Search This Blog

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

Friday, November 27, 2020

GOSPEL*_Pray at all times that you may be worthy to escape all these things of the future and to stand before the Son of Man._*A reading from the Holy Gospel according to St Luke 21:34-36*

*📖GOSPEL*

_Pray at all times that you may be worthy to escape all these things of the future and to stand before the Son of Man._

*A reading from the Holy Gospel according to St Luke 21:34-36* 
```When he went into Capernaum a centurion came up and pleaded with him. 'Sir,' he said, 'my servant is lying at home paralysed and in great pain.' Jesus said to him, 'I will come myself and cure him.' The centurion replied, 'Sir, I am not worthy to have you under my roof; just give the word and my servant will be cured. For I am under authority myself and have soldiers under me; and I say to one man, "Go," and he goes; to another, "Come here," and he comes; to my servant, "Do this," and he does it.' When Jesus heard this he was astonished and said to those following him, 'In truth I tell you, in no one in Israel have I found faith as great as this. And I tell you that many will come from east and west and sit down with Abraham and Isaac and Jacob at the feast in the kingdom of Heaven;  'Watch yourselves, or your hearts will be coarsened by debauchery and drunkenness and the cares of life, and that day will come upon you unexpectedly, like a trap. For it will come down on all those living on the face of the earth. Stay awake, praying at all times for the strength to survive all that is going to happen, and to hold your ground before the Son of man.'```

*The Gospel of the Lord*

I believe in God, /...

𝗥𝗘𝗦𝗣𝗢𝗡𝗦𝗢𝗥𝗜𝗔𝗟*_Response: Maran Atha! Come, Lord Jesus._*Psalms 95:1-2, 3-5, 6-7*

*🌿𝗥𝗘𝗦𝗣𝗢𝗡𝗦𝗢𝗥𝗜𝗔𝗟*

_Response: Maran Atha! Come, Lord Jesus._

*Psalms 95:1-2, 3-5, 6-7*
1 Come, let us cry out with joy to Yahweh, acclaim the rock of our salvation.
2 Let us come into his presence with thanksgiving, acclaim him with music. 

3 For Yahweh is a great God, a king greater than all the gods.
4 In his power are the depths of the earth, the peaks of the mountains are his;
5 the sea belongs to him, for he made it, and the dry land, moulded by his hands. 

6 Come, let us bow low and do reverence; kneel before Yahweh who made us!
7 For he is our God, and we the people of his sheepfold, the flock of his hand. If only you would listen to him today! 

____ 

*🌿Before the gospel*
  
```𝗔𝗟𝗟𝗘𝗟𝗨𝗜𝗔, 𝗔𝗟𝗟𝗘𝗟𝗨𝗜𝗔! Pray at all times that you may be worthy to escape all these things of the future and to stand before the Son of Man. 𝗔𝗟𝗟𝗘𝗟𝗨𝗜𝗔.```

FIRST READING*```they will not need lamplight or sunlight, because the Lord God will be shining on them.```A reading from the Book of Revelation 22:1-7

_🍁Daily Reading for Saturday November 28, 2020_

*FIRST READING*

```they will not need lamplight or sunlight, because the Lord God will be shining on them.```

A reading from the Book of Revelation 22:1-7 
Then the angel showed me the river of life, rising from the throne of God and of the Lamb and flowing crystal-clear. Down the middle of the city street, on either bank of the river were the trees of life, which bear twelve crops of fruit in a year, one in each month, and the leaves of which are the cure for the nations. The curse of destruction will be abolished. The throne of God and of the Lamb will be in the city; his servants will worship him, they will see him face to face, and his name will be written on their foreheads. And night will be abolished; they will not need lamplight or sunlight, because the Lord God will be shining on them. They will reign for ever and ever.
The angel said to me, 'All that you have written is sure and will come true: the Lord God who inspires the prophets has sent his angel to reveal to his servants what is soon to take place. I am coming soon!' Blessed are those who keep the prophetic message of this book. 

*The Word of the Lord*

நற்செய்தி வாசகம்*_மானிடமகன் முன்னிலையில் நிற்க வல்லவராவதற்கு எப்பொழுதும் விழிப்பாயிருந்து மன்றாடுங்கள்._*லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 34-36*

*📖நற்செய்தி வாசகம்*

_மானிடமகன் முன்னிலையில் நிற்க வல்லவராவதற்கு எப்பொழுதும் விழிப்பாயிருந்து மன்றாடுங்கள்._

*லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 34-36*
```அக்காலத்தில் இயேசு தம் சீடர்களுக்குக் கூறியது: ``உங்கள் உள்ளங்கள் குடிவெறி, களியாட்டத்தாலும் இவ்வுலக வாழ்க்கைக்குரிய கவலையினாலும் மந்தம் அடையாதவாறு அந்நாள் திடீரென வந்து ஒரு கண்ணியைப் போல் உங்களைச் சிக்க வைக்காதவாறும் எச்சரிக்கையாய் இருங்கள். மண்ணுலகு எங்கும் குடியிருக்கும் எல்லார் மீதும் அந்நாள் வந்தே தீரும். ஆகையால் நிகழப்போகும் அனைத்திலிருந்தும் தப்புவதற்கும் மானிடமகன் முன்னிலையில் நிற்க வல்லவராவதற்கும் எப்பொழுதும் விழிப்பாயிருந்து மன்றாடுங்கள்.''```

*இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.*

பதிலுரைப் பாடல்*திபா 95: 1-2. 3-5. 6-7 *பல்லவி: மாரனாத்தா! ஆண்டவராகிய இயேசுவே, வாரும்

*🌿பதிலுரைப் பாடல்*

திபா 95: 1-2. 3-5. 6-7 

*பல்லவி: மாரனாத்தா! ஆண்டவராகிய இயேசுவே, வாரும்.*
1 வாருங்கள்; ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்;
நமது மீட்பின் பாறையைப் போற்றி ஆர்ப்பரியுங்கள்.
2 நன்றியுடன் அவர் திருமுன் செல்வோம்;
புகழ்ப் பாக்களால் அவரைப் போற்றி ஆர்ப்பரிப்போம். -பல்லவி 

3 ஏனெனில், ஆண்டவர் மாண்புமிகு இறைவன்;
தெய்வங்கள் அனைத்திற்கும் மேலான பேரரசர்.
4 பூவுலகின் ஆழ் பகுதிகள் அவர்தம் கையில் உள்ளன;
மலைகளின் கொடுமுடிகளும் அவருக்கே உரியன.
5 கடலும் அவருடையதே; அவரே அதைப் படைத்தார்;
உலர்ந்த தரையையும் அவருடைய கைகளே உருவாக்கின. -பல்லவி 

6 வாருங்கள்; தாள்பணிந்து அவரைத் தொழுவோம்;
நம்மை உருவாக்கிய ஆண்டவர் முன் முழந்தாளிடுவோம்.
7 அவரே நம் கடவுள்; நாமோ அவரது மேய்ச்சலின் மக்கள்;
நாம் அவர் பேணிக்காக்கும் ஆடுகள். -பல்லவி

*நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி*

_அல்லேலூயா, அல்லேலூயா! மானிடமகன் முன்னிலையில் நிற்க வல்லவராவதற்கு எப்பொழுதும் விழிப்பாயிருந்து மன்றாடுங்கள். அல்லேலூயா._

ஆண்டின் 34ஆம் வாரம் சனி 28/11/2020_*முதல் வாசகம்*_விளக்கின் ஒளியோ கதிரவனின் ஒளியோ அவர்களுக்குத் தேவைப்படாது. ஏனெனில் கடவுளாகிய ஆண்டவர் அவர்கள்மீது ஒளி வீசுவார்;_*திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம் 22: 1-7*

_🍃ஆண்டின் 34ஆம் வாரம் சனி 28/11/2020_

*முதல் வாசகம்*

_விளக்கின் ஒளியோ கதிரவனின் ஒளியோ அவர்களுக்குத் தேவைப்படாது. ஏனெனில் கடவுளாகிய ஆண்டவர் அவர்கள்மீது ஒளி வீசுவார்;_

*திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம் 22: 1-7*
வானதூதர் வாழ்வு அளிக்கும் தண்ணீர் ஓடிக்கொண்டிருந்த ஓர் ஆற்றை எனக்குக் காட்டினார். அது பளிங்குபோல் ஒளிர்ந்தது. அது கடவுளும் ஆட்டுக்குட்டியும் வீற்றிருந்த அரியணையிலிருந்து புறப்பட்டு, நகரின் தெரு நடுவே பாய்ந்தோடியது. ஆற்றின் இரு மருங்கும் வாழ்வு தரும் மரம் இருந்தது. மாதத்துக்கு ஒரு முறையாக அது ஆண்டுதோறும் பன்னிரு முறை கனிகள் தரும். அதன் இலைகள் மக்களினங்களைக் குணப்படுத்தக் கூடியவை. சாபத்துக்கு உள்ளானது எதுவும் நகரில் இராது. கடவுளும் ஆட்டுக்குட்டியும் வீற்றிருக்கும் அரியணை அங்கு இருக்கும். கடவுளின் பணியாளர்கள் அவரை வழிபடுவார்கள்; அவரது முகத்தைக் காண்பார்கள். அவரது பெயர் அவர்களுடைய நெற்றியில் எழுதப்பட்டிருக்கும். இனி இரவே இராது. விளக்கின் ஒளியோ கதிரவனின் ஒளியோ அவர்களுக்குத் தேவைப்படாது. ஏனெனில் கடவுளாகிய ஆண்டவர் அவர்கள்மீது ஒளி வீசுவார்; அவர்கள் என்றென்றும் ஆட்சிபுரிவார்கள். பின்னர் அந்த வானதூதர் என்னிடம், ``இவ்வாக்குகள் நம்பத்தக்கவை, உண்மையுள்ளவை. விரைவில் நிகழவேண்டியவற்றைத் தம் பணியாளர்களுக்குக் காட்டுமாறு, இறைவாக்கினரைத் தூண்டியெழுப்பும் கடவுளாகிய ஆண்டவர் தம் வானதூதரை அனுப்பினார். இதோ! நான் விரைவில் வருகிறேன்'' என்றார். இந்த நூலில் உள்ள இறைவாக்குகளைக் கடைப்பிடிப்போர் பேறுபெற்றோர். 

*இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.*