இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

வியாழன், 21 ஜனவரி, 2021

பதிலுரைப் பாடல் பல்லவி: பேரன்பும் உண்மையும் ஒன்றையொன்று சந்திக்கும். திபா 85: 7,9. 10-11. 12-13 (பல்லவி: 10ய)

22 சனவரி 2021, பொதுக்காலம், வாரம் 2 வெள்ளி 

பதிலுரைப் பாடல் 

பல்லவி: பேரன்பும் உண்மையும் ஒன்றையொன்று சந்திக்கும். 

திபா 85: 7,9. 10-11. 12-13 (பல்லவி: 10ய) 
7 ஆண்டவரே, உமது பேரன்பை எங்களுக்குக் காட்டியருளும்;
உமது மீட்பையும் எங்களுக்குத் தந்தருளும்.
9 அவருக்கு அஞ்சி நடப்போர்க்கு அவரது மீட்பு அண்மையில் உள்ளது என்பது உறுதி;
நம் நாட்டில் அவரது மாட்சி குடிகொள்ளும். -பல்லவி 

10 பேரன்பும் உண்மையும் ஒன்றையொன்று சந்திக்கும்;
நீதியும் நிறைவாழ்வும் ஒன்றையொன்று முத்தமிடும்.
11 மண்ணினின்று உண்மை முளைத்தெழும்;
விண்ணினின்று நீதி கீழ்நோக்கும். -பல்லவி 

12 நல்லதையே ஆண்டவர் அருள்வார்;
நல் விளைவை நம் நாடு நல்கும்.
13 நீதி அவர்முன் செல்லும்;
அவர்தம் அடிச்சுவடுகளுக்கு வழி வகுக்கும். -பல்லவி 

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி 

அல்லேலூயா, அல்லேலூயா! உலகினரின் குற்றங்களைப் பொருட்படுத்தாமல் கடவுள் கிறிஸ்துவின் வாயிலாக அவர்களைத் தம்மோடு ஒப்புரவாக்கினார். அந்த ஒப்புரவுச் செய்தியை அவரே எங்களிடம் ஒப்படைத்தார். அல்லேலூயா. 

________

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக