Search This Blog

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

Sunday, November 26, 2023

நவம்பர் 27 : நற்செய்தி வாசகம்வறுமையில் வாடிய ஒரு கைம்பெண் இரண்டு காசுகளை அதில் போடுவதைக் கண்டார்.✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 1-4

நவம்பர் 27 :  நற்செய்தி வாசகம்

வறுமையில் வாடிய ஒரு கைம்பெண் இரண்டு காசுகளை அதில் போடுவதைக் கண்டார்.

✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 1-4
அக்காலத்தில்

இயேசு நிமிர்ந்து பார்த்தபோது செல்வர்கள் தங்கள் காணிக்கைகளைக் காணிக்கைப் பெட்டிக்குள் போடுவதைக் கண்டார். வறுமையில் வாடிய ஒரு கைம்பெண்ணும் இரண்டு காசுகளை அதில் போடுவதைக் கண்டார்.

அவர், “இந்த ஏழைக் கைம்பெண் எல்லாரையும் விட மிகுதியான காணிக்கை போட்டிருக்கிறார் என உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன். ஏனெனில் அவர்கள் அனைவரும் தங்களுக்கு இருந்த மிகுதியான செல்வத்திலிருந்து காணிக்கை போட்டனர். இவரோ தமக்குப் பற்றாக்குறை இருந்தும் தம் பிழைப்புக்காக வைத்திருந்த எல்லாவற்றையுமே போட்டுவிட்டார்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

நவம்பர் 27 : பதிலுரைப் பாடல்தானி (இ) 1: 29ac. 30-31. 32-33 (பல்லவி: 29b)பல்லவி: என்றென்றும் நீர் புகழப் பெறவும் போற்றப் பெறவும் தகுதியுள்ளவர்.

நவம்பர் 27 :  பதிலுரைப் பாடல்

தானி (இ) 1: 29ac. 30-31. 32-33 (பல்லவி: 29b)

பல்லவி: என்றென்றும் நீர் புகழப் பெறவும் போற்றப் பெறவும் தகுதியுள்ளவர்.
29a
எங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவரே, நீர் வாழ்த்தப் பெறுவீராக.
29c
மாட்சியும் தூய்மையும் நிறைந்த உம் பெயர் வாழ்த்துக்குரியது. - பல்லவி

30
உமது தூய மாட்சி விளங்கும் கோவிலில் நீர் வாழ்த்தப் பெறுவீராக;
31
கெருபுகள் மேல் வீற்றிருந்து படுகுழியை நோக்குபவரே, நீர் வாழ்த்தப் பெறுவீராக. - பல்லவி

32
உமது ஆட்சிக்குரிய அரியணை மீது நீர் வாழ்த்தப் பெறுவீராக.
33
உயர் வானகத்தில் நீர் வாழ்த்தப் பெறுவீராக. - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மத் 24: 42a, 44
அல்லேலூயா, அல்லேலூயா!

 விழிப்பாய் இருங்கள்; ஆயத்தமாய் இருங்கள். ஏனெனில் நீங்கள் நினையாத நேரத்தில் மானிடமகன் வருவார். அல்லேலூயா.

நவம்பர் 27 : முதல் வாசகம்தானியேல், அனனியா, மிசாவேல், அசரியா ஆகியோருக்கு இணையாக யாரும் காணப்படவில்லை.இறைவாக்கினர் தானியேல் நூலிலிருந்து வாசகம் 1: 1-6, 8-20

நவம்பர் 27 :  முதல் வாசகம்

தானியேல், அனனியா, மிசாவேல், அசரியா ஆகியோருக்கு இணையாக யாரும் காணப்படவில்லை.

இறைவாக்கினர் தானியேல் நூலிலிருந்து வாசகம் 1: 1-6, 8-20
யூதா அரசன் யோயாக்கிமின் மூன்றாம் ஆட்சியாண்டில் பாபிலோனிய அரசன் நெபுகத்னேசர் எருசலேமுக்கு வந்து முற்றுகையிட்டான். தலைவராகிய ஆண்டவர் யூதா அரசனாகிய யோயாக்கிமையும் கடவுளுடைய கோவிலின் கலன்கள் சிலவற்றையும் அவனிடம் கையளித்தார். அவனும் அவற்றைச் சீனார் நாட்டிலிருந்த தன் தெய்வத்தின் கோவிலுக்கு எடுத்துச் சென்று அவற்றைத் தன் தெய்வத்திற்குரிய கருவூலத்தில் சேர்த்தான்.

