இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

சனி, 6 பிப்ரவரி, 2021

07 பிப்ரவரி 2021, பொதுக்காலம் 5ஆம் வாரம் - ஞாயிறு முதல் வாசகம் விடியும்வரை படுக்கையில் புரண்டு உழல்வேன். யோபு நூலிலிருந்து வாசகம் 7: 1-4,6-7

07 பிப்ரவரி 2021, பொதுக்காலம் 5ஆம் வாரம் - ஞாயிறு 

முதல் வாசகம் 

விடியும்வரை படுக்கையில் புரண்டு உழல்வேன். 

யோபு நூலிலிருந்து வாசகம் 7: 1-4,6-7 
யோபு கூறியது: மண்ணில் வாழ்வது மனிதருக்குப் போராட்டந்தானே? அவர்களின் நாள்கள் கூலியாள்களின் நாள்களைப் போன்றவைதாமே? நிழலுக்கு ஏங்கும் அடிமை போலவும், கூலிக்குக் காத்திருக்கும் வேலையாள் போலவும், வெறுமையான திங்கள்கள் எனக்கு வாய்த்தன; இன்னல்மிகு இரவுகள் எனக்குப் பங்காயின. படுக்கும்போது எப்போது எழலாம் என்பேன்! இரவோ நீண்டிருக்கும்; விடியும்வரை புரண்டு உழல்வேன். என் நாள்கள் தறியின் ஓடுகட்டையினும் விரைந்தோடுகின்றன; அவை நம்பிக்கையின்றி முடிவடைகின்றன. என் உயிர் வெறுங்காற்றே என்பதை நினைவுகூர்வீர்; என் கண்கள் மீண்டும் நன்மையைக் காணா. 

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு. 

_____

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக