Search This Blog

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

Wednesday, June 7, 2023

ஜூன் 8 : நற்செய்தி வாசகம்நம் ஆண்டவராகிய கடவுள் ஒருவரே ஆண்டவர்.✠ மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 28b-34

ஜூன் 8 : நற்செய்தி வாசகம்

நம் ஆண்டவராகிய கடவுள் ஒருவரே ஆண்டவர்.

✠ மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 28b-34
அக்காலத்தில்

மறைநூல் அறிஞருள் ஒருவர், இயேசு சதுசேயர்களுக்கு நன்கு பதில் கூறிக்கொண்டிருந்ததைக் கண்டு அவரை அணுகி வந்து, “அனைத்திலும் முதன்மையான கட்டளை எது?” என்று கேட்டார். அதற்கு இயேசு, “இஸ்ரயேலே கேள். நம் ஆண்டவராகிய கடவுள் ஒருவரே ஆண்டவர். உன் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் முழு மனத்தோடும் முழு ஆற்றலோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்புகூர்வாயாக’ என்பது முதன்மையான கட்டளை. ‘உன்மீது நீ அன்புகூர்வது போல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்புகூர்வாயாக’ என்பது இரண்டாவது கட்டளை. இவற்றைவிட மேலான கட்டளை வேறு எதுவும் இல்லை” என்றார். அதற்கு மறைநூல் அறிஞர் அவரிடம், “நன்று போதகரே, ‘கடவுள் ஒருவரே; அவரைத் தவிர வேறு ஒரு கடவுள் இல்லை’ என்று நீர் கூறியது உண்மையே. அவரிடம் முழு இதயத்தோடும் முழு அறிவோடும் முழு ஆற்றலோடும் அன்பு செலுத்துவதும், தன்னிடம் அன்பு கொள்வது போல் அடுத்திருப்பவரிடம் அன்பு செலுத்துவதும் எரிபலிகளையும் வேறு பலிகளையும் விட மேலானது” என்று கூறினார். அவர் அறிவுத்திறனோடு பதிலளித்ததைக் கண்ட இயேசு அவரிடம், “நீர் இறையாட்சியினின்று தொலையில் இல்லை” என்றார். அதன்பின் எவரும் அவரிடம் எதையும் கேட்கத் துணியவில்லை.

ஆண்டவரின் அருள்வாக்கு.
.

ஜூன் 8 : பதிலுரைப் பாடல்திபா 128: 1-2. 3. 4-5 (பல்லவி: 1)பல்லவி: ஆண்டவருக்கு அஞ்சி நடப்போர் பேறுபெற்றோர்!

ஜூன் 8 : பதிலுரைப் பாடல்

திபா 128: 1-2. 3. 4-5 (பல்லவி: 1)

பல்லவி: ஆண்டவருக்கு அஞ்சி நடப்போர் பேறுபெற்றோர்!
1
ஆண்டவருக்கு அஞ்சி அவர் வழிகளில் நடப்போர் பேறுபெற்றோர்!
2
உமது உழைப்பின் பயனை நீர் உண்பீர்! நீர் நற்பேறும் நலமும் பெறுவீர்! - பல்லவி

3
உம் இல்லத்தில் உம் துணைவியார் கனிதரும் திராட்சைக் கொடிபோல் இருப்பார்; உண்ணும் இடத்தில் உம் பிள்ளைகள் ஒலிவக் கன்றுகளைப் போல் உம்மைச் சூழ்ந்திருப்பர். - பல்லவி

4
ஆண்டவருக்கு அஞ்சி நடக்கும் ஆடவர் இத்தகைய ஆசி பெற்றவராய் இருப்பார்.
5
ஆண்டவர் சீயோனிலிருந்து உமக்கு ஆசி வழங்குவாராக! உம் வாழ்நாளெல்லாம் நீர் எருசலேமின் நல்வாழ்வைக் காணும்படி செய்வாராக! - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

திபா 119: 34
அல்லேலூயா, அல்லேலூயா! உம் திருச்சட்டத்தின்படி நடக்க எனக்கு மெய்யுணர்வு தாரும். அதை நான் முழு உள்ளத்தோடு கடைப்பிடிப்பேன். அல்லேலூயா

ஜூன் 8: முதல் வாசகம்என் மகள் உன்னோடு மணம் புரிவதற்கென்றே ஆண்டவர் உங்களை என்னிடம் அனுப்பியுள்ளார்.தோபித்து நூலிலிருந்து வாசகம் 6: 10; 7: 1, 9-14; 8: 4-8

ஜூன் 8: முதல் வாசகம்

என் மகள் உன்னோடு மணம் புரிவதற்கென்றே ஆண்டவர் உங்களை என்னிடம் அனுப்பியுள்ளார்.

தோபித்து நூலிலிருந்து வாசகம் 6: 10; 7: 1, 9-14; 8: 4-8
அந்நாள்களில்

தோபியாவும் அசரியாவும் மேதியா நாட்டினுள் சென்று எக்பத்தானாவை நெருங்கிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் எக்பத்தானாவை அடைந்த பொழுது தோபியா அசரியாவிடம், “சகோதரர் அசரியா, உடனே என்னை நம் உறவினர் இரகுவேலின் வீட்டிற்கு அழைத்துச் செல்லும்” என்றார். எனவே இரபேல் அவரை இரகுவேலின் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். இரகுவேல் தம் வீட்டு முற்றத்துக் கதவு அருகே அமர்ந்திருக்க அவர்கள் கண்டு, முதலில் அவரை வாழ்த்தினார்கள். அதற்கு அவர், “இளைஞர்களே, வணக்கம். உங்களுக்கு நலம் பெருகட்டும்” என்று அவர்களை வாழ்த்தினார். பின்னர், அவர்களை அவர் வீட்டிற்குள் அழைத்துச் சென்று தம் ஆடுகளுள் ஒன்றை அடித்து அவர்களைச் சிறப்பாக உபசரித்தார்.

அவர்கள் குளித்தபின் கை அலம்பிவிட்டு உணவு அருந்த அமர்ந்தார்கள். தோபியா அசரியாவிடம், “சகோதரரே, என் உறவினளான சாராவை எனக்கு மணம் செய்து கொடுக்குமாறு இரகுவேலிடம் கேளும்” என்றார். இச்சொற்கள் இரகுவேலின் செவியில் விழுந்தன. அவர் இளைஞரிடம், “நீ இன்று இரவு உண்டு பருகி மகிழ்வுடன் இரு. தம்பி, என் மகள் சாராவை மணந்துகொள்ள உன்னைத் தவிர உரிமை உள்ள மனிதர் வேறு எவரும் இல்லை. உன்னைத் தவிர வேறு எவருக்கும் அவளைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் இல்லை; ஏனெனில் நீ என் நெருங்கிய உறவினன். ஆயினும், தம்பி, உன்னிடம் ஓர் உண்மையைக் கூற விரும்புகிறேன். அவளை நம் உறவினர்களுள் எழுவருக்கு மணமுடித்துக் கொடுத்தேன். அவளைக் கூடுவதற்கு நெருங்கிய அன்றிரவே அவர்கள் அனைவரும் இறந்தார்கள். இப்பொழுது, தம்பி, உண்டு பருகு. ஆண்டவர் உங்கள் இருவருக்கும் நல்லது செய்வார்” என்றார். அதற்குத் தோபியா, “நீங்கள் இதைப் பற்றி ஒரு முடிவுக்கு வரும்வரை நான் உண்ண மாட்டேன், பருக மாட்டேன்” என்றார். இரகுவேல், “சரி, செய்கிறேன்; மோசேயின் நூலில் விதித்துள்ளபடியே அவளை உனக்கு மணமுடித்துக் கொடுப்பேன். உனக்கு அவளைக் கொடுக்கும்படி விண்ணகத்தில் உறுதி செய்யப்பட்டு விட்டது. ஆகவே உன் உறவினளை ஏற்றுக்கொள். இனி நீ அவளுக்கு உரியவன்; அவள் உனக்கு உரியவள்; இன்று முதல் என்றுமே அவள் உன்னுடையவள். தம்பி, விண்ணக ஆண்டவர் இன்று இரவு உங்களைக் காப்பாராக; உங்கள் மீது இரக்கமும் அமைதியும் பொழிவாராக” என்றார்.
இரகுவேல் தம் மகள் சாராவை அழைக்க, அவள் வந்தாள். அவளது கையைப் பிடித்துத் தோபியாவிடம் கொடுத்தார். “மோசேயின் நூலில் விதித்துள்ள சட்டங்கள், முறைமைகளின்படி இவள் உனக்கு மனைவியாகிறாள். இவளை ஏற்றுக்கொண்டு உன் தந்தையின் வீட்டுக்கு இனிதே அழைத்துச் செல். விண்ணகக் கடவுள் உங்களுக்கு அமைதி அருள்வாராக” என்றார். பின்பு, அவர் சாராவின் தாயை அழைத்து ஓர் ஏட்டைக் கொண்டுவரச் சொன்னார். மோசேயின் சட்டம் விதித்துள்ளபடி சாராவைத் தோபியாவின் மனைவியாக்கும் திருமண ஒப்பந்தத்தை அதில் எழுதிக் கொடுத்தார். அதன் பின் அவர்கள் உண்டு பருகத் தொடங்கினார்கள்.

சாராவின் பெற்றோர் வெளியில் சென்று அறையின் கதவை மூடினர். தோபியா படுக்கையிலிருந்து எழுந்து சாராவிடம், “அன்பே, எழுந்திரு. நம் ஆண்டவர் நம்மீது இரங்கிக் காத்தருளுமாறு பணிந்து மன்றாடுவோம்” என்றார். சாரா எழுந்து நின்றாள். அவர்கள் மன்றாடத் தொடங்கி, தங்களைக் காத்தருளுமாறு வேண்டினார்கள். தோபியா பின்வருமாறு வேண்டினார். “எங்கள் மூதாதையரின் இறைவா, போற்றி! உமது பெயர் என்றென்றும் எல்லாத் தலைமுறைகளுக்கும் போற்றி! வானங்களும் உம் படைப்பு அனைத்தும் எக்காலமும் உம்மைப் போற்றுக! நீர் ஆதாமைப் படைத்தீர்; அவருடைய மனைவி ஏவாளை அவருக்குத் துணையாகவும் ஆதரவாகவும் உண்டாக்கினீர். அவர்கள் இருவரிடமிருந்தும் மனித இனம் தோன்றியது. ‘மனிதன் தனிமையாக இருப்பது நல்லதன்று; அவனுக்குத் தகுந்ததொரு துணையை உருவாக்குவோம்’ என்று உரைத்தீர். இப்பொழுது என் உறவினள் இவளை நான் மனைவியாக ஏற்றுக்கொள்வது இச்சையின் பொருட்டன்று, நேர்மையான நோக்கத்தோடுதான். என்மீதும் இவள்மீதும் இரக்கம் காட்டும்; நாங்கள் இருவரும் முதுமை அடையும் வரை இணைபிரியாது வாழச் செய்யும்.” இருவரும் “ஆமென், ஆமென்” என்று கூறினர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

June 8th : Gospel 'You are not far from the kingdom of God'A Reading from the Holy Gospel according to St.Mark 12:28-34

June 8th : Gospel 

'You are not far from the kingdom of God'

A Reading from the Holy Gospel according to St.Mark 12:28-34
One of the scribes came up to Jesus and put a question to him, ‘Which is the first of all the commandments?’ Jesus replied, ‘This is the first: Listen, Israel, the Lord our God is the one Lord, and you must love the Lord your God with all your heart, with all your soul, with all your mind and with all your strength. The second is this: You must love your neighbour as yourself. There is no commandment greater than these.’ The scribe said to him, ‘Well spoken, Master; what you have said is true: that he is one and there is no other. To love him with all your heart, with all your understanding and strength, and to love your neighbour as yourself, this is far more important than any holocaust or sacrifice.’ Jesus, seeing how wisely he had spoken, said, ‘You are not far from the kingdom of God.’ And after that no one dared to question him any more.

The Word of the Lord

June 8th : Responsorial PsalmPSALMS 128:1-5O Blessed are those who fear the Lord

June 8th : Responsorial Psalm

PSALMS 128:1-5

O Blessed are those who fear the Lord
1Blessed is every one who fears the LORD, who walks in his ways! 2You shall eat the fruit of the labor of your hands; you shall be happy, and it shall be well with you. 

O Blessed are those who fear the Lord

3Your wife will be like a fruitful vine within your house; your children will be like olive shoots around your table. 4Lo, thus shall the man be blessed who fears the LORD. 

O Blessed are those who fear the Lord

5The LORD bless you from Zion! May you see the prosperity of Jerusalem all the days of your life!

O Blessed are those who fear the Lord

Gospel Acclamation cf.Jn6:63,68

Alleluia, alleluia!

Your words are spirit, Lord, and they are life;
you have the message of eternal life.
Alleluia!

June 8th : First Reading'We must pray and petition the Lord'A Reading from the book of Tobit 6:10-11,7:1,9-14,8:4-9

June 8th : First Reading

'We must pray and petition the Lord'

A Reading from the book of Tobit 6:10-11,7:1,9-14,8:4-9 
Raphael and Tobit entered Media and had nearly reached Ecbetana when Raphael said to the boy, ‘Brother Tobias.’ ‘Yes?’ he answered. The angel went on, ‘Tonight we shall be staying with Raguel, who is a kinsman of yours. He has a daughter called Sarah, but apart from Sarah he has no other son or daughter.’
  As they entered Ecbatana, Tobias said, ‘Brother Azarias, take me at once to our brother Raguel’s.’ And he showed him the way to the house of Raguel, whom they found sitting beside his courtyard door. They greeted him first, and he replied, ‘Welcome and greetings, brothers.’ And he took them into his house. He said to his wife Edna, ‘How like my brother Tobit this young man is!’ Raguel killed a sheep from the flock, and they gave them a warm-hearted welcome.
  They washed and bathed and sat down to table. Then Tobias said to Raphael, ‘Brother Azarias, will you ask Raguel to give me my sister Sarah?’ Raguel overheard the words, and said to the young man, ‘Eat and drink, and make the most of your evening; no one else has the right to take my daughter Sarah – no one but you, my brother. In any case I, for my own part, am not at liberty to give her to anyone else, since you are her next of kin. However, my boy, I must be frank with you: I have tried to find a husband for her seven times among our kinsmen, and all of them have died the first evening, on going to her room. But for the present, my boy, eat and drink; the Lord will grant you his grace and peace.’ Tobias spoke out, ‘I will not hear of eating and drinking till you have come to a decision about me.’ Raguel answered, ‘Very well. Since, as prescribed by the Book of Moses, she is given to you, heaven itself decrees she shall be yours. I therefore entrust your sister to you. From now you are her brother and she is your sister. She is given to you from today for ever. The Lord of heaven favour you tonight, my child, and grant you his grace and peace.’ Raguel called for his daughter Sarah, took her by the hand and gave her to Tobias with these words, ‘I entrust her to you; the law and the ruling recorded in the Book of Moses assign her to you as your wife. Take her; take her home to your father’s house with a good conscience. The God of heaven grant you a good journey in peace.’ Then he turned to her mother and asked her to fetch him writing paper. He drew up the marriage contract, how he gave his daughter as bride to Tobias according to the ordinance in the Law of Moses.
After this they began to eat and drink. The parents, meanwhile, had gone out and shut the door behind them. Tobias rose from the bed, and said to Sarah, ‘Get up, my sister! You and I must pray and petition our Lord to win his grace and his protection.’ She stood up, and they began praying for protection, and this was how he began:
‘You are blessed, O God of our fathers;
blessed, too, is your name
for ever and ever.
Let the heavens bless you
and all things you have made
for evermore.
It was you who created Adam,
you who created Eve his wife
to be his help and support;
and from these two the human race was born.
It was you who said,
“It is not good that the man should be alone;
let us make him a helpmate like himself.”
And so I do not take my sister
for any lustful motive;
I do it in singleness of heart.
Be kind enough to have pity on her and on me
and bring us to old age together.’
And together they said, ‘Amen, Amen’, and lay down for the night.

The Word of the Lord