Search This Blog

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

Saturday, January 27, 2024

சனவரி 28 : நற்செய்தி வாசகம்அதிகாரத்தோடு அவர்களுக்குக் கற்பித்து வந்தார்.✠ மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 21-28

சனவரி 28 :  நற்செய்தி வாசகம்

அதிகாரத்தோடு அவர்களுக்குக் கற்பித்து வந்தார்.

✠ மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 21-28
ஒருமுறை இயேசுவும் அவர் சீடர்களும் கப்பர்நாகும் ஊரில் நுழைந்தார்கள். ஓய்வு நாள்களில் இயேசு தொழுகைக்கூடத்திற்குச் சென்று கற்பித்து வந்தார். அவருடைய போதனையைக் குறித்து மக்கள் வியப்பில் ஆழ்ந்தார்கள். ஏனெனில் அவர் மறைநூல் அறிஞரைப் போலன்றி, அதிகாரத்தோடு அவர்களுக்குக் கற்பித்து வந்தார். அப்போது அவர்களுடைய தொழுகைக்கூடத்தில் தீய ஆவி பிடித்திருந்த ஒருவர் இருந்தார். அவரைப் பிடித்திருந்த ஆவி, “நாசரேத்து இயேசுவே, உமக்கு இங்கு என்ன வேலை? எங்களை ஒழித்துவிடவா வந்தீர்? நீர் யார் என எனக்குத் தெரியும். நீர் கடவுளுக்கு அர்ப்பணமானவர்” என்று கத்தியது. “வாயை மூடு, இவரை விட்டு வெளியே போ” என்று இயேசு அதனை அதட்டினார். அப்பொழுது அத்தீய ஆவி அம் மனிதருக்கு வலிப்பு உண்டாக்கிப் பெருங் கூச்சலிட்டு அவரை விட்டு வெளியேறிற்று. அவர்கள் அனைவரும் திகைப்புற்று, “இது என்ன? இது அதிகாரம் கொண்ட புதிய போதனையாய் இருக்கிறதே! இவர் தீய ஆவிகளுக்கும் கட்டளையிடுகிறார்; அவையும் இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே!” என்று தங்களிடையே பேசிக்கொண்டனர். அவரைப் பற்றிய செய்தி உடனே கலிலேயாவின் சுற்றுப்புறமெங்கும் பரவியது.

ஆண்டவரின் அருள்வாக்கு.

சனவரி 28 : இரண்டாம் வாசகம்கன்னிப் பெண் தூயவராக இருக்கும் வண்ணம் ஆண்டவருக்கு உரியவற்றில் அக்கறையாக இருக்கிறார்.திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 7: 32-35

சனவரி 28 :  இரண்டாம் வாசகம்

கன்னிப் பெண் தூயவராக இருக்கும் வண்ணம் ஆண்டவருக்கு உரியவற்றில் அக்கறையாக இருக்கிறார்.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 7: 32-35
சகோதரர் சகோதரிகளே,

நீங்கள் கவலையற்றவர்களாய் இருக்க வேண்டுமென்றே நான் விரும்புகிறேன். மணமாகாதவர் ஆண்டவருக்கு உரியவற்றில் அக்கறை கொள்கிறார்; எப்படி அவருக்கு உகந்தவற்றைச் செய்யலாம் என எண்ணிக் கொண்டிருக்கிறார். ஆனால் மணமானவர் உலகுக்கு உரியவற்றில் அக்கறை கொள்கிறார்; எப்படித் தம் மனைவிக்கு உகந்தவற்றைச் செய்யலாம் என எண்ணிக்கொண்டிருக்கிறார். இவ்வாறு அவர் மனம் பிளவுபட்டுள்ளது. மணமாகாத பெண்ணும் கன்னிப் பெண்ணும் ஆண்டவருக்கு உரியவற்றில் அக்கறை கொள்வதால் அவர்கள் உடலிலும் உள்ளத்திலும் தூயோர் ஆகின்றனர். ஆனால் மணமான பெண், உலகுக்கு உரியவற்றில் அக்கறை கொள்வதால் எப்படித் தம் கணவருக்கு உகந்தவற்றைச் செய்யலாம் என எண்ணிக்கொண்டிருக்கிறார்.

உங்களைக் கட்டுப்படுத்துவதற்காக அல்ல, உங்கள் நலனுக்காகவே இதை நான் சொல்கிறேன். எல்லாம் ஒழுங்காய் இருக்கவும் நீங்கள் முழு மனத்தோடு ஆண்டவரிடம் பற்றுக்கொண்டிருக்கவுமே இவ்வாறு சொல்கிறேன்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மத் 4: 16
அல்லேலூயா, அல்லேலூயா! 

காரிருளில் இருந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள். சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போர்மேல் சுடரொளி உதித்துள்ளது. அல்லேலூயா.

சனவரி 28 : பதிலுரைப் பாடல்திபா 95: 1-2. 6-7. 8-9 (பல்லவி: 8b,7c காண்க)பல்லவி: உங்கள் இதயத்தைக் கடினப்படுத்தாதீர்; ஆண்டவர் குரலுக்குச் செவிசாய்ப்பீர்.

சனவரி 28 :  பதிலுரைப் பாடல்

திபா 95: 1-2. 6-7. 8-9 (பல்லவி: 8b,7c காண்க)

பல்லவி: உங்கள் இதயத்தைக் கடினப்படுத்தாதீர்; ஆண்டவர் குரலுக்குச் செவிசாய்ப்பீர்.
1
வாருங்கள்; ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்; நமது மீட்பின் பாறையைப் போற்றி ஆர்ப்பரியுங்கள்.
2
நன்றியுடன் அவர் திருமுன் செல்வோம்; புகழ்ப்பாக்களால் அவரைப் போற்றி ஆர்ப்பரிப்போம். - பல்லவி

6
வாருங்கள்; தாள்பணிந்து அவரைத் தொழுவோம்; நம்மை உருவாக்கிய ஆண்டவர்முன் முழந்தாளிடுவோம்.
7
அவரே நம் கடவுள்; நாமோ அவரது மேய்ச்சலின் மக்கள்; நாம் அவர் பேணிக்காக்கும் ஆடுகள். இன்று நீங்கள் அவரது குரலுக்குச் செவிகொடுத்தால் எத்துணை நலம்! - பல்லவி

8
அன்று மெரிபாவிலும், பாலை நிலத்தில் மாசாவிலும் செய்ததுபோல், உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள்.
9
அங்கே உங்கள் மூதாதையர் என்னைச் சோதித்தனர்; என் செயல்களைக் கண்டிருந்தும் என்னைச் சோதித்துப் பார்த்தனர். - பல்லவி

சனவரி 28 : முதல் வாசகம்ஓர் இறைவாக்கினரை ஏற்படுத்துவேன். என் வார்த்தைகளை அவருடைய வாயில் வைப்பேன்.இணைச்சட்ட நூலிலிருந்து வாசகம் 18: 15-20

சனவரி 28 :  முதல் வாசகம்

ஓர் இறைவாக்கினரை ஏற்படுத்துவேன். என் வார்த்தைகளை அவருடைய வாயில் வைப்பேன்.

இணைச்சட்ட நூலிலிருந்து வாசகம் 18: 15-20
அந்நாள்களில்

மோசே மக்களிடம் கூறியது: உன் கடவுளாகிய ஆண்டவர் உன் சகோதரர் நடுவினின்று என்னைப் போல் ஓர் இறைவாக்கினரை ஏற்படுத்துவார். நீ அவருக்குச் செவிகொடு. ஓரேபில் திருப்பேரவை கூடிய நாளில், நீ உன் கடவுளாகிய ஆண்டவரிடம் மன்றாடி, ‘நான் இறந்து போகாதபடி, என் கடவுளாகிய ஆண்டவரின் குரலொலியை இனி நான் கேட்காமலும் இப்பெரும் நெருப்பை இனி நான் காணாமலும் இருப்பேனாக’ என்று விண்ணப்பித்தபோது, ஆண்டவர் என்னை நோக்கி, ‘அவர்கள் சொன்னதெல்லாம் சரி’ என்றார். உன்னைப் போல் ஓர் இறைவாக்கினனை அவர்களுடைய சகோதரர்களினின்று நான் அவர்களுக்காக ஏற்படுத்துவேன். என் வார்த்தைகளை அவனுடைய வாயில் வைப்பேன். நான் கட்டளையிடுவது அனைத்தையும் அவன் அவர்களுக்குச் சொல்வான். என் பெயரால் அவன் சொல்லும் என் வார்த்தைகளுக்குச் செவி கொடாதவனை நான் வேரறுப்பேன்.

ஆனால், ஓர் இறைவாக்கினன் எனது பெயரால் பேசுவதாக எண்ணிக்கொண்டு, நான் அவனுக்குக் கட்டளையிடாதவற்றைப் பேசினால், அல்லது வேற்றுத் தெய்வங்களின் பெயரால் பேசினால், அந்த இறைவாக்கினன் சாவான்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

January 28th : Gospel Unlike the scribes, he taught them with authorityA reading from the Holy Gospel according to St.Mark 1:21-28

January 28th :  Gospel  

Unlike the scribes, he taught them with authority

A reading from the Holy Gospel according to St.Mark 1:21-28
Jesus and his disciples went as far as Capernaum, and as soon as the sabbath came he went to the synagogue and began to teach. And his teaching made a deep impression on them because, unlike the scribes, he taught them with authority.
  In their synagogue just then there was a man possessed by an unclean spirit and it shouted, ‘What do you want with us, Jesus of Nazareth? Have you come to destroy us? I know who you are: the Holy One of God.’ But Jesus said sharply, ‘Be quiet! Come out of him!’ And the unclean spirit threw the man into convulsions and with a loud cry went out of him. The people were so astonished that they started asking each other what it all meant. ‘Here is a teaching that is new’ they said ‘and with authority behind it: he gives orders even to unclean spirits and they obey him.’ And his reputation rapidly spread everywhere, through all the surrounding Galilean countryside.

The Word of the Lord.

January 28th : Second readingGive your undivided attention to the LordA reading from the first letter of St.Paul to the Corinthians 7:32-35

January 28th :  Second reading

Give your undivided attention to the Lord

A reading from the first letter of St.Paul to the Corinthians 7:32-35 
I would like to see you free from all worry. An unmarried man can devote himself to the Lord’s affairs, all he need worry about is pleasing the Lord; but a married man has to bother about the world’s affairs and devote himself to pleasing his wife: he is torn two ways. In the same way an unmarried woman, like a young girl, can devote herself to the Lord’s affairs; all she need worry about is being holy in body and spirit. The married woman, on the other hand, has to worry about the world’s affairs and devote herself to pleasing her husband. I say this only to help you, not to put a halter round your necks, but simply to make sure that everything is as it should be, and that you give your undivided attention to the Lord.

The Word of the Lord.

Gospel Acclamation Mt11:25

Alleluia, alleluia!

Blessed are you, Father,
Lord of heaven and earth,
for revealing the mysteries of the kingdom
to mere children.
Alleluia!

January 28th : Responsorial PsalmPsalm 94(95):1-2,6-9 O that today you would listen to his voice! ‘Harden not your hearts.’

January 28th :  Responsorial Psalm

Psalm 94(95):1-2,6-9 

O that today you would listen to his voice!
 ‘Harden not your hearts.’
Come, ring out our joy to the Lord;
  hail the rock who saves us.
Let us come before him, giving thanks,
  with songs let us hail the Lord.

O that today you would listen to his voice!
 ‘Harden not your hearts.’

Come in; let us bow and bend low;
  let us kneel before the God who made us:
for he is our God and we
  the people who belong to his pasture,
  the flock that is led by his hand.

O that today you would listen to his voice! ‘Harden not your hearts.’

O that today you would listen to his voice!
  ‘Harden not your hearts as at Meribah,
  as on that day at Massah in the desert
when your fathers put me to the test;
  when they tried me, though they saw my work.’

O that today you would listen to his voice! ‘Harden not your hearts.’

January 28th : First readingI will raise up a prophet and put my words into his mouthA reading from the book of Deuteronomy 18:15-20

January 28th :  First reading

I will raise up a prophet and put my words into his mouth

A reading from the book of Deuteronomy 18:15-20 
Moses said to the people: ‘The Lord your God will raise up for you a prophet like myself, from among yourselves, from your own brothers; to him you must listen. This is what you yourselves asked of the Lord your God at Horeb on the day of the Assembly. “Do not let me hear again” you said “the voice of the Lord my God, nor look any longer on this great fire, or I shall die”; and the Lord said to me, “All they have spoken is well said. I will raise up a prophet like yourself for them from their own brothers; I will put my words into his mouth and he shall tell them all I command him. The man who does not listen to my words that he speaks in my name, shall be held answerable to me for it. But the prophet who presumes to say in my name a thing I have not commanded him to say, or who speaks in the name of other gods, that prophet shall die.”’

The Word of the Lord.