இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

சனி, 12 ஜூன், 2021

ஜூன் 13 : பதிலுரைப் பாடல்திபா 92: 1-2. 12-13. 14-15 (பல்லவி: 1b காண்க)பல்லவி: உமது பெயரைப் பாடுவது உன்னதரே நன்று.

ஜூன்  13  : பதிலுரைப் பாடல்

திபா 92: 1-2. 12-13. 14-15 (பல்லவி: 1b காண்க)

பல்லவி: உமது பெயரைப் பாடுவது உன்னதரே நன்று.


1
ஆண்டவருக்கு நன்றியுரைப்பது நன்று; உன்னதரே! உமது பெயரைப் புகழ்ந்து பாடுவது நன்று.
2
காலையில் உமது பேரன்பையும் இரவில் உமது வாக்குப் பிறழாமையையும் எடுத்துரைப்பது நன்று. - பல்லவி

12
நேர்மையாளர் பேரீச்சை மரமெனச் செழித்தோங்குவர்; லெபனோனின் கேதுரு மரமெனத் தழைத்து வளர்வர்.
13
ஆண்டவரின் இல்லத்தில் நடப்பட்டோர் நம் கடவுளின் கோவில் முற்றங்களில் செழித்தோங்குவர். - பல்லவி

14
அவர்கள் முதிர் வயதிலும் கனி தருவர்; என்றும் செழுமையும் பசுமையுமாய் இருப்பர்;
15
‘ஆண்டவர் நேர்மையுள்ளவர்; அவரே என் பாறை; அவரிடம் அநீதி ஏதுமில்லை’ என்று அறிவிப்பர். - பல்லவி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக