நவம்பர் 18 :
திருத்தூதர்கள் பேதுரு, பவுல் பேராலயங்களின் நேர்ந்தளிப்பு
இன்றைய வாசகங்கள் இந்த நினைவுக்கு உரியவை.
முதல் வாசகம்
நாங்கள் உரோமை போய்ச் சேர்ந்தோம்.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 28: 11-16, 30-31
சகோதரர் சகோதரிகளே, மூன்று மாதங்களுக்குப் பிறகு, குளிர்காலத்தில் மால்தா தீவில் ஒதுங்கியிருந்த ஒரு சிறிய கப்பலில் ஏறினோம். அதில் மிதுனச் சின்னம் பொறிக்கப்பட்டிருந்தது. அது அலக்சாந்திரியாவைச் சார்ந்தது. நாங்கள் சிரக்கூசாத் துறைமுகத்தை அடைந்து அங்கு மூன்று நாள் தங்கியிருந்தோம். அங்கிருந்து கரையோரமாகச் சுற்றி வந்து இரேகியு என்னும் இடத்தை அடைந்தோம்.
ஒரு நாள் அங்கு தங்கிய பின் தெற்கிலிருந்து காற்று வீசவே இரண்டாம் நாள் புத்தயோலி என்னும் இடம் சென்றோம். அங்கு நாங்கள் சகோதரர் சகோதரிகளைக் கண்டோம். நாங்கள் அவர்களோடு ஏழு நாள் தங்குமாறு அவர்கள் எங்களைக் கேட்டுக்கொண்டார்கள். அதன்பின் நாங்கள் உரோமை போய்ச் சேர்ந்தோம்.
அங்குள்ள சகோதரர் சகோதரிகள் எங்களைப் பற்றிக் கேள்வியுற்று, `அப்பியு சந்தை', `மூன்று விடுதி' என்னும் இடங்கள் வரை எங்களை எதிர்கொண்டு வந்தார்கள். பவுல் அவர்களைக் கண்டபோது துணிவு கொண்டு கடவுளுக்கு நன்றி செலுத்தினார்.
நாங்கள் உரோமைக்கு வந்தபோது பவுல் தனி வீட்டில் தங்கியிருக்க அனுமதி பெற்றுக்கொண்டார். ஆனால் படைவீரர் ஒருவர் அவரைக் காவல் காத்து வந்தார். பவுல் அங்கு இரண்டு ஆண்டுகள் முழுவதும் தாம் வாடகைக்கு எடுத்த வீட்டில் தங்கியிருந்தார். தம்மிடம் வந்த அனைவரையும் வரவேற்று, இறையாட்சியைக் குறித்துப் பறைசாற்றி வந்தார். ஆண்டவர் இயேசு கிறிஸ்துவைப் பற்றி முழுத்துணிவோடு தடை ஏதுமின்றிக் கற்பித்துக் கொண்டிருந்தார்
ஆண்டவரின் அருள்வாக்கு.
No comments:
Post a Comment