இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

சனி, 17 ஜூன், 2023

ஜூன் 18 : முதல் வாசகம்எனக்கு நீங்கள் குருத்துவ அரசாகவும், தூய மக்களினமாகவும் இருப்பீர்கள்.விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம் 19: 2-6a

ஜூன் 18 :  முதல் வாசகம்

எனக்கு நீங்கள் குருத்துவ அரசாகவும், தூய மக்களினமாகவும் இருப்பீர்கள்.

விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம் 19: 2-6a
அந்நாள்களில்

இரபிதீமிலிருந்து பயணம் மேற்கொண்ட இஸ்ரயேல் மக்கள் சீனாய் பாலைநிலத்தை வந்தடைந்து, பாலைநிலத்தில் பாளையம் இறங்கினர். அங்கே மலைக்கு முன்பாக இஸ்ரயேலர் பாளையம் இறங்கினர். ஆனால் மோசே கடவுளிடம் ஏறிச் சென்றார்.

அப்போது ஆண்டவர் மலையினின்று அவரை அழைத்து, யாக்கோபின் குடும்பத்தார்க்கு நீ சொல்ல வேண்டியது - இஸ்ரயேல் மக்களுக்கு நீ அறிவிக்க வேண்டியது - இதுவே: “நான் எகிப்திற்குச் செய்ததையும், கழுகுகளின் இறக்கைகளின் மேல் உங்களை ஏந்தி என்னிடம் வந்து சேரச் செய்ததையும், நீங்களே கண்டீர்கள்.

நீங்கள் என் வார்த்தைக்குச் செவிசாய்த்து என் உடன்படிக்கையைக் கடைப்பிடித்தால் அனைத்துலகும் என் உடைமையேயெனினும், நீங்களே எல்லா மக்கள் இனங்களிலும் என் தனிச் சொத்தாவீர்கள். மேலும், எனக்கு நீங்கள் குருத்துவ அரசாகவும், தூய மக்களினமாகவும் இருப்பீர்கள்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக