இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

திங்கள், 21 டிசம்பர், 2020

பதிலுரைப் பாடல்*1 சாமு 2: 1. 4-5. 6-7. 8 _🌿பல்லவி: என் மீட்பரான ஆண்டவரில் என் இதயம் மகிழ்கின்றது._

*பதிலுரைப் பாடல்*

1 சாமு 2: 1. 4-5. 6-7. 8 

_🌿பல்லவி: என் மீட்பரான ஆண்டவரில் என் இதயம் மகிழ்கின்றது._
ஆண்டவரை முன்னிட்டு என் இதயம் மகிழ்கின்றது!
ஆண்டவரில் என் ஆற்றல் உயர்கின்றது! என் வாய் என் எதிரிகளைப் பழிக்கின்றது!
ஏனெனில் நான் நீர் அளிக்கும் மீட்பில் களிப்படைகிறேன். -பல்லவி 

வலியோரின் வில்கள் உடைபடுகின்றன!
தடுமாறினோர் வலிமை பெறுகின்றனர்!
நிறைவுடன் வாழ்ந்தோர் கூலிக்கு உணவு பெறுகின்றனர்;
பசியுடன் இருந்தோர் பசி தீர்ந்தார் ஆகியுள்ளனர்!
மலடி எழுவரைப் பெற்றெடுத்துள்ளாள், பல புதல்வரைப் பெற்றவளோ, தனியள் ஆகின்றாள்! -பல்லவி 

ஆண்டவர் கொல்கிறார்; உயிரும் தருகின்றார்;
பாதாளத்தில் தள்ளுகின்றார்; உயர்த்துகின்றார்;
ஆண்டவர் ஏழையாக்குகின்றார்; செல்வராக்குகின்றார்;
தாழ்த்துகின்றார்; மேன்மைப்படுத்துகின்றார்! -பல்லவி 

யb புழுதியினின்று அவர் ஏழைகளை உயர்த்துகின்றார்!
குப்பையினின்று வறியவரைத் தூக்கிவிடுகின்றார்!
உயர் குடியினரோடு அவர்களை அமர்த்துகின்றார்! -பல்லவி 

___ 

*🌿நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி*

அல்லேலூயா, அல்லேலூயா! மக்கள் அனைவர்க்கும் அரசரே, திருச்சபையின் மூலைக்கல்லே, மண்ணிலிருந்து நீர் உருவாக்கிய மனிதனை மீட்க வாரும். அல்லேலூயா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக