இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

வியாழன், 26 ஜூன், 2025

ஜூன் 27 : பதிலுரைப் பாடல் திபா 23: 1-3a. 3b-4. 5. 6 (பல்லவி: 1) பல்லவி: ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை.

 ஜூன் 27 : பதிலுரைப் பாடல்

திபா 23: 1-3a. 3b-4. 5. 6 (பல்லவி: 1)


பல்லவி: ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை.

1

ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை.

2

பசும் புல்வெளிமீது எனை அவர் இளைப்பாறச் செய்வார்; அமைதியான நீர்நிலைகளுக்கு எனை அழைத்துச் செல்வார்.

3a

அவர் எனக்குப் புத்துயிர் அளிப்பார். - பல்லவி

3b

தம் பெயர்க்கேற்ப எனை நீதிவழி நடத்திடுவார்;

4

மேலும், சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும், நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்; உம் கோலும் நெடுங்கழியும் என்னைத் தேற்றும். - பல்லவி

5

என்னுடைய எதிரிகளின் கண்முன்னே எனக்கொரு விருந்தினை ஏற்பாடு செய்கின்றீர்; என் தலையில் நறுமணத் தைலம் பூசுகின்றீர்; எனது பாத்திரம் நிரம்பி வழிகின்றது. - பல்லவி

6

உண்மையாகவே, என் வாழ்நாள் எல்லாம் உம் அருள் நலமும் பேரன்பும் எனைப் புடைசூழ்ந்து வரும்; நானும் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்ந்திருப்பேன். - பல்லவி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக