Search This Blog

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

Saturday, August 31, 2024

 

முன்னுரை

 

 

விவிலிய மாதமாம் செப்டம்பர் மாதத்தில் விவிலியத்தின் வழியாக கடவுள் நம்மோடு உரையாடுவதை உறவாடுவதை கொண்டாட அழைக்கின்றார் நம் திருத்தந்தை பிரான்சிஸ் திருவிவிலியத்தின் கருவூலங்களை நாம் அறிந்து ஞானத்திலும் அறிவிலும் சிறந்து விளங்கிடவும் நற்கருணை கொண்டாட்டத்தில் பொருள் உணர்ந்து பங்கேற்கவும் அழைக்கின்றார் ஆண்டவர் இறைவார்த்தை வழியாக தனிமனித மற்றும் சமூக விழுமியங்களை நடைமுறைப்படுத்தி மாண்புக்குரிய மக்களினமாக மனிதர்களை உருவாக்கவே ஆண்டவர் விரும்புகின்றார் இதனையே ஒவ்வொரு திருப்பலியிலும் விவிலிய விருந்தின் வழியாக நமக்கு படைக்கின்றார் கடவுள் நம் மூதாதையரோடு உரையாடி உறவாடி உடனிருந்து வலிமைப்படுத்தியதை விவிலியம் விளக்கமாகக் கூறுகின்றது அதே வேளையில் நமது தமிழக ஆயர் பேரவையும் விவிலியம் கூறும் செய்திகளை சமூக சமய பார்வையில் தனிமனித மற்றும் சமூக முன்னேற்றத்திற்காக திரு அவையின் பாரம்பரிய வழியில் பல்வேறு தலைப்புகளில் இம்மாதத்தில் ஞாயிறுதோறும் கொண்டாட அழைக்கின்றது நாம் கடவுள் மனித உறவில் நிலைத்திருக்க உதவும் இறை வார்த்தையை பணிவோடு ஏற்று நமது வாழ்க்கை சூழலுக்கு ஏற்ப பயன்படுத்துவது நமது கடமையாகும் இதை மனதில் இருத்தி இன்றைய திருப்பதியில் முழுமையாக பங்கேற்போம்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 முதல் வாசக முன்னுரை

 

 இன்றைய முதல் வாசகம் இணைச்சட்ட நூலில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது இஸ்ரேல்  மக்கள் கடவுளுக்கு கீழ்ப்படிந்து வாழ மோசே அவர்களுக்கு எடுத்துரைக்கின்றார் அவ்வாறு வாழ்ந்தால் வாக்களிக்கப்பட்ட நாட்டையும் இறை ஆசியையும்  தொடர்ந்து பெறுவார்கள் என்றும் இறைவனால் தேர்ந்து கொள்ளப்பட்ட இஸ்ரேல்  மக்கள் இறைவன் அளிக்கும்  நியமங்களை இதயத்தில் காத்துக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்துகின்றார் இறைமொழிகளை கவனமுடன் கேட்போம். முதல் வாசகம் இணச்சட்டம் 4 அதிகாரம் 1 முதல் 2 மற்றும் 6 முதல் 8 வரை உள்ள இறை வார்த்தைகள்

 

 

 

இரண்டாம்  வாசக முன்னுரை

 

 

 

இன்றைய இரண்டாம் வாசகம் யாக்கோபு எழுதிய திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது இறை வார்த்தையை கேட்கிறவர்களாக மட்டுமில்லாமல் அதன்படி வாழ்கிறவர்களாக நாம் இருத்தல் வேண்டும். உலகின் தீமைகளில் இருந்து நம்மை காத்துக்கொள்ள வேண்டும் இறை வார்த்தையை உள்ளத்தில் இருத்தி செயல்களில் அதை வெளிப்படுத்தி இறையாசீர் பெற அழைக்கும் இறை மொழிகளை கவனமுடன் கேட்போம். இரண்டாம் வாசகம் யாக்கோபு ஒன்றாம் அதிகாரம் 17 முதல் 18   21 முதல் 22 மற்றும் 27 ஆம் இறை வார்த்தைகள்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

1

 

உங்கள் ஒளி மனிதர் முன் ஒளிர்க என்ற  இறை வார்த்தைக்கு ஏற்ப தங்கள் பணி வாழ்வால் இறை மக்களை அன்பின் பாதையில் வழிநடத்துகின்ற திருத்தந்தை ஆயர்கள் அருட்தந்தையர்கள் அருட் சகோதரிகள் இறை வல்லமையை நிறைவாக பெற்றிட வேண்டும் என்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்

 

 

2

 

 ஆண்டவருக்கு அஞ்சி அவர் வழிகளில் நடப்போர் பேறு பெற்றோர் என்று றைவார்த்தைக்கேற்ப எம் பங்கின் அனைத்து குடும்பங்களிலும் தெய்வ பயம் இறை நம்பிக்கை மிகுதியாகவும் அன்பு நம்பிக்கை மன்னிப்பு பகிர்வு போன்ற நற்குணங்களால் அனைவரும் நிரம்பி மகிழ்வுடன் வாழ வரமருள வேண்டும் என்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்

 

 

3

 

ஆண்டவர் ஒடுக்கப்பட்டோருக்கான நீதியை நிலைநாட்டுகின்றார் என்ற இறைவார்த்தைக்கேற்ப  நாட்டை ஆள்வோர்  மக்கள் நலனுக்காக அடிப்படை தேவைகளை நிறைவு செய்வதற்காக தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்துவதற்காக நல்ல திட்டங்களை செயல்படுத்த உதவி புரிய வேண்டும் என்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்

 

 

 

4

 

 

ஆண்டவர் என் கற்பாறை எனக்கு மீட்பளிக்கும்  வல்லமை என்ற இறைவார்த்தைக்கேற்ப கடன் நோய் முதுமையால் தவிப்போர் உம் பேரிக்கத்தால் மீட்க பெறவும் நோயால் வருந்துவோர் விரைவில் நல்ல சுகம் பெறவும் உதவி புரிய வேண்டும் என்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்

 

 

 

 

 

 


 

 

நன்றி மன்றாட்டு

 

நீதியின் தெய்வமே எம் இறைவா எம் பெற்றோர் குடும்ப உறவுகள் ஆன்மீக வழிகாட்டிகள் வாயிலாக நன்னெறியில் வளர பயிற்சி அளிப்பதற்காக உமக்கு நன்றி கூறுகின்றோம்

 

 

 கருணையின் தெய்வமே திருப்பலியில்  பங்கேற்கவும் இறை வார்த்தைகளை வாசிக்கவும் தியானிக்கவும்  தன் வழியாக இறை நம்பிக்கையை வலுப்படுத்துவதற்காகவும் உமக்கு நன்றி கூறுகின்றோம்

 

 

அன்பே உருவான இறைவா ! நீர் திரு விவிலியம் வழியாக எம்மோடு உறவாடுகின்ற மேலான செயலுக்காக இறைவா உமக்கு நன்றி.

 

 

 

No comments:

Post a Comment