Search This Blog

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

Monday, June 19, 2023

ஜூன் 20 : நற்செய்தி வாசகம்உங்கள் பகைவரிடமும் அன்புகூருங்கள்.✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 43-48

ஜூன் 20 :  நற்செய்தி வாசகம்

உங்கள் பகைவரிடமும் அன்புகூருங்கள்.

✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 43-48
அக்காலத்தில்

இயேசு தம் சீடருக்குக் கூறியது: “ ‘உனக்கு அடுத்திருப்பவரிடம் அன்பு கூர்வாயாக', ‘பகைவரிடம் வெறுப்புக் கொள்வாயாக’ எனக் கூறியிருப்பதைக் கேட்டிருக்கிறீர்கள். ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்: உங்கள் பகைவரிடமும் அன்புகூருங்கள்; உங்களைத் துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள். இப்படிச் செய்வதால் நீங்கள் உங்கள் விண்ணகத் தந்தையின் மக்கள் ஆவீர்கள். ஏனெனில் அவர் நல்லோர் மேலும் தீயோர் மேலும் தம் கதிரவனை உதித்தெழச் செய்கிறார். நேர்மையுள்ளோர் மேலும் நேர்மையற்றோர் மேலும் மழை பெய்யச் செய்கிறார்.

உங்களிடத்தில் அன்பு செலுத்துவோரிடமே நீங்கள் அன்பு செலுத்துவீர் களானால் உங்களுக்கு என்ன கைம்மாறு கிடைக்கும்? வரிதண்டுவோரும் இவ்வாறு செய்வதில்லையா? நீங்கள் உங்கள் சகோதரர் சகோதரிகளுக்கு மட்டும் வாழ்த்துக் கூறுவீர்களானால் நீங்கள் மற்றவருக்கும் மேலாகச் செய்துவிடுவதென்ன? பிற இனத்தவரும் இவ்வாறு செய்வதில்லையா? ஆதலால், உங்கள் விண்ணகத் தந்தை நிறைவுள்ளவராய் இருப்பதுபோல நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஜூன் 20 : பதிலுரைப் பாடல்திபா 146: 1-2. 5-6. 7. 8-9a (பல்லவி: 1a)பல்லவி: என் நெஞ்சே! நீ ஆண்டவரைப் போற்றிடு.

ஜூன் 20 :  பதிலுரைப் பாடல்

திபா 146: 1-2. 5-6. 7. 8-9a (பல்லவி: 1a)

பல்லவி: என் நெஞ்சே! நீ ஆண்டவரைப் போற்றிடு.
1
என் நெஞ்சே! நீ ஆண்டவரைப் போற்றிடு;
2
நான் உயிரோடு உள்ளளவும் ஆண்டவரைப் போற்றிடுவேன்; என் வாழ்நாளெல்லாம் என் கடவுளைப் புகழ்ந்து பாடிடுவேன். - பல்லவி

5
யாக்கோபின் இறைவனைத் தம் துணையாகக் கொண்டிருப்போர் பேறுபெற்றோர்; தம் கடவுளாகிய ஆண்டவரையே நம்பியிருப்போர் பேறுபெற்றோர்.
6
அவரே விண்ணையும் மண்ணையும் கடலையும் அவற்றிலுள்ள யாவற்றையும் உருவாக்கியவர்; என்றென்றும் நம்பிக்கைக்கு உரியவராய் இருப்பவரும் அவரே! - பல்லவி

7
ஆண்டவர் ஒடுக்கப்பட்டோர்க்கான நீதியை நிலைநாட்டுகின்றார்; பசித்திருப்போர்க்கு உணவளிக்கின்றார்; சிறைப்பட்டோர்க்கு விடுதலை அளிக்கின்றார். - பல்லவி

8
ஆண்டவர் பார்வையற்றோரின் கண்களைத் திறக்கின்றார்; தாழ்த்தப்பட்டோரை உயர்த்துகின்றார்; நீதிமான்களிடம் அன்பு கொண்டுள்ளார்.
9a
ஆண்டவர் அயல் நாட்டினரைப் பாதுகாக்கின்றார். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 13: 34
அல்லேலூயா, அல்லேலூயா! 

புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

ஜூன் 20 : முதல் வாசகம்கிறிஸ்து உங்களுக்காக ஏழையானார்.திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 8: 1-9

ஜூன் 20 :  முதல் வாசகம்

கிறிஸ்து உங்களுக்காக ஏழையானார்.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 8: 1-9
சகோதரர் சகோதரிகளே, மாசிதோனியத் திருச்சபைகளுக்குக் கடவுள் கொடுத்த அருளைப் பற்றி உங்களுக்குத் தெரியப்படுத்த விரும்புகிறோம். அவர்களுக்கு ஏற்பட்ட இன்னல்களால் கடுமையாகச் சோதிக்கப்பட்டபோதும் அவர்கள் எப்போதும் மகிழ்ச்சி நிறைந்தவர்களாய் இருந்தார்கள். அவர்கள் வறுமையில் மூழ்கி இருந்தாலும் வள்ளன்மையோடு வாரி வழங்கினார்கள். அவர்கள் தங்களால் இயன்ற அளவுக்குத் தாங்களாகவே கொடுத்தார்கள். ஏன், அளவுக்கு மீறியே கொடுத்தார்கள். இதற்கு நானே சாட்சி. இறைமக்களுக்குச் செய்யும் அறப்பணியில் பங்கு பெறும் பேறு தங்களுக்கும் அளிக்கப்படவேண்டும் என மிகவும் வருந்திக் கேட்டுக்கொண்டார்கள்.

