Search This Blog

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

Saturday, June 3, 2023

ஜூன் 4 : நற்செய்தி வாசகம்உலகை மீட்கவே கடவுள் தம் மகனை உலகிற்கு அனுப்பினார்.✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 16-18

ஜூன் 4  :  நற்செய்தி வாசகம்

உலகை மீட்கவே கடவுள் தம் மகனை உலகிற்கு அனுப்பினார்.

✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 16-18
அக்காலத்தில்

இயேசு நிக்கதேமுவிடம் கூறியது: “தம் ஒரே மகன்மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்புகூர்ந்தார். உலகிற்குத் தண்டனைத் தீர்ப்பளிக்க அல்ல, தம் மகன் வழியாக அதை மீட்கவே கடவுள் அவரை உலகிற்கு அனுப்பினார். அவர்மீது நம்பிக்கை கொள்வோர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவதில்லை; ஆனால் நம்பிக்கை கொள்ளாதோர் ஏற்கெனவே தீர்ப்புப் பெற்றுவிட்டனர். ஏனெனில் அவர்கள் கடவுளின் ஒரே மகனிடம் நம்பிக்கை கொள்ளவில்லை.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஜூன் 4 : இரண்டாம் வாசகம்இயேசு கிறிஸ்துவின் அருளும் கடவுளின் அன்பும் தூய ஆவியாரின் நட்புறவும் உங்கள் அனைவரோடும் இருப்பதாக!திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 13: 11-13

ஜூன் 4 :  இரண்டாம் வாசகம்

இயேசு கிறிஸ்துவின் அருளும் கடவுளின் அன்பும் தூய ஆவியாரின் நட்புறவும் உங்கள் அனைவரோடும் இருப்பதாக!

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 13: 11-13
சகோதரர் சகோதரிகளே,

இறுதியாக நான் உங்களுக்குச் சொல்வது: மகிழ்ச்சியாய் இருங்கள்; உங்கள் நடத்தையைச் சீர்ப்படுத்துங்கள்; என் அறிவுரைக்குச் செவிசாயுங்கள்; மன ஒற்றுமை கொண்டிருங்கள்; அமைதியுடன் வாழுங்கள்; அப்போது அன்பும் அமைதியும் அளிக்கும் கடவுள் உங்களோடு இருப்பார்.

தூய முத்தம் கொடுத்து ஒருவரை ஒருவர் வாழ்த்துங்கள். இங்குள்ள இறைமக்கள் அனைவரும் உங்களுக்கு வாழ்த்துக் கூறுகிறார்கள்.

ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அருளும் கடவுளின் அன்பும் தூய ஆவியாரின் நட்புறவும் உங்கள் அனைவரோடும் இருப்பதாக!

ஆண்டவரின் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

திவெ 1: 8 காண்க

அல்லேலூயா, அல்லேலூயா!

 இருந்தவரும் இருக்கின்றவரும் வரவிருக்கின்றவரும் எல்லாம் வல்லவருமான கடவுள், தந்தை, மகன், தூய ஆவியாருக்கு மகிமை உண்டாகுக. அல்லேலூயா.

ஜூன் 4 : பதிலுரைப் பாடல்தானி (இ) 1: 29ac. 30,31. 32,33 (பல்லவி: 29b)பல்லவி: என்றென்றும் நீர் புகழப் பெறவும் ஏத்திப் போற்றப் பெறவும் தகுதியுள்ளவர்.

ஜூன் 4 :  பதிலுரைப் பாடல்

தானி (இ) 1: 29ac. 30,31. 32,33 (பல்லவி: 29b)

பல்லவி: என்றென்றும் நீர் புகழப் பெறவும் ஏத்திப் போற்றப் பெறவும் தகுதியுள்ளவர்.
29a
எங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவரே, நீர் வாழ்த்தப் பெறுவீராக;
29c
மாட்சியும் தூய்மையும் நிறைந்த உம் பெயர் வாழ்த்துக்குரியது. - பல்லவி

30
உமது தூய மாட்சி விளங்கும் கோவிலில் நீர் வாழ்த்தப் பெறுவீராக;
31
கெருபுகள் மேல் வீற்றிருந்து படுகுழியை நோக்குபவரே, நீர் வாழ்த்தப் பெறுவீராக. - பல்லவி

32
உமது ஆட்சிக்குரிய அரியணைமீது நீர் வாழ்த்தப் பெறுவீராக;
33
உயர் வானகத்தில் நீர் வாழ்த்தப் பெறுவீராக. - பல்லவி

ஜூன் 4 : மூவொரு கடவுள் பெருவிழாமுதல் வாசகம்இரக்கமும் பரிவும் உள்ளவர் இறைவன்.விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம் 34: 4b-6, 8-9

ஜூன் 4 :  மூவொரு கடவுள் பெருவிழா

முதல் வாசகம்

இரக்கமும் பரிவும் உள்ளவர் இறைவன்.

விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம் 34: 4b-6, 8-9
அந்நாள்களில் ஆண்டவர் தமக்குக் கட்டளையிட்டபடி மோசே அதிகாலையில் எழுந்து சீனாய் மலைமேல் ஏறிச் சென்றார். தம் கையில் இரு கற்பலகைகளையும் கொண்டு போனார்.

ஆண்டவர் மேகத்தில் இறங்கி வந்து, அங்கே அவர் பக்கமாய் நின்று கொண்டு, ‘ஆண்டவர்’ என்ற பெயரை அறிவித்தார். அப்போது ஆண்டவர் அவர் முன்னிலையில் கடந்து செல்கையில், “ஆண்டவர்! ஆண்டவர்; இரக்கமும் பரிவும் உள்ள இறைவன்; சினம் கொள்ளத் தயங்குபவர்; பேரன்புமிக்கவர்; நம்பிக்கைக்குரியவர்” என அறிவித்தார். உடனே மோசே விரைந்து தரைமட்டும் தாழ்ந்து வணங்கி,

“என் தலைவரே! நான் உண்மையிலேயே உம் பார்வையில் தயை பெற்றவன் என்றால், இவர்கள் வணங்காக் கழுத்துள்ள மக்கள் எனினும், என் தலைவரே! நீர் எங்களோடு வந்தருளும். எங்கள் கொடுமையையும் எங்கள் பாவத்தையும் மன்னித்து எங்களை உம் உரிமைச் சொத்தாக்கிக் கொள்ளும்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

June 4th : Gospel God sent his Son so that through him the world might be savedA Reading from the Holy Gospel according to St.John 3:16-18

June 4th :  Gospel 

God sent his Son so that through him the world might be saved

A Reading from the Holy Gospel according to St.John 3:16-18 
Jesus said to Nicodemus:
‘God loved the world so much that he gave his only Son,
so that everyone who believes in him may not be lost
but may have eternal life.
For God sent his Son into the world
not to condemn the world,
but so that through him the world might be saved.
No one who believes in him will be condemned;
but whoever refuses to believe is condemned already,
because he has refused to believe in the name of God’s only Son.’

The Word of the Lord.

June 4th : Second ReadingThe grace of Jesus Christ, the love of God, and the fellowship of the Holy SpiritA Reading from the Second Letter of St.Paul to the Corinthians 13:11-13

June 4th :  Second Reading

The grace of Jesus Christ, the love of God, and the fellowship of the Holy Spirit

A Reading from the Second Letter of St.Paul to the Corinthians 13:11-13 
Brothers, we wish you happiness; try to grow perfect; help one another. Be united; live in peace, and the God of love and peace will be with you.
  Greet one another with the holy kiss. All the saints send you greetings.
  The grace of the Lord Jesus Christ, the love of God and the fellowship of the Holy Spirit be with you all.

The Word of the Lord.

Gospel Acclamation cf.Rv1:8

Alleluia, alleluia!

Glory be to the Father, and to the Son, and to the Holy Spirit;
the God who is, who was, and who is to come.
Alleluia!

June 4th : Responsorial Psalm Daniel 3:52-56

June 4th :  Responsorial Psalm 

Daniel 3:52-56 

To you glory and praise for evermore.

You are blest, Lord God of our fathers.

To you glory and praise for evermore.
Blest your glorious holy name.

To you glory and praise for evermore.

You are blest in the temple of your glory.

To you glory and praise for evermore.

You are blest on the throne of your kingdom.

To you glory and praise for evermore.

You are blest who gaze into the depths.

To you glory and praise for evermore.

You are blest in the firmament of heaven.

To you glory and praise for evermore.

June 4th : First Reading'Lord, Lord, a God of tenderness and compassion'A Reading from the Book of Exodus 34:4-6,8-9

June 4th :  First Reading

'Lord, Lord, a God of tenderness and compassion'

A Reading from the Book of Exodus 34:4-6,8-9 
With the two tablets of stone in his hands, Moses went up the mountain of Sinai in the early morning as the Lord had commanded him. And the Lord descended in the form of a cloud, and Moses stood with him there.
  He called on the name of the Lord. The Lord passed before him and proclaimed, ‘Lord, Lord, a God of tenderness and compassion, slow to anger, rich in kindness and faithfulness.’ And Moses bowed down to the ground at once and worshipped. ‘If I have indeed won your favour, Lord,’ he said ‘let my Lord come with us, I beg. True, they are a headstrong people, but forgive us our faults and our sins, and adopt us as your heritage.’

The Word of the Lord.