Search This Blog

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

Tuesday, January 18, 2022

சனவரி 19 : நற்செய்தி வாசகம்ஓய்வு நாளில் எது செய்வது முறை? உயிரைக் காப்பதா, அழிப்பதா?✠ மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 1-6

சனவரி 19  : நற்செய்தி வாசகம்

ஓய்வு நாளில் எது செய்வது முறை? உயிரைக் காப்பதா, அழிப்பதா?

✠ மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 1-6
இயேசு மீண்டும் தொழுகைக்கூடத்திற்குள் சென்றார். அங்கே கை சூம்பியவர் ஒருவர் இருந்தார். சிலர் இயேசுமீது குற்றம் சுமத்தும் நோக்குடன், ஓய்வுநாளில் அவர் அவரைக் குணப்படுத்துவாரா என்று கூர்ந்து கவனித்துக்கொண்டே இருந்தனர்.

இயேசு கை சூம்பியவரை நோக்கி, “எழுந்து, நடுவே நில்லும்” என்றார். பின்பு அவர்களிடம், “ஓய்வு நாளில் நன்மை செய்வதா, தீமை செய்வதா? உயிரைக் காப்பதா, அழிப்பதா? எது முறை?” என்று அவர் கேட்டார். அவர்களோ பேசாதிருந்தார்கள். அவர் சினத்துடன் அவர்களைச் சுற்றிலும் திரும்பிப் பார்த்து, அவர்களது பிடிவாத உள்ளத்தைக் கண்டு வருந்தி, கை சூம்பியவரை நோக்கி, “கையை நீட்டும்” என்றார். அவர் நீட்டினார். அவருடைய கை மீண்டும் நலமடைந்தது.

உடனே பரிசேயர் வெளியேறி ஏரோதியரோடு சேர்ந்து இயேசுவை எப்படி ஒழிக்கலாம் என அவருக்கு எதிராகச் சூழ்ச்சி செய்தனர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

சனவரி 19 : பதிலுரைப் பாடல்திபா 144: 1. 2. 9-10 (பல்லவி: 1a)பல்லவி: என் பாறையாகிய ஆண்டவர் போற்றி! போற்றி!

சனவரி 19  :  பதிலுரைப் பாடல்

திபா 144: 1. 2. 9-10 (பல்லவி: 1a)

பல்லவி: என் பாறையாகிய ஆண்டவர் போற்றி! போற்றி!
1
என் பாறையாகிய ஆண்டவர் போற்றி! போற்றி! போரிட என் கைகளுக்குப் பயிற்சி அளிப்பவர் அவரே! போர்புரிய என் விரல்களைப் பழக்குபவரும் அவரே! - பல்லவி

2
என் கற்பாறையும் கோட்டையும் அவரே! எனக்குப் பாதுகாப்பாளரும் மீட்பரும் அவரே! என் கேடயமும் புகலிடமும் அவரே! மக்களினத்தாரை எனக்குக் கீழ்ப்படுத்துபவர் அவரே! - பல்லவி

9
இறைவா, நான் உமக்குப் புதியதொரு பாடல் பாடுவேன்; பதின் நரம்பு வீணையால் உமக்குப் புகழ் பாடுவேன்.
10
அரசர்களுக்கு வெற்றி அளிப்பவர் நீரே! உம் ஊழியர் தாவீதைக் கொடிய வாளினின்று தப்புவித்தவரும் நீரே! - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மத் 4: 23b

அல்லேலூயா, அல்லேலூயா! 

இயேசு விண்ணரசு பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார்; மக்களிடையே இருந்த நோய் நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார். அல்லேலூயா.

சனவரி 19 : முதல் வாசகம்தாவீது கவணும் கல்லும் கொண்டு, பெலிஸ்தியனை வீழ்த்தினார்.சாமுவேல் முதல் நூலிலிருந்து வாசகம் 17: 32-33, 37, 40-50

சனவரி 19  :  முதல் வாசகம்

தாவீது கவணும் கல்லும் கொண்டு, பெலிஸ்தியனை வீழ்த்தினார்.

சாமுவேல் முதல் நூலிலிருந்து வாசகம் 17: 32-33, 37, 40-50
அந்நாள்களில்

தாவீது சவுலை நோக்கி, “இவன் பொருட்டு யாருடைய இதயமும் கலங்க வேண்டியதில்லை; உம் அடியானாகிய நானே சென்று அந்தப் பெலிஸ்தியனோடு போரிடுவேன்” என்றார். அதற்குச் சவுல் தாவீதிடம், “இந்தப் பெலிஸ்தியனை எதிர்த்துப் போரிட உன்னால் இயலாது; நீயோ இளைஞன், ஆனால் அவனோ தன் இள வயதுமுதல் போரில் பயிற்சியுள்ளவன்” என்றார்.

மேலும் தாவீது, “என்னைச் சிங்கத்தின் கைக்கும் கரடியின் கைக்கும் தப்புவித்த ஆண்டவர் இந்தப் பெலிஸ்தியனின் கைக்கும் தப்புவிப்பார்” என்றார். அதற்குச் சவுல் தாவீதிடம், “சென்றுவா! ஆண்டவர் உன்னோடு இருப்பார்” என்றார்.

தாவீது தம் கோலைக் கையில் எடுத்துக் கொண்டார்; நீரோடையிலிருந்து வழுவழுப்பான ஐந்து கூழாங்கற்களைத் தேர்ந்தெடுத்து இடையனுக்குரிய தம் பையில் போட்டுக் கொண்டார்; தம் கவணைக் கையில் பிடித்துக் கொண்டு பெலிஸ்தியனை நோக்கிச் சென்றார்.

தன் கேடயம் ஏந்துபவன் முன் செல்ல, அந்தப் பெலிஸ்தியனும் தாவீதை நோக்கி நடந்து அவரை நெருங்கினான். பெலிஸ்தியன் தாவீதைக் கூர்ந்து பார்த்து ஏளனம் செய்தான்; ஏனெனில் அவன் சிவந்த மேனியும் அழகிய தோற்றமும் உடைய இளைஞனாய் இருந்தான். அப்பெலிஸ்தியன் தாவீதைப் பார்த்து, “நீ கோலுடன் என்னிடம் வர, நான் என்ன நாயா?” என்று சொல்லித் தன் தெய்வங்களின் பெயரால் தாவீதைச் சபிக்கத் தொடங்கினான். மீண்டும் பெலிஸ்தியன் தாவீதை நோக்கி, “அருகே வா! வானத்துப் பறவைகளுக்கும் வனத்து விலங்குகளுக்கும் உன் உடலை இரையாக்குவேன்” என்றான்.

அப்பொழுது தாவீது பெலிஸ்தியனிடம், “நீ வாளோடும் ஈட்டியோடும் எறிவேலோடும் என்னிடம் வருகிறாய்; நானோ நீ இகழ்ந்த இஸ்ரயேலின் படைத்திரளின் கடவுளாகிய, படைகளின் ஆண்டவர்தம் பெயரால் வருகிறேன். இன்றே ஆண்டவர் உன்னை என் கையில் ஒப்புவிப்பார்; நான் உன்னை வீழ்த்தி உன் உடலைத் துண்டிப்பேன்; பெலிஸ்தியரின் பிணங்களை வானத்துப் பறவைகளுக்கும் பூவுலக விலங்குகளுக்கும் கையளிப்பேன்; இஸ்ரயேலரிடையே கடவுள் இருக்கிறார் என்பதை உலகிலுள்ள எல்லாரும் இதனால் அறிந்துகொள்வர். மேலும், ஆண்டவர் வாளினாலும் ஈட்டியினாலும் மீட்கின்றவர் அல்லர் என்று இந்த மக்கள் கூட்டம் அறிந்து கொள்ளட்டும்; ஏனெனில் இது ஆண்டவரின் போர்! அவரே உங்களை எங்கள் கையில் ஒப்புவிப்பார்” என்றார்.

பெலிஸ்தியன் எழுந்து தாவீதை நோக்கிப் புறப்படுகையில், தாவீதும் அவனுடன் போரிட பெலிஸ்தியப் படைத்திரளை நோக்கி விரைந்து ஓடினார். தாவீது தம் பையில் கை வைத்து ஒரு கல்லை எடுத்தார்;அதைக் கவணில் வைத்துச் சுழற்றிப் பெலிஸ்தியனுடைய நெற்றியைக் குறி பார்த்து எறிந்தார். அந்தக் கல்லும் அவனது நெற்றிக்குள் தாக்கிப் பதியவே, அவன் தரையில் முகம் குப்புற விழுந்தான்.

இவ்வாறு தாவீது, கையில் வாளேதும் இன்றிக் கவணும் கல்லும் கொண்டு பெலிஸ்தியன்மீது வெற்றிகொண்டு, அவனை வீழ்த்திக் கொன்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

January 19th : Gospel A Reading from the Holy Gospel according to St. Mark 3: 1-6 Is it against the law on the sabbath day to save life?

January 19th :  Gospel 

A Reading from the Holy Gospel according to St. Mark 3: 1-6 

Is it against the law on the sabbath day to save life?
Jesus went into a synagogue, and there was a man there who had a withered hand. And they were watching him to see if he would cure him on the sabbath day, hoping for something to use against him. He said to the man with the withered hand, ‘Stand up out in the middle!’ Then he said to them, ‘Is it against the law on the sabbath day to do good, or to do evil; to save life, or to kill?’ But they said nothing. Then, grieved to find them so obstinate, he looked angrily round at them, and said to the man, ‘Stretch out your hand.’ He stretched it out and his hand was better. The Pharisees went out and at once began to plot with the Herodians against him, discussing how to destroy him.

The Word of the Lord.

January 19th : Responsorial PsalmPsalm 143(144):1-2,9-10 Blessed be the Lord, my rock.