நாங்கள் எதிர்பார்த்ததற்கு மேலாக அவர்கள் தங்களை முதன்மையாக ஆண்டவருக்கு அர்ப்பணித்தார்கள்; நாங்கள் கடவுளின் திருவுளப்படி செயல்படுவதால், எங்களுக்கும் தங்களை அர்ப்பணித்தார்கள். எனவே இந்த அறப்பணியைத் தொடங்கிய தீத்துவே அப்பணியை முடிக்க வேண்டும் என நாங்கள் அவரை வேண்டிக்கொண்டோம்.

நம்பிக்கை, நாவன்மை, அறிவு, பேரார்வம் ஆகிய அனைத்தையும் மிகுதியாய்க் கொண்டிருக்கிறீர்கள். எங்கள்மேல் நீங்கள் கொண்டுள்ள அன்பும் பெருகிக்கொண்டு வருகிறது. அதுபோல் இந்த அறப்பணியிலும் நீங்கள் முழுமையாய் ஈடுபடவேண்டும். நான் இதை உங்களுக்கு ஒரு கட்டளையாகச் சொல்லவில்லை. மாறாக, பிறருடைய ஆர்வத்தை எடுத்துக்காட்டி உங்கள் அன்பு உண்மையானதா எனச் சோதிக்கவே இவ்வாறு செய்கிறேன். நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அருள் செயலை அறிந்திருக்கிறீர்களே! அவர் செல்வராய் இருந்தும் உங்களுக்காக ஏழையானார். அவருடைய ஏழ்மையினால் நீங்கள் செல்வராகுமாறு இவ்வாறு செய்தார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

June 20th : Gospel Pray for those who persecute youA Reading from the Holy Gospel according to St.Matthew 5:43-48

June 20th :  Gospel 

Pray for those who persecute you

A Reading from the Holy Gospel according to St.Matthew 5:43-48
Jesus said to his disciples: ‘You have learnt how it was said: You must love your neighbour and hate your enemy. But I say this to you: love your enemies and pray for those who persecute you; in this way you will be sons of your Father in heaven, for he causes his sun to rise on bad men as well as good, and his rain to fall on honest and dishonest men alike. For if you love those who love you, what right have you to claim any credit? Even the tax collectors do as much, do they not? And if you save your greetings for your brothers, are you doing anything exceptional? Even the pagans do as much, do they not? You must therefore be perfect just as your heavenly Father is perfect.’

The Word of the Lord.

June 20th : Responsorial PsalmPsalm 145(146):2,5-9 My soul, give praise to the Lord.orAlleluia!

June 20th :  Responsorial Psalm

Psalm 145(146):2,5-9 

My soul, give praise to the Lord.
or
Alleluia!
I will praise the Lord all my days,
  make music to my God while I live.

My soul, give praise to the Lord.
or
Alleluia!

He is happy who is helped by Jacob’s God,
  whose hope is in the Lord his God,
who alone made heaven and earth,
  the seas and all they contain.

My soul, give praise to the Lord.
or
Alleluia!

It is he who keeps faith for ever,
  who is just to those who are oppressed.
It is he who gives bread to the hungry,
  the Lord, who sets prisoners free.

My soul, give praise to the Lord.
or
Alleluia!

It is the Lord who gives sight to the blind,
  who raises up those who are bowed down,
the Lord, who protects the stranger
  and upholds the widow and orphan.

My soul, give praise to the Lord.
or
Alleluia!

Gospel Acclamation 2Co5:19

Alleluia, alleluia!

God in Christ was reconciling the world to himself,
and he has entrusted to us the news that they are reconciled.
Alleluia!

June 20th : First ReadingThe Lord Jesus was rich but became poor for your sakeA Reading from the Second letter of St.Paul to the Corinthians 8: 1-9

June 20th :  First Reading

The Lord Jesus was rich but became poor for your sake

A Reading from the Second letter of St.Paul to the Corinthians 8: 1-9
Now here, brothers, is the news of the grace of God which was given in the churches in Macedonia; and of how, throughout great trials by suffering, their constant cheerfulness and their intense poverty have overflowed in a wealth of generosity. I can swear that they gave not only as much as they could afford, but far more, and quite spontaneously, begging and begging us for the favour of sharing in this service to the saints and, what was quite unexpected, they offered their own selves first to God and, under God, to us.
  Because of this, we have asked Titus, since he has already made a beginning, to bring this work of mercy to the same point of success among you. You always have the most of everything – of faith, of eloquence, of understanding, of keenness for any cause, and the biggest share of our affection – so we expect you to put the most into this work of mercy too. It is not an order that I am giving you; I am just testing the genuineness of your love against the keenness of others. Remember how generous the Lord Jesus was: he was rich, but he became poor for your sake, to make you rich out of his poverty.

The Word of the Lord.