இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

சனி, 10 பிப்ரவரி, 2024

பிப்ரவரி 11 : பதிலுரைப் பாடல்திபா 32: 1-2. 5. 11 (பல்லவி: 7a)பல்லவி: ஆண்டவரே, நீரே எனக்குப் புகலிடம்.

பிப்ரவரி 11 :  பதிலுரைப் பாடல்

திபா 32: 1-2. 5. 11 (பல்லவி: 7a)

பல்லவி: ஆண்டவரே, நீரே எனக்குப் புகலிடம்.
1
எவரது குற்றம் மன்னிக்கப்பட்டதோ, எவரது பாவம் மறைக்கப்பட்டதோ, அவர் பேறுபெற்றவர்.
2
ஆண்டவர் எந்த மனிதரின் தீச்செயலை எண்ணவில்லையோ, எவரது மனத்தில் வஞ்சம் இல்லையோ, அவர் பேறுபெற்றவர். - பல்லவி

5
‘என் பாவத்தை உம்மிடம் அறிக்கையிட்டேன்; என் தீச்செயலை நான் மறைத்ததில்லை; ஆண்டவரிடம் என் குற்றங்களை ஒப்புக்கொள்வேன்’ என்று சொன்னேன். நீரும் என் நெறிகேட்டையும் பாவத்தையும் போக்கினீர். - பல்லவி

11
நீதிமான்களே, ஆண்டவரை முன்னிட்டு அகமகிழுங்கள்; நேரிய உள்ளத்தோரே, நீங்கள் அனைவரும் மகிழ்ந்து பாடுங்கள். - பல்லவி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக