Sunday, June 8, 2025
ஜூன் 9 : நற்செய்தி வாசகம்இவரே உம் மகன்! இவரே உம் தாய்!✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 19: 25-27
ஜூன் 9 : பதிலுரைப் பாடல்திபா 87: 1-2. 3,5. 6-7 (பல்லவி: 3)பல்லவி: கடவுளின் நகரே! உன்னைப் பற்றி மேன்மையானவை பேசப்படுகின்றன.
ஜூன் 9 : முதல் வாசகம்உயிருள்ளோர் எல்லாருக்கும் அவளே தாய்தொடக்க நூலிலிருந்து வாசகம் 3: 9-15, 20
June 9th : Gospel 'Behold your son. Behold your mother.'A Reading from the Holy Gospel according to St.John 19: 25-34
June 9th : Responsorial Psalm Psalm 86(87) Of you are told glorious things, O city of God!
June 9th : First ReadingThe mother of all those who liveA Reading from the Book of Genesis 3: 9-15,20
Saturday, June 7, 2025
ஜூன் 8 : நற்செய்தி வாசகம் தூய ஆவியாராம் துணையாளர் உங்களுக்கு அனைத்தையும் கற்றுத்தருவார். ✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 15-16, 23-26
ஜூன் 8 : நற்செய்தி வாசகம்
தூய ஆவியாராம் துணையாளர் உங்களுக்கு அனைத்தையும் கற்றுத்தருவார்.
✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 15-16, 23-26
அக்காலத்தில்
இயேசு தம் சீடருக்குக் கூறியது: “நீங்கள் என்மீது அன்பு கொண்டிருந்தால் என் கட்டளைகளைக் கடைப்பிடிப்பீர்கள். உங்களோடு என்றும் இருக்கும்படி மற்றொரு துணையாளரை உங்களுக்குத் தருமாறு நான் தந்தையிடம் கேட்பேன். தந்தை அவரை உங்களுக்கு அருள்வார்.
என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம். என்மீது அன்பு கொண்டிராதவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பதில்லை. நீங்கள் கேட்கும் வார்த்தைகள் என்னுடையவை அல்ல; அவை என்னை அனுப்பிய தந்தையுடையவை. உங்களோடு இருக்கும்போதே இவற்றையெல்லாம் உங்களிடம் சொல்லிவிட்டேன். என் பெயரால் தந்தை அனுப்பப்போகிற தூய ஆவியாராம் துணையாளர் உங்களுக்கு அனைத்தையும் கற்றுத்தருவார்; நான் கூறிய அனைத்தையும் உங்களுக்கு நினைவூட்டுவார்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.