அப்பொழுது, அரசன் தன் அரண்மனை அலுவலரின் தலைவனாகிய அஸ்பெனாசுக்கு, அரசகுலத்தையும் உயர் குடியையும் சார்ந்த இஸ்ரயேலர் சிலரைக் கொண்டுவருமாறு கட்டளையிட்டான். அக்கட்டளைப்படி அவர்கள் உடல் ஊனமற்ற, அழகுமிக்க, எல்லா ஞானத்திலும் தேர்ச்சி பெற்ற, அறிவிலும் உணர்விலும் கல்வியிலும் சிறந்த, அரசனின் அரண்மனையில் பணியாற்றும் திறமை பெற்ற இளைஞர்களாய் இருக்க வேண்டும். மேலும் அவர்கள் கல்தேய மொழியை எழுதவும் பேசவும் கற்றுக் கொள்ள வேண்டும். அரசன் தான் உண்டு வந்த சிறப்புணவிலும், பருகி வந்த திராட்சை இரசத்திலும் நாள்தோறும் ஒரு பங்கை அவர்களுக்குக் கொடுக்கும்படி ஏற்பாடு செய்தான். இவ்வாறு மூன்றாண்டுகள் பயிற்சி அளித்தபின், இறுதியில் அவர்களை அரசன் முன்னிலையில் கொண்டு வந்து நிறுத்த வேண்டும் என்று ஆணையிட்டான்.

இப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுள் யூதா குலத்தைச் சார்ந்த தானியேல், அனனியா, மிசாவேல், அசரியா என்பவர்களும் இருந்தார்கள். அரசனது சிறப்புணவினாலும், அவன் பருகி வந்த திராட்சை இரசத்தினாலும் தம்மைத் தீட்டுப்படுத்திக் கொள்ளலாகாது என்று தானியேல் தம் உள்ளத்தில் உறுதி செய்து கொண்டார்; அவ்வாறே தாம் தீட்டுப்படாதிருக்க அலுவலர் தலைவனிடம் அனுமதி கேட்டார்.

அலுவலர் தலைவன் தானியேலுக்குப் பரிவும் இரக்கமும் காட்டுமாறு கடவுள் அருள்கூர்ந்தார். அலுவலர் தலைவன் தானியேலை நோக்கி, “உங்களுக்கு உணவும் பானமும் ஏற்பாடு செய்திருக்கும் அரசனாகிய என் தலைவருக்கு நான் அஞ்சுகிறேன். ஏனெனில் உங்களையொத்த வயதினரை விட நீங்கள் களை குன்றியிருப்பதை அரசன் கண்டால் என் தலையே போய்விடும்; நீங்கள்தான் அதற்குக் காரணமாவீர்கள்” என்றான்.

தானியேல், அனனியா, மிசாவேல், அசரியா ஆகியவர்களுக்கென அலுவலர் தலைவனால் நியமிக்கப்பட்ட மேற்பார்வையாளரிடம் தானியேல் கூறியது: “ஐயா! தயை கூர்ந்து பத்து நாள் உம் ஊழியர்களாகிய எங்களைச் சோதித்துப் பாரும். எங்களுக்கு உண்பதற்கு மரக்கறிகளையும், குடிப்பதற்கு தண்ணீரையும் மட்டுமே தாரும். அதற்குப் பிறகு, எங்களது தோற்றத்தையும் அரசனது சிறப்புணவை உண்ணும் மற்ற இளைஞர்களின் தோற்றத்தையும் ஒப்பிட்டுப் பாரும்; அதன்பின் உமக்குத் தோன்றியபடி உம்முடைய பணியாளர்களாகிய எங்களுக்குச் செய்தருளும்” என்றார்.

அவனும் இக்காரியத்தில் அவர்களுக்கு இணங்கி அவர்களைப் பத்து நாள் சோதித்துப் பார்த்தான். பத்து நாள்கள் ஆயின. அரசனது சிறப்புணவை உண்டுவந்த இளைஞர்கள் அனைவரையும் விட அவர்களது தோற்றம் மிகக் களையுள்ளதாயும் உடற்கட்டு மிகச் செழுமையுள்ளதாயும் காணப்பட்டது. ஆதலால் மேற்பார்வையாளன் அவர்கள் உண்ண வேண்டிய சிறப்புணவுக்கும் பருக வேண்டிய திராட்சை இரசத்திற்கும் பதிலாக மரக்கறி உணவையே அவர்களுக்குக் கொடுத்து வந்தான்.

கடவுள் இந்த நான்கு இளைஞர்களுக்கும் அறிவையும் அனைத்து இலக்கியத்தில் தேர்ச்சியையும் ஞானத்தையும் அருளினார். சிறப்பாக, தானியேல் எல்லாக் காட்சிகளையும் கனவுகளையும் உய்த்துணரும் ஆற்றல் பெற்றிருந்தார். அரசன் தன் முன்னிலைக்கு அவர்களைக் கொண்டு வரவேண்டுமென்று குறித்த நாள் வந்தது. அலுவலர் தலைவனும் அவர்களை நெபுகத்னேசர் முன்னிலையில் கொண்டுவந்து நிறுத்தினான்.

அரசன் அவர்களோடு உரையாடலானான்; அப்பொழுது அவர்கள் அனைவருள்ளும் தானியேல், அனனியா, மிசாவேல், அசரியா ஆகியோருக்கு இணையாக யாரும் காணப்படவில்லை; எனவே அவர்கள் அரசன் முன்னிலையில் பணிபுரியலாயினர். ஞானம், விவேகம் சார்ந்தவற்றில் அரசன் அவர்களோடு கலந்துரையாடினான். அப்பொழுது அவனது அரசில் இருந்த எல்லா மந்திரவாதிகளையும் மாயவித்தைக்காரர்களையும் விட அவர்கள் பத்து மடங்கு சிறந்தவர்களாய் இருந்ததைக் கண்டறிந்தான்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

November 27th : Gospel The widow's miteA reading from the Holy Gospel according to St.Luke 21:1-4

November 27th :  Gospel 

The widow's mite

A reading from the Holy Gospel according to St.Luke 21:1-4 
As Jesus looked up, he saw rich people putting their offerings into the treasury; then he happened to notice a poverty-stricken widow putting in two small coins, and he said, ‘I tell you truly, this poor widow has put in more than any of them; for these have all contributed money they had over, but she from the little she had has put in all she had to live on.’

The Word of the Lord.

November 27th : Responsorial Psalm Daniel 3:52-56 To you glory and praise for evermore.You are blest, Lord God of our fathers

November 27th :  Responsorial 

Psalm Daniel 3:52-56 

To you glory and praise for evermore.

You are blest, Lord God of our fathers.
To you glory and praise for evermore.
Blest your glorious holy name.

To you glory and praise for evermore.

You are blest in the temple of your glory.

To you glory and praise for evermore.

You are blest on the throne of your kingdom.

To you glory and praise for evermore.

You are blest who gaze into the depths.

To you glory and praise for evermore.

You are blest in the firmament of heaven.

To you glory and praise for evermore.

Gospel Acclamation Rv2:10

Alleluia, alleluia!

Even if you have to die, says the Lord,
keep faithful, and I will give you
the crown of life.
Alleluia!

November 27th : First readingDaniel and his companions are trained to be the king's servants in BabylonA reading from the book of Daniel 1:1-6,8-20

November 27th :  First reading

Daniel and his companions are trained to be the king's servants in Babylon

A reading from the book of Daniel 1:1-6,8-20 
In the third year of the reign of Jehoiakim king of Judah, Nebuchadnezzar king of Babylon marched on Jerusalem and besieged it. The Lord delivered Jehoiakim king of Judah into his hands, with some of the furnishings of the Temple of God. He took them away to the land of Shinar, and stored the sacred vessels in the treasury of his own gods.
  The king ordered Ashpenaz, his chief eunuch, to select from the Israelites a certain number of boys of either royal or noble descent; they had to be without any physical defect, of good appearance, trained in every kind of wisdom, well-informed, quick at learning, suitable for service in the palace of the king. Ashpenaz himself was to teach them the language and literature of the Chaldaeans. The king assigned them a daily allowance of food and wine from his own royal table. They were to receive an education lasting for three years, after which they were expected to be fit for the king’s society. Among them were Daniel, Hananiah, Mishael and Azariah, who were Judaeans. Daniel, who was most anxious not to defile himself with the food and wine from the royal table, begged the chief eunuch to spare him this defilement; and by the grace of God Daniel met goodwill and sympathy on the part of the chief eunuch. But he warned Daniel, ‘I am afraid of my lord the king: he has assigned you food and drink, and if he sees you looking thinner in the face than the other boys of your age, my head will be in danger with the king because of you.’ At this Daniel turned to the guard whom the chief eunuch had assigned to Daniel, Hananiah, Mishael and Azariah. He said, ‘Please allow your servants a ten days’ trial, during which we are given only vegetables to eat and water to drink. You can then compare our looks with those of the boys who eat the king’s food; go by what you see, and treat your servants accordingly.’ The man agreed to do what they asked and put them on ten days’ trial. When the ten days were over they looked and were in better health than any of the boys who had eaten their allowance from the royal table; so the guard withdrew their allowance of food and the wine they were to drink, and gave them vegetables. And God favoured these four boys with knowledge and intelligence in everything connected with literature, and in wisdom; while Daniel had the gift of interpreting every kind of vision and dream. When the period stipulated by the king for the boys’ training was over, the chief eunuch presented them to Nebuchadnezzar. The king conversed with them, and among all the boys found none to equal Daniel, Hananiah, Mishael and Azariah. So they became members of the king’s court, and on whatever point of wisdom or information he might question them, he found them ten times better than all the magicians and enchanters in his entire kingdom.

The Word of the Lord.