Search This Blog

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

Friday, February 4, 2022

பிப்ரவரி 5 : நற்செய்தி வாசகம்மக்கள் ஆயரில்லா ஆடுகளைப்போல் இருந்தார்கள்.✠ மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 30-34

பிப்ரவரி  5 :  நற்செய்தி வாசகம்

மக்கள் ஆயரில்லா ஆடுகளைப்போல் இருந்தார்கள்.

✠ மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 30-34
அக்காலத்தில்

திருத்தூதர்கள் இயேசுவிடம் வந்து கூடித் தாங்கள் செய்தவை, கற்பித்தவை எல்லாம் அவருக்குத் தெரிவித்தார்கள். அவர் அவர்களிடம், “நீங்கள் பாலை நிலத்திலுள்ள தனிமையான ஓர் இடத்திற்குச் சென்று சற்று ஓய்வெடுங்கள்” என்றார். ஏனெனில் பலர் வருவதும் போவதுமாய் இருந்ததால், உண்பதற்குக்கூட அவர்களுக்கு நேரம் கிடைக்கவில்லை.

அவ்வாறே அவர்கள் படகேறிப் பாலைநிலத்தில் உள்ள தனிமையான ஓர் இடத்திற்குச் சென்றார்கள். அவர்கள் புறப்பட்டுப் போவதை மக்கள் பார்த்தார்கள். பலர் அவர்களை இன்னாரென்று தெரிந்துகொண்டு, எல்லா நகர்களிலிருந்தும் கால்நடையாகவே கூட்டமாய் ஓடி, அவர்களுக்கு முன் அங்கு வந்து சேர்ந்தனர்.

அவர் கரையில் இறங்கியபோது பெருந்திரளான மக்களைக் கண்டார். அவர்கள் ஆயரில்லா ஆடுகளைப்போல் இருந்ததால் அவர்கள்மீது பரிவு கொண்டு, அவர்களுக்குப் பலவற்றைக் கற்பித்தார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பிப்ரவரி 5 : பதிலுரைப் பாடல்திபா 119: 9. 10. 11. 12. 13. 14 (பல்லவி: 12b)பல்லவி: ஆண்டவரே, எனக்கு உம் விதிமுறைகளைக் கற்பித்தருளும்.

பிப்ரவரி  5 :  பதிலுரைப் பாடல்

திபா 119: 9. 10. 11. 12. 13. 14 (பல்லவி: 12b)

பல்லவி: ஆண்டவரே, எனக்கு உம் விதிமுறைகளைக் கற்பித்தருளும்.
9
இளைஞர் தம் நடத்தையை மாசற்றதாய்க் காத்துக் கொள்வது எவ்வாறு? உம் வாக்கைக் கடைப்பிடிப்பதால் அன்றோ?
10
முழுமனத்தோடு நான் உம்மைத் தேடுகின்றேன்; உம் கட்டளைகளை விட்டு என்னை விலக விடாதேயும். - பல்லவி

11
உமக்கெதிராய் நான் பாவம் செய்யாதவாறு உமது வாக்கை என் இதயத்தில் இருத்தியுள்ளேன்.
12
ஆண்டவரே, நீர் போற்றுதற்கு உரியவர்; எனக்கு உம் விதி முறைகளைக் கற்பித்தருளும். - பல்லவி

13
உம் வாயினின்று வரும் நீதித் தீர்ப்புகளை எல்லாம் என் இதழால் எடுத்துரைக்கின்றேன்.
14
பெருஞ்செல்வத்தில் மகிழ்ச்சி அடைவதுபோல், நான் உம் ஒழுங்குமுறைகளின்படி நடப்பதில் மகிழ்ச்சியுறுகின்றேன். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 10: 27

அல்லேலூயா, அல்லேலூயா! 

என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப் பின்தொடர்கின்றன, என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

பிப்ரவரி 5 : முதல் வாசகம்“உம் மக்களுக்கு நீதி வழங்க ஞானத்தை எனக்குத் தந்தருளும்” எனச் சாலமோன் செபித்தார்.அரசர்கள் முதல் நூலிலிருந்து வாசகம் 3: 4-13

பிப்ரவரி  5 :  முதல் வாசகம்

“உம் மக்களுக்கு நீதி வழங்க ஞானத்தை எனக்குத் தந்தருளும்” எனச் சாலமோன் செபித்தார்.

அரசர்கள் முதல் நூலிலிருந்து வாசகம் 3: 4-13
அந்நாள்களில்

சாலமோன் அரசர் பலி செலுத்துமாறு கிபயோனுக்குச் சென்றார். அங்கேதான் மிக முக்கியமான தொழுகைமேடு இருந்தது. அங்கிருந்த பலிபீடத்தின் மேல்தான் சாலமோன் ஆயிரம் எரிபலிகளைச் செலுத்தியிருந்தார். அன்றிரவு கிபயோனில் ஆண்டவர் சாலமோனுக்குக் கனவில் தோன்றினார். “உனக்கு என்ன வரம் வேண்டும்? கேள்!” என்று கடவுள் கேட்டார்.

