடல்*

திபா 24: 1-2. 3-4. 5-6 

*பல்லவி: ஆண்டவரை நாடுவோரின் தலைமுறையினர் இவர்களே.* 
1 மண்ணுலகும் அதில் நிறைந்துள்ள அனைத்தும் ஆண்டவருடை யவை;
நிலவுலகும் அதில் வாழ்வனவும் அவருக்கே சொந்தம்.
2 ஏனெனில், அவரே கடல்கள் மீது அதற்கு அடித்தளமிட்டார்;
ஆறுகள் மீது அதை நிலைநாட்டினவரும் அவரே. -பல்லவி 

3 ஆண்டவரது மலையில் ஏறத் தகுதியுள்ளவர் யார்?
அவரது திருத்தலத்தில் நிற்கக்கூடியவர் யார்?
4யb கறைபடாத கைகளும் மாசற்ற மனமும் உடையவர்;
பொய்த் தெய்வங்களை நோக்கித் தம் உள்ளத்தை உயர்த்தாதவர். -பல்லவி 

5 இவரே ஆண்டவரிடம் ஆசி பெறுவார்;
தம் மீட்பராம் கடவுளிடமிருந்து நேர்மையாளர் எனத் தீர்ப்புப் பெறுவார்.
6 அவரை நாடுவோரின் தலைமுறையினர் இவர்களே;
யாக்கோபின் கடவுளது முகத்தைத் தேடுவோர் இவர்களே. -பல்லவி 

____________


*🌿நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி*

அல்லேலூயா, அல்லேலூயா! விழிப்பாய் இருங்கள்; ஆயத்தமாய் இருங்கள். ஏனெனில் நீங்கள் நினையாத நேரத்தில் மானிடமகன் வருவார். அல்லேலூயா.
மத் 24: 42

ஆண்டின் 34ஆம் வாரம் திங்கள் 23/11/2020_*முதல் வாசகம்*_விண்ணகத்திலிருந்து ஒரு குரலைக் கேட்டேன்._*திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம் 14: 1-5*

_🍃ஆண்டின் 34ஆம் வாரம் திங்கள் 23/11/2020_

*முதல் வாசகம்*

_விண்ணகத்திலிருந்து ஒரு குரலைக் கேட்டேன்._

*திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம் 14: 1-5*
யோவான் என்னும் நான் சீயோன் மலைமீது ஆட்டுக்குட்டி நிற்கக் கண்டேன். அதன் பெயரையும் அதனுடைய தந்தையின் பெயரையும் தங்களது நெற்றியில் பொறித்திருந்த ஓர் இலட்சத்து நாற்பத்து நான்காயிரம் பேர் அதனுடன் இருந்தனர். பின்பு விண்ணகத்திலிருந்து ஒரு குரலைக் கேட்டேன். அது பெரும் வெள்ளத்தின் இரைச்சல் போலும் பேரிடி முழக்கம் போலும் யாழை மீட்டுவோர் எழுப்பும் இசை போலும் ஒலித்தது. அந்த ஓர் இலட்சத்து நாற்பத்து நான்காயிரம் பேரும் அரியணை முன்னிலையில் நான்கு உயிர்களுக்கும் மூப்பர்களுக்கும் முன்பாகப் புதியதொரு பாடலைப் பாடிக்கொண்டிருந்தார்கள். மண்ணுலகிலிருந்து விலை கொடுத்து மீட்கப்பட்ட அவர்களைத் தவிர வேறு யாராலும் அந்தப் பாடலைக் கற்றுக்கொள்ள இயலவில்லை. அவர்கள் பெண்களோடு சேர்ந்து தங்களைக் கறைப்படுத்திக் கொள்ளாமல் கற்பைக் காத்துக் கொண்டவர்கள். ஆட்டுக்குட்டி சென்ற இடம் எங்கும் அதைப் பின்தொடர்ந்தவர்கள்; கடவுளுக்கும் ஆட்டுக் குட்டிக்கும் உரிய முதற்கனியாக மனித குலத்திலிருந்து விலை கொடுத்து மீட்கப்பட்டவர்கள். அவர்களது வாயினின்று பொய்யே வந்ததில்லை; ஏனெனில் அவர்கள் மாசற்றவர்கள். 

*இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.*