Search This Blog

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

Friday, June 30, 2023

ஜூலை 1 : நற்செய்தி வாசகம்கிழக்கிலும் மேற்கிலுமிருந்து பலர் வந்து, ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோருடன் விண்ணரசின் பந்தியில் அமர்வர்.✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 5-17

ஜூலை 1 :  நற்செய்தி வாசகம்

கிழக்கிலும் மேற்கிலுமிருந்து பலர் வந்து, ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோருடன் விண்ணரசின் பந்தியில் அமர்வர்.

✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 5-17
அக்காலத்தில்

இயேசு கப்பர்நாகுமுக்குச் சென்றபோது நூற்றுவர் தலைவர் ஒருவர் அவரிடம் உதவி வேண்டி வந்தார். “ஐயா, என் பையன் முடக்குவாதத்தால் மிகுந்த வேதனையுடன் படுத்துக் கிடக்கிறான்” என்றார். இயேசு அவரிடம், “நான் வந்து அவனைக் குணமாக்குவேன்” என்றார்.

நூற்றுவர் தலைவர் மறுமொழியாக, “ஐயா, நீர் என் வீட்டிற்குள் அடியெடுத்து வைக்க நான் தகுதியற்றவன். ஆனால் ஒரு வார்த்தை மட்டும் சொல்லும்; என் பையன் நலமடைவான். நான் அதிகாரத்துக்கு உட்பட்டவன். என் அதிகாரத்துக்கு உட்பட்ட படைவீரரும் உள்ளனர். நான் அவர்களுள் ஒருவரிடம் ‘செல்க’ என்றால் அவர் செல்கிறார். வேறு ஒருவரிடம் ‘வருக’ என்றால் அவர் வருகிறார். என் பணியாளரைப் பார்த்து ‘இதைச் செய்க’ என்றால் அவர் செய்கிறார்” என்றார்.

இதைக் கேட்டு இயேசு வியந்து, தம்மைப் பின்தொடர்ந்து வந்தவர்களை நோக்கி, “உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: இஸ்ரயேலர் யாரிடமும் இத்தகைய நம்பிக்கையை நான் கண்டதில்லை. கிழக்கிலும் மேற்கிலுமிருந்து பலர் வந்து ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோருடன் விண்ணரசின் பந்தியில் அமர்வர். அரசுக்கு உரியவர்களோ புறம்பாக உள்ள இருளில் தள்ளப்படுவார்கள். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும்” என்றார். பின்னர் இயேசு நூற்றுவர் தலைவரை நோக்கி, “நீர் போகலாம், நீர் நம்பியவண்ணமே உமக்கு நிகழும்” என்றார். அந்நேரமே பையன் குணமடைந்தான்.

இயேசு பேதுருவின் வீட்டிற்குள் சென்றபோது, பேதுருவின் மாமியார் காய்ச்சலாய்ப் படுத்திருப்பதைக் கண்டார். இயேசு அவரது கையைத் தொட்டதும் காய்ச்சல் அவரை விட்டு நீங்கிற்று. அவரும் எழுந்து இயேசுவுக்குப் பணிவிடை செய்தார்.

பேய் பிடித்த பலரை மாலை வேளையில் இயேசுவிடம் கொண்டு வந்தனர். அவர் ஒரு வார்த்தை சொல்ல அசுத்த ஆவிகள் ஓடிப்போயின. மேலும் எல்லா நோயாளர்களையும் அவர் குணமாக்கினார். இவ்வாறு, ‘அவர் நம் பிணிகளைத் தாங்கிக்கொண்டார்; நம் துன்பங்களைச் சுமந்துகொண்டார்’ என்று இறைவாக்கினர் எசாயா உரைத்தது நிறைவேறியது.

ஆண்டவரின் அருள்வாக்கு.
.

ஜூலை 1 : பதிலுரைப் பாடல்லூக் 1: 47. 48-49. 50,53. 54-55 (பல்லவி: 54a)பல்லவி: ஆண்டவர் தம் இரக்கத்தை என்றும் நினைவில் கொண்டுள்ளார்

ஜூலை 1 :  பதிலுரைப் பாடல்

லூக் 1: 47. 48-49. 50,53. 54-55 (பல்லவி: 54a)

பல்லவி: ஆண்டவர் தம் இரக்கத்தை என்றும் நினைவில் கொண்டுள்ளார்.
47
ஆண்டவரை எனது உள்ளம் போற்றிப் பெருமைப்படுத்துகின்றது. என் மீட்பராம் கடவுளை நினைத்து எனது மனம் பேருவகை கொள்கின்றது. - பல்லவி

48
ஏனெனில் அவர் தம் அடிமையின் தாழ்நிலையைக் கண்ணோக்கினார். இதுமுதல் எல்லாத் தலைமுறையினரும் என்னைப் பேறுபெற்றவர் என்பர்.
49
ஏனெனில் வல்லவராம் கடவுள் எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார். தூயவர் என்பதே அவரது பெயர். - பல்லவி

50
அவருக்கு அஞ்சி நடப்போருக்குத் தலைமுறை தலைமுறையாய் அவர் இரக்கம் காட்டி வருகிறார்.
53
பசித்தோரை நலன்களால் நிரப்பியுள்ளார்; செல்வரை வெறுங்கையராய் அனுப்பிவிடுகிறார். - பல்லவி

54-
55
மூதாதையருக்கு உரைத்தபடியே அவர் ஆபிரகாமையும் அவர்தம் வழிமரபினரையும் என்றென்றும் இரக்கத்தோடு நினைவில் கொண்டுள்ளார்; தம் ஊழியராகிய இஸ்ரயேலுக்குத் துணையாக இருந்து வருகிறார். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மத் 8: 17
அல்லேலூயா, அல்லேலூயா! 

அவர் நம் பிணிகளைத் தாங்கிக் கொண்டார்; நம் துன்பங்களைச் சுமந்துகொண்டார். அல்லேலூயா.

ஜூலை 1 : முதல் வாசகம்ஆண்டவரால் ஆகாதது எதுவும் உண்டோ!தொடக்க நூலிலிருந்து வாசகம் 18: 1-15

ஜூலை 1 :  முதல் வாசகம்

ஆண்டவரால் ஆகாதது எதுவும் உண்டோ!

தொடக்க நூலிலிருந்து வாசகம் 18: 1-15

அந்நாள்களில்
ஆண்டவர் மம்ரே என்ற இடத்தில் தேவதாரு மரங்கள் அருகே ஆபிரகாமுக்குத் தோன்றினார். பகலில் வெப்பம் மிகுந்த நேரத்தில் ஆபிரகாம் தம் கூடார வாயிலில் அமர்ந்திருக்கையில், கண்களை உயர்த்திப் பார்த்தார்; மூன்று மனிதர் தம் அருகில் நிற்கக் கண்டார்.

அவர்களைக் கண்டவுடன் அவர்களைச் சந்திக்க கூடார வாயிலைவிட்டு ஓடினார். அவர்கள் முன் தரை மட்டும் தாழ்ந்து வணங்கி, அவர்களை நோக்கி, “என் தலைவரே, உம் கண்களில் எனக்கு அருள் கிடைத்ததாயின், நீர் உம் அடியானை விட்டுக் கடந்து போகாதிருப்பீராக! இதோ விரைவில் கொஞ்சம் தண்ணீர் கொண்டு வரட்டும். உங்கள் கால்களைக் கழுவியபின், இம்மரத்தடியில் இளைப்பாறுங்கள். கொஞ்சம் உணவு கொண்டு வருகிறேன். நீங்கள் புத்துணர்வு பெற்றபின், பயணத்தைத் தொடருங்கள். ஏனெனில் உங்கள் அடியானிடமே வந்திருக்கிறீர்கள்” என்றார். “நீ சொன்னபடியே செய்” என்று அவர்கள் பதில் அளித்தார்கள்.

அதைக் கேட்டு ஆபிரகாம் தம் கூடாரத்திற்கு விரைந்து சென்று, சாராவை நோக்கி, “விரைவாக மூன்று மரக்கால் நல்ல மாவைப் பிசைந்து, அப்பங்கள் சுடு” என்றார். ஆபிரகாம் மாட்டு மந்தைக்கு ஓடிச் சென்று, ஒரு நல்ல இளங்கன்றைக் கொணர்ந்து வேலைக்காரனிடம் கொடுக்க, அவன் அதனை விரைவில் சமைத்தான். பிறகு அவர் வெண்ணெய், பால், சமைத்த இளங்கன்று ஆகியவற்றைக் கொண்டு வந்து அவர்கள் முன் வைத்தார். அவர்கள் உண்ணும் பொழுது அவர்கள் அருகே மரத்தடியில் நின்று கொண்டிருந்தார்.

பின்பு அவர்கள் அவரை நோக்கி, “ உன் மனைவி சாரா எங்கே?” என்று கேட்க, அவர், “அதோ கூடாரத்தில் இருக்கிறாள்” என்று பதில் கூறினார். அப்பொழுது ஆண்டவர், “நான் இளவேனிற் காலத்தில் உறுதியாக மீண்டும் உன்னிடம் வருவேன். அப்பொழுது உன் மனைவி சாராவுக்கு ஒரு மகன் பிறந்திருப்பான்” என்றார்.

அவருக்குப் பின்புறத்தில் கூடார வாயிலில் சாரா இதைக் கேட்டுக் கொண்டிருந்தார். ஆபிரகாமும் சாராவும் வயது முதிர்ந்தவர்களாய் இருந்தனர். சாராவுக்கு மாதவிடாய் நின்று போயிருந்தது. எனவே, சாரா தமக்குள் சிரித்து, “நானோ கிழவி; என் தலைவரோ வயது முதிர்ந்தவர். எனக்கா இன்பம்?” என்றாள்.

அப்போது ஆண்டவர் ஆபிரகாமை நோக்கி, “ ‘நான் வயது முதிர்ந்தவளாய் இருக்க, எனக்கு உண்மையில் பிள்ளை பிறக்குமா’ என்று சொல்லி சாரா ஏன் இப்படிச் சிரித்தாள்? ஆண்டவரால் ஆகாதது எதுவும் உண்டோ! இளவேனிற் காலத்தில் குறிப்பிட்ட நேரத்தில் நான் உன்னிடம் மீண்டும் வருவேன். அப்பொழுது சாராவுக்கு ஒரு மகன் பிறந்திருப்பான்” என்று சொன்னார்.

சாராவோ, “நான் சிரிக்கவில்லை” என்று சொல்லி மறுத்தார். ஏனெனில் அச்சம் அவரை ஆட்கொண்டது. அதற்கு ஆண்டவர், “இல்லை, நீ சிரித்தாய்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

July 1st : Gospel 'I am not worthy to have you under my roof: give the word, and my servant will be healed'A Reading from the Holy Gospel according to St.Matthew 8:5-17

July 1st :  Gospel 

'I am not worthy to have you under my roof: give the word, and my servant will be healed'

A Reading from the Holy Gospel according to St.Matthew 8:5-17 
When Jesus went into Capernaum a centurion came up and pleaded with him. ‘Sir,’ he said ‘my servant is lying at home paralysed, and in great pain.’ ‘I will come myself and cure him’ said Jesus. The centurion replied, ‘Sir, I am not worthy to have you under my roof; just give the word and my servant will be cured. For I am under authority myself, and have soldiers under me; and I say to one man: Go, and he goes; to another: Come here, and he comes; to my servant: Do this, and he does it.’ When Jesus heard this he was astonished and said to those following him, ‘I tell you solemnly, nowhere in Israel have I found faith like this. And I tell you that many will come from east and west to take their places with Abraham and Isaac and Jacob at the feast in the kingdom of heaven; but the subjects of the kingdom will be turned out into the dark, where there will be weeping and grinding of teeth.’ And to the centurion Jesus said, ‘Go back, then; you have believed, so let this be done for you.’ And the servant was cured at that moment.
  And going into Peter’s house Jesus found Peter’s mother-in-law in bed with fever. He touched her hand and the fever left her, and she got up and began to wait on him.
  That evening they brought him many who were possessed by devils. He cast out the spirits with a word and cured all who were sick. This was to fulfil the prophecy of Isaiah:
He took our sicknesses away and carried our diseases for us.

The Word of the Lord.

July 1st : Responsorial PsalmLuke 1:46-50,53-55 The Lord remembered his mercy.My soul glorifies the Lord, my spirit rejoices in God, my Saviour

July 1st :  Responsorial Psalm

Luke 1:46-50,53-55 

The Lord remembered his mercy.

My soul glorifies the Lord,
  my spirit rejoices in God, my Saviour.
The Lord remembered his mercy.

He looks on his servant in her nothingness;
  henceforth all ages will call me blessed.
The Almighty works marvels for me.
  Holy his name!

The Lord remembered his mercy.

His mercy is from age to age,
  on those who fear him.
He fills the starving with good things,
  sends the rich away empty.

The Lord remembered his mercy.

He protects Israel, his servant,
  remembering his mercy,
the mercy promised to our fathers,
  to Abraham and his sons for ever.

The Lord remembered his mercy.

Gospel Acclamation cf.2Tim1:10

Alleluia, alleluia!

Our Saviour Jesus Christ abolished death
and he has proclaimed life through the Good News.
Alleluia!

July 1st : First Reading 'Next year your wife Sarah will have a son'A Reading from the book of Genesis 18: 1-15

July 1st :  First Reading 

'Next year your wife Sarah will have a son'

A Reading from the book of Genesis 18: 1-15
The Lord appeared to Abraham at the Oak of Mamre while he was sitting by the entrance of the tent during the hottest part of the day. He looked up, and there he saw three men standing near him. As soon as he saw them he ran from the entrance of the tent to meet them, and bowed to the ground. ‘My lord,’ he said ‘I beg you, if I find favour with you, kindly do not pass your servant by. A little water shall be brought; you shall wash your feet and lie down under the tree. Let me fetch a little bread and you shall refresh yourselves before going further. That is why you have come in your servant’s direction.’ They replied, ‘Do as you say.’
  Abraham hastened to the tent to find Sarah.’ ‘Hurry,’ he said ‘knead three bushels of flour and make loaves.’ Then running to the cattle Abraham took a fine and tender calf and gave it to the servant, who hurried to prepare it. Then taking cream, milk and the calf he had prepared, he laid all before them, and they ate while he remained standing near them under the tree.
  ‘Where is your wife Sarah?’ they asked him. ‘She is in the tent’ he replied. Then his guest said, ‘I shall visit you again next year without fail, and your wife will then have a son.’ Sarah was listening at the entrance of the tent behind him. Now Abraham and Sarah were old, well on in years, and Sarah had ceased to have her monthly periods. So Sarah laughed to herself, thinking, ‘Now that I am past the age of child-bearing, and my husband is an old man, is pleasure to come my way again!’ But the Lord asked Abraham, ‘Why did Sarah laugh and say, “Am I really going to have a child now that I am old?” Is anything too wonderful for the Lord? At the same time next year I shall visit you again and Sarah will have a son.’ ‘I did not laugh’ Sarah said, lying because she was afraid. But he replied, ‘Oh yes, you did laugh.’

The Word of the Lord.

Thursday, June 29, 2023

ஜூன் 30 : நற்செய்தி வாசகம்நீர் விரும்பினால், என் நோயை நீக்க உம்மால் முடியும்.✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 1-4

ஜூன் 30 :  நற்செய்தி வாசகம்

நீர் விரும்பினால், என் நோயை நீக்க உம்மால் முடியும்.

✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 1-4
அக்காலத்தில்

இயேசு மலையிலிருந்து இறங்கியபின் பெருந்திரளான மக்கள் அவரைப் பின்தொடர்ந்தார்கள். அப்பொழுது தொழுநோயாளர் ஒருவர் வந்து அவரைப் பணிந்து, “ஐயா, நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும்” என்றார். இயேசு தமது கையை நீட்டிஅவரைத் தொட்டு, “நான் விரும்புகிறேன், உமது நோய் நீங்குக!” என்று சொன்னார். உடனே அவரது தொழுநோய் நீங்கியது. இயேசு அவரிடம், “இதை எவருக்கும் சொல்ல வேண்டாம், கவனமாய் இரும். ஆனால் நீர் போய் உம்மைக் குருவிடம் காட்டி மோசே கட்டளையிட்டுள்ள காணிக்கையைச் செலுத்தும். நீர் நலமடைந்துள்ளீர் என்பதற்கு அது சான்றாகும்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஜூன் 30 : பதிலுரைப் பாடல்திபா 128: 1-2. 3. 4-5 (பல்லவி: 4)பல்லவி: ஆண்டவருக்கு அஞ்சி நடப்பவர் ஆசி பெற்றவராய் இருப்பார்.

ஜூன் 30 :  பதிலுரைப் பாடல்

திபா 128: 1-2. 3. 4-5 (பல்லவி: 4)

பல்லவி: ஆண்டவருக்கு அஞ்சி நடப்பவர் ஆசி பெற்றவராய் இருப்பார்.
1
ஆண்டவருக்கு அஞ்சி அவர் வழிகளில் நடப்போர் பேறுபெற்றோர்!
2
உமது உழைப்பின் பயனை நீர் உண்பீர்! நீர் நற்பேறும் நலமும் பெறுவீர்! - பல்லவி

3
உம் இல்லத்தில் உம் துணைவியார் கனிதரும் திராட்சைக் கொடிபோல் இருப்பார்; உண்ணும் இடத்தில் உம் பிள்ளைகள் ஒலிவக் கன்றுகளைப் போல் உம்மைச் சூழ்ந்திருப்பர். - பல்லவி

4
ஆண்டவருக்கு அஞ்சி நடக்கும் ஆடவர் இத்தகைய ஆசி பெற்றவராய் இருப்பார்.
5
ஆண்டவர் சீயோனிலிருந்து உமக்கு ஆசி வழங்குவாராக! உம் வாழ் நாளெல்லாம் நீர் எருசலேமின் நல்வாழ்வைக் காணும்படி செய்வாராக! - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மத் 8: 17
அல்லேலூயா, அல்லேலூயா! 

ஆண்டவர் நம் பிணிகளைத் தாங்கிக் கொண்டார்; நம் துன்பங்களைச் சுமந்துகொண்டார். அல்லேலூயா.

ஜூன் 30 : முதல் வாசகம்உடன்படிக்கை இதுவே: உங்களுள் ஒவ்வொரு ஆணும் விருத்தசேதனம் செய்துகொள்ள வேண்டும். சாரா ஆபிரகாமுக்கு ஒரு மகனைப் பெறுவாள்.தொடக்க நூலிலிருந்து வாசகம் 17: 1, 9-10, 15-22

ஜூன் 30 :  முதல் வாசகம்

உடன்படிக்கை இதுவே: உங்களுள் ஒவ்வொரு ஆணும் விருத்தசேதனம் செய்துகொள்ள வேண்டும். சாரா ஆபிரகாமுக்கு ஒரு மகனைப் பெறுவாள்.

தொடக்க நூலிலிருந்து வாசகம் 17: 1, 9-10, 15-22
ஆபிராமுக்கு வயது தொண்ணூற்றொன்பதாக இருந்தபொழுது, ஆண்டவர் அவருக்குத் தோன்றி, “நான் எல்லாம் வல்ல இறைவன். எனக்குப் பணிந்து நடந்து, மாசற்றவனாய் இரு” என்றார்.

மீண்டும் கடவுள் ஆபிரகாமிடம், “நீயும் தலைமுறைதோறும் உனக்குப் பின் வரும் உன் வழிமரபினரும் என் உடன்படிக்கையைக் கடைப்பிடிக்க வேண்டும். நீங்கள் கடைப்பிடிக்குமாறு உன்னோடும் உனக்குப்பின் வரும் உன் வழிமரபினரோடும் நான் செய்து கொள்ளும் உடன்படிக்கை இதுவே: உங்களுள் ஒவ்வொரு ஆணும் விருத்தசேதனம் செய்து கொள்ள வேண்டும்” என்றார்.

பின்பு கடவுள் ஆபிரகாமிடம், “உன் மனைவியைச் ‘சாராய்’ என அழைக்காதே. இனிச் ‘சாரா’ என்பதே அவள் பெயர். அவளுக்கு ஆசி வழங்குவேன். அவள் வழியாக உனக்கு ஒரு மகனையும் தருவேன். அவளுக்கு நான் ஆசி வழங்க, அவள் வழியாக நாடுகள் தோன்றும். மக்களினங்களுக்கு அரசர்களும் அவளிடமிருந்து உதிப்பர்” என்றார்.

ஆபிரகாம் தாள்பணிந்து வணங்கி, நகைத்து, “நூறு வயதிலா எனக்குக் குழந்தை பிறக்கும்? தொண்ணூறு வயது சாராவா குழந்தை பெறப் போகிறாள்?” என்று தமக்குள் சொல்லிக் கொண்டார். ஆபிரகாம் கடவுளிடம், “உம் திருமுன் இஸ்மயேல் வாழ்ந்தாலே போதும்” என்றார்.

கடவுள் அவரிடம், “அப்படியன்று. உன் மனைவி சாரா உனக்கு ஒரு மகனைப் பெறுவாள். அவனுக்கு நீ ‘ஈசாக்கு’ எனப் பெயரிடுவாய். அவனுடனும் அவனுக்குப் பின்வரும் அவன் வழிமரபினருடனும் என்றுமுள்ள உடன்படிக்கையை நான் நிலைநாட்டுவேன். இஸ்மயேலைப் பற்றிய உன் வேண்டுதலை நான் கேட்டேன். அவனுக்கு ஆசி வழங்கி, அவனை மிகப்பெருமளவில் பலுகச் செய்வேன். பன்னிரு இளவரசர் களுக்கு அவன் தந்தையாவான்; அவனிடம் இருந்து ஒரு பெரிய நாடு தோன்றும். ஆனால், சாரா உனக்கு அடுத்த ஆண்டு இதே காலத்தில் பெறப்போகும் ஈசாக்கிடம் என் உடன்படிக்கையை நிலைநாட்டுவேன்” என்றார்.

அவருடன் பேசி முடித்தபின், கடவுள் ஆபிரகாமை விட்டுச் சென்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

June 30th : Gospel 'If you want to, you can cure me'A Reading from the Holy Gospel according to St.Matthew 8:1-4

June 30th :  Gospel 

'If you want to, you can cure me'

A Reading from the Holy Gospel according to St.Matthew 8:1-4
After Jesus had come down from the mountain large crowds followed him. A leper now came up and bowed low in front of him. ‘Sir,’ he said ‘if you want to, you can cure me.’ Jesus stretched out his hand, touched him and said, ‘Of course I want to! Be cured!’ And his leprosy was cured at once. Then Jesus said to him, ‘Mind you do not tell anyone, but go and show yourself to the priest and make the offering prescribed by Moses, as evidence for them.’

The Word of the Lord.

June 30th : Responsorial PsalmPsalm 127(128):1-5 Indeed the man shall be blessed, the man who fears the Lord.

June 30th :  Responsorial Psalm

Psalm 127(128):1-5 

Indeed the man shall be blessed, the man who fears the Lord.
O blessed are those who fear the Lord
  and walk in his ways!
By the labour of your hands you shall eat.
  You will be happy and prosper.

Indeed the man shall be blessed, the man who fears the Lord.

Your wife will be like a fruitful vine
  in the heart of your house;
your children like shoots of the olive,
  around your table.

Indeed the man shall be blessed, the man who fears the Lord.

Indeed thus shall be blessed
  the man who fears the Lord.
May the Lord bless you from Zion
  all the days of your life!

Indeed the man shall be blessed, the man who fears the Lord.

Gospel Acclamation Ps144:13

Alleluia, alleluia!

The Lord is faithful in all his words
and loving in all his deeds.
Alleluia!

June 30th : First ReadingThe Lord make a covenant and gives Abram and Sarai new namesA Reading from the Book of Genesis 17:1,9-10,15-22

June 30th :  First Reading

The Lord make a covenant and gives Abram and Sarai new names

A Reading from the Book of Genesis 17:1,9-10,15-22 
When Abram was ninety-nine years old the Lord appeared to him and said, ‘I am El Shaddai. Bear yourself blameless in my presence, and I will make a Covenant between myself and you. You on your part shall maintain my Covenant, yourself and your descendants after you, generation after generation. Now this is my Covenant which you are to maintain between myself and you, and your descendants after you: all your males must be circumcised.’
  God said to Abraham, ‘As for Sarai your wife, you shall not call her Sarai, but Sarah. I will bless her and moreover give you a son by her. I will bless her and nations shall come out of her; kings of peoples shall descend from her.’ Abraham bowed to the ground, and he laughed, thinking to himself, ‘Is a child to be born to a man one hundred years old, and will Sarah have a child at the age of ninety?’ Abraham said to God, ‘Oh, let Ishmael live in your presence!’ But God replied, ‘No, but your wife Sarah shall bear you a son whom you are to name Isaac. With him I will establish my Covenant, a Covenant in perpetuity, to be his God and the God of his descendants after him. For Ishmael too I grant you your request: I bless him and I will make him fruitful and greatly increased in numbers. He shall be the father of twelve princes, and I will make him into a great nation. But my Covenant I will establish with Isaac, whom Sarah will bear you at this time next year.’ When he had finished speaking to Abraham God went up from him.

The Word of the Lord.

Wednesday, June 28, 2023

ஜூன் 29 : நற்செய்தி வாசகம்உன் பெயர் பேதுரு; விண்ணரசின் திறவுகோல்களை நான் உன்னிடம் தருவேன்.✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 13-19

ஜூன் 29 :  நற்செய்தி வாசகம்

உன் பெயர் பேதுரு; விண்ணரசின் திறவுகோல்களை நான் உன்னிடம் தருவேன்.

✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 13-19
அக்காலத்தில்

இயேசு, பிலிப்புச் செசரியா பகுதிக்குச் சென்றார். அவர் தம் சீடரை நோக்கி, “மானிடமகன் யாரென்று மக்கள் சொல்கிறார்கள்?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “சிலர் திருமுழுக்கு யோவான் எனவும் வேறு சிலர் எலியா எனவும் மற்றும் சிலர் எரேமியா அல்லது பிற இறைவாக்கினருள் ஒருவர் என்றும் சொல்கின்றனர்” என்றார்கள். “ஆனால் நீங்கள், நான் யார் எனச் சொல்கிறீர்கள்?” என்று அவர் கேட்டார்.

சீமோன் பேதுரு மறுமொழியாக, “நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்” என்று உரைத்தார்.

அதற்கு இயேசு, “யோனாவின் மகனான சீமோனே, நீ பேறுபெற்றவன். ஏனெனில் எந்த மனிதரும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை; மாறாக விண்ணகத்திலுள்ள என் தந்தையே வெளிப்படுத்தியுள்ளார். எனவே நான் உனக்குக் கூறுகிறேன்: உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின் மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன் மேல் வெற்றி கொள்ளா. விண்ணரசின் திறவுகோல்களை நான் உன்னிடம் தருவேன். மண்ணுலகில் நீ தடைசெய்வது விண்ணுலகிலும் தடை செய்யப்படும். மண்ணுலகில் நீ அனுமதிப்பது விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.
.

ஜூன் 29 : இரண்டாம் வாசகம்இனி எனக்கென வைக்கப்பட்டிருப்பது நேரிய வாழ்வுக்கான வெற்றி வாகையே.திருத்தூதர் பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 4: 6-8, 17-18

ஜூன் 29 : இரண்டாம் வாசகம்

இனி எனக்கென வைக்கப்பட்டிருப்பது நேரிய வாழ்வுக்கான வெற்றி வாகையே.

திருத்தூதர் பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 4: 6-8, 17-18
அன்பிற்குரியவரே,

நான் இப்போதே என்னைப் பலியாகப் படைக்கிறேன். நான் பிரிந்து செல்லவேண்டிய நேரம் வந்துவிட்டது. நான் நல்லதொரு போராட்டத்தில் ஈடுபட்டேன். என் ஓட்டத்தை முடித்துவிட்டேன். விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன். இனி எனக்கென வைக்கப்பட்டிருப்பது நேரிய வாழ்வுக்கான வெற்றி வாகையே. அதை இறுதி நாளில் ஆண்டவர் எனக்குத் தருவார்; நீதியான அந்த நடுவர் எனக்கு மட்டுமல்ல, அவர் தோன்றுவார் என விரும்பிக் காத்திருக்கும் அனைவருக்குமே தருவார்.

நான் அறிவித்த செய்தி நிறைவுற்று, அனைத்து நாட்டவரும் அதனைக் கேட்கவேண்டுமென்று ஆண்டவர் என் பக்கம் நின்று எனக்கு வலுவூட்டினார்; சிங்கத்தின் வாயிலிருந்தும் என்னை விடுவித்தார். தீங்கு அனைத்திலிருந்தும் அவர் என்னை விடுவித்துத் தம் விண்ணரசில் சேர்த்து எனக்கு மீட்பளிப்பார். அவருக்கே என்றென்றும் மாட்சி உரித்தாகுக! ஆமென்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மத் 16: 18
அல்லேலூயா, அல்லேலூயா! 

உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின் மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றிகொள்ளா. அல்லேலூயா.

ஜூன் 29 : பதிலுரைப் பாடல்திபா 34: 1-2. 3-4. 5-6. 7-8 (பல்லவி: 4b)பல்லவி: எல்லா வகையான அச்சத்தினின்றும் ஆண்டவர் என்னை விடுவித்தார்.

ஜூன் 29 :  பதிலுரைப் பாடல்

திபா 34: 1-2. 3-4. 5-6. 7-8 (பல்லவி: 4b)

பல்லவி: எல்லா வகையான அச்சத்தினின்றும் ஆண்டவர் என்னை விடுவித்தார்.
1
ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன்; அவரது புகழ் எப்பொழுதும் என் நாவில் ஒலிக்கும்.
2
நான் ஆண்டவரைப் பற்றிப் பெருமையாகப் பேசுவேன்; எளியோர் இதைக் கேட்டு அக்களிப்பர். - பல்லவி

3
என்னுடன் ஆண்டவரைப் பெருமைப்படுத்துங்கள்; அவரது பெயரை ஒருமிக்க மேன்மைப்படுத்துவோம்.
4
துணைவேண்டி நான் ஆண்டவரை மன்றாடினேன்; அவர் எனக்கு மறுமொழி பகர்ந்தார்; எல்லா வகையான அச்சத்தினின்றும் அவர் என்னை விடுவித்தார். - பல்லவி

5
அவரை நோக்கிப் பார்த்தோர் மகிழ்ச்சியால் மிளிர்ந்தனர்; அவர்கள் முகம் அவமானத்திற்கு உள்ளாகவில்லை.
6
இந்த ஏழை கூவியழைத்தான்; ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார்; அவர் எல்லா நெருக்கடியினின்றும் அவனை விடுவித்துக் காத்தார். - பல்லவி

7
ஆண்டவருக்கு அஞ்சி வாழ்வோரை அவர்தம் தூதர் சூழ்ந்து நின்று காத்திடுவர்.
8
ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்; அவரிடம் அடைக்கலம் புகுவோர் பேறுபெற்றோர். - பல்லவி

முதல் வாசகம்ஏரோதின் கையிலிருந்து ஆண்டவர் என்னை விடுவித்துக் காத்தார் என்று நான் உண்மையாகவே அறிந்துகொண்டேன்திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 12: 1-11

ஜூன் 29 :  புனிதர்கள் பேதுரு, பவுல் - திருத்தூதர்கள் பெருவிழாத் திருப்பலி

முதல் வாசகம்

ஏரோதின் கையிலிருந்து ஆண்டவர் என்னை விடுவித்துக் காத்தார் என்று நான் உண்மையாகவே அறிந்துகொண்டேன்

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 12: 1-11
அந்நாள்களில்

ஏரோது அரசன், திருச்சபையைச் சார்ந்த மக்கள் சிலரைப் பிடித்துக் கொடுமைப்படுத்தினான். யோவானின் சகோதரரான யாக்கோபை வாளால் கொன்றான். அது யூதருக்கு மகிழ்ச்சி அளித்ததைக் கண்டு அவன் தொடர்ந்து பேதுருவையும் கைது செய்தான். அது புளிப்பற்ற அப்ப விழா நாள்களில் நடந்தது. அவரைப் பிடித்துச் சிறையில் அடைத்துக் காவல் செய்யுமாறு நான்கு படைவீரர் கொண்ட நான்கு குழுக்களிடம் அவன் ஒப்புவித்தான். பாஸ்கா விழாவுக்குப் பின் மக்கள் முன்பாக அவரது வழக்கை விசாரிக்கலாம் என விரும்பினான். பேதுரு இவ்வாறு சிறையில் காவலில் வைக்கப்பட்டிருந்த போது திருச்சபை அவருக்காகக் கடவுளிடம் உருக்கமாக வேண்டியது.

ஏரோது அவரது வழக்கைக் கேட்பதற்கு முந்தின இரவில், பேதுரு படைவீரர் இருவருக்கு இடையே இரு சங்கிலிகளால் கட்டப்பட்டுத் தூங்கிக்கொண்டிருந்தார். காவலர்கள் வாயிலுக்கு முன் சிறையைக் காவல் செய்து கொண்டிருந்தார்கள்.

அப்போது ஆண்டவரின் தூதர் அங்கு வந்து நின்றார். அறை ஒளிமயமாகியது. அவர் பேதுருவைத் தட்டியெழுப்பி, “உடனே எழுந்திடும்” என்று கூற, சங்கிலிகள் அவர் கைகளிலிருந்து கீழே விழுந்தன.

வானதூதர் அவரிடம், “இடைக் கச்சையைக் கட்டி மிதியடிகளைப் போட்டுக்கொள்ளும்” என்றார். அவரும் அவ்வாறே செய்தார். தூதர் அவரிடம், “உமது மேலுடையை அணிந்துகொண்டு என்னைப் பின்தொடரும்” என்றார். பேதுரு வானதூதரைப் பின்தொடர்ந்து சென்றார். தூதர் மூலமாக நடந்தவையெல்லாம் உண்மையென்று அவர் உணரவில்லை. ஏதோ காட்சி காண்பதாக அவர் நினைத்துக்கொண்டார். அவர்கள் முதலாம் காவல் நிலையையும், இரண்டாம் காவல் நிலையையும் கடந்து நகருக்குச் செல்லும் இரும்புவாயில் அருகே வந்தபோது அது அவர்களுக்குத் தானாகவே திறந்தது. அவர்கள் வெளியே வந்து ஒரு சந்து வழியாகச் சென்றார்கள். உடனே வானதூதர் அவரை விட்டு அகன்றார்.

பேதுரு தன்னுணர்வு பெற்றபோது, “ஆண்டவர் தம் வானதூதரை அனுப்பி ஏரோதின் கையிலிருந்து என்னை விடுவித்து, யூத மக்கள் எதிர்பார்த்த எதுவும் நிகழாதவாறு என்னைக் காத்தார் என்று நான் உண்மையாகவே அறிந்துகொண்டேன்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

June 29th : GospelYou are Peter and on this rock I will build my ChurchA Reading from the Holy Gospel according to St.Matthew 16:13-19

June 29th :  Gospel

You are Peter and on this rock I will build my Church

A Reading from the Holy Gospel according to St.Matthew 16:13-19 
When Jesus came to the region of Caesarea Philippi he put this question to his disciples, ‘Who do people say the Son of Man is?’ And they said, ‘Some say he is John the Baptist, some Elijah, and others Jeremiah or one of the prophets.’ ‘But you,’ he said ‘who do you say I am?’ Then Simon Peter spoke up, ‘You are the Christ,’ he said ‘the Son of the living God.’ Jesus replied, ‘Simon son of Jonah, you are a happy man! Because it was not flesh and blood that revealed this to you but my Father in heaven. So I now say to you: You are Peter and on this rock I will build my Church. And the gates of the underworld can never hold out against it. I will give you the keys of the kingdom of heaven: whatever you bind on earth shall be considered bound in heaven; whatever you loose on earth shall be considered loosed in heaven.’

The Word of the Lord.

June 29th : Second readingAll there is to come now is the crown of righteousness reserved for me2 Timothy 4:6-8,17-18

June 29th :  Second reading

All there is to come now is the crown of righteousness reserved for me

2 Timothy 4:6-8,17-18 
My life is already being poured away as a libation, and the time has come for me to be gone. I have fought the good fight to the end; I have run the race to the finish; I have kept the faith; all there is to come now is the crown of righteousness reserved for me, which the Lord, the righteous judge, will give to me on that Day; and not only to me but to all those who have longed for his Appearing.
  The Lord stood by me and gave me power, so that through me the whole message might be proclaimed for all the pagans to hear; and so I was rescued from the lion’s mouth. The Lord will rescue me from all evil attempts on me, and bring me safely to his heavenly kingdom. To him be glory for ever and ever. Amen.

The Word of the Lord.

Gospel Acclamation

Alleluia, alleluia!

You are Peter, and on this rock I will build my church.
And the gates of the underworld can never hold out against it.
Alleluia!

June 29th : Responsorial PsalmPsalm 33(34):2-9 From all my terrors the Lord set me free.orThe angel of the Lord rescues those who revere him.

June 29th :  Responsorial Psalm

Psalm 33(34):2-9 

From all my terrors the Lord set me free.
or
The angel of the Lord rescues those who revere him.
I will bless the Lord at all times,
  his praise always on my lips;
in the Lord my soul shall make its boast.
  The humble shall hear and be glad.

From all my terrors the Lord set me free.
or
The angel of the Lord rescues those who revere him.

Glorify the Lord with me.
  Together let us praise his name.
I sought the Lord and he answered me;
  from all my terrors he set me free.

From all my terrors the Lord set me free.
or
The angel of the Lord rescues those who revere him.

Look towards him and be radiant;
  let your faces not be abashed.
This poor man called, the Lord heard him
  and rescued him from all his distress.

From all my terrors the Lord set me free.
or
The angel of the Lord rescues those who revere him.

The angel of the Lord is encamped
  around those who revere him, to rescue them.
Taste and see that the Lord is good.
  He is happy who seeks refuge in him.

From all my terrors the Lord set me free.
or
The angel of the Lord rescues those who revere him.

June 29th : First reading 'Now I know the Lord really did save me from Herod'A Reading from the Acts of Apostles 12:1-11

June 29th :  First reading  

'Now I know the Lord really did save me from Herod'

A Reading from the Acts of Apostles 12:1-11
King Herod started persecuting certain members of the Church. He beheaded James the brother of John, and when he saw that this pleased the Jews he decided to arrest Peter as well. This was during the days of Unleavened Bread, and he put Peter in prison, assigning four squads of four soldiers each to guard him in turns. Herod meant to try Peter in public after the end of Passover week. All the time Peter was under guard the Church prayed to God for him unremittingly.
  On the night before Herod was to try him, Peter was sleeping between two soldiers, fastened with double chains, while guards kept watch at the main entrance to the prison. Then suddenly the angel of the Lord stood there, and the cell was filled with light. He tapped Peter on the side and woke him. ‘Get up!’ he said ‘Hurry!’ – and the chains fell from his hands. The angel then said, ‘Put on your belt and sandals.’ After he had done this, the angel next said, ‘Wrap your cloak round you and follow me.’ Peter followed him, but had no idea that what the angel did was all happening in reality; he thought he was seeing a vision. They passed through two guard posts one after the other, and reached the iron gate leading to the city. This opened of its own accord; they went through it and had walked the whole length of one street when suddenly the angel left him. It was only then that Peter came to himself. ‘Now I know it is all true’ he said. ‘The Lord really did send his angel and has saved me from Herod and from all that the Jewish people were so certain would happen to me.’

The Word of the Lord.

Tuesday, June 27, 2023

ஜூன் 28 : நற்செய்தி வாசகம்போலி இறைவாக்கினர்களை அவர்களுடைய செயல்களைக் கொண்டே இனங்கண்டு கொள்வீர்கள்.✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 15-20

ஜூன் 28 :  நற்செய்தி வாசகம்

போலி இறைவாக்கினர்களை அவர்களுடைய செயல்களைக் கொண்டே இனங்கண்டு கொள்வீர்கள்.

✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 15-20
அக்காலத்தில்

இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “போலி இறைவாக்கினரைக் குறித்து எச்சரிக்கையாய் இருங்கள். ஆட்டுத் தோலைப் போர்த்திக் கொண்டு உங்களிடம் வருகின்றனர். ஆனால், உள்ளேயோ அவர்கள் கொள்ளையிட்டுத் தின்னும் ஓநாய்கள். அவர்களின் செயல்களைக் கொண்டே அவர்கள் யாரென்று அறிந்து கொள்வீர்கள். முட்செடிகளில் திராட்சைப் பழங்களையோ, முட்பூண்டுகளில் அத்திப் பழங்களையோ பறிக்க முடியுமா? நல்ல மரமெல்லாம் நல்ல கனிகளைக் கொடுக்கும். கெட்ட மரம் நச்சுக் கனிகளைக் கொடுக்கும். நல்ல மரம் நச்சுக் கனிகளைக் கொடுக்க இயலாது. கெட்ட மரமும் நல்ல கனிகளைக் கொடுக்க இயலாது.

நல்ல கனி கொடாத மரங்கள் எல்லாம் வெட்டப்பட்டு நெருப்பில் எறியப்படும். இவ்வாறு போலி இறைவாக்கினர் யாரென அவர்களுடைய செயல்களைக் கொண்டே இனங்கண்டு கொள்வீர்கள்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஜூன் 28 : பதிலுரைப் பாடல்திபா 105: 1-2. 3-4. 6-7. 8-9 (பல்லவி: 8a)பல்லவி: ஆண்டவர் தமது உடன்படிக்கையை என்றென்றும் நினைவில் கொள்கின்றார்.

ஜூன் 28 : பதிலுரைப் பாடல்

திபா 105: 1-2. 3-4. 6-7. 8-9 (பல்லவி: 8a)

பல்லவி: ஆண்டவர் தமது உடன்படிக்கையை என்றென்றும் நினைவில் கொள்கின்றார்.
1
ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்! அவர்தம் பெயரைச் சொல்லி வழிபடுங்கள்! அவர்தம் செயல்களை மக்களினங்கள் அறியச் செய்யுங்கள்.
2
அவருக்குப் பாடல் பாடுங்கள்; அவரைப் புகழ்ந்தேத்துங்கள்! அவர்தம் வியத்தகு செயல்கள் அனைத்தையும் எடுத்துரையுங்கள்! - பல்லவி

3
அவர்தம் திருப்பெயரை மாட்சிப்படுத்துங்கள்; ஆண்டவரைத் தேடுவோரின் இதயம் அக்களிப்பதாக!
4
ஆண்டவரையும் அவரது ஆற்றலையும் தேடுங்கள்! அவரது திருமுகத்தை இடையறாது நாடுங்கள்! - பல்லவி

6
அவரின் ஊழியராம் ஆபிரகாமின் வழிமரபே! அவர் தேர்ந்துகொண்ட யாக்கோபின் பிள்ளைகளே!
7
அவரே நம் கடவுளாகிய ஆண்டவர்! அவரின் நீதித் தீர்ப்புகள் உலகம் அனைத்திற்கும் உரியன. - பல்லவி

8
அவர் தமது உடன்படிக்கையை என்றென்றும் நினைவில் கொள்கின்றார்; ஆயிரம் தலைமுறைக்கென தாம் அளித்த வாக்குறுதியை நினைவுகூர்கின்றார்.
9
ஆபிரகாமுடன் தாம் செய்து கொண்ட உடன்படிக்கையையும் ஈசாக்குக்குத் தாம் ஆணையிட்டுக் கூறியதையும் அவர் நினைவில் கொண்டுள்ளார். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 15: 4, 5b
அல்லேலூயா, அல்லேலூயா! 

நான் உங்களோடு இணைந்து இருப்பதுபோல நீங்களும் என்னோடு இணைந்து இருங்கள். ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா

ஜூன் 28 : முதல் வாசகம்ஆண்டவர் ஆபிராமுடன் உடன்படிக்கை செய்தார்.தொடக்க நூலிலிருந்து வாசகம் 15: 1-12, 17-18

ஜூன் 28 :  முதல் வாசகம்

ஆண்டவர் ஆபிராமுடன் உடன்படிக்கை செய்தார்.

தொடக்க நூலிலிருந்து வாசகம் 15: 1-12, 17-18
அந்நாள்களில்

ஆண்டவரின் வாக்கு ஆபிராமுக்கு ஒரு காட்சி வழியாக வந்து அறிவித்தது: “ஆபிராம்! அஞ்சாதே. நான் உனக்குக் கேடயமாக இருப்பேன். உனக்குப் பெரும் கைம்மாறு கிடைக்கும்.” அப்பொழுது ஆபிராம், “என் தலைவராகிய ஆண்டவரே, எனக்கு என்னதான் தருவீர்? எனக்கோ குழந்தையே இல்லை! தமஸ்கு நகர் எலியேசர்தான் எனக்குப்பின் என் இல்லத்திற்கு உரிமை மகன் ஆகப்போகிறான்! நீர் எனக்குக் குழந்தை ஒன்றும் தராததால் என் வீட்டு அடிமை மகன் எனக்குப் பின் உரிமையாளன் ஆகப் போகிறான்” என்றார்.

