Search This Blog

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

Saturday, October 17, 2020

October 18th : GospelGive back to Caesar what belongs to Caesar.A Reading from the Holy Gospel according to St.Matthew 22:15-21

October 18th :   Gospel

Give back to Caesar what belongs to Caesar.

A Reading from the Holy Gospel according to St.Matthew 22:15-21 
The Pharisees went away to work out between them how to trap Jesus in what he said. And they sent their disciples to him, together with the Herodians, to say, ‘Master, we know that you are an honest man and teach the way of God in an honest way, and that you are not afraid of anyone, because a man’s rank means nothing to you. Tell us your opinion, then. Is it permissible to pay taxes to Caesar or not?’ But Jesus was aware of their malice and replied, ‘You hypocrites! Why do you set this trap for me? Let me see the money you pay the tax with.’ They handed him a denarius, and he said, ‘Whose head is this? Whose name?’ ‘Caesar’s’ they replied. He then said to them, ‘Very well, give back to Caesar what belongs to Caesar – and to God what belongs to God.’

The Gospel of the Lord.

October 18th : Second ReadingWe constantly remember your faith, your love and your hope.A Reading from the First Letter of St.Paul to the Thessalonians 1:1-5.

October 18th : Second Reading

We constantly remember your faith, your love and your hope.

A Reading from the First Letter of St.Paul to the Thessalonians 1:1-5. 
From Paul, Silvanus and Timothy, to the Church in Thessalonika which is in God the Father and the Lord Jesus Christ; wishing you grace and peace from God the Father and the Lord Jesus Christ.
  We always mention you in our prayers and thank God for you all, and constantly remember before God our Father how you have shown your faith in action, worked for love and persevered through hope, in our Lord Jesus Christ.
  We know, brothers, that God loves you and that you have been chosen, because when we brought the Good News to you, it came to you not only as words, but as power and as the Holy Spirit and as utter conviction.

The Word of the Lord.

Gospel Acclamation Jn17:17

Alleluia, alleluia!
Your word is truth, O Lord:
consecrate us in the truth.
Alleluia!

October 18th : Responsorial PsalmPsalm 95(96):1,3-5,7-10 Give the Lord glory and power.

October 18th : Responsorial Psalm

Psalm 95(96):1,3-5,7-10 

Give the Lord glory and power.
O sing a new song to the Lord,
  sing to the Lord all the earth.
Tell among the nations his glory
  and his wonders among all the peoples.

Give the Lord glory and power.

The Lord is great and worthy of praise,
  to be feared above all gods;
  the gods of the heathens are naught.
It was the Lord who made the heavens,

Give the Lord glory and power.

Give the Lord, you families of peoples,
  give the Lord glory and power;
  give the Lord the glory of his name.
Bring an offering and enter his courts.

Give the Lord glory and power.

Worship the Lord in his temple.
  O earth, tremble before him.
Proclaim to the nations: ‘God is king.’
  He will judge the peoples in fairness.

Give the Lord glory and power.

October 18th : First Reading I have taken Cyrus by his right hand to subdue nations before him.A Reading from the Book of Isaiah 45:1,4-6

October 18th :   First Reading 

I have taken Cyrus by his right hand to subdue nations before him.

A Reading from the Book of Isaiah 45:1,4-6 
Thus says the Lord to his anointed, to Cyrus,
whom he has taken by his right hand
to subdue nations before him
and strip the loins of kings,
to force gateways before him
that their gates be closed no more:
‘It is for the sake of my servant Jacob,
of Israel my chosen one,
that I have called you by your name,
conferring a title though you do not know me.
I am the Lord, unrivalled;
there is no other God besides me.
Though you do not know me, I arm you
that men may know from the rising to the setting of the sun
that, apart from me, all is nothing.’

The Word of the Lord.

அக்டோபர் 18 : நற்செய்தி வாசகம்சீசருக்கு உரியவற்றைச் சீசருக்கும் கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுங்கள்.மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 22: 15-21

அக்டோபர் 18 : நற்செய்தி வாசகம்

சீசருக்கு உரியவற்றைச் சீசருக்கும் கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுங்கள்.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 22: 15-21
அக்காலத்தில்

பரிசேயர்கள் போய் எப்படி இயேசுவைப் பேச்சில் சிக்க வைக்கலாம் எனச் சூழ்ச்சி செய்தார்கள். தங்கள் சீடரை ஏரோதியருடன் அவரிடம் அனுப்பி, “போதகரே, நீர் உண்மையுள்ளவர்; எவரையும் பொருட் படுத்தாமல் கடவுளின் நெறியை உண்மைக்கேற்பக் கற்பிப்பவர்; ஆள் பார்த்துச் செயல்படாதவர் என்பது எங்களுக்குத் தெரியும். சீசருக்கு வரி செலுத்துவது முறையா? இல்லையா? நீர் என்ன நினைக்கிறீர் என எங்களுக்குச் சொல்லும்” என்று அவர்கள் கேட்டார்கள்.

இயேசு அவர்களுடைய தீய நோக்கத்தை அறிந்துகொண்டு, “வெளி வேடக்காரரே, ஏன் என்னைச் சோதிக்கிறீர்கள்? வரி கொடுப்பதற்கான நாணயம் ஒன்றை எனக்குக் காட்டுங்கள்” என்றார். அவர்கள் ஒரு தெனாரியத்தை அவரிடம் கொண்டு வந்தார்கள்.

இயேசு அவர்களிடம், “இதில் பொறிக்கப்பட்டுள்ள உருவமும் எழுத்தும் யாருடையவை?” என்று கேட்டார். அவர்கள், “சீசருடையவை” என்றார்கள்.

அதற்கு அவர், “ஆகவே சீசருக்கு உரியவற்றைச் சீசருக்கும் கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுங்கள்” என்று அவர்களிடம் கூறினார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

அக்டோபர் 18 : இரண்டாம் வாசகம்உங்கள் நம்பிக்கையையும், அன்பினால் உந்தப்பட்ட உங்கள் உழைப்பையும், உங்கள் மனவுறுதியையும் நினைவுகூருகிறோம்.திருத்தூதர் பவுல் தெசலோனிக்கருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 1-5a

அக்டோபர் 18 :  இரண்டாம் வாசகம்

உங்கள் நம்பிக்கையையும், அன்பினால் உந்தப்பட்ட உங்கள் உழைப்பையும், உங்கள் மனவுறுதியையும் நினைவுகூருகிறோம்.

திருத்தூதர் பவுல் தெசலோனிக்கருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 1-5a
தந்தையாம் கடவுளோடும் ஆண்டவராம் இயேசு கிறிஸ்துவோடும் இணைந்து வாழ்கின்ற தெசலோனிக்க சபைக்கு, பவுலும் சில்வானும் திமொத்தேயுவும் எழுதுவது: உங்களுக்கு அருளும் அமைதியும் உரித்தாகுக!

நாங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது இடைவிடாது உங்களை நினைத்து உங்கள் அனைவருக்காகவும் என்றும் கடவுளுக்கு நன்றி கூறுகிறோம். செயலில் வெளிப்பட்ட உங்கள் நம்பிக்கையையும், அன்பினால் உந்தப்பட்ட உங்கள் உழைப்பையும், ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை எதிர்நோக்கி இருப்பதால் நீங்கள் பெற்றுள்ள உங்கள் மனவுறுதியையும் நம் தந்தையாம் கடவுள்முன் நினைவுகூருகிறோம். கடவுளின் அன்புக்குரிய சகோதரர் சகோதரிகளே! நீங்கள் தேர்ந்து கொள்ளப்பட்டவர்கள் என்பது எங்களுக்குத் தெரியும். ஏனெனில் நாங்கள் நற்செய்தியை உங்களுக்கு வெறும் சொல்லளவிலன்றி, தூய ஆவி தரும் வல்லமையோடும் மிகுந்த உள்ள உறுதியோடும் கொண்டு வந்தோம்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

பிலி 2: 15-16 காண்க
அல்லேலூயா, அல்லேலூயா! வாழ்வின் வார்த்தையைப் பற்றிக் கொள்ளுங்கள். உலகில் ஒளிரும் சுடர்களாகத் துலங்குவீர்கள். அல்லேலூயா.

அக்டோபர் 18 : பதிலுரைப் பாடல்திபா 96: 1,3. 4-5. 7-8. 9-10ac . (பல்லவி: 7b)பல்லவி: மாட்சியையும் ஆற்றலையும் ஆண்டவருக்குச் சாற்றுங்கள்.

அக்டோபர் 18 :  பதிலுரைப் பாடல்

திபா 96: 1,3. 4-5. 7-8. 9-10ac . (பல்லவி: 7b)

பல்லவி: மாட்சியையும் ஆற்றலையும் ஆண்டவருக்குச் சாற்றுங்கள்.
1.ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; உலகெங்கும் வாழ்வோரே, ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்;
3.பிற இனத்தார்க்கு அவரது மாட்சியை எடுத்துரையுங்கள்; அனைத்து மக்களினங்களுக்கும் அவர்தம் வியத்தகு செயல்களை அறிவியுங்கள். - பல்லவி

4.ஆண்டவர் மாட்சிமிக்கவர்; பெரிதும் போற்றத் தக்கவர்; தெய்வங்கள் அனைத்திற்கும் மேலாக அஞ்சுதற்கு உரியவர் அவரே.
5.மக்களினங்களின் தெய்வங்கள் அனைத்தும் வெறும் சிலைகளே; ஆண்டவரோ விண்ணுலகைப் படைத்தவர். - பல்லவி

7.மக்களினங்களின் குடும்பங்களே, ஆண்டவருக்குச் சாற்றுங்கள்; மாட்சியையும் ஆற்றலையும் ஆண்டவருக்குச் சாற்றுங்கள்.
8.ஆண்டவரின் பெயருக்குரிய மாட்சியை அவருக்குச் சாற்றுங்கள்; உணவுப் படையல் ஏந்தி அவர்தம் கோவில் முற்றங்களுக்குள் செல்லுங்கள். - பல்லவி

9.தூய கோலத்துடன் ஆண்டவரை வழிபடுங்கள்; உலகெங்கும் வாழ்வோரே, அவர் திருமுன் நடுங்குங்கள்.
10ac.வேற்றினத்தாரிடையே கூறுங்கள்: ஆண்டவரே ஆட்சி செய்கின்றார்; அவர் மக்களினங்களை நீதி வழுவாது தீர்ப்பிடுவார். - பல்லவி

அக்டோபர் 18 : முதல் வாசகம்சைரசுக்கு ஆண்டவர் திருப்பொழிவு செய்துள்ளார்; பிற இனத்தாரை அவர்முன் அடிபணியச் செய்வார்.இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 45: 1, 4-6

அக்டோபர் 18 :  முதல் வாசகம்

சைரசுக்கு ஆண்டவர் திருப்பொழிவு செய்துள்ளார்; பிற இனத்தாரை அவர்முன் அடிபணியச் செய்வார்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 45: 1, 4-6
சைரசுக்கு ஆண்டவர் திருப்பொழிவு செய்துள்ளார்; பிற இனத்தாரை அவர்முன் அடிபணியச் செய்வார். அரசர்களை அவர்முன் ஆற்றல் இழக்கச் செய்வார்; கோட்டை வாயில்களை அவர்முன் பூட்டியிராது திறந்திருக்கச் செய்வார்; அவரது வலக் கையை உறுதியாகப் பற்றிப் பிடித்துள்ளார்; அவரிடம் ஆண்டவர் கூறுவது இதுவே:

என் ஊழியன் யாக்கோபை முன்னிட்டும் நான் தேர்ந்துகொண்ட இஸ்ரயேல் பொருட்டும் பெயர் சொல்லி உன்னை அழைத்தேன்; நீ என்னை அறியாதிருந்தும் உனக்குப் பெயரும் புகழும் வழங்கினேன். நானே ஆண்டவர்; வேறு எவருமில்லை; என்னையன்றி வேறு கடவுள் இல்லை; நீ என்னை அறியாதிருந்தும் உனக்கு வலிமை அளித்தேன். கதிரவன் உதிக்கும் திசை தொடங்கி மறையும் திசை வரை என்னையன்றி வேறு எவரும் இல்லை என்று மக்கள் அறியும்படி இதைச் செய்கிறேன்; நானே ஆண்டவர்; வேறு எவரும் இல்லை.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பொதுக்காலம் இருபத்து ஒன்பதாம் ஞாயிறு(அக்டோபர் 18)I எசாயா 45: 1, 4-6II 1 தெசலோனிக்கர் 1: 1-5aIII மத்தேயு 22: 15-21