Search This Blog

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

Tuesday, January 26, 2021

நற்செய்தி வாசகம் விதைப்பவர் ஒருவர் விதைக்கச் சென்றார். ✠ மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 1-20

27 சனவரி 2021, பொதுக்காலம் 3ஆம் வாரம் - புதன் 

நற்செய்தி வாசகம் 

விதைப்பவர் ஒருவர் விதைக்கச் சென்றார். 

✠ மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 1-20 

அக்காலத்தில் 
இயேசு மீண்டும் கடலோரத்தில் கற்பிக்கத் தொடங்கினார். மாபெரும் மக்கள் கூட்டம் அவரிடம் ஒன்றுகூடி வர, அவர் கடலில் நின்ற ஒரு படகில் ஏறி அமர்ந்தார். திரண்டிருந்த மக்கள் அனைவரும் கடற்கரையில் இருந்தனர். அவர் உவமைகள் வாயிலாகப் பலவற்றை அவர்களுக்குக் கற்பித்தார். 

அவர் அவர்களுக்குக் கற்பித்தது: “இதோ, கேளுங்கள். விதைப்பவர் ஒருவர் விதைக்கச் சென்றார். அவர் விதைக்கும்பொழுது சில விதைகள் வழியோரம் விழுந்தன. பறவைகள் வந்து அவற்றை விழுங்கிவிட்டன. வேறு சில விதைகள் மிகுதியாக மண் இல்லாப் பாறைப் பகுதிகளில் விழுந்தன. அங்கே மண் ஆழமாக இல்லாததால் அவை விரைவில் முளைத்தன. ஆனால் கதிரவன் மேலே எழ, அவை காய்ந்து, வேர் இல்லாமையால் கருகிப் போயின. மற்றும் சில விதைகள் முட்செடிகளிடையே விழுந்தன. முட்செடிகள் வளர்ந்து அவற்றை நெருக்கி விடவே, அவை விளைச்சலைக் கொடுக்கவில்லை. ஆனால் இன்னும் சில விதைகள் நல்ல நிலத்தில் விழுந்தன. அவை முளைத்து வளர்ந்து, சில முப்பது மடங்காகவும் சில அறுபது மடங்காகவும் சில நூறு மடங்காகவும் விளைச்சலைக் கொடுத்தன. கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்.” 

அவர் தனிமையான இடத்தில் இருந்தபோது அவரைச் சூழ்ந்து இருந்தவர்கள், பன்னிருவரோடு சேர்ந்துகொண்டு, உவமைகளைப் பற்றி அவரிடம் கேட்டார்கள். அதற்கு இயேசு அவர்களிடம், “இறையாட்சியின் மறைபொருளை அறிய உங்களுக்குக் கொடுத்து வைத்திருக்கிறது; புறம்பே இருக்கிறவர்களுக்கோ எல்லாம் உவமைகளாகவே இருக்கின்றன. எனவே அவர்கள் ‘ஒருபோதும் மனம் மாறி மன்னிப்புப் பெறாதபடி கண்ணால் தொடர்ந்து பார்த்தும் கண்டுகொள்ளாமலும் காதால் தொடர்ந்து கேட்டும் கருத்தில் கொள்ளாமலும் இருப்பார்கள்’ “ என்று கூறினார். 

மேலும் அவர் அவர்களை நோக்கி, “இந்த உவமை உங்களுக்குப் புரியவில்லையா? பின்பு எப்படி மற்ற உவமைகளையெல்லாம் நீங்கள் புரிந்துகொள்வீர்கள்? விதைப்பவர் இறைவார்த்தையை விதைக்கிறார். வழியோரம் விழுந்த விதைகளுக்கு ஒப்பானவர்கள் வார்த்தையைக் கேட்பார்கள். ஆனால் அதைக் கேட்டவுடன் சாத்தான் வந்து அவர்களுள் விதைக்கப்பட்ட வார்த்தையை எடுத்துவிடுகிறான். பாறைப் பகுதியில் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானவர்கள் இறைவார்த்தையைக் கேட்டவுடன் அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்வார்கள். ஆனால் அவர்கள் வேரற்றவர்கள்; சிறிது காலமே நிலைத்திருப்பவர்கள். இறைவார்த்தையின் பொருட்டு இன்னலோ இடுக்கண்ணோ நேர்ந்த உடனே அவர்கள் தடுமாற்றம் அடைவார்கள். முட்செடிகளுக்கு இடையில் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானவர்கள் இறைவார்த்தையைக் கேட்டும், உலகக் கவலையும் செல்வ மாயையும் ஏனைய தீய ஆசைகளும் உட்புகுந்து அவ்வார்த்தையை நெருக்கிவிடுவதால், பயன் அளிக்க மாட்டார்கள். நல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானவர்கள் இறைவார்த்தையைக் கேட்டு அதை ஏற்றுக்கொண்டு பயன் அளிப்பார்கள். இவர்களுள் சிலர் முப்பது மடங்காகவும் சிலர் அறுபது மடங்காகவும் சிலர் நூறு மடங்காகவும் பயன் அளிப்பர்” என்றார். 

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல் திபா 110: 1. 2. 3. 4 (பல்லவி: 4a) பல்லவி: மெல்கிசெதேக்கின் முறைப்படி நீர் என்றென்றும் குருவே

27 சனவரி 2021, பொதுக்காலம் 3ஆம் வாரம் - புதன் 

பதிலுரைப் பாடல் 

திபா 110: 1. 2. 3. 4 (பல்லவி: 4a) 

பல்லவி: மெல்கிசெதேக்கின் முறைப்படி நீர் என்றென்றும் குருவே. 
1.ஆண்டவர் என் தலைவரிடம், ‘நான் உம் பகைவரை உமக்குக் கால்மணையாக்கும்வரை நீர் என் வலப் பக்கம் வீற்றிரும்’ என்று உரைத்தார். - பல்லவி 

2.வலிமைமிகு உமது செங்கோலை ஆண்டவர் சீயோனிலிருந்து ஓங்கச் செய்வார்; உம் எதிரிகளிடையே ஆட்சி செலுத்தும்! - பல்லவி 

3.நீர் உமது படைக்குத் தலைமை தாங்கும் நாளில், தூய கோலத்துடன் உம் மக்கள் தம்மை உவந்தளிப்பர்; வைகறை கருவுயிர்த்த பனியைப்போல உம் இளம் வீரர் உம்மை வந்தடைவர். - பல்லவி 

4.‘மெல்கிசெதேக்கின் முறைப்படி நீர் என்றென்றும் குருவே’ என்று ஆண்டவர் ஆணையிட்டுச் சொன்னார்; அவர் தம் மனத்தை மாற்றிக்கொள்ளார். - பல்லவி 

__ 

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி 

அல்லேலூயா, அல்லேலூயா! கடவுளின் வார்த்தையே விதை; அதை விதைப்பவர் கிறிஸ்துவே; அவரைக் கண்டடைந்தவரோ என்றென்றும் நிலைத்திருப்பார். அல்லேலூயா.

முதல் வாசகம் தாம் தூயவர் ஆக்கியவர்களை ஒரே பலியினால் என்றென்றைக்கும் நிறைவுள்ளவர் ஆக்கினார். எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 10: 11-18

27 சனவரி 2021, பொதுக்காலம் 3ஆம் வாரம் - புதன் 

முதல் வாசகம் 

தாம் தூயவர் ஆக்கியவர்களை ஒரே பலியினால் என்றென்றைக்கும் நிறைவுள்ளவர் ஆக்கினார். 

எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 10: 11-18 

சகோதரர் சகோதரிகளே, 
ஒவ்வொரு குருவும் நாள்தோறும் இறை ஊழியம் புரியும்போது மீண்டும் மீண்டும் அதே பலிகளைச் செலுத்தி வருகிறார். அவையோ பாவங்களை ஒருபோதும் போக்க இயலாதவை. ஆனால், இவர் ஒரே பலியைப் பாவங்களுக்காக என்றென்றைக்கும் எனச் செலுத்திவிட்டு, கடவுளின் வலப் பக்கத்தில் அமர்ந்துள்ளார். அங்கே தம் பகைவர் தமக்குக் கால்மணை ஆக்கப்படும்வரை காத்திருக்கிறார். தாம் தூயவர் ஆக்கியவர்களை ஒரே பலியினால் என்றென்றைக்கும் நிறைவுள்ளவர் ஆக்கினார். 

இதுபற்றித் தூய ஆவியாரும், “அந்நாள்களுக்குப் பிறகு அவர்களோடு நான் செய்ய இருக்கும் உடன்படிக்கை இதுவே: என் சட்டத்தை அவர்கள் உள்ளத்தில் பதிப்பேன்; அதை அவர்களது இதயத்தில் எழுதி வைப்பேன்” என்று நமக்குச் சான்று பகர்கிறார். இவ்வாறு சொன்னபின், “அவர்களது தீச்செயலையும் அவர்களுடைய பாவங்களையும் இனிமேல் நினைவுகூர மாட்டேன்” என்றும் கூறுகிறார். எனவே பாவ மன்னிப்பு கிடைத்தபின் பாவத்திற்குக் கழுவாயாகச் செலுத்தும் பலிக்கு இடமே இல்லை. 

ஆண்டவரின் அருள்வாக்கு.

GOSPEL "Behold, the sower went out to sow" A Reading from the Holy Gospel according to Mark (4, 1-20)

27 January 2021, General Week 3 Wednesday 

📖GOSPEL 

"Behold, the sower went out to sow" 

A Reading from the Holy Gospel according to Mark (4, 1-20) 
At this time Jesus began to teach again by the Sea of ​​Galilee. A very large crowd gathered near him, so that he got into a boat and sat down. He was on the sea, and all the crowd was by the sea, on the shore.
He taught them many things in parables, and in his teaching he said to them: “Listen! Behold, the sower went out to sow. As he was sowing, grain fell by the wayside; the birds came and they ate everything. Grain also fell on stony ground, where there was not much soil; he got up immediately, because the earth was shallow; and when the sun rose, that grain burned up, and for lack of roots it withered up. Grain also fell in the brambles, the brambles sprouted up, choked it, and it did not bear fruit. But other grains fell in the good soil; they brought forth fruit growing and developing, and they brought forth thirty, sixty, a hundred, to one. And Jesus said: "He who has ears to hear, let him hear! "
When he was alone, those around him with the Twelve asked him about the parables. He said to them: “To you is given the mystery of the kingdom of God; but to those who are outside, everything is presented in the form of parables. And so, as the prophet says: No matter how much they look with all their eyes, they will not see; however much they listen with all their ears, they will not understand; otherwise they would convert and receive forgiveness. "
He said to them again: "You do not understand this parable? So how will you understand all the parables? The sower sows the Word. There are those who are by the wayside where the Word is sown: when they hear it, Satan comes immediately and removes the Word sown in them. And likewise, there are those who received the seed in stony places: these, when they hear the Word, they immediately receive it with joy; but they have no root in them, they are the people of a moment; whether distress or persecution come because of the Word, they stumble right away. And there are others who received the seed in the brambles: these hear the Word, but the cares of the world, the seduction of wealth and all the other lusts invade them and choke the Word, which does not give no fruit. And there are those who have received the seed in good soil: these hear the Word, they welcome it, and they bear fruit: thirty, sixty, a hundred, for one. " 

The Gospel of the Lord 

I believe in God, /....

RESPONSORIAL Respons : You are a priest forever after the order of Melkizedek. Psalm 109 (110)

27 January 2021, General Week 3 Wednesday 

RESPONSORIAL 

Respons : You are a priest forever after the order of Melkizedek. 

Psalm 109 (110) 
Oracle from the Lord to my Lord:
"Sit on my right hand,
and I will make your enemies
the footstool of your throne." "R 

From Zion, the Lord presents to you
the scepter of your strength:
" Dominate even to the heart of the enemy. "R 

The day when your power appears,
you are a prince, dazzling with holiness:
" Like the dew that is born of the dawn,
I begot you. "A 

The Lord has sworn it
in an irrevocable oath:
" You are a priest forever
after the order of King Melkizedek. "R 

__
🌿Gospel Acclamation 

```Alleluia, alleluia! The word of God is the seed; It is Christ who sows it; Whoever finds him will last forever. Alleluia!``` 

_____________

27 January 2021, General Week 3 Wednesday FIRST READING "He forever led to their perfection those whom he sanctifies" the letter to the Hebrews (10, 11-18)

27 January 2021, General Week 3 Wednesday 

FIRST READING 

"He forever led to their perfection those whom he sanctifies" 

the letter to the Hebrews (10, 11-18) 
In the Old Covenant, every priest, every day, stood in the holy place for liturgical service, and he offered over and over again the same sacrifices, which can never take away sins.
Jesus Christ, on the contrary, after offering one single sacrifice for sins, sat forever at the right hand of God. He is now waiting for his enemies to be put under his feet. By his one dedication he has brought to perfection those whom he sanctifies forever. The Holy Spirit also testifies to us in Scripture, for after having said: This will be the Covenant that I will establish with them when those days have passed, the Lord said: I will give my laws, I will write them on their hearts and in their minds, and I will no longer remember their sins or their faults. However, when forgiveness is granted, the sin offering is no longer offered. 

The Word of the Lord 

__________