அதற்கு மறுமொழியாக, “இவன் உனக்குப்பின் உரிமையாளன் ஆகமாட்டான். ஆனால், உனக்குப் பிறப்பவனே உனக்குப் பின் உரிமையாளன் ஆவான்” என்று ஆபிராமுக்கு ஆண்டவரின் வாக்கு அருளப்பட்டது. அப்பொழுது ஆண்டவர் ஆபிராமை வெளியே அழைத்து வந்து, “வானத்தை நிமிர்ந்து பார். முடியுமானால், விண்மீன்களை எண்ணிப் பார். இவற்றைப் போலவே உன் வழிமரபினரும் இருப்பர்” என்றார். ஆபிராம் ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டார். அதை ஆண்டவர் அவருக்கு நீதியாகக் கருதினார்.

ஆண்டவர் ஆபிராமிடம், “இந்நாட்டை உனக்கு உரிமைச் சொத்தாக அளிக்க உன்னைக் கல்தேயரின் ஊர் என்ற நகரிலிருந்து இங்கு அழைத்து வந்த ஆண்டவர் நானே” என்றார். அதற்கு ஆபிராம், “என் தலைவராகிய ஆண்டவரே, இதை நான் உரிமையாக்கிக் கொள்வேன் என்பதை எப்படித் தெரிந்து கொள்வேன்?” என்றார்.

ஆண்டவர் ஆபிராமிடம், “மூன்று வயதுள்ள இளம் பசு, மூன்று வயதுள்ள வெள்ளாடு, மூன்று வயதுள்ள செம்மறியாடு, ஒரு காட்டுப்புறா, ஒரு மாடப்புறா ஆகியவற்றை என்னிடம் கொண்டுவா” என்றார். ஆபிராம் இவற்றை எல்லாம் அவரிடம் கொண்டு வந்து, அவைகளை இரண்டிரண்டு கூறுகளாக வெட்டி, ஒவ்வொரு பகுதியையும் அததற்கு இணையான பகுதிக்கு எதிரெதிரே வைத்தார். ஆனால் பறவைகளை அவர் வெட்டவில்லை. துண்டித்த உடல்களைப் பறவைகள் தின்ன வந்தபொழுது ஆபிராம் அவற்றை விரட்டிவிட்டார்.

கதிரவன் மறையும் நேரத்தில் ஆபிராமுக்கு ஆழ்ந்த உறக்கம் வந்தது. அச்சுறுத்தும் காரிருள் அவரைச் சூழ்ந்தது. கதிரவன் மறைந்ததும் இருள் படர்ந்தது. அப்பொழுது புகைந்து கொண்டிருந்த தீச்சட்டி ஒன்றும் எரிந்து கொண்டிருந்த தீப்பந்தம் ஒன்றும் அந்தக் கூறுகளுக்கிடையே சென்றன. அன்றே ஆண்டவர் ஆபிராமுடன் ஓர் உடன்படிக்கை செய்து, “எகிப்திலுள்ள ஆற்றிலிருந்து யூப்பிரத்தீசு பேராறு வரை உள்ள இந்நாட்டை உன் வழிமரபினர்க்கு வழங்குவேன்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

June 28th : Gospel You will be able to tell them by their fruitsA Reading from the Holy Gospel according to St.Matthew 7:15-20

June 28th :  Gospel 

You will be able to tell them by their fruits

A Reading from the Holy Gospel according to St.Matthew 7:15-20 
Jesus said to his disciples: ‘Beware of false prophets who come to you disguised as sheep but underneath are ravenous wolves. You will be able to tell them by their fruits. Can people pick grapes from thorns, or figs from thistles? In the same way, a sound tree produces good fruit but a rotten tree bad fruit. A sound tree cannot bear bad fruit, nor a rotten tree bear good fruit. Any tree that does not produce good fruit is cut down and thrown on the fire. I repeat, you will be able to tell them by their fruits.’

The Word of the Lord.

June 28th : Responsorial PsalmPsalm 104(105):1-4,6-9 The Lord remembers his covenant for ever.orAlleluia!

June 28th :  Responsorial Psalm

Psalm 104(105):1-4,6-9 

The Lord remembers his covenant for ever.
or
Alleluia!
Give thanks to the Lord, tell his name,
  make known his deeds among the peoples.
O sing to him, sing his praise;
  tell all his wonderful works!

The Lord remembers his covenant for ever.
or
Alleluia!

Be proud of his holy name,
  let the hearts that seek the Lord rejoice.
Consider the Lord and his strength;
  constantly seek his face.

The Lord remembers his covenant for ever.
or
Alleluia!

O children of Abraham, his servant,
  O sons of the Jacob he chose.
He, the Lord, is our God:
  his judgements prevail in all the earth.

The Lord remembers his covenant for ever.
or
Alleluia!

He remembers his covenant for ever,
  his promise for a thousand generations,
the covenant he made with Abraham,
  the oath he swore to Isaac.

The Lord remembers his covenant for ever.
or
Alleluia!

Gospel Acclamation Ps118:18

Alleluia, alleluia!

Open my eyes, O Lord, that I may consider
the wonders of your law.
Alleluia!

June 28th : First ReadingCount the stars: such shall be your descendantsA Reading from the Book of Genesis 15:1-12,17-18

June 28th : First Reading

Count the stars: such shall be your descendants

A Reading from the Book of Genesis 15:1-12,17-18 
It happened that the word of the Lord was spoken to Abram in a vision, ‘Have no fear, Abram, I am your shield; your reward will be very great.’
  ‘My Lord,’ Abram replied ‘what do you intend to give me? I go childless…’. Then Abram said, ‘See, you have given me no descendants; some man of my household will be my heir.’ And then this word of the Lord was spoken to him, ‘He shall not be your heir; your heir shall be of your own flesh and blood.’ Then taking him outside he said, ‘Look up to heaven and count the stars if you can. Such will be your descendants’ he told him. Abram put his faith in the Lord, who counted this as making him justified.
  ‘I am the Lord’ he said to him ‘who brought you out of Ur of the Chaldaeans to make you heir to this land.’ ‘My Lord,’ Abram replied ‘how am I to know that I shall inherit it?’ He said to him, ‘Get me a three-year-old heifer, a three-year-old goat, a three-year-old ram, a turtledove and a young pigeon.’ He brought him all these, cut them in half and put half on one side and half facing it on the other; but the birds he did not cut in half. Birds of prey came down on the carcases but Abram drove them off.
  Now as the sun was setting Abram fell into a deep sleep, and terror seized him. When the sun had set and darkness had fallen, there appeared a smoking furnace and a firebrand that went between the halves. That day the Lord made a Covenant with Abram in these terms:
‘To your descendants I give this land,
from the wadi of Egypt to the Great River,
the river Euphrates.’

The Word of the Lord.

Monday, June 26, 2023

ஜூன் 27 : நற்செய்தி வாசகம்பிறர் உங்களுக்கு என்னென்ன செய்ய வேண்டுமென விரும்புகிறீர்களோ அவற்றை மற்றவர்களுக்குச் செய்யுங்கள்.✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 6, 12-14

ஜூன் 27 :  நற்செய்தி வாசகம்

பிறர் உங்களுக்கு என்னென்ன செய்ய வேண்டுமென விரும்புகிறீர்களோ அவற்றை மற்றவர்களுக்குச் செய்யுங்கள்.

✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 6, 12-14
அக்காலத்தில்

இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “தூய்மையானது எதையும் நாய்களுக்குக் கொடுக்க வேண்டாம். அவை திருப்பி உங்களைக் கடித்துக் குதறும். மேலும் உங்கள் முத்துக்களைப் பன்றிகள் முன் எறிய வேண்டாம்; எறிந்தால் அவை தங்கள் கால்களால் அவற்றை மிதித்துவிடும்.

ஆகையால் பிறர் உங்களுக்குச் செய்யவேண்டும் என விரும்புகிறவற்றை எல்லாம் நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள். இறைவாக்குகளும் திருச்சட்டமும் கூறுவது இதுவே.

இடுக்கமான வாயிலின் வழியே நுழையுங்கள்; ஏனெனில் அழிவுக்குச் செல்லும் வாயில் அகன்றது; வழியும் விரிவானது; அதன் வழியே செல்வோர் பலர். வாழ்வுக்குச் செல்லும் வாயில் மிகவும் இடுக்கமானது; வழியும் மிகக் குறுகலானது; இதைக் கண்டுபிடிப்போர் சிலரே.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஜூன் 27 : பதிலுரைப் பாடல்திபா 15: 2-3a. 3bc-4ab. 5 (பல்லவி: 1a)பல்லவி: ஆண்டவரே, உம் கூடாரத்தில் தங்கிடத் தகுதியுள்ளவர் யார்?

ஜூன் 27 :  பதிலுரைப் பாடல்

திபா 15: 2-3a. 3bc-4ab. 5 (பல்லவி: 1a)

பல்லவி: ஆண்டவரே, உம் கூடாரத்தில் தங்கிடத் தகுதியுள்ளவர் யார்?
2
மாசற்றவராய் நடப்போரே! - இன்னோர் நேரியவற்றைச் செய்வர்; உளமார உண்மை பேசுவர்;
3a
தம் நாவினால் புறங்கூறார். - பல்லவி

3bc
தம் தோழருக்குத் தீங்கிழையார்; தம் அடுத்தவரைப் பழித்துரையார்.
4ab
நெறிதவறி நடப்போரை இழிவாகக் கருதுவர்; ஆண்டவருக்கு அஞ்சுவோரை உயர்வாக மதிப்பர். - பல்லவி

5
தம் பணத்தை வட்டிக்குக் கொடார்; மாசற்றவருக்கு எதிராகக் கையூட்டுப் பெறார்; - இவ்வாறு நடப்போர் என்றும் நிலைத்திருப்பர். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 8: 12
அல்லேலூயா, அல்லேலூயா! 

உலகின் ஒளி நானே; என்னைப் பின்தொடர்பவர் இருளில் நடக்க மாட்டார்; வாழ்வுக்கு வழி காட்டும் ஒளியைக் கொண்டிருப்பார். அல்லேலூயா.

ஜூன் 27 : முதல் வாசகம்எனக்கும் உனக்கும் இடையே பூசல் வேண்டாம்; ஏனெனில் நாம் உறவினர்.தொடக்க நூலிலிருந்து வாசகம் 13: 2, 5-18

ஜூன் 27 :  முதல் வாசகம்

எனக்கும் உனக்கும் இடையே பூசல் வேண்டாம்; ஏனெனில் நாம் உறவினர்.

தொடக்க நூலிலிருந்து வாசகம் 13: 2, 5-18
அந்நாள்களில்

ஆபிராம் கால்நடைகளும் வெள்ளியும் தங்கமும் கொண்ட பெரிய செல்வராக இருந்தார். ஆபிராமுடன் சென்ற லோத்துக்கும் ஆட்டு மந்தைகளும் மாட்டு மந்தைகளும் கூடாரங்களும் இருந்தன. அவர்கள் சேர்ந்து வாழ்வதற்கு இடம் போதவில்லை. அவர்களுக்கு மிகுதியான உடைமைகள் இருந்ததால், அவர்களால் சேர்ந்து வாழ முடியவில்லை. ஆபிராமின் கால்நடைகளை மேய்ப்போருக்கும் லோத்தின் கால்நடைகளை மேய்ப்போருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்பொழுது கானானியரும் பெரிசியரும் அந்நாட்டில் வாழ்ந்து வந்தனர்.

