இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

ஞாயிறு, 17 ஜனவரி, 2021

பதிலுரைப் பாடல் பல்லவி: `மெல்கிசெதேக்கின் முறைப்படி நீர் என்றென்றும் குருவே.' திபா 110: 1. 2. 3. 4

18 சனவரி 2021, பொதுக்காலம், வாரம் 2 திங்கள் 

பதிலுரைப் பாடல் 

பல்லவி: `மெல்கிசெதேக்கின் முறைப்படி நீர் என்றென்றும் குருவே.' 

திபா 110: 1. 2. 3. 4 
1 ஆண்டவர் என் தலைவரிடம், `நான் உம் பகைவரை உமக்குக்
கால்மணையாக்கும்வரை நீர் என் வலப்பக்கம் வீற்றிரும்' என்று உரைத்தார். பல்லவி 

2 வலிமைமிகு உமது செங்கோலை ஆண்டவர் சீயோனிலிருந்து ஓங்கச் செய்வார்;
உம் எதிரிகளிடையே ஆட்சி செலுத்தும்! பல்லவி 

3 நீர் உமது படைக்குத் தலைமை தாங்கும் நாளில் தூய கோலத்துடன் உம் மக்கள் தம்மை உவந்தளிப்பர்;
வைகறை கருவுயிர்த்த பனியைப்போல உம் இளம் வீரர் உம்மை வந்தடைவர். பல்லவி 

4 `மெல்கிசெதேக்கின் முறைப்படி நீர் என்றென்றும் குருவே'
என்று ஆண்டவர் ஆணையிட்டுச் சொன்னார்; அவர் தம் மனத்தை மாற்றிக்கொள்ளார். பல்லவி 

____ 

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி 

அல்லேலூயா, அல்லேலூயா! கடவுளுடைய வார்த்தை உயிருள்ளது, ஆற்றல் வாய்ந்தது; உள்ளத்தின் சிந்தனைகளையும் நோக்கங்களையும் சீர்தூக்கிப் பார்க்கிறது. அல்லேலூயா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக