Search This Blog

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

Monday, April 15, 2024

நற்செய்தி வாசகம்வானிலிருந்து உங்களுக்கு உணவு அருளியவர் மோசே அல்ல; என் தந்தையே.✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 30-35

நற்செய்தி வாசகம்

வானிலிருந்து உங்களுக்கு உணவு அருளியவர் மோசே அல்ல; என் தந்தையே.

✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 30-35
அக்காலத்தில்

மக்கள் இயேசுவிடம், “நாங்கள் கண்டு உம்மை நம்பும் வகையில் நீர் என்ன அரும் அடையாளம் காட்டுகிறீர்? அதற்காக என்ன அரும் செயல் செய்கிறீர்? எங்கள் முன்னோர் பாலை நிலத்தில் மன்னாவை உண்டனரே! ‘அவர்கள் உண்பதற்கு வானிலிருந்து உணவு அருளினார்’ என்று மறைநூலிலும் எழுதப்பட்டுள்ளது அல்லவா!” என்றனர்.

இயேசு அவர்களிடம், “உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: வானிலிருந்து உங்களுக்கு உணவு அருளியவர் மோசே அல்ல; வானிலிருந்து உங்களுக்கு உண்மையான உணவு அருள்பவர் என் தந்தையே. கடவுள் தரும் உணவு வானிலிருந்து இறங்கி வந்து உலகுக்கு வாழ்வு அளிக்கிறது” என்றார்.

அவர்கள், “ஐயா, இவ்வுணவை எங்களுக்கு எப்போதும் தாரும்” என்று கேட்டுக்கொண்டார்கள். இயேசு அவர்களிடம், “வாழ்வு தரும் உணவு நானே. என்னிடம் வருபவருக்குப் பசியே இராது; என்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு என்றுமே தாகம் இராது” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்திபா 31: 2cd-3. 5,6-7a. 16,20b (பல்லவி: 5a)பல்லவி: உமது கையில் என் உயிரை ஒப்படைக்கின்றேன்.அல்லது: அல்லேலூயா.

பதிலுரைப் பாடல்

திபா 31: 2cd-3. 5,6-7a. 16,20b (பல்லவி: 5a)

பல்லவி: உமது கையில் என் உயிரை ஒப்படைக்கின்றேன்.

அல்லது: அல்லேலூயா.
2cd. எனக்கு அடைக்கலம் தரும் கற்பாறையாய் இரும்; என்னைப் பாதுகாக்கும் வலிமைமிகு கோட்டையாய் இரும்.

3. ஆம், என் கற்பாறையும் கோட்டையும் நீரே; உமது பெயரின் பொருட்டு எனக்கு வழிகாட்டி என்னை நடத்தியருளும். - பல்லவி

5. உமது கையில் என் உயிரை ஒப்படைக்கின்றேன்; வாக்குப் பிறழாத இறைவனாகிய ஆண்டவரே, நீர் என்னை மீட்டருளினீர்.

6. நானோ, பயனற்ற சிலைகளில் பற்றுடையோரை வெறுத்து, ஆண்டவர் மீது நம்பிக்கை வைக்கின்றேன்.

7a. உமது பேரன்பில் நான் களிகூர்வேன்; அக்களிப்பேன். - பல்லவி

16. உமது முகத்தின் ஒளி அடியேன் மீது வீசும்படி செய்யும்; உமது பேரன்பால் என்னை விடுவித்தருளும்.

20b. மனிதரின் சூழ்ச்சியினின்று அவர்களைக் காப்பாற்றி, உமது முன்னிலையின் மறைப்பினுள் வைத்துள்ளீர்! நாவுகள் கிளப்பும் பூசலினின்று அவர்களைப் பாதுகாத்து உமது கூடாரத்தினுள் வைத்துக் காக்கின்றீர்! - பல்லவி

16 ஏப்ரல் 2024, பாஸ்கா 3ஆம் வாரம் - செவ்வாய்முதல் வாசகம்ஆண்டவராகிய இயேசுவே, எனது ஆவியை ஏற்றுக்கொள்ளும்.

16 ஏப்ரல் 2024, 

பாஸ்கா 3ஆம் வாரம் - செவ்வாய்

முதல் வாசகம்

ஆண்டவராகிய இயேசுவே, எனது ஆவியை ஏற்றுக்கொள்ளும்.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 7: 51- 8: 1a

அந்நாள்களில்

ஸ்தேவான் மக்களையும் மூப்பரையும் மறைநூல் அறிஞரையும் நோக்கிக் கூறியது: “திமிர் பிடித்தவர்களே, இறைவார்த்தையைக் கேட்க மறுக்கும் செவியும் ஏற்க மறுக்கும் உள்ளமும் கொண்டவர்களே, உங்களுடைய மூதாதையரைப் போல நீங்களும் தூய ஆவியாரை எப்போதும் எதிர்க்கிறீர்கள். எந்த இறைவாக்கினரைத்தான் உங்கள் மூதாதையர் துன்புறுத்தாமல் இருந்தார்கள்? நேர்மையாளருடைய வருகையை முன்னறிவித்தோரையும் அவர்கள் கொலை செய்தார்கள். இப்போது நீங்கள் இயேசுவைக் காட்டிக் கொடுத்துக் கொன்றுவிட்டீர்கள். கடவுளின் தூதர்கள் வழியாய்த் தரப்பட்ட திருச்சட்டத்தை நீங்கள் பெற்றிருந்தும் அதனைக் கடைப்பிடிக்கவில்லை.”

