Search This Blog

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

Friday, January 8, 2021

நற்செய்தி வாசகம் மணமகனின் தோழர் அவர் சொல்வதைக் கேட்டு பெருமகிழ்வடைகிறார். + யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 22-30

நற்செய்தி வாசகம் 

மணமகனின் தோழர் அவர் சொல்வதைக் கேட்டு பெருமகிழ்வடைகிறார். 

+ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 22-30 

அக்காலத்தில் 
இயேசுவும் அவர்தம் சீடரும் யூதேயப் பகுதிக்குச் சென்றனர். அங்கே அவர் அவர்களோடு தங்கித் திருமுழுக்குக் கொடுத்து வந்தார். யோவானும் சலீம் என்னும் இடத்துக்கு அருகில் உள்ள அயினோனில் திருமுழுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தார். ஏனெனில் அங்குத் தண்ணீர் நிறைய இருந்தது. மக்கள் அங்கு சென்று திருமுழுக்குப் பெற்று வந்தார்கள். யோவான் சிறையில் அடைக்கப்படுமுன் இவ்வாறு நிகழ்ந்தது. 

ஒரு நாள் யோவானின் சீடர் சிலருக்கும் யூதர் ஒருவருக்கும் இடையே தூய்மைச் சடங்குபற்றி விவாதம் எழுந்தது. அவர்கள் யோவானிடம் போய், “ரபி, யோர்தான் ஆற்றின் அக்கரைப் பகுதியில் உம்மோடு ஒருவர் இருந்தாரே! நீரும் அவரைக் குறித்துச் சான்று பகர்ந்தீரே! இப்போது அவரும் திருமுழுக்குக் கொடுக்கிறார். எல்லாரும் அவரிடம் செல்கின்றனர்” என்றார்கள். 

யோவான் அவர்களைப் பார்த்து, “விண்ணிலிருந்து அருளப்படா விட்டால் எவரும் எதையும் பெற்றுக்கொள்ள முடியாது. ‘நான் மெசியா அல்ல; மாறாக அவருக்கு முன்னோடியாக அனுப்பப்பட்டவன்’ என்று நான் கூறியதற்கு நீங்களே சாட்சிகள். மணமகள் மணமகனுக்கே உரியவர். மணமகனின் தோழரோ அருகில் நின்று அவர் சொல்வதைக் கேட்கிறார்; அதில் அவர் பெருமகிழ்ச்சி அடைகிறார். என் மகிழ்ச்சியும் இது போன்றது. இம்மகிழ்ச்சி என்னுள் நிறைந்துள்ளது. அவரது செல்வாக்குப் பெருக வேண்டும்; எனது செல்வாக்குக் குறைய வேண்டும்” என்றார். 

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

பதிலுரைப் பாடல் பல்லவி: ஆண்டவர் தம் மக்கள்மீது விருப்பம் கொள்கின்றார். அல்லது: அல்லேலூயா. திருப்பாடல் 149: 1-2. 3-4. 5-6a,9b (பல்லவி: 4a)

பதிலுரைப் பாடல் 

பல்லவி: ஆண்டவர் தம் மக்கள்மீது விருப்பம் கொள்கின்றார். 

அல்லது: அல்லேலூயா. 

திருப்பாடல் 149: 1-2. 3-4. 5-6a,9b (பல்லவி: 4a) 
1அல்லேலூயா, ஆண்டவருக்குப் புதியதொரு பாடலைப் பாடுங்கள்; அவருடைய அன்பர் சபையில் அவரது புகழைப் பாடுங்கள். 

2இஸ்ரயேல் தன்னை உண்டாக்கினவரைக் குறித்து மகிழ்ச்சி கொள்வதாக! சீயோனின் மக்கள் தம் அரசரை முன்னிட்டுக் களிகூர்வார்களாக. - பல்லவி 

3நடனம் செய்து அவரது பெயரைப் போற்றுவார்களாக; மத்தளம் கொட்டி, யாழிசைத்து அவரைப் புகழ்ந்து பாடுவார்களாக! 

4ஆண்டவர் தம் மக்கள்மீது விருப்பம் கொள்கின்றார்; தாழ்நிலையிலுள்ள அவர்களுக்கு வெற்றி அளித்து மேன்மைப் படுத்துவார். - பல்லவி 

5அவருடைய அன்பர் மேன்மை அடைந்து களிகூர்வராக! மெத்தைகளில் சாய்ந்து மகிழ்ந்து கொண்டாடுவராக! 

6aஅவர்களின் வாய் இறைவனை ஏத்திப் புகழட்டும். 

9bஇத்தகைய மேன்மை ஆண்டவர்தம் அன்பர் அனைவருக்கும் உரித்தானது. அல்லேலூயா! - பல்லவி
____ 

நற்செய்திக்குமுன் வாழ்த்தொலி : 

அல்லேலூயா, அல்லேலூயா! காரிருளில் இருந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள். சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போர்மேல் சுடரொளி உதித்துள்ளது. அல்லேலூயா.

09/01/2021, திருக்காட்சி விழாவுக்குப் பின் சனி முதல் வாசகம் நாம் எதைக் கேட்டாலும் கடவுள் நமக்குச் செவிசாய்க்கிறார். திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 5: 14-21

09/01/2021, திருக்காட்சி விழாவுக்குப் பின் சனி 

முதல் வாசகம் 

நாம் எதைக் கேட்டாலும் கடவுள் நமக்குச் செவிசாய்க்கிறார். 

திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 5: 14-21 
அன்பார்ந்தவர்களே, 

நாம் கேட்பது கடவுளுடைய திருவுளத்திற்கு ஏற்ப அமைந்திருப்பின், அவர் நமக்குச் செவிசாய்க்கிறார்; இதுவே நாம் அவர்மீது கொண்டுள்ள உறுதியான நம்பிக்கை. நாம் எதைக் கேட்டாலும் அவர் நமக்குச் செவிசாய்க்கிறார் என்று நமக்குத் தெரியும். எனவே, நாம் அவரிடம் கேட்டவற்றைப் பெறுவோம் என்னும் உறுதி நமக்கு உண்டு. 

பாவம் செய்வோர் சாவுக்குரிய பாவம் செய்யவில்லை என்று கண்டால், அவர்களுக்காகக் கடவுளிடம் வேண்டுதல் செய்யவேண்டும். கடவுளும் அவர்களுக்கு வாழ்வு அருள்வார். சாவுக்குரிய பாவமும் உண்டு. அப்பாவத்தைச் செய்வோருக்காக வேண்டுதல் செய்யவேண்டும் என நான் சொல்லவில்லை. தீச்செயல் அனைத்துமே பாவம். ஆனால் எல்லாப் பாவமுமே சாவுக்குரியவை அல்ல. 

கடவுளிடமிருந்து பிறந்தோர் பாவம் செய்வதில்லை என்பது நமக்குத் தெரியும். ஏனெனில் கடவுளிடமிருந்து பிறந்தவர்களை அவர் பாதுகாக்கிறார். தீயோன் அவர்களைத் தீண்டுவதில்லை. நாம் கடவுளைச் சார்ந்தவர்கள்; ஆனால், உலகனைத்தும் தீயோனின் பிடியில் இருக்கிறது. இது நமக்குத் தெரியும். 

இறைமகன் வந்து உண்மையான இறைவனை அறிந்துகொள்ளும் ஆற்றலை நமக்குத் தந்துள்ளார். இது நமக்குத் தெரியும். நாம் உண்மையான இறைவனோடும் அவர் மகன் இயேசு கிறிஸ்துவோடும் இணைந்து வாழ்கிறோம். இவரே உண்மைக் கடவுள். இவரே நிலைவாழ்வு. 

பிள்ளைகளே, சிலைவழிபாட்டைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள். 

ஆண்டவரின் அருள்வாக்கு.

GOSPEL* The groom's companion is delighted to hear what he has to say. *🕯️A Reading from the Holy Gospel according to John 3:22-30*

*📖GOSPEL* 

The groom's companion is delighted to hear what he has to say. 

*🕯️A Reading from the Holy Gospel according to John 3:22-30*
After this, Jesus went with his disciples into the Judaean countryside and stayed with them there and baptised.
John also was baptising at Aenon near Salim, where there was plenty of water, and people were going there and were being baptised.
For John had not yet been put in prison.
Now a discussion arose between some of John's disciples and a Jew about purification,
so they went to John and said, 'Rabbi, the man who was with you on the far side of the Jordan, the man to whom you bore witness, is baptising now, and everyone is going to him.'
John replied: 'No one can have anything except what is given him from heaven.
'You yourselves can bear me out. I said, "I am not the Christ; I am the one who has been sent to go in front of him."
'It is the bridegroom who has the bride; and yet the bridegroom's friend, who stands there and listens to him, is filled with joy at the bridegroom's voice. This is the joy I feel, and it is complete.
He must grow greater, I must grow less. 

*The Gospel of the Lord* 

I believe in God, /..

RESPONSORIAL* Respons : The Lord takes pleasure in His people.( Or ) Alleluia ! Psalms 149:1-2, 3-4, 5-6a and 9b

*🍁RESPONSORIAL* 

Respons : The Lord takes pleasure in His people.
( Or ) Alleluia ! 

Psalms 149:1-2, 3-4, 5-6a and 9b 
1 Alleluia! Sing a new song to Yahweh: his praise in the assembly of the faithful!
2 Israel shall rejoice in its Maker, the children of Zion delight in their king; 

3 they shall dance in praise of his name, play to him on tambourines and harp!
4 For Yahweh loves his people, he will crown the humble with salvation. 

5 The faithful exult in glory, shout for joy as they worship him,
6 praising God to the heights with their voices, a two-edged sword in their hands,
9 to execute on them the judgement passed -- to the honour of all his faithful.
___ 

*🌿Gospel Acclamation* 

```Alleluia, alleluia! The people in the car saw the light. In the shadow of death, a flame has set in on residents. Alleluia!```

Daily Reading for Saturday January 9, 2021_*FIRST READING* God listens to us no matter what we ask. A Reading from the Book of 1 John 5:14-21

_🌿Daily Reading for Saturday January 9, 2021_

*FIRST READING* 

God listens to us no matter what we ask. 

A Reading from the Book of 1 John 5:14-21 
Our fearlessness towards him consists in this, that if we ask anything in accordance with his will he hears us.
And if we know that he listens to whatever we ask him, we know that we already possess whatever we have asked of him.
If anyone sees his brother commit a sin that is not a deadly sin, he has only to pray, and God will give life to this brother -- provided that it is not a deadly sin. There is sin that leads to death and I am not saying you must pray about that.
Every kind of wickedness is sin, but not all sin leads to death.
We are well aware that no one who is a child of God sins, because he who was born from God protects him, and the Evil One has no hold over him.
We are well aware that we are from God, and the whole world is in the power of the Evil One.
We are well aware also that the Son of God has come, and has given us understanding so that we may know the One who is true. We are in the One who is true as we are in his Son, Jesus Christ. He is the true God and this is eternal life. Children, be on your guard against false gods. 

*The Word of the Lord*