04 பிப்ரவரி 2021, பொதுக்காலம் 4ஆம் வாரம் - வியாழன்
பதிலுரைப் பாடல்
திபா 48: 1-2. 2-3. 8. 9-10
பல்லவி: உமது கோவிலில் ஆண்டவரே, உம் பேரன்பை நினைந்து உருகினோம்.
1 ஆண்டவர் மாண்பு மிக்கவர்; நம் கடவுளின் நகரில், அவரது திருமலையில் மிகுந்த புகழுக்கு உரியவர்.
2ய தொலை வடக்கில் திகழும் சீயோன் மலை அனைத்து உலகிற்கும் மகிழ்ச்சியாய் இலங்குகின்றது. -பல்லவி
2b மாவேந்தரின் நகரும் அதுவே.
3 அதன் அரண்மனைகளில் கடவுள் வீற்றிருந்து,
தம்மையே அதன் கோட்டை எனக் காட்டியுள்ளார். -பல்லவி
8 கேள்விப்பட்டவாறே நேரில் யாம் கண்டோம்;
படைகளின் ஆண்டவரது நகரில், ஆம், கடவுளின் நகரினில் கண்டோம்;
கடவுள் அந்நகரை எந்நாளும் நிலைத்திருக்கச் செய்வார். -பல்லவி
9 கடவுளே! உமது கோவிலின் நடுவில் உம் பேரன்பை நினைந்து உருகினோம்.
10 கடவுளே! உமது பெயரைப்போலவே, உமது புகழும் பூவுலகின் கடை எல்லை வரை எட்டுகின்றது;
உமது வலக்கை நீதியை நிலை நாட்டுகின்றது. -பல்லவி
__
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது; மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள். அல்லேலூயா.
____
No comments:
Post a Comment