இவற்றைக் கேட்டவர்கள் உள்ளம் கொதித்தெழுந்து, அவரைப் பார்த்துப் பற்களை நறநறவெனக் கடித்தார்கள். அவரோ தூய ஆவியின் வல்லமையை நிறைவாய்ப் பெற்று, வானத்தை உற்றுநோக்கினார். அப்போது கடவுளின் மாட்சியையும் அவர் வலப்பக்கத்தில் இயேசு நிற்பதையும் கண்டு, “இதோ, வானம் திறந்திருப்பதையும், மானிட மகன் கடவுளது வலப்பக்கத்தில் நிற்பதையும் காண்கிறேன்” என்று கூறினார். ஆனால் அவர்கள் தங்கள் செவிகளை அடைத்துக்கொண்டு, பெருங் கூச்சலிட்டு, ஒருமிக்க அவர் மேல் பாய்ந்தார்கள். நகரத்திற்கு வெளியே இழுத்துக் கொண்டுபோய் அவர்மேல் கல்லெறிந்தார்கள். சாட்சிகள் தங்கள் மேலுடைகளைச் சவுல் எனும் இளைஞரிடம் ஒப்படைத்தார்கள். அவர்கள் ஸ்தேவான்மீது கல்லெறிந்தபோது அவர், “ஆண்டவராகிய இயேசுவே, எனது ஆவியை ஏற்றுக்கொள்ளும்” என்று வேண்டிக்கொண்டார். பின்பு முழந்தாள்படியிட்டு, உரத்த குரலில், “ஆண்டவரே, இந்தப் பாவத்தை இவர்கள்மேல் சுமத்தாதேயும்” என்று சொல்லி உயிர்விட்டார்.

ஸ்தேவானைக் கொலை செய்வதற்குச் சவுலும் உடன்பட்டிருந்தார்.

ஆண்டவரின் அருள்வாக்கு

GOSPEL“It is not Moses, it is my Father who gives you the true bread from heaven” (Jn 6:30-35)Alleluia. Alleluia.I am the bread of life, says the Lord,whoever comes to me will never hunger.Alleluia. (Jn 6:35)

GOSPEL
“It is not Moses, it is my Father who gives you the true bread from heaven” (Jn 6:30-35)

Alleluia. Alleluia.
I am the bread of life, says the Lord,
whoever comes to me will never hunger.
Alleluia. (Jn 6:35)
Gospel of Jesus Christ according to Saint John

At that time
the crowd said to Jesus,
“What sign will you perform
that we may see and believe you?”
What work are you going to do?
In the desert our fathers ate manna;
as the Scripture says:
He gave them bread from heaven to eat . »
Jesus answered them:
“Amen, amen, I say to you:
it was not Moses
who gave you the bread from heaven;
it is my Father
who gives you the true bread from heaven.
For the bread of God
is that which comes down from heaven
and gives life to the world. »
They said to him:
“Lord, give us this bread always. »
Jesus answered them:
“I am the bread of life.
He who comes to me will never be hungry;
whoever believes in me will never thirst. »

– Let us acclaim the Word of God.

PSALM(30 (31), 3bc.4, 6.7b.8a, 17.20cd)R/ Into your hands, Lord,I commend my spirit.or: Hallelujah! (30.6a)

PSALM

(30 (31), 3bc.4, 6.7b.8a, 17.20cd)

R/ Into your hands, Lord,
I commend my spirit.
or: Hallelujah! (30.6a)
Be the rock that shelters me,
the fortified house that saves me.
My fortress and my rock is you:
for the honor of your name, you guide me and lead me.

Into your hands I commit my spirit;
you redeem me, Lord, God of truth.
I am sure of the Lord.
Your love makes me dance with joy.

On your servant, let your face shine;
save me by your love.
You fulfill, in the face of the world,
those who have their refuge in you.

April 16 , 2024of the holidayMASS READINGSFIRST READING “Lord Jesus, receive my spirit” (Acts 7:51 – 8:1a)

April 16 , 2024

of the holiday

MASS READINGS

FIRST READING 

“Lord Jesus, receive my spirit” (Acts 7:51 – 8:1a)
Reading the book of Acts of the Apostles

In those days,
Stephen said to the people, to the elders and to the scribes:
“You who are stiff-necked,
you whose hearts and ears are closed to the Covenant,
have always resisted the Holy Spirit;
You are just like your fathers!
Is there a prophet whom your fathers did not persecute?
They even killed those who announced in advance the coming of the Righteous One,
the one whom you have now delivered up and murdered.
You who received the law at the command of the angels,
you did not keep it. »
Those who listened to this speech
had their hearts exasperated
and gnashed their teeth against Stephen.
But he, filled with the Holy Spirit,
looked up into heaven:
he saw the glory of God,
and Jesus standing at the right hand of God.
He declared:
“Behold, I behold the open heavens
and the Son of Man standing at the right hand of God. »
Then they cried out loudly
and covered their ears.
All together they rushed after him,
dragged him out of the city
and began to stone him.
The witnesses had laid their clothes
at the feet of a young man named Saul.
Stephen, while he was being stoned, prayed thus:
“Lord Jesus, receive my spirit. »
Then, kneeling down, he cried out in a loud voice:
“Lord, do not count this sin against them. »
And, after these words, he fell asleep in death.

As for Saul, he approved of this murder.

– Word of the Lord.