இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

வெள்ளி, 19 பிப்ரவரி, 2021

20 பிப்ரவரி 2021, தவக்காலம் - திருநீற்றுப் புதனுக்குப் பின் வரும் சனி பதிலுரைப் பாடல் திபா 86: 1-2. 3-4. 5-6 (பல்லவி: 11a) பல்லவி: ஆண்டவரே, உமது வழியை எனக்குக் கற்பியும்.

20 பிப்ரவரி 2021, தவக்காலம் - திருநீற்றுப் புதனுக்குப் பின் வரும் சனி 

பதிலுரைப் பாடல் 

திபா 86: 1-2. 3-4. 5-6 (பல்லவி: 11a) 

பல்லவி: ஆண்டவரே, உமது வழியை எனக்குக் கற்பியும். 
1.ஆண்டவரே! எனக்குச் செவிசாய்த்துப் பதிலளியும்; ஏனெனில், நான் எளியவன்; வறியவன். 

2.என் உயிரைக் காத்தருளும்; ஏனெனில் நான் உம்மீது பற்றுடையவன்; உம் ஊழியனைக் காத்தருளும்; நீரே என் கடவுள்! நான் உம்மீது நம்பிக்கை கொண்டுள்ளேன். - பல்லவி 

3.என் தலைவரே! என்மேல் இரக்கமாயிரும்; ஏனெனில், நாள் முழுவதும் உம்மை நோக்கி மன்றாடுகிறேன். 

4.உம் அடியானின் மனத்தை மகிழச் செய்யும்; என் தலைவரே! உம்மை நோக்கி என் உள்ளத்தை உயர்த்துகின்றேன். - பல்லவி 

5.ஏனெனில் என் தலைவரே! நீர் நல்லவர்; மன்னிப்பவர்; உம்மை நோக்கி மன்றாடும் அனைவருக்கும் பேரன்பு காட்டுபவர். 

6.ஆண்டவரே, என் வேண்டுதலுக்குச் செவிகொடும்; உம் உதவியை நாடும் என் குரலைக் கேட்டருளும். - பல்லவி 

_____ 

நற்செய்திக்கு முன் வசனம் 

‛தீயோர் சாகவேண்டும் என்பது என் விருப்பம் அன்று; ஆனால், அத்தீயோர் தம் வழிகளினின்று திரும்பி, வாழவேண்டும் என்பதே என் விருப்பம்,’ என்கிறார் ஆண்டவர். 

______

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக