சனவரி 29 : பதிலுரைப் பாடல்
திபா 3: 1-2. 3-4. 5-7a (பல்லவி: 7a)
பல்லவி: ஆண்டவரே, எழுந்தருளும்; என்னை மீட்டருளும்.
1
ஆண்டவரே, என் எதிரிகள் எவ்வளவாய்ப் பெருகிவிட்டனர்! என்னை எதிர்த்து எழுவோர் எத்தனை மிகுந்துவிட்டனர்!
2
‘கடவுள் அவனை விடுவிக்கமாட்டார்’ என்று என்னைக் குறித்துச் சொல்வோர் பலர். - பல்லவி
3
ஆயினும், ஆண்டவரே, நீரே எனைக் காக்கும் கேடயம்; நீரே என் மாட்சி; என்னைத் தலை நிமிரச் செய்பவரும் நீரே.
4
நான் உரத்த குரலில் ஆண்டவரிடம் மன்றாடுகின்றேன்; அவர் தமது திருமலையிலிருந்து எனக்குப் பதிலளிப்பார். - பல்லவி
5
நான் படுத்துறங்கி விழித்தெழுவேன்; ஏனெனில், ஆண்டவரே எனக்கு ஆதரவு.
6
என்னைச் சூழ்ந்திருக்கும் பல்லாயிரம் பகைவருக்கு நான் அஞ்சமாட்டேன்.
7a
ஆண்டவரே, எழுந்தருளும்; என் கடவுளே, என்னை மீட்டருளும். - பல்லவி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
லூக் 7: 16
அல்லேலூயா, அல்லேலூயா!
நம்மிடையே பெரிய இறைவாக்கினர் ஒருவர் தோன்றியிருக்கிறார். கடவுள் தம் மக்களைத் தேடி வந்திருக்கிறார். அல்லேலூயா.
No comments:
Post a Comment