இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

வெள்ளி, 4 செப்டம்பர், 2020

புனித அன்னை தெரேசா - நினைவுத் திருப்பலி வாசகங்கள்செப்டம்பர் 5 : முதல் வாசகம்அன்பு சாவைப் போல் வலிமைமிக்கது.இனிமைமிகு பாடலிலிருந்து வாசகம் 8: 6-7

புனித அன்னை தெரேசா -  நினைவுத் திருப்பலி வாசகங்கள்

செப்டம்பர்  5 : முதல் வாசகம்

அன்பு சாவைப் போல் வலிமைமிக்கது.

இனிமைமிகு பாடலிலிருந்து வாசகம் 8: 6-7
உம் நெஞ்சத்தில் இலச்சினைபோல் என்னைப் பொறித்திடுக; இலச்சினைபோல் உம் கையில் பதித்திடுக; ஆம், அன்பு சாவைப்போல் வலிமைமிக்கது; அன்பு வெறி பாதாளம்போல் பொறாதது; அதன் பொறி, எரிக்கும் நெருப்புப் பொறி; அதன் கொழுந்து பொசுக்கும் தீக்கொழுந்து.

பெருங்கடலும் அன்பை அணைக்க முடியாது; வெள்ளப்பெருக்கும் அதை மூழ்கடிக்க இயலாது; அன்புக்காக ஒருவன் தன் வீட்டுச் செல்வங்களை எல்லாம் வாரி இறைக்கலாம்; ஆயினும், அவன் ஏளனம் செய்யப்படுவது உறுதி.

ஆண்டவரின் அருள்வாக்கு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக