20 சனவரி 2021, பொதுக்காலம், வாரம் 2 புதன்
பதிலுரைப் பாடல்
பல்லவி: மெல்கிசெதேக்கின் முறைப்படி நீர் என்றென்றும் குருவே.
திபா 110: 1-2. 3. 4
1 ஆண்டவர் என் தலைவரிடம், `நான் உம் பகைவரை உமக்குக் கால்மணையாக்கும்வரை
நீர் என் வலப்பக்கம் வீற்றிரும்' என்று உரைத்தார்.
2 வலிமைமிகு உமது செங்கோலை ஆண்டவர் சீயோனிலிருந்து ஓங்கச் செய்வார்;
உம் எதிரிகளிடையே ஆட்சி செலுத்தும்! -பல்லவி
3 நீர் உமது படைக்குத் தலைமை தாங்கும் நாளில் தூய கோலத்துடன் உம் மக்கள் தம்மை உவந்தளிப்பர்;
வைகறை கருவுயிர்த்த பனியைப்போல உம் இளம் வீரர் உம்மை வந்தடைவர். -பல்லவி
4 `மெல்கிசெதேக்கின் முறைப்படி நீர் என்றென்றும் குருவே'
என்று ஆண்டவர் ஆணையிட்டுச் சொன்னார்;
அவர் தம் மனத்தை மாற்றிக்கொள்ளார். -பல்லவி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! இயேசு விண்ணரசு பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார்; மக்களிடையே இருந்த நோய் நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார். அல்லேலூயா.
No comments:
Post a Comment