இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

வியாழன், 15 டிசம்பர், 2022

டிசம்பர் 16 : நற்செய்தி வாசகம்யோவான் எரிந்து சுடர்விடும் விளக்கு.✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 33-36

டிசம்பர் 16 : நற்செய்தி வாசகம்

யோவான் எரிந்து சுடர்விடும் விளக்கு.

✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 33-36

அக்காலத்தில்
இயேசு யூதர்களை நோக்கிக் கூறியது: “யோவானிடம் ஆளனுப்பி நீங்கள் கேட்டபோது அவரும் உண்மைக்குச் சான்று பகர்ந்தார். மனிதர் தரும் சான்று எனக்குத் தேவை என்பதற்காக அல்ல; நீங்கள் மீட்புப் பெறுவதற்காகவே இதைச் சொல்கிறேன். யோவான் எரிந்து சுடர்விடும் விளக்கு. நீங்கள் சிறிது நேரமே அவரது ஒளியில் களிகூர விரும்பினீர்கள்.

யோவான் பகர்ந்த சான்றை விட மேலான சான்று எனக்கு உண்டு. நான் செய்து முடிக்குமாறு தந்தை என்னிடம் ஒப்படைத்துள்ள செயல்களே அச்சான்று. நான் செய்துவரும் அச்செயல்களே தந்தை என்னை அனுப்பியுள்ளார் என்பதற்கான சான்றாகும்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக