Wednesday, April 30, 2025
மே 1 : நற்செய்தி வாசகம்இவர் தச்சருடைய மகன் அல்லவா?✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 54-58
மே 1 : பதிலுரைப் பாடல்திபா 90: 2. 3-4. 12-13. 14,16 (பல்லவி: 17c)பல்லவி: ஆண்டவரே, நாங்கள் செய்பவற்றில் வெற்றி அருளும்!அல்லது: அல்லேலூயா.
மே 1 : தொழிலாளரான புனித யோசேப்புநினைவுமுதல் வாசகம்பலுகிப் பெருகி மண்ணுலகை நிரப்புங்கள்; அதை உங்கள் ஆற்றலுக்கு உட்படுத்துங்கள்.தொடக்க நூலிலிருந்து வாசகம் 1: 26- 2: 3
May 1st : Gospel Jesus came to his native place and taught the people in their synagogue.A Reading from the Holy Gospel according to St. Matthew 13:54-58
May 1st : Responsorial Psalm PS. 90:2, 3-4, 12-13, 14 16R. Lord, give success to the work of our hands.or: R. Alleluia.
May 1st : Memorial of Saint Joseph the Worker The Gospel for this memorial is proper.A Reading from the Book of Genesis 1:26b-2:3
Tuesday, April 29, 2025
ஏப்ரல் 30 : நற்செய்தி வாசகம் தம் மகன் வழியாக உலகை மீட்கவே, கடவுள் அவரை உலகிற்கு அனுப்பினார். ✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 16-21
ஏப்ரல் 30 : நற்செய்தி வாசகம்
தம் மகன் வழியாக உலகை மீட்கவே, கடவுள் அவரை உலகிற்கு அனுப்பினார்.
✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 16-21
அக்காலத்தில்
இயேசு நிக்கதேமிடம் கூறியது: தம் ஒரே மகன்மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்புகூர்ந்தார். உலகிற்குத் தண்டனைத் தீர்ப்பளிக்க அல்ல, தம் மகன் வழியாக அதை மீட்கவே கடவுள் அவரை உலகிற்கு அனுப்பினார். அவர்மீது நம்பிக்கை கொள்வோர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவதில்லை; ஆனால் நம்பிக்கை கொள்ளாதோர் ஏற்கெனவே தீர்ப்புப் பெற்றுவிட்டனர். ஏனெனில் அவர்கள் கடவுளின் ஒரே மகனிடம் நம்பிக்கை கொள்ளவில்லை.
ஒளி உலகிற்கு வந்திருந்தும் தம் செயல்கள் தீயனவாய் இருந்ததால் மனிதர் ஒளியைவிட இருளையே விரும்பினர். இதில்தான் அவர்களுக்கு எதிரான தண்டனைத் தீர்ப்பு அடங்கியுள்ளது. தீங்கு செய்யும் அனைவரும் ஒளியை வெறுக்கின்றனர். தங்கள் தீச்செயல்கள் வெளியாகிவிடும் என அஞ்சி அவர்கள் ஒளியிடம் வருவதில்லை. உண்மைக்கேற்ப வாழ்பவர்கள் ஒளியிடம் வருகிறார்கள். இதனால் அவர்கள் செய்யும் அனைத்தையும் கடவுளோடு இணைந்தே செய்கிறார்கள் என்பது வெளியாகும்.
ஆண்டவரின் அருள்வாக்கு.