ஆபிராம் லோத்தை நோக்கி, “எனக்கும் உனக்கும் என் ஆள்களுக்கும் உன் ஆள்களுக்கும் இடையே பூசல் ஏற்பட வேண்டாம். ஏனெனில் நாம் உறவினர். நாடு முழுவதும் உன் கண்முன் இருக்கின்றது அல்லவா? என்னிடமிருந்து பிரிந்து செல்லும்படி கேட்டுக்கொள்ளுகிறேன். நீ இடப்பக்கம் சென்றால் நான் வலப்பக்கம் செல்வேன்; நீ வலப்பக்கம் சென்றால் நான் இடப்பக்கம் செல்வேன்” என்றார்.

லோத்து கண்களை உயர்த்தி, எங்கும் நீர்வளம் சிறந்திருந்த யோர்தானின் சுற்றுப்பகுதியைக் கண்டார். சோகார் வரை அப்பகுதி ஆண்டவரது தோட்டம் போலும் எகிப்து நாட்டைப் போலும் இருந்தது. சோதோம், கொமோராவை ஆண்டவர் அழிப்பதற்கு முன் அது அவ்வாறு இருந்தது. லோத்து யோர்தான் சுற்றுப் பகுதி முழுவதையும் தேர்ந்து கொண்டு கிழக்குப் பக்கமாகப் பயணமானார். இவ்வாறு ஒருவர் ஒருவரிடமிருந்து பிரிந்தனர். ஆபிராம் கானான் நாட்டில் வாழ்ந்து வந்தார். லோத்து யோர்தான் சுற்றுப் பகுதியிலிருந்த நகரங்களில் வாழ்ந்து வந்தார். இறுதியில் சோதோமுக்கு அருகில் கூடாரம் அமைத்துக் கொண்டார். ஆனால் சோதோமின் மக்கள் ஆண்டவருக்கு எதிரான மிகக் கொடிய பாவிகளாக இருந்தனர்.

லோத்து ஆபிராமிடமிருந்து பிரிந்தபின், ஆண்டவர் ஆபிராமை நோக்கி, “நீ இருக்கும் இடத்திலிருந்து உன் கண்களை உயர்த்தி வடக்கே, தெற்கே, கிழக்கே, மேற்கே பார். ஏனெனில் நீ காணும் இந்த நாடு முழுவதையும் உனக்கும் உன் வழிமரபினருக்கும் என்றென்றும் கொடுக்கப் போகிறேன். உன் வழிமரபினரைப் பூவுலகின் மண்ணைப் போலப் பெருகச் செய்வேன். ஆகவே பூவுலகின் மணலை ஒருவன் எண்ண முடியுமானால், உன் வழிமரபினரையும் எண்ணலாம். நீ எழுந்து, இந்நாட்டின் நெடுகிலும், குறுக்கிலும் நடந்து பார். ஏனெனில் இதை நான் உனக்குக் கொடுக்கப் போகிறேன்” என்றார்.

ஆகவே ஆபிராம் தம் கூடாரத்தைப் பிரித்துக் கொண்டு எபிரோனில் இருந்த மம்ரே என்ற கருவாலி மரத்தோப்பு அருகில் வந்து வாழ்ந்தார். அங்கே ஆண்டவருக்கு ஒரு பலிபீடம் எழுப்பினார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

June 27th : GospelTreat others as you would like them to treat youA Reading from the Holy Gospel according to St.Matthew 7:6, 12-14

June 27th : Gospel

Treat others as you would like them to treat you

A Reading from the Holy Gospel according to St.Matthew 7:6, 12-14
Jesus said to his disciples: ‘Do not give dogs what is holy; and do not throw your pearls in front of pigs, or they may trample them and then turn on you and tear you to pieces.
  ‘So always treat others as you would like them to treat you; that is the meaning of the Law and the Prophets.
  ‘Enter by the narrow gate, since the road that leads to perdition is wide and spacious, and many take it; but it is a narrow gate and a hard road that leads to life, and only a few find it.’

The Word of the Lord.

June 27th : Responsorial PsalmPsalm 14(15):2-5 The just will live in the presence of the Lord.

June 27th :   Responsorial Psalm

Psalm 14(15):2-5 

The just will live in the presence of the Lord.
Lord, who shall dwell on your holy mountain?
He who walks without fault;
he who acts with justice
and speaks the truth from his heart;
he who does not slander with his tongue.

The just will live in the presence of the Lord.

He who does no wrong to his brother,
who casts no slur on his neighbour,
who holds the godless in disdain,
but honours those who fear the Lord.

The just will live in the presence of the Lord.

He who keeps his pledge, come what may;
who takes no interest on a loan
and accepts no bribes against the innocent.
Such a man will stand firm for ever.

The just will live in the presence of the Lord.

Gospel Acclamation Mt11:25

Alleluia, alleluia!

Blessed are you, Father,
Lord of heaven and earth,
for revealing the mysteries of the kingdom
to mere children.
Alleluia!

June 27th : First ReadingAbram settles in the land of Canaan and builds an altar to the LordA Reading from the Book of Genesis 13:2,5-18

June 27th :  First Reading

Abram settles in the land of Canaan and builds an altar to the Lord

A Reading from the Book of Genesis 13:2,5-18
Abram was a very rich man, with livestock, silver and gold. Lot, who was travelling with Abram, had flocks and cattle of his own, and tents too. The land was not sufficient to accommodate them both at once, for they had too many possessions to be able to live together. Dispute broke out between the herdsmen of Abram’s livestock and those of Lot’s. (The Canaanites and the Perizzites were then living in the land.) Accordingly Abram said to Lot, ‘Let there be no dispute between me and you, nor between my herdsmen and yours, for we are brothers. Is not the whole land open before you? Part company with me: if you take the left, I will go right; if you take the right, I will go left.’
  Looking round, Lot saw all the Jordan plain, irrigated everywhere – this was before the Lord destroyed Sodom and Gomorrah – like the garden of the Lord or the land of Egypt, as far as Zoar. So Lot chose all the Jordan plain for himself and moved off eastwards. Thus they parted company: Abram settled in the land of Canaan; Lot settled among the towns of the plain, pitching his tents on the outskirts of Sodom. Now the people of Sodom were vicious men, great sinners against the Lord.
  The Lord said to Abram after Lot had parted company with him, ‘Look all round from where you are towards the north and the south, towards the east and the west. All the land within sight I will give to you and your descendants for ever. I will make your descendants like the dust on the ground: when men succeed in counting the specks of dust on the ground, then they will be able to count your descendants! Come, travel through the length and breadth of the land, for I mean to give it to you.’
  So Abram went with his tents to settle at the Oak of Mamre, at Hebron, and there he built an altar to the Lord.

The Word of the Lord.

Sunday, June 25, 2023

ஜூன் 26 : நற்செய்தி வாசகம்முதலில் உங்கள் கண்ணிலிருந்து மரக் கட்டையை எடுத்தெறியுங்கள்.✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 1-5

ஜூன் 26 :  நற்செய்தி வாசகம்

முதலில் உங்கள் கண்ணிலிருந்து மரக் கட்டையை எடுத்தெறியுங்கள்.

✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 1-5
அக்காலத்தில்

இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “பிறர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு அளிக்காதீர்கள்; அப்போதுதான் நீங்களும் தீர்ப்புக்கு உள்ளாக மாட்டீர்கள். நீங்கள் அளிக்கும் தீர்ப்பையே நீங்களும் பெறுவீர்கள். நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ, அதே அளவையாலே உங்களுக்கும் அளக்கப்படும்.

உங்கள் கண்ணில் இருக்கும் மரக் கட்டையைப் பார்க்காமல் உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணில் இருக்கும் துரும்பை நீங்கள் கூர்ந்து கவனிப்பதேன்? அல்லது அவரிடம், ‘உங்கள் கண்ணிலிருந்து துரும்பை எடுக்கட்டுமா?’ என்று எப்படிக் கேட்கலாம்? இதோ! உங்கள் கண்ணில்தான் மரக் கட்டை இருக்கிறதே! வெளிவேடக்காரரே, முதலில் உங்கள் கண்ணிலிருந்து மரக் கட்டையை எடுத்தெறியுங்கள். அதன்பின் உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணிலிருந்து துரும்பை எடுக்க உங்களுக்குத் தெளிவாய்க் கண் தெரியும்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.
.

ஜூன் 26 : பதிலுரைப் பாடல்திபா 33: 12-13. 18-19. 20,22 (பல்லவி: 12b)பல்லவி: ஆண்டவர் தமது உரிமைச் சொத்தாகத் தெரிந்தெடுத்த மக்கள் பேறுபெற்றோர்.

ஜூன் 26 :  பதிலுரைப் பாடல்

திபா 33: 12-13. 18-19. 20,22 (பல்லவி: 12b)

பல்லவி: ஆண்டவர் தமது உரிமைச் சொத்தாகத் தெரிந்தெடுத்த மக்கள் பேறுபெற்றோர்.
12
ஆண்டவரைத் தன் கடவுளாகக் கொண்ட இனம் பேறுபெற்றது; அவர் தமது உரிமைச் சொத்தாகத் தெரிந்தெடுத்த மக்கள் பேறு பெற்றோர்.
13
வானினின்று ஆண்டவர் பார்க்கின்றார்; மானிடர் அனைவரையும் காண்கின்றார். - பல்லவி

18
தமக்கு அஞ்சி நடப்போரையும் தம் பேரன்புக்காகக் காத்திருப் போரையும் ஆண்டவர் கண்ணோக்குகின்றார்.
19
அவர்கள் உயிரைச் சாவினின்று காக்கின்றார்; அவர்களைப் பஞ்சத்திலும் வாழ்விக்கின்றார். - பல்லவி

20
நாம் ஆண்டவரை நம்பியிருக்கின்றோம்; அவரே நமக்குத் துணையும் கேடயமும் ஆவார்.
22
உம்மையே நாங்கள் நம்பியிருப்பதால், உமது பேரன்பு எங்கள்மீது இருப்பதாக! - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

எபி 4: 12
அல்லேலூயா, அல்லேலூயா!

 கடவுளுடைய வார்த்தை உயிருள்ளது, ஆற்றல் வாய்ந்தது; ஆன்மாவையும் ஆவியையும் பிரிக்கும் அளவுக்குக் குத்தி ஊடுருவுகிறது. அல்லேலூயா.

ஜூன் 26 : முதல் வாசகம்ஆண்டவர் ஆபிராமுக்குக் கூறியபடியே அவர் புறப்பட்டுச் சென்றார்.தொடக்க நூலிலிருந்து வாசகம் 12: 1-9

ஜூன் 26 :  முதல் வாசகம்

ஆண்டவர் ஆபிராமுக்குக் கூறியபடியே அவர் புறப்பட்டுச் சென்றார்.

தொடக்க நூலிலிருந்து வாசகம் 12: 1-9
அந்நாள்களில்

ஆண்டவர் ஆபிராமை நோக்கி, “உன் நாட்டிலிருந்தும் உன் இனத்தவரிடமிருந்தும் உன் தந்தை வீட்டிலிருந்தும் புறப்பட்டு நான் உனக்குக் காண்பிக்கும் நாட்டிற்குச் செல். உன்னை நான் பெரிய இனமாக்குவேன்; உனக்கு ஆசி வழங்குவேன். உன் பெயரை நான் சிறப்புறச் செய்வேன்; நீயே ஆசியாக விளங்குவாய். உனக்கு ஆசி கூறுவோர்க்கு நான் ஆசி வழங்குவேன்; உன்னைச் சபிப்போரை நானும் சபிப்பேன்; உன் வழியாக மண்ணுலகின் மக்களினங்கள் அனைத்தும் ஆசி பெறும்” என்றார்.

ஆண்டவர் ஆபிராமுக்குக் கூறியபடியே அவர் புறப்பட்டுச் சென்றார். அவருடன் லோத்தும் சென்றார். ஆபிராம் ஆரானை விட்டுச் சென்ற பொழுது அவருக்கு வயது எழுபத்தைந்து. ஆபிராம் தம் மனைவி சாராயையும் தம் சகோதரன் லோத்தையும் உடனழைத்துச் சென்றார். அவர்கள் ஆரானில் சேர்த்திருந்த செல்வத்துடனும், வைத்திருந்த ஆள்களுடனும் கானான் நாட்டிற்குப் புறப்பட்டுச் சென்று அந்நாட்டைச் சென்றடைந்தனர்.

ஆபிராம் அந்நாட்டில் நுழைந்து செக்கேமில் இருந்த மோரேயின் கருவாலி மரத்தை அடைந்தார். அப்பொழுது கானானியர் அந்நாட்டில் வாழ்ந்து வந்தனர்.

ஆண்டவர் ஆபிராமுக்குத் தோன்றி, “உன் வழிமரபினர்க்கு இந்நாட்டைக் கொடுப்பேன்” என்றார். ஆகவே தமக்குத் தோன்றிய ஆண்டவருக்கு அங்கே அவர் ஒரு பலி பீடத்தை எழுப்பினார்.

ஆபிராம் அங்கிருந்து புறப்பட்டு, பெத்தேலுக்குக் கிழக்கே இருந்த மலைப்பக்கம் சென்று பெத்தேலுக்கு மேற்கே ஆயிக்குக் கிழக்கே கூடாரம் அமைத்துக் குடியிருந்தார். அங்கே ஆண்டவருக்கு அவர் ஒரு பலிபீடத்தை எழுப்பி ஆண்டவரது திருப்பெயரைத் தொழுதார். இவ்வாறு ஆபிராம் படிப்படியாக நெகேபு நோக்கிப் பயணம் செய்தார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

June 26th : Gospel Do not judge, and you will not be judgedA Reading from the Holy Gospel according to St.Matthew 7:1-5

June 26th :  Gospel 

Do not judge, and you will not be judged

A Reading from the Holy Gospel according to St.Matthew 7:1-5 
Jesus said to his disciples: ‘Do not judge, and you will not be judged; because the judgements you give are the judgements you will get, and the amount you measure out is the amount you will be given. Why do you observe the splinter in your brother’s eye and never notice the plank in your own? How dare you say to your brother, “Let me take the splinter out of your eye,” when all the time there is a plank in your own? Hypocrite! Take the plank out of your own eye first, and then you will see clearly enough to take the splinter out of your brother’s eye.’

The Word of the Lord.

June 26th : Responsorial PsalmPsalm 32(33):12-13,18-20,22 Happy the people the Lord has chosen as his own.

June 26th :  Responsorial Psalm

Psalm 32(33):12-13,18-20,22 

Happy the people the Lord has chosen as his own.
They are happy, whose God is the Lord,
  the people he has chosen as his own.
From the heavens the Lord looks forth,
  he sees all the children of men.

Happy the people the Lord has chosen as his own.

The Lord looks on those who revere him,
  on those who hope in his love,
to rescue their souls from death,
  to keep them alive in famine.

Happy the people the Lord has chosen as his own.

Our soul is waiting for the Lord.
  The Lord is our help and our shield.
May your love be upon us, O Lord,
  as we place all our hope in you.

Happy the people the Lord has chosen as his own.

Gospel Acclamation Jn17:17

Alleluia, alleluia!
Your word is truth, O Lord:
consecrate us in the truth.
Alleluia!

June 26th : First Reading 'Leave your country, your family, and your father's house'A Reading from the Book of Genesis 12: 1-9

June 26th :  First Reading 

'Leave your country, your family, and your father's house'

A Reading from the Book of Genesis 12: 1-9 
The Lord said to Abram, ‘Leave your country, your family and your father’s house, for the land I will show you. I will make you a great nation; I will bless you and make your name so famous that it will be used as a blessing.
‘I will bless those who bless you:
I will curse those who slight you.
All the tribes of the earth
shall bless themselves by you.’
So Abram went as the Lord told him, and Lot went with him. Abram was seventy-five years old when he left Haran. Abram took his wife Sarai, his nephew Lot, all the possessions they had amassed and the people they had acquired in Haran. They set off for the land of Canaan, and arrived there.
  Abram passed through the land as far as Shechem’s holy place, the Oak of Moreh. At that time the Canaanites were in the land. The Lord appeared to Abram and said, ‘It is to your descendants that I will give this land.’ So Abram built there an altar for the Lord who had appeared to him. From there he moved on to the mountainous district east of Bethel, where he pitched his tent, with Bethel to the west and Ai to the east. There he built an altar to the Lord and invoked the name of the Lord. Then Abram made his way stage by stage to the Negeb.

The Word of the Lord.

Saturday, June 24, 2023

ஜூன் 25 : நற்செய்தி வாசகம்உடலை மட்டும் கொல்பவர்களுக்கு அஞ்ச வேண்டாம்.✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 26-33

ஜூன் 25 : நற்செய்தி வாசகம்

உடலை மட்டும் கொல்பவர்களுக்கு அஞ்ச வேண்டாம்.

✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 26-33
அக்காலத்தில்

இயேசு தம் சீடர்களை நோக்கிக் கூறியது:“உடலை மட்டும் கொல்பவர்களுக்கு அஞ்சவேண்டாம். ஏனெனில் வெளிப்படாதவாறு மூடப்பட்டிருப்பது ஒன்றும் இல்லை; அறிய முடியாதவாறு மறைந்திருப்பதும் ஒன்றும் இல்லை. நான் உங்களுக்கு இருளில் சொல்வதை நீங்கள் ஒளியில் கூறுங்கள். காதோடு காதாய்க் கேட்பதை வீட்டின் மேல் தளத்திலிருந்து அறிவியுங்கள்.

ஆன்மாவைக் கொல்ல இயலாமல், உடலை மட்டும் கொல்பவர்களுக்கு அஞ்ச வேண்டாம். ஆன்மாவையும் உடலையும் நரகத்தில் அழிக்க வல்லவருக்கே அஞ்சுங்கள். காசுக்கு இரண்டு சிட்டுக் குருவிகள் விற்பது இல்லையா? எனினும் அவற்றுள் ஒன்றுகூட உங்கள் தந்தையின் விருப்பமின்றித் தரையில் விழாது. உங்கள் தலைமுடி எல்லாம் எண்ணப்பட்டிருக்கின்றது. சிட்டுக் குருவிகள் பலவற்றைவிட நீங்கள் மேலானவர்கள். எனவே அஞ்சாதிருங்கள்.

மக்கள் முன்னிலையில் என்னை ஏற்றுக் கொள்பவரை விண்ணுலகில் இருக்கும் என் தந்தையின் முன்னிலையில் நானும் ஏற்றுக் கொள்வேன். மக்கள் முன்னிலையில் என்னை மறுதலிப்பவர் எவரையும் விண்ணுலகில் இருக்கிற என் தந்தையின் முன்னிலையில் நானும் மறுதலிப்பேன்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஜூன் 25 : இரண்டாம் வாசகம்குற்றத்தின் தன்மை வேறு, அருள் கொடையின் தன்மை வேறு.திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 5: 12-15

ஜூன் 25 :  இரண்டாம் வாசகம்

குற்றத்தின் தன்மை வேறு, அருள் கொடையின் தன்மை வேறு.

திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 5: 12-15
சகோதரர் சகோதரிகளே,

ஒரே ஒரு மனிதன் வழியாய்ப் பாவம் இந்த உலகத்தில் நுழைந்தது; அந்தப் பாவத்தின் வழியாய்ச் சாவு வந்தது. அதுபோலவே, எல்லா மனிதரும் பாவம் செய்ததால், எல்லா மனிதரையும் சாவு கவ்விக்கொண்டது.

திருச்சட்டம் தரப்படும் முன்பும் உலகில் பாவம் இருந்தது; ஆனால், சட்டம் இல்லாதபோது அது பாவமாகக் கருதப்படவில்லை. ஆயினும் ஆதாம் முதல் மோசே வரையில் இருந்தவர்கள் ஆதாமைப்போல் கடவுளின் கட்டளையை மீறிப் பாவம் செய்யவில்லை எனினும், சாவு அவர்கள்மீதும் ஆட்சி செலுத்திற்று; இந்த ஆதாம் வரவிருந்தவருக்கு முன்னடையாளமாய் இருக்கிறார்.

ஆனால், குற்றத்தின் தன்மை வேறு, அருள் கொடையின் தன்மை வேறு. எவ்வாறெனில், ஒருவர் செய்த குற்றத்தால் பலரும் இறந்தனர். ஆனால் கடவுளின் அருளும் இயேசு கிறிஸ்து என்னும் ஒரே மனிதரின் வழியாய் வரும் அருள்கொடையும் பலருக்கும் மிகுதியாய்க் கிடைத்தது.

ஆண்டவரின் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 15: 26b-27a
அல்லேலூயா, அல்லேலூயா!

 உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது என்னைப் பற்றிச் சான்று பகர்வார். நீங்களும் சான்று பகர்வீர்கள், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

ஜூன் 25 : பதிலுரைப் பாடல்திபா 69: 7-9. 13,16. 32-34 (பல்லவி: 13b)பல்லவி: கடவுளே! உமது பேரன்பினால் எனக்குப் பதில்மொழி தாரும்.

ஜூன் 25 :  பதிலுரைப் பாடல்

திபா 69: 7-9. 13,16. 32-34 (பல்லவி: 13b)

பல்லவி: கடவுளே! உமது பேரன்பினால் எனக்குப் பதில்மொழி தாரும்.
7
உம் பொருட்டே நான் இழிவை ஏற்றேன்; வெட்கக்கேடு என் முகத்தை மூடிவிட்டது.
8
என் சகோதரருக்கு வேற்று மனிதன் ஆனேன்; என் தாயின் பிள்ளைகளுக்கு அயலான் ஆனேன்.
9
உமது இல்லத்தின்மீது எனக்குண்டான ஆர்வம் என்னை எரித்துவிட்டது; உம்மைப் பழித்துப் பேசினவர்களின் பழிச்சொற்கள் என்மீது விழுந்தன. - பல்லவி

13
ஆண்டவரே! நான் தக்க காலத்தில் உம்மை நோக்கி விண்ணப்பம் செய்கின்றேன்; கடவுளே! உமது பேரன்பின் பெருக்கினால் எனக்குப் பதில்மொழி தாரும்; துணை செய்வதில் நீர் மாறாதவர்.
16
ஆண்டவரே! எனக்குப் பதில்மொழி தாரும்; உம் பேரன்பு நன்மை மிக்கது; உமது பேரிரக்கத்தை முன்னிட்டு என்னை நோக்கித் திரும்பும். - பல்லவி

32
எளியோர் இதைக் கண்டு மகிழ்ச்சி அடைவார்கள்; கடவுளை நாடித் தேடுகிறவர்களே, உங்கள் உள்ளம் ஊக்கமடைவதாக.
33
ஆண்டவர் ஏழைகளின் விண்ணப்பத்திற்குச் செவிசாய்க்கின்றார்; சிறைப்பட்ட தம் மக்களை அவர் புறக்கணிப்பதில்லை.
34
வானமும் வையமும் கடல்களும் அவற்றில் வாழும் யாவும் அவரைப் புகழட்டும். - பல்லவி

ஜூன் 25 : முதல் வாசகம்கடவுள் வறியோரின் உயிரைத் தீயோரின் பிடியினின்று விடுவித்தார்.இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 20: 10-13

ஜூன் 25 :  முதல் வாசகம்

கடவுள் வறியோரின் உயிரைத் தீயோரின் பிடியினின்று விடுவித்தார்.

இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 20: 10-13
எரேமியா கூறியது:

‘சுற்றிலும் ஒரே திகில்!’ என்று பலரும் பேசிக் கொள்கின்றார்கள்; ‘பழி சுமத்துங்கள்; வாருங்கள், அவன்மேல் பழி சுமத்துவோம்’ என்கிறார்கள். என் நண்பர்கள்கூட என் வீழ்ச்சிக்காகக் காத்திருக்கிறார்கள்; ‘ஒருவேளை அவன் மயங்கிவிடுவான்; நாம் அவன்மேல் வெற்றிகொண்டு அவனைப் பழி தீர்த்துக்கொள்ளலாம்’ என்கிறார்கள்.

ஆனால், ஆண்டவர் வலிமை வாய்ந்த வீரரைப் போல என்னோடு இருக்கின்றார். எனவே என்னைத் துன்புறுத்துவோர் இடறி விழுவர். அவர்கள் வெற்றிகொள்ள மாட்டார்கள். அவர்கள் விவேகத்தோடு செயல்படவில்லை; அவர்களின் அவமானம் என்றும் நிலைத்திருக்கும்; அது மறக்கப்படாது.

படைகளின் ஆண்டவரே! நேர்மையாளரைச் சோதித்து அறிபவரும் உள்ளுணர்வுகளையும் இதயச் சிந்தனைகளையும் அறிபவரும் நீரே; நீர் என் எதிரிகளைப் பழி வாங்குவதை நான் காணவேண்டும்; ஏனெனில், என் வழக்கை உம்மிடம் எடுத்துரைத்துள்ளேன்.

ஆண்டவருக்குப் புகழ் பாடுங்கள்; அவரைப் புகழ்ந்தேத்துங்கள்; ஏனெனில், அவர் வறியோரின் உயிரைத் தீயோரின் பிடியினின்று விடுவித்தார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

June 25th : GospelDo not be afraid of those who kill the bodyA Reading from the Holy Gospel according to St.Matthew 10:26-33

June 25th : Gospel

Do not be afraid of those who kill the body

A Reading from the Holy Gospel according to St.Matthew 10:26-33 
Jesus instructed the Twelve as follows: ‘Do not be afraid. For everything that is now covered will be uncovered, and everything now hidden will be made clear. What I say to you in the dark, tell in the daylight; what you hear in whispers, proclaim from the housetops.
  ‘Do not be afraid of those who kill the body but cannot kill the soul; fear him rather who can destroy both body and soul in hell. Can you not buy two sparrows for a penny? And yet not one falls to the ground without your Father knowing. Why, every hair on your head has been counted. So there is no need to be afraid; you are worth more than hundreds of sparrows.
  ‘So if anyone declares himself for me in the presence of men, I will declare myself for him in the presence of my Father in heaven. But the one who disowns me in the presence of men, I will disown in the presence of my Father in heaven.’

The Word of the Lord.

June 25th : Second Reading The gift considerably outweighed the fallA Reading from the Letter of St.Paul to the Romans 5:12-15

June 25th :  Second Reading 

The gift considerably outweighed the fall

A Reading from the Letter of St.Paul to the Romans 5:12-15 
Sin entered the world through one man, and through sin death, and thus death has spread through the whole human race because everyone has sinned. Sin existed in the world long before the Law was given. There was no law and so no one could be accused of the sin of ‘law-breaking’, yet death reigned over all from Adam to Moses, even though their sin, unlike that of Adam, was not a matter of breaking a law.
  Adam prefigured the One to come, but the gift itself considerably outweighed the fall. If it is certain that through one man’s fall so many died, it is even more certain that divine grace, coming through the one man, Jesus Christ, came to so many as an abundant free gift.

The Word of the Lord.

Gospel Acclamation Jn1:14,12

Alleluia, alleluia!

The Word was made flesh and lived among us:
to all who did accept him
he gave power to become children of God.
Alleluia!

June 25th : Responsorial PsalmPsalm 68(69):8-10,14,17,33-35 In your great love, answer me, O Lord.

June 25th :  Responsorial Psalm

Psalm 68(69):8-10,14,17,33-35 

In your great love, answer me, O Lord.
It is for you that I suffer taunts,
  that shame covers my face,
that I have become a stranger to my brothers,
  an alien to my own mother’s sons.
I burn with zeal for your house
  and taunts against you fall on me.

In your great love, answer me, O Lord.

This is my prayer to you,
  my prayer for your favour.
In your great love, answer me, O God,
  with your help that never fails:
Lord, answer, for your love is kind;
  in your compassion, turn towards me.

In your great love, answer me, O Lord.

The poor when they see it will be glad
  and God-seeking hearts will revive;
for the Lord listens to the needy
  and does not spurn his servants in their chains.
Let the heavens and the earth give him praise,
  the sea and all its living creatures.

In your great love, answer me, O Lord.

June 25th : First ReadingHe has delivered the soul of the needy from the hands of evil menA Reading from the Book of Jeremiah 20:10-13

June 25th :  First Reading

He has delivered the soul of the needy from the hands of evil men

A Reading from the Book of Jeremiah 20:10-13 
Jeremiah said:
I hear so many disparaging me,
‘“Terror from every side!”
Denounce him! Let us denounce him!’
All those who used to be my friends
watched for my downfall,
‘Perhaps he will be seduced into error.
Then we will master him
and take our revenge!’
But the Lord is at my side, a mighty hero;
my opponents will stumble, mastered,
confounded by their failure;
everlasting, unforgettable disgrace will be theirs.
But you, O Lord of Hosts, you who probe with justice,
who scrutinise the loins and heart,
let me see the vengeance you will take on them,
for I have committed my cause to you.
Sing to the Lord,
praise the Lord,
for he has delivered the soul of the needy
from the hands of evil men.

The Word of the Lord.

Friday, June 23, 2023

ஜூன் 24 : நற்செய்தி வாசகம்இக்குழந்தையின் பெயர் யோவான்.✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 57-66, 80

ஜூன் 24 :  நற்செய்தி வாசகம்

இக்குழந்தையின் பெயர் யோவான்.

✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 57-66, 80
எலிசபெத்துக்குப் பேறுகாலம் நெருங்கியது. அவர் ஒரு மகனைப் பெற்றெடுத்தார். ஆண்டவர் அவருக்குப் பெரிதும் இரக்கம் காட்டினார் என்பதைக் கேள்விப்பட்டுச் சுற்றி வாழ்ந்தோரும் உறவினரும் அவரோடு சேர்ந்து மகிழ்ந்தனர். எட்டாம் நாளில் அவர்கள் குழந்தைக்கு விருத்தசேதனம் செய்ய வந்தார்கள்; செக்கரியா என்ற அதன் தந்தையின் பெயரையே அதற்குச் சூட்ட இருந்தார்கள்.

ஆனால் அதன் தாய் அவர்களைப் பார்த்து, “வேண்டாம், அதற்கு யோவான் எனப் பெயரிட வேண்டும்” என்றார். அவர்கள் அவரிடம், “உம் உறவினருள் இப்பெயர் கொண்டவர் எவரும் இல்லையே” என்று சொல்லி, “குழந்தைக்கு என்ன பெயரிடலாம்? உம் விருப்பம் என்ன?” என்று தந்தையை நோக்கிச் சைகை காட்டிக் கேட்டார்கள்.

அதற்கு அவர் எழுதுபலகை ஒன்றைக் கேட்டு வாங்கி, “இக்குழந்தையின் பெயர் யோவான்” என்று எழுதினார். எல்லாரும் வியப்படைந்தனர். அப்பொழுதே அவரது வாய் திறந்தது; நா கட்டவிழ்ந்தது; அவர் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தார். சுற்றி வாழ்ந்தோர் அனைவரும் இதைப்பற்றிக் கேள்விப்பட்டு அஞ்சினர். இச்செய்தி யூதேய மலை நாடெங்கும் பரவியது. கேள்விப்பட்டவர்கள் யாவரும் இச்செய்தியைத் தங்கள் உள்ளங்களில் இருத்தி, “இக்குழந்தை எப்படிப்பட்டதாக இருக்குமோ?” என்று சொல்லிக் கொண்டார்கள். ஏனெனில் அக்குழந்தை ஆண்டவருடைய கைவன்மையைப் பெற்றிருந்தது.

குழந்தையாய் இருந்த யோவான் வளர்ந்து மன வலிமை பெற்றார். இஸ்ரயேல் மக்களுக்குத் தம்மை வெளிப்படுத்தும் காலம் வரை அவர் பாலை நிலத்தில் வாழ்ந்து வந்தார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஜூன் 24 : இரண்டாம் வாசகம்இயேசுவின் வருகைக்கு முன்பே யோவான் போதித்து வந்தார்.திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 13: 22-26

ஜூன் 24 :  இரண்டாம் வாசகம்

இயேசுவின் வருகைக்கு முன்பே யோவான் போதித்து வந்தார்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 13: 22-26
அந்நாள்களில்

பவுல் கூறியது: கடவுள் சவுலை நீக்கிவிட்டுத் தாவீதை அவர்களுக்கு அரசராக ஏற்படுத்தினார்; அவரைக் குறித்து ‘ஈசாயின் மகனான தாவீதை என் இதயத்துக்கு உகந்தவனாகக் கண்டேன் என் விருப்பம் அனைத்தையும் அவன் நிறைவேற்றுவான்’ என்று சான்று பகர்ந்தார். தாம் அளித்த வாக்குறுதியின்படி கடவுள் அவருடைய வழிமரபிலிருந்தே இஸ்ரேலுக்கு இயேசு என்னும் மீட்பர் தோன்றச் செய்தார். அவருடைய வருகைக்கு முன்பே யோவான், ‘மனம்மாறி திருமுழுக்குப் பெறுங்கள்’ என்று இஸ்ரயேல் மக்கள் அனைவருக்கும் பறைசாற்றி வந்தார்.

யோவான் தம் வாழ்க்கை என்னும் ஓட்டத்தை முடிக்கும் தறுவாயில் ‘நான் யார் என நீங்கள் நினைக்கிறீர்களோ அவரல்ல நான். இதோ, எனக்குப்பின் ஒருவர் வருகிறார்; அவருடைய மிதியடிகளை அவிழ்க்கவும் எனக்குத் தகுதியில்லை’ என்று கூறினார்.

சகோதரரே, ஆபிரகாமின் வழிவந்த மக்களே, இங்கு இருப்போருள் கடவுளுக்கு அஞ்சி நடப்போரே, இந்த மீட்புச் செய்தி நமக்குத்தான் அனுப்பப்பட்டுள்ளது.

ஆண்டவரின் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! 

குழந்தாய், நீ உன்னத கடவுளின் இறைவாக்கினர் எனப்படுவாய்; ஏனெனில் ஆண்டவருக்கான வழியைச் செம்மைப்படுத்த அவர் முன்னே செல்வாய். அல்லேலூயா.