Search This Blog

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

Sunday, November 5, 2023

நவம்பர் 6 : நற்செய்தி வாசகம்நண்பர்களையல்ல, ஏழைகளையும் ஊனமுற்றோரையும் பார்வையற்றோரையும் அழையும்.✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 12-14

நவம்பர் 6 :  நற்செய்தி வாசகம்

நண்பர்களையல்ல, ஏழைகளையும் ஊனமுற்றோரையும் பார்வையற்றோரையும் அழையும்.

✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 12-14
அக்காலத்தில்

தம்மை விருந்துக்கு அழைத்தவரிடம் இயேசு, “நீர் பகல் உணவோ இரவு உணவோ அளிக்கும்போது உம் நண்பர்களையோ, சகோதரர் சகோதரிகளையோ, உறவினர்களையோ, செல்வம் படைத்த அண்டை வீட்டாரையோ அழைக்க வேண்டாம். அவ்வாறு அழைத்தால் அவர்களும் உம்மைத் திரும்ப அழைக்கலாம். அப்பொழுது அதுவே உமக்குக் கைம்மாறு ஆகிவிடும். மாறாக, நீர் விருந்து அளிக்கும்போது ஏழைகளையும் உடல் ஊனமுற்றோரையும் கால் ஊனமுற்றோரையும் பார்வையற்றோரையும் அழையும். அப்போது நீர் பேறுபெற்றவர் ஆவீர். ஏனென்றால் உமக்குக் கைம்மாறு செய்ய அவர்களிடம் ஒன்றுமில்லை. நேர்மையாளர்கள் உயிர்த்தெழும்போது உமக்குக் கைம்மாறு கிடைக்கும்” என்று கூறினார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

நவம்பர் 6 : பதிலுரைப் பாடல்திபா 69: 29-30. 32-33. 35-36 (பல்லவி: 13cd)பல்லவி: உமது பேரன்பின் பெருக்கினால் கடவுளே, எனக்குப் பதில் தாரும்.

நவம்பர் 6 :  பதிலுரைப் பாடல்

திபா 69: 29-30. 32-33. 35-36 (பல்லவி: 13cd)

பல்லவி: உமது பேரன்பின் பெருக்கினால் கடவுளே, எனக்குப் பதில் தாரும்.
29
எளியேன் சிறுமைப்பட்டவன்; காயமுற்றவன்; கடவுளே! நீர் அருளும் மீட்பு எனக்குப் பாதுகாப்பாய் இருப்பதாக!
30
கடவுளின் பெயரை நான் பாடிப் புகழ்வேன்; அவருக்கு நன்றி செலுத்தி, அவரை மாட்சிமைப்படுத்துவேன். - பல்லவி

32
எளியோர் இதைக் கண்டு மகிழ்ச்சி அடைவார்கள்; கடவுளை நாடித் தேடுகிறவர்களே, உங்கள் உள்ளம் ஊக்கமடைவதாக.
33
ஆண்டவர் ஏழைகளின் விண்ணப்பத்திற்குச் செவிசாய்க்கின்றார்; சிறைப்பட்ட தம் மக்களை அவர் புறக்கணிப்பதில்லை. - பல்லவி

35
கடவுள் சீயோனுக்கு மீட்பளிப்பார்; யூதாவின் நகரங்களைக் கட்டி எழுப்புவார்; அப்பொழுது அவர்களுடைய மக்கள் அங்கே குடியிருப்பார்கள்; நாட்டைத் தங்களுக்குச் சொந்தமாக்கிக் கொள்வார்கள்.
36
ஆண்டவருடைய அடியாரின் மரபினர் அதைத் தம் உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர்; அவரது பெயர்மீது அன்புகூர்வோர் அதில் குடியிருப்பர். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 8: 31b-32
அல்லேலூயா, அல்லேலூயா! 

என் வார்த்தைகளை நீங்கள் தொடர்ந்து கடைப்பிடித்து வந்தால் உண்மையில் என் சீடர்களாய் இருப்பீர்கள்; உண்மையை அறிந்தவர்களாயும் இருப்பீர்கள். அல்லேலூயா.

நவம்பர் 6 : முதல் வாசகம்இரக்கம் காட்டுவதற்காகவே கடவுள் அனைவரையும் கீழ்ப்படியாமைக்கு உட்படுத்தினார்.திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 11: 29-36.

நவம்பர் 6 :  முதல் வாசகம்

இரக்கம் காட்டுவதற்காகவே கடவுள் அனைவரையும் கீழ்ப்படியாமைக்கு உட்படுத்தினார்.

திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 11: 29-36.
சகோதரர் சகோதரிகளே,

கடவுள் தாம் விடுத்த அழைப்பையும் கொடுத்த அருள்கொடைகளையும் திரும்பப் பெற்றுக்கொள்வதில்லை. ஒரு காலத்தில் நீங்கள் கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் இருந்தீர்கள்; இப்பொழுது அவர்கள் கீழ்ப்படியாமல் இருப்பதால், நீங்கள் கடவுளின் இரக்கத்தைப் பெற்றுக்கொண்டீர்கள். அது போல, இக்காலத்தில் நீங்கள் இரக்கத்திற்குரியவர்களாக இருக்கிறீர்கள்; அவர்கள் கீழ்ப்படியாமல் இருக்கிறார்கள்; ஆனால் அவர்களும் விரைவில் இரக்கம் பெற்றுக்கொள்வார்கள்; அதன் பொருட்டே இவ்வாறு நடந்திருக்கிறது. ஏனெனில், அனைவருக்கும் இரக்கம் காட்டுவதற்காகவே கடவுள் அனைவரையும் கீழ்ப்படியாமைக்கு உட்படுத்தினார்.

கடவுளின் அருள் செல்வம் எத்துணை மிகுதியானது! அவருடைய ஞானமும் அறிவும் எத்துணை ஆழமானவை! அவருடைய தீர்ப்புகள் அறிவுக்கு எட்டாதவை! அவருடைய செயல்முறைகள் ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டவை! “ஏனெனில் ஆண்டவரின் மனத்தை அறிபவர் யார்? அவருக்கு அறிவுரையாளராய் இருப்பவர் யார்? தமக்குக் கைம்மாறாக ஏதாவது கிடைக்கும் என முன்னதாகவே அவரிடம் கொடுத்து வைத்தவர் யார்?” அனைத்தும் அவரிடமிருந்தே வந்தன; அவராலேயே உண்டாயின; அவருக்காகவே இருக்கின்றன, அவருக்கே என்றென்றும் மாட்சி உரித்தாகுக! ஆமென்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

November 6th : Gospel Do not invite those who might be able to invite you backA reading from the Holy Gospel according to St.Luke 14:12-14

November 6th :  Gospel 

Do not invite those who might be able to invite you back

A reading from the Holy Gospel according to St.Luke 14:12-14 
Jesus said to his host, one of the leading Pharisees, ‘When you give a lunch or a dinner, do not ask your friends, brothers, relations or rich neighbours, for fear they repay your courtesy by inviting you in return. No; when you have a party, invite the poor, the crippled, the lame, the blind; that they cannot pay you back means that you are fortunate, because repayment will be made to you when the virtuous rise again.’

The Word of the Lord.

November 6th : Responsorial PsalmPsalm 68(69):30-31,33-34,36-37 In your great love, answer me, O God

November 6th :  Responsorial Psalm

Psalm 68(69):30-31,33-34,36-37 

In your great love, answer me, O God.
As for me in my poverty and pain
  let your help, O God, lift me up.
I will praise God’s name with a song;
  I will glorify him with thanksgiving.

In your great love, answer me, O God.

The poor when they see it will be glad
  and God-seeking hearts will revive;
for the Lord listens to the needy
  and does not spurn his servants in their chains.

In your great love, answer me, O God.

For God will bring help to Zion
  and rebuild the cities of Judah
  and men shall dwell there in possession.
The sons of his servants shall inherit it;
  those who love his name shall dwell there.

In your great love, answer me, O God.

Gospel Acclamation Ps118:18

Alleluia, alleluia!

Open my eyes, O Lord, that I may consider
the wonders of your law.
Alleluia!

November 6th : First reading God never takes back his giftsA reading from the letter of St.Paul to the Romans 11: 29-36

November 6th :  First reading 

God never takes back his gifts

A reading from the letter of St.Paul to the Romans 11: 29-36 
God never takes back his gifts or revokes his choice.
  Just as you changed from being disobedient to God, and now enjoy mercy because of their disobedience, so those who are disobedient now – and only because of the mercy shown to you – will also enjoy mercy eventually. God has imprisoned all men in their own disobedience only to show mercy to all mankind.
  How rich are the depths of God – how deep his wisdom and knowledge – and how impossible to penetrate his motives or understand his methods! Who could ever know the mind of the Lord? Who could ever be his counsellor? Who could ever give him anything or lend him anything?
  All that exists comes from him; all is by him and for him. To him be glory for ever! Amen.

The Word of the Lord.