January 19th : Responsorial Psalm

Psalm 143(144):1-2,9-10 

Blessed be the Lord, my rock.
Blessed be the Lord, my rock,
  who trains my arms for battle,
  who prepares my hands for war.

Blessed be the Lord, my rock.

He is my love, my fortress;
  he is my stronghold, my saviour
my shield, my place of refuge.
  He brings peoples under my rule.

Blessed be the Lord, my rock.

To you, O God, will I sing a new song;
  I will play on the ten-stringed lute
to you who give kings their victory,
  who set David your servant free.

Blessed be the Lord, my rock.

Gospel Acclamation Heb4:12

Alleluia, alleluia!
The word of God is something alive and active:
it can judge secret emotions and thoughts.
Alleluia!

January 19th : First ReadingDavid and Goliath1 Samuel 17 : 32-33,37,40-51

January 19th :  First Reading

David and Goliath

1 Samuel 17 : 32-33,37,40-51
 

David said to Saul, ‘Let no-one lose heart on his account; your servant will go and fight the Philistine.’ But Saul answered David, ‘You cannot go and fight the Philistine; you are only a boy and he has been a warrior from his youth.’
  ‘The Lord who rescued me from the claws of lion and bear’ David said ‘will rescue me from the power of this Philistine.’ Then Saul said to David, ‘Go, and the Lord be with you!’
  He took his staff in his hand, picked five smooth stones from the river bed, put them in his shepherd’s bag, in his pouch, and with his sling in his hand he went to meet the Philistine. The Philistine, his shield-bearer in front of him, came nearer and nearer to David; and the Philistine looked at David, and what he saw filled him with scorn, because David was only a youth, a boy of fresh complexion and pleasant bearing. The Philistine said to him, ‘Am I a dog for you to come against me with sticks?’ And the Philistine cursed David by his gods. The Philistine said to David, ‘Come over here and I will give your flesh to the birds of the air and the beasts of the field.’ But David answered the Philistine, ‘You come against me with sword and spear and javelin, but I come against you in the name of the Lord of Hosts, the God of the armies of Israel that you have dared to insult. Today the Lord will deliver you into my hand and I shall kill you; I will cut off your head, and this very day I will give your dead body and the bodies of the Philistine army to the birds of the air and the wild beasts of the earth, so that all the earth may know that there is a God in Israel, and that all this assembly may know that it is not by sword or by spear that the Lord gives the victory, for the Lord is lord of the battle and he will deliver you into our power.’
  No sooner had the Philistine started forward to confront David than David left the line of battle and ran to meet the Philistine. Putting his hand in his bag, he took out a stone and slung it and struck the Philistine on the forehead; the stone penetrated his forehead and he fell on his face to the ground. Thus David triumphed over the Philistine with a sling and a stone and struck the Philistine down and killed him. David had no sword in his hand. Then David ran and, standing over the Philistine, seized his sword and drew it from the scabbard, and with this he killed him, cutting off his head. The Philistines saw that their champion was dead, and took to flight.

The Word of the Lord.

சனவரி 18 : நற்செய்தி வாசகம்ஓய்வு நாள் மனிதருக்காக; மனிதர் ஓய்வு நாளுக்காக அன்று.✠ மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 23-28

சனவரி 18 : நற்செய்தி வாசகம்

ஓய்வு நாள் மனிதருக்காக; மனிதர் ஓய்வு நாளுக்காக அன்று.

✠ மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 23-28
ஓய்வு நாளில் இயேசு வயல் வழியே செல்ல நேர்ந்தது. அவருடைய சீடர் கதிர்களைக் கொய்துகொண்டே வழி நடந்தனர். அப்பொழுது பரிசேயர் இயேசுவிடம், “பாரும், ஓய்வு நாளில் செய்யக்கூடாததை ஏன் இவர்கள் செய்கிறார்கள்?” என்று கேட்டனர். அதற்கு அவர் அவர்களிடம், “தாமும் தம்முடன் இருந்தவர்களும் உணவின்றிப் பசியாய் இருந்தபோது தாவீது என்ன செய்தார் என்பதை நீங்கள் வாசித்ததே இல்லையா? அபியத்தார் தலைமைக் குருவாய் இருந்தபோது தாவீது இறை இல்லத்திற்குள் சென்று, குருக்களைத் தவிர வேறு எவரும் உண்ணக்கூடாத அர்ப்பண அப்பங்களைத் தாம் உண்டதுமன்றித் தம்மோடு இருந்தவர்களுக்கும் கொடுத்தார் அல்லவா?” என்றார். மேலும் அவர் அவர்களை நோக்கி, “ஓய்வு நாள் மனிதருக்காக உண்டாக்கப்பட்டது; மனிதர் ஓய்வுநாளுக்காக உண்டாக்கப்படவில்லை, ஆதலால் ஓய்வு நாளும் மானிட மகனுக்குக் கட்டுப்பட்டதே” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு