Search This Blog

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

Thursday, September 23, 2021

செப்டம்பர் 24 : நற்செய்தி வாசகம்நீர் கடவுளின் மெசியா. மானிட மகன் பலவாறு துன்பப்பட வேண்டும்.✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 18-22

செப்டம்பர் 24 : நற்செய்தி வாசகம்

நீர் கடவுளின் மெசியா. மானிட மகன் பலவாறு துன்பப்பட வேண்டும்.

✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 18-22
அக்காலத்தில்

இயேசு தனித்து இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தபோது சீடர் மட்டும் அவரோடு இருந்தனர். அப்போது அவர்களிடம் “நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்?” என்று அவர் கேட்டார்.

அவர்கள் மறு மொழியாக, “சிலர் திருமுழுக்கு யோவான் எனவும் வேறு சிலர் எலியா எனவும் மற்றும் சிலர் முற்காலத்து இறைவாக்கினருள் ஒருவர் உயிர்த்தெழுந்துள்ளார் எனவும் சொல்கின்றனர்” என்றார்கள்.

“ஆனால் நீங்கள் நான் யார் எனச் சொல்கிறீர்கள்?” என்று அவர்களிடம் அவர் கேட்டார். பேதுரு மறுமொழியாக, “நீர் கடவுளின் மெசியா” என்று உரைத்தார். இதை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று அவர்களிடம் அவர் கண்டிப்பாய்க் கூறினார்.

மேலும் இயேசு, “மானிட மகன் பலவாறு துன்பப்படவும் மூப்பர்கள், தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர் ஆகியோரால் உதறித் தள்ளப்பட்டுக் கொலை செய்யப்படவும் மூன்றாம் நாளில் உயிருடன் எழுப்பப்படவும் வேண்டும்” என்று சொன்னார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.
.

செப்டம்பர் 24 : பதிலுரைப் பாடல்திபா 43: 1. 2. 3. 4 (பல்லவி: 5bc)பல்லவி: கடவுளின் மீட்புச் செயல்களுக்காக அவருக்கு நன்றி செலுத்துவேன்.

செப்டம்பர் 24 : பதிலுரைப் பாடல்

திபா 43: 1. 2. 3. 4 (பல்லவி: 5bc)

பல்லவி: கடவுளின் மீட்புச் செயல்களுக்காக அவருக்கு நன்றி செலுத்துவேன்.
1
கடவுளே, என் நேர்மையை நிலைநாட்டும்; இறைப் பற்றில்லா இனத்தோடு என் வழக்குக்காக வாதிடும்; வஞ்சகமும் கொடுமையும் நிறைந்த மனிதர் கையினின்று என்னை விடுவித்தருளும். - பல்லவி

2
கடவுளே! நீரே என் ஆற்றல்; ஏன் என்னை ஒதுக்கித் தள்ளிவிட்டீர்? எதிரியால் ஒடுக்கப்பட்டு, நான் ஏன் துயருடன் நடமாட வேண்டும்? - பல்லவி

3
உம் ஒளியையும் உண்மையையும் அனுப்பியருளும். அவை என்னை வழி நடத்தி, உமது திருமலைக்கும் உமது உறைவிடத்திற்கும் கொண்டுபோய்ச் சேர்க்கும். - பல்லவி

4
அப்பொழுது, நான் கடவுளின் பீடம் செல்வேன்; என் மன மகிழ்ச்சியாகிய இறைவனிடம் செல்வேன்; கடவுளே! என் கடவுளே! யாழிசைத்து ஆர்ப்பரித்து உம்மைப் புகழ்ந்திடுவேன். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மாற் 10: 45

அல்லேலூயா, அல்லேலூயா!

 மானிட மகன் தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார். அல்லேலூயா.

செப்டம்பர் 24 : முதல் வாசகம்இந்தக் கோவிலை நான் மாட்சியால் நிரப்புவேன்.இறைவாக்கினர் ஆகாய் நூலிலிருந்து வாசகம் 2: 1-9

செப்டம்பர் 24 : முதல் வாசகம்

இந்தக் கோவிலை நான் மாட்சியால் நிரப்புவேன்.

இறைவாக்கினர் ஆகாய் நூலிலிருந்து வாசகம் 2: 1-9
தாரியு அரசனது இரண்டாம் ஆட்சியாண்டின் ஏழாம் மாதத்தின் இருபத்தோராம் நாளன்று, ஆண்டவரின் வாக்கு இறைவாக்கினர் ஆகாய் வாயிலாக அருளப்பட்டது: “யூதாவின் ஆளுநரும் செயல்தியேலின் மகனுமாகிய செருபாபேலிடமும் தலைமைக் குருவும் யோசதாக்கின் மகனுமாகிய யோசுவாவிடமும் மக்களுள் எஞ்சியிருப்போர் அனைவரிடமும் இப்பொழுது நீ போய் இவ்வாறு சொல்: ‘இந்தக் கோவிலின் முன்னைய மாட்சியைக் கண்டவர் எவராகிலும் உங்களிடையே இன்னும் இருக்கின்றனரா? இப்போது இது உங்களுக்கு எக்கோலத்தில் தோன்றுகிறது? இது உங்கள் பார்வையில் ஒன்றும் இல்லாதது போல் தோன்றுகிறது அல்லவா? ஆயினும் செருபாபேலே! மன உறுதியோடு இரு,’ என்கிறார் ஆண்டவர். ‘தலைமைக் குருவும் யோசதாக்கின் மகனுமாகிய யோசுவாவே! மன உறுதியோடு இரு; நாட்டிலுள்ள அனைத்து மக்களே, ஊக்கம் கொள்ளுங்கள்; பணியைத் தொடருங்கள்; ஏனெனில் நான் உங்களோடு இருக்கிறேன்’ என்கிறார் படைகளின் ஆண்டவர்.” “நீங்கள் எகிப்தினின்று புறப்பட்டு வந்த போது உங்களுக்கு நான் அளித்த வாக்குறுதியின்படி, உங்கள் நடுவில் எனது ஆவி நிலைகொண்டிருக்கிறது; அஞ்சாதீர்கள்.

ஏனெனில் படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: ‘இன்னும் சிறிது காலத்தில் நான் விண்ணுலகையும், மண்ணுலகையும், கடலையும் பாலை நிலத்தையும் நடுக்கமுறச் செய்வேன். வேற்றினத்தார் அனைவரையும் நிலைகுலையச் செய்வேன். அப்போது வேற்றினத்தார் அனைவரின் விருப்பத்திற்குரியவைகளும் இங்கு வந்து சேரும்; இந்தக் கோவிலை நான் மாட்சியால் நிரப்புவேன்’ என்கிறார் படைகளின் ஆண்டவர். ‘வெள்ளி எனக்கு உரியது, பொன்னும் எனக்கு உரியது', என்கிறார் படைகளின் ஆண்டவர். ‘இந்தக் கோவிலின் முன்னைய மாட்சியை விடப் பின்னைய மாட்சி மிகுதியாய் இருக்கும்', என்கிறார் படைகளின் ஆண்டவர். ‘இந்த இடத்தில் நான் நலம் நல்குவேன்’ என்கிறார் படைகளின் ஆண்டவர்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

September 24th : Gospel 'You are the Christ of God'A reading from the Holy Gospel according to St.Luke 9: 18-22

September 24th :   Gospel 

'You are the Christ of God'

A reading from the Holy Gospel according to St.Luke 9: 18-22 
One day when Jesus was praying alone in the presence of his disciples he put this question to them, ‘Who do the crowds say I am?’ And they answered, ‘John the Baptist; others Elijah; and others say one of the ancient prophets come back to life.’ ‘But you,’ he said ‘who do you say I am?’ It was Peter who spoke up. ‘The Christ of God’ he said. But he gave them strict orders not to tell anyone anything about this.
  ‘The Son of Man’ he said ‘is destined to suffer grievously, to be rejected by the elders and chief priests and scribes and to be put to death, and to be raised up on the third day.’

The Word of the Lord.

September 24th : Responsorial PsalmPsalm 42(43):1-4 Hope in God; I will praise him still, my saviour and my God.

September 24th :   Responsorial Psalm

Psalm 42(43):1-4 

Hope in God; I will praise him still, my saviour and my God.
Defend me, O God, and plead my cause
  against a godless nation.
From deceitful and cunning men
  rescue me, O God.

Hope in God; I will praise him still, my saviour and my God.

Since you, O God, are my stronghold,
  why have you rejected me?
Why do I go mourning
  oppressed by the foe?

Hope in God; I will praise him still, my saviour and my God.

O send forth your light and your truth;
  let these be my guide.
Let them bring me to your holy mountain,
  to the place where you dwell.

Hope in God; I will praise him still, my saviour and my God.

And I will come to the altar of God,
  the God of my joy.
My redeemer, I will thank you on the harp,
  O God, my God.

Hope in God; I will praise him still, my saviour and my God.

Gospel Acclamation cf.Ep1:17,18

Alleluia, alleluia!
May the Father of our Lord Jesus Christ
enlighten the eyes of our mind,
so that we can see what hope his call holds for us.
Alleluia!

September 24th : First Reading 'The new glory of this Temple is to surpass the old'A reading from the Book of Haggai 1: 15-2:9.

September 24th :  First Reading 

'The new glory of this Temple is to surpass the old'

A reading from the Book of  Haggai 1: 15-2:9. 
In the second year of King Darius, on the twenty-first day of the seventh month, the word of the Lord was addressed through the prophet Haggai, as follows, ‘You are to speak to Zerubbabel son of Shealtiel, the high commissioner of Judah, to Joshua son of Jehozadak, the high priest, and to all the remnant of the people. Say this, “Who is there left among you that saw this Temple in its former glory? And how does it look to you now? Does it seem nothing to you? But take courage now, Zerubbabel – it is the Lord who speaks. Courage, High Priest Joshua son of Jehozadak! Courage, all you people of the country! – it is the Lord who speaks. To work! I am with you – it is the Lord of Hosts who speaks – and my spirit remains among you. Do not be afraid! For the Lord of Hosts says this: A little while now, and I am going to shake the heavens and the earth, the sea and the dry land. I will shake all the nations and the treasures of all the nations shall flow in, and I will fill this Temple with glory, says the Lord of Hosts. Mine is the silver, mine the gold! – it is the Lord of Hosts who speaks. The new glory of this Temple is going to surpass the old, says the Lord of Hosts, and in this place I will give peace – it is the Lord of Hosts who speaks.”’

The Word of the Lord.