அதற்குச் சாலமோன், “உம் அடியாராகிய என் தந்தை தாவீது உமது பார்வையில் உண்மையுடனும் நீதியுடனும் நேரிய உள்ளத்துடனும் நடந்து கொண்டார். அதனால் நீர் அவருக்குப் பேரன்பு காட்டினீர். அந்தப் பேரன்பை அவருக்கு என்றும் காட்டி வந்து, இன்று அவரது அரியணையில் வீற்றிருக்கும் மகனை அவருக்குத் தந்தீர். என் கடவுளாகிய ஆண்டவரே, நீர் அடியேனை என் தந்தை தாவீதுக்குப் பதிலாக அரசனாக்கியுள்ளீர். நான் செய்வதறியாத சிறு பிள்ளை. இதோ! உமக்கென நீர் தெரிந்து கொண்ட திரளான மக்களிடையே அடியேன் இருக்கிறேன். அவர்கள் எண்ணிக் கணிக்க முடியாத மாபெரும் தொகையினர். எனவே, உம் மக்களுக்கு நீதி வழங்கவும் நன்மை தீமை பகுத்தறியவும் தேவையான ஞானம் நிறைந்த உள்ளத்தை அடியேனுக்குத் தந்தருளும்,. இல்லாவிடில், உமக்குரிய இம்மாபெரும் மக்கள் இனத்திற்கு நீதி வழங்க யாரால் இயலும்?” என்று கேட்டார்.

சாலமோன் இவ்வாறு கேட்டது ஆண்டவருக்கு உகந்ததாய் இருந்தது. கடவுள் அவரிடம், “நீடிய ஆயுளையோ, செல்வத்தையோ நீ கேட்கவில்லை. உன் எதிரிகளின் சாவையும் நீ விரும்பவில்லை. மாறாக, நீதி வழங்கத் தேவையான ஞானத்தை மட்டுமே கேட்டிருக்கிறாய். இதோ! நான் இப்பொழுது நீ கேட்டபடியே செய்கிறேன். உனக்கு நிகராக, உனக்கு முன்னே எவரும் இருந்ததில்லை. உனக்குப் பின்னே இருக்கப் போவதும் இல்லை. அந்த அளவுக்கு ஞானமும் பகுத்தறிவும் நிறைந்த உள்ளத்தை உனக்கு வழங்குகிறேன். இன்னும் நீ கேளாத செல்வத்தையும் புகழையும் உனக்குத் தருவேன். ஆகையால் உன் வாழ்நாள் முழுவதிலும் உனக்கு இணையான அரசன் எவனும் இரான்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

February 5th : Gospel They were like sheep without a shepherdA Reading from the Holy Gospel according to St. Mark 6: 30-34

February 5th  :  Gospel 

They were like sheep without a shepherd

A Reading from the Holy Gospel according to St. Mark 6: 30-34 
The apostles rejoined Jesus and told him all they had done and taught. Then he said to them, ‘You must come away to some lonely place all by yourselves and rest for a while’; for there were so many coming and going that the apostles had no time even to eat. So they went off in a boat to a lonely place where they could be by themselves. But people saw them going, and many could guess where; and from every town they all hurried to the place on foot and reached it before them. So as he stepped ashore he saw a large crowd; and he took pity on them because they were like sheep without a shepherd, and he set himself to teach them at some length.

The Word of the Lord.

February 5th : Responsorial PsalmPsalm 118(119): 9-14 Lord, teach me your statutes

February 5th  :     Responsorial Psalm

Psalm 118(119): 9-14 

Lord, teach me your statutes.
How shall the young remain sinless?
  By obeying your word.
I have sought you with all my heart;
  let me not stray from your commands.

Lord, teach me your statutes.

I treasure your promise in my heart
  lest I sin against you.
Blessed are you, O Lord;
  teach me your statutes.

Lord, teach me your statutes.

With my tongue I have recounted
  the decrees of your lips.
I rejoiced to do your will
  as though all riches were mine.

Lord, teach me your statutes.

Gospel Acclamation Jn10:27

Alleluia, alleluia!
The sheep that belong to me listen to my voice,
says the Lord,
I know them and they follow me.
Alleluia!

February 5th : First reading Solomon chooses the gift of wisdom1 Kings 3: 4-13

February 5th  : First reading 

Solomon chooses the gift of wisdom

1 Kings 3: 4-13 
King Solomon went to Gibeon to sacrifice there, since that was the greatest of the high places – Solomon offered a thousand holocausts on that altar. At Gibeon the Lord appeared in a dream to Solomon during the night. God said, ‘Ask what you would like me to give you.’ Solomon replied, ‘You showed great kindness to your servant David, my father, when he lived his life before you in faithfulness and justice and integrity of heart; you have continued this great kindness to him by allowing a son of his to sit on his throne today. Now, O Lord my God, you have made your servant king in succession to David my father. But I am a very young man, unskilled in leadership. Your servant finds himself in the midst of this people of yours that you have chosen, a people so many its number cannot be counted or reckoned. Give your servant a heart to understand how to discern between good and evil, for who could govern this people of yours that is so great?’ It pleased the Lord that Solomon should have asked for this. ‘Since you have asked for this’ the Lord said ‘and not asked for long life for yourself or riches or the lives of your enemies, but have asked for a discerning judgement for yourself, here and now I do what you ask. I give you a heart wise and shrewd as none before you has had and none will have after you. What you have not asked I shall give you too: such riches and glory as no other king ever had.’

The Word of the Lord.