Search This Blog

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

Friday, November 13, 2020

November 14th : GospelThe parable of the unjust judge.A Reading from the Holy Gospel according to St.Luke 18:1-8

November 14th :   Gospel

The parable of the unjust judge.

A Reading from the Holy Gospel according to St.Luke 18:1-8 
Jesus told his disciples a parable about the need to pray continually and never lose heart. ‘There was a judge in a certain town’ he said ‘who had neither fear of God nor respect for man. In the same town there was a widow who kept on coming to him and saying, “I want justice from you against my enemy!” For a long time he refused, but at last he said to himself, “Maybe I have neither fear of God nor respect for man, but since she keeps pestering me I must give this widow her just rights, or she will persist in coming and worry me to death.”’
  And the Lord said ‘You notice what the unjust judge has to say? Now will not God see justice done to his chosen who cry to him day and night even when he delays to help them? I promise you, he will see justice done to them, and done speedily. But when the Son of Man comes, will he find any faith on earth?’

The Gospel of the Lord.

November 14th : Responsorial PsalmPsalm 111(112):1-6 Happy the man who takes delight in the commands of the Lord.

November 14th :  Responsorial Psalm

Psalm 111(112):1-6 

Happy the man who takes delight in the commands of the Lord.
Happy the man who fears the Lord,
  who takes delight in all his commands.
His sons will be powerful on earth;
  the children of the upright are blessed.

Happy the man who takes delight in the commands of the Lord.

Riches and wealth are in his house;
  his justice stands firm for ever.
He is a light in the darkness for the upright:
  he is generous, merciful and just.

Happy the man who takes delight in the commands of the Lord.

The good man takes pity and lends,
  he conducts his affairs with honour.
The just man will never waver:
  he will be remembered for ever.

Happy the man who takes delight in the commands of the Lord.

Gospel Acclamation Jm1:21

Alleluia, alleluia!

Accept and submit to the word
which has been planted in you
and can save your souls.
Alleluia!

November 14th : First reading It is our duty to welcome missionaries and contribute our share to their work.3 John 5-8

November 14th :  First reading 

It is our duty to welcome missionaries and contribute our share to their work.

3 John 5-8 
My friend, you have done faithful work in looking after these brothers, even though they were complete strangers to you. They are a proof to the whole Church of your charity and it would be a very good thing if you could help them on their journey in a way that God would approve. It was entirely for the sake of the name that they set out, without depending on the pagans for anything; it is our duty to welcome men of this sort and contribute our share to their work for the truth.

The Word of the Lord.

நவம்பர் 14 : நற்செய்தி வாசகம்தாம் தேர்ந்துகொண்டவர்களுக்கு கடவுள் நீதி வழங்காமல் இருப்பாரா?லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 18: 1-8

நவம்பர் 14 :  நற்செய்தி வாசகம்

தாம் தேர்ந்துகொண்டவர்களுக்கு கடவுள் நீதி வழங்காமல் இருப்பாரா?

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 18: 1-8
அக்காலத்தில்

மனந்தளராமல் எப்பொழுதும் இறைவனிடம் மன்றாட வேண்டும் என்பதற்கு இயேசு ஓர் உவமை சொன்னார். “ஒரு நகரில் நடுவர் ஒருவர் இருந்தார். அவர் கடவுளுக்கு அஞ்சி நடப்பதில்லை; மக்களையும் மதிப்பதில்லை.

அந்நகரில் கைம்பெண் ஒருவரும் இருந்தார். அவர் நடுவரிடம் போய், ‘என் எதிரியைத் தண்டித்து எனக்கு நீதி வழங்கும்’ என்று கேட்டுக் கொண்டேயிருந்தார். நடுவரோ, நெடுங்காலமாய் எதுவும் செய்ய விரும்பவில்லை.

பின்பு அவர், ‘நான் கடவுளுக்கு அஞ்சுவதில்லை; மக்களையும் மதிப்பதில்லை. என்றாலும் இக்கைம்பெண் எனக்குத் தொல்லை கொடுத்துக்கொண்டிருப்பதால் நான் இவருக்கு நீதி வழங்குவேன். இல்லையானால் இவர் என் உயிரை வாங்கிக்கொண்டேயிருப்பார்’ என்று தமக்குள்ளே சொல்லிக்கொண்டார்."

பின் ஆண்டவர் அவர்களிடம், “நேர்மையற்ற நடுவரே இப்படிச் சொன்னார் என்றால், தாம் தேர்ந்துகொண்டவர்கள் அல்லும் பகலும் தம்மை நோக்கிக் கூக்குரலிடும்போது கடவுள் அவர்களுக்கு நீதி வழங்காமல் இருப்பாரா? அவர்களுக்குத் துணை செய்யக் காலம் தாழ்த்துவாரா? விரைவில் அவர்களுக்கு நீதி வழங்குவார் என நான் உங்களுக்குச் சொல்கிறேன். ஆயினும் மானிடமகன் வரும்போது மண்ணுலகில் நம்பிக்கையைக் காண்பாரோ?” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

நவம்பர் 14 : பதிலுரைப் பாடல்திபா 112: 1-2. 3-4. 5-6 . (பல்லவி: 1a)பல்லவி: ஆண்டவருக்கு அஞ்சி நடப்போர் பேறுபெற்றோர்.

நவம்பர் 14 :  பதிலுரைப் பாடல்

திபா 112: 1-2. 3-4. 5-6 . (பல்லவி: 1a)

பல்லவி: ஆண்டவருக்கு அஞ்சி நடப்போர் பேறுபெற்றோர்.
1.ஆண்டவருக்கு அஞ்சி நடப்போர் பேறுபெற்றோர்; அவர்தம் கட்டளைகளில் அவர்கள் பெருமகிழ்வு அடைவர்.
2.அவர்களது வழிமரபு பூவுலகில் வலிமைமிக்கதாய் இருக்கும்; நேர்மையுள்ளோரின் தலைமுறை ஆசிபெறும். - பல்லவி

3.சொத்தும் செல்வமும் அவர்களது இல்லத்தில் தங்கும்; அவர்களது நீதி என்றென்றும் நிலைத்திருக்கும்.
4.இருளில் ஒளியென அவர்கள் நேர்மையுள்ளவரிடையே மிளிர்வர்; அருளும் இரக்கமும் நீதியும் உள்ளோராய் இருப்பர். - பல்லவி

5.மனமிரங்கிக் கடன் கொடுக்கும் மனிதர் நன்மை அடைவர்; அவர்கள் தம் அலுவல்களில் நீதியுடன் செயல்படுவர்.
6.எந்நாளும் அவர்கள் அசைவுறார்; நேர்மையுள்ளோர் மக்கள் மனத்தில் என்றும் வாழ்வர். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

2 தெச 2: 14

அல்லேலூயா, அல்லேலூயா! நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மாட்சியை நீங்கள் அடையும் பொருட்டே, நாங்கள் அறிவித்த நற்செய்தியின் வழியாக அவர் உங்களை அழைத்தார். அல்லேலூயா.

நவம்பர் 14 : முதல் வாசகம்நீர் நம்பிக்கைக்கு உரியவர்.திருத்தூதர் யோவான் எழுதிய மூன்றாம் திருமுகத்திலிருந்து வாசகம் 5-8

நவம்பர் 14 :  முதல் வாசகம்

நீர் நம்பிக்கைக்கு உரியவர்.

திருத்தூதர் யோவான் எழுதிய மூன்றாம் திருமுகத்திலிருந்து வாசகம் 5-8
அன்பார்ந்தவரே, நீர் சகோதரர்களுக்கு, அதுவும் அறிமுகமில்லாச் சகோதரர்களுக்குச் செய்தவற்றையெல்லாம் பார்க்கும்போது நீர் நம்பிக்கைக்கு உரியவர் என்பது தெளிவாகிறது. அவர்கள் திருச்சபையின் முன்னிலையில் உமது அன்பைக் குறித்துச் சான்று பகர்ந்தார்கள். எனவே நீர் அவர்களைக் கடவுளுக்கு உகந்த முறையில் வழியனுப்பி வைத்தால் நல்லது. ஏனெனில் அவர்கள் கிறிஸ்துவுக்காகப் பயணம் மேற்கொண்டவர்கள். பிற மக்களிடமிருந்து அவர்கள் வழியில் எதையும் பெற்றுக் கொள்ளவில்லை. இத்தகையோருக்கு உதவுவது நமது கடமை. இவ்வாறு, உண்மைக்காக உழைக்கும் அவர்களின் உடன் உழைப்பாளர் ஆகிறோம்.

ஆண்டவரின் அருள்வாக்கு.