ஆகஸ்ட் 12 : பதிலுரைப் பாடல்
இச 32: 3-4ய. 7. 8. 9, 12 (பல்லவி: 9)
பல்லவி: ஆண்டவருடைய உரிமைச் சொத்து அவர்தம் மக்களே!
3 நான் ஆண்டவரின் பெயரைப் பறைசாற்றுவேன்; நம் கடவுளின் மாட்சியைப் பாராட்டுவேன். 4ய அவரே பாறை! அவர் செயல் நிறைவானது! பல்லவி
7 பண்டைய நாள்களை நினைத்துப்பார்! பல தலைமுறையின் ஆண்டுகளைக் கவனித்துப் பார்! உன் தந்தையிடம் கேள்; அவர் உனக்கு அறிவிப்பார்; பெரியோரிடம் கேள்; அவர்கள் உனக்குச் சொல்வர். பல்லவி
8 உன்னதமானவர் வெவ்வேறு இனங்களுக்கு உரிமைச் சொத்துக்களைப் பங்கிட்டபோது, ஆதாமின் பிள்ளைகளை அவர் பிரித்தபோது, இஸ்ரயேல் மக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப மக்கள் இனங்களின் எல்லைகளையும் திட்டமிட்டார். பல்லவி
9 ஆண்டவரின் பங்கு அவர்தம் மக்களே! அவரது உரிமைச் சொத்து யாக்கோபே! 12 ஆண்டவர் ஒருவரே அவனை வழிநடத்தினார்; வேற்றுத் தெய்வங்கள் அவனோடு இருந்ததில்லை. பல்லவி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
மத் 11: 29யb
அல்லேலூயா, அல்லேலூயா! என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக் கொள்ளுங்கள். நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன். அல்லேலூயா.