Search This Blog

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

Saturday, November 7, 2020

November 8th : Gospel The wise and foolish virginsA Reading from the Holy Gospel according to St.Matthew 25:1-13

November 8th : Gospel 

The wise and foolish virgins

A Reading from the Holy Gospel according to St.Matthew 25:1-13 
Jesus told this parable to his disciples: ‘The kingdom of heaven will be like this: Ten bridesmaids took their lamps and went to meet the bridegroom. Five of them were foolish and five were sensible: the foolish ones did take their lamps, but they brought no oil, whereas the sensible ones took flasks of oil as well as their lamps. The bridegroom was late, and they all grew drowsy and fell asleep. But at midnight there was a cry, “The bridegroom is here! Go out and meet him.” At this, all those bridesmaids woke up and trimmed their lamps, and the foolish ones said to the sensible ones, “Give us some of your oil: our lamps are going out.” But they replied, “There may not be enough for us and for you; you had better go to those who sell it and buy some for yourselves.” They had gone off to buy it when the bridegroom arrived. Those who were ready went in with him to the wedding hall and the door was closed. The other bridesmaids arrived later. “Lord, Lord,” they said “open the door for us.” But he replied, “I tell you solemnly, I do not know you.” So stay awake, because you do not know either the day or the hour.’

The Gospel of the Lord.

November 8th : Second ReadingDo not grieve about those who have died in Jesus.1 Thessalonians 4:13-18

November 8th : Second Reading

Do not grieve about those who have died in Jesus.

1 Thessalonians 4:13-18 
We want you to be quite certain, brothers, about those who have died, to make sure that you do not grieve about them, like the other people who have no hope. We believe that Jesus died and rose again, and that it will be the same for those who have died in Jesus: God will bring them with him. We can tell you this from the Lord’s own teaching, that any of us who are left alive until the Lord’s coming will not have any advantage over those who have died. At the trumpet of God, the voice of the archangel will call out the command and the Lord himself will come down from heaven; those who have died in Christ will be the first to rise, and then those of us who are still alive will be taken up in the clouds, together with them; to meet the Lord in the air. So we shall stay with the Lord for ever. With such thoughts as these you should comfort one another.

The Word of the Lord.

Gospel Acclamation Mt24:42 44

Alleluia, alleluia!
Stay awake and stand ready,
because you do not know the hour
when the Son of Man is coming.
Alleluia!

November 8th : Responsorial PsalmPsalm 62(63):2-8 For you my soul is thirsting, O God, my God.

November 8th :  Responsorial Psalm

Psalm 62(63):2-8 

For you my soul is thirsting, O God, my God.
O God, you are my God, for you I long;
  for you my soul is thirsting.
My body pines for you
  like a dry, weary land without water.

For you my soul is thirsting, O God, my God.

So I gaze on you in the sanctuary
  to see your strength and your glory.
For your love is better than life,
  my lips will speak your praise.

For you my soul is thirsting, O God, my God.

So I will bless you all my life,
  in your name I will lift up my hands.
My soul shall be filled as with a banquet,
  my mouth shall praise you with joy.

For you my soul is thirsting, O God, my God.

On my bed I remember you.
  On you I muse through the night
for you have been my help;
  in the shadow of your wings I rejoice.

For you my soul is thirsting, O God, my God.

November 8th : First Reading Wisdom is found by those who look for her.Wisdom 6:12-16

November 8th : First Reading 

Wisdom is found by those who look for her.

Wisdom 6:12-16 
Wisdom is bright, and does not grow dim. By those who love her she is readily seen, and found by those who look for her. Quick to anticipate those who desire her, she makes herself known to them. Watch for her early and you will have no trouble; you will find her sitting at your gates. Even to think about her is understanding fully grown; be on the alert for her and anxiety will quickly leave you. She herself walks about looking for those who are worthy of her and graciously shows herself to them as they go, in every thought of theirs coming to meet them.

The Word of the Lord.

நவம்பர் 8 : நற்செய்தி வாசகம்விழிப்பாய் இருங்கள்; ஏனெனில் மானிடமகன் வரும் நாளோ, வேளையோ உங்களுக்குத் தெரியாது.மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 25: 1-13

நவம்பர் 8 :  நற்செய்தி வாசகம்

விழிப்பாய் இருங்கள்; ஏனெனில் மானிடமகன் வரும் நாளோ, வேளையோ உங்களுக்குத் தெரியாது.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 25: 1-13
இயேசு தம் சீடர்களுக்குச் சொன்ன உவமையாவது: “விண்ணரசு எவ்வாறு இருக்கும் என்பதைப் பின்வரும் நிகழ்ச்சி வாயிலாக விளக்கலாம்: மணமகனை எதிர்கொள்ள மணமகளின் தோழியர் பத்துப் பேர் தங்கள் விளக்குகளை எடுத்துக்கொண்டு புறப்பட்டுச் சென்றார்கள். அவர்களுள் ஐந்து பேர் அறிவிலிகள்; ஐந்து பேர் முன்மதி உடையவர்கள். அறிவிலிகள் ஐவரும் தங்கள் விளக்குகளை எடுத்துச் சென்றார்கள்; ஆனால் தங்களோடு எண்ணெய் எடுத்துச் செல்லவில்லை. முன்மதியுடையோர் தங்கள் விளக்குகளுடன் கலங்களில் எண்ணெயும் எடுத்துச் சென்றனர். மணமகன் வரக் காலந் தாழ்த்தவே அனைவரும் தூக்க மயக்கத்தால் உறங்கிவிட்டனர்.

நள்ளிரவில், ‘இதோ மணமகன் வருகிறார். அவரை எதிர்கொள்ள வாருங்கள்’ என்ற உரத்த குரல் ஒலித்தது. மணமகளின் தோழியர் எல்லாரும் எழுந்து தங்கள் விளக்குகளை ஒழுங்குபடுத்தினர். அப்போது அறிவிலிகள் முன்மதியுடையோரைப் பார்த்து, ‘எங்கள் விளக்குகள் அணைந்து கொண்டிருக்கின்றன; உங்கள் எண்ணெயில் எங்களுக்கும் கொடுங்கள்’ என்றார்கள். முன்மதியுடையவர்கள் மறுமொழியாக, ‘உங்களுக்கும் எங்களுக்கும் எண்ணெய் போதுமான அளவு இராமல் போகலாம். எனவே, வணிகரிடம் போய் நீங்களே வாங்கிக் கொள்வதுதான் நல்லது’ என்றார்கள்.

அவர்களும் வாங்கப் புறப்பட்டுச் சென்றார்கள். அப்போது மணமகன் வந்துவிட்டார். ஆயத்தமாய் இருந்தவர்கள் அவரோடு திருமண மண்டபத்துக்குள் புகுந்தார்கள். கதவும் அடைக்கப்பட்டது. பிறகு மற்றத் தோழிகளும் வந்து, ‘ஐயா, ஐயா, எங்களுக்குக் கதவைத் திறந்துவிடும்’ என்றார்கள். அவர் மறுமொழியாக, ‘உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; எனக்கு உங்களைத் தெரியாது’ என்றார். எனவே விழிப்பாய் இருங்கள்; ஏனெனில் அவர் வரும் நாளோ, வேளையோ உங்களுக்குத் தெரியாது.”

ஆண்டவரின் அருள்வாக்கு

நவம்பர் 8 : இரண்டாம் வாசகம்இயேசுவோடு இணைந்த நிலையில் இறந்தோரைக் கடவுள் அவருடன் அழைத்து வருவார்.திருத்தூதர் பவுல் தெசலோனிக்கருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 4: 13-18

நவம்பர் 8 :  இரண்டாம் வாசகம்

இயேசுவோடு இணைந்த நிலையில் இறந்தோரைக் கடவுள் அவருடன் அழைத்து வருவார்.

திருத்தூதர் பவுல் தெசலோனிக்கருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 4: 13-18
சகோதரர் சகோதரிகளே, இறந்தோரைப் பற்றி நீங்கள் அறிந்திருக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்; எதிர்நோக்கு இல்லாத மற்றவர்களைப் போல் நீங்களும் துயருறக் கூடாது. இயேசு இறந்து உயிர்த்தெழுந்தார் என நாம் நம்புகிறோம். அப்படியானால், இயேசுவோடு இணைந்த நிலையில் இறந்தோரைக் கடவுள் அவருடன் அழைத்து வருவார். ஆண்டவருடைய வார்த்தையின் அடிப்படையில் நாங்கள் உங்களுக்குக் கூறுவது இதுவே: ஆண்டவர் வரும்வரை உயிரோடு எஞ்சியிருக்கும் நாம், இறந்தோரை முந்திவிட மாட்டோம்.

கட்டளை பிறக்க, தலைமை வானதூதரின் குரல் ஒலிக்க, கடவுளுடைய எக்காளம் முழங்க, ஆண்டவர் வானினின்று இறங்கி வருவார்; அப்பொழுது, கிறிஸ்து மீது நம்பிக்கை கொண்ட நிலையில் இறந்தவர்கள் முதலில் உயிர்த்தெழுவர். பின்னர் உயிரோடு எஞ்சியிருக்கும் நாம், அவர்களோடு மேகங்களில் எடுத்துக்கொண்டுபோகப்பட்டு, வான் வெளியில் ஆண்டவரை எதிர்கொள்ளச் செல்வோம். இவ்வாறு எப்போதும் நாம் ஆண்டவரோடு இருப்போம். எனவே, இவ்வார்த்தைகளைச் சொல்லி ஒருவரை ஒருவர் தேற்றிக்கொள்ளுங்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மத் 24: 42a, 44

அல்லேலூயா, அல்லேலூயா! விழிப்பாய் இருங்கள்; ஆயத்தமாய் இருங்கள். ஏனெனில் நீங்கள் நினையாத நேரத்தில் மானிடமகன் வருவார். அல்லேலூயா.

நவம்பர் 8 : பதிலுரைப் பாடல்திபா 63: 1. 2-3. 4-5. 6-7 . (பல்லவி: 1b)பல்லவி: என் இறைவா! என் உயிர் உம்மீது தாகம் கொண்டுள்ளது.

நவம்பர் 8 :  பதிலுரைப் பாடல்

திபா 63: 1. 2-3. 4-5. 6-7 . (பல்லவி: 1b)

பல்லவி: என் இறைவா! என் உயிர் உம்மீது தாகம் கொண்டுள்ளது.
1.கடவுளே! நீரே என் இறைவன்! உம்மையே நான் நாடுகின்றேன்; என் உயிர் உம்மீது தாகம் கொண்டுள்ளது; நீரின்றி வறண்ட தரிசு நிலம் போல என் உடல் உமக்காக ஏங்குகின்றது. - பல்லவி

2.உம் ஆற்றலையும் மாட்சியையும் காண விழைந்து உம் தூயகம் வந்து உம்மை நோக்குகின்றேன்.
3.ஏனெனில், உமது பேரன்பு உயிரினும் மேலானது; என் இதழ்கள் உம்மைப் புகழ்கின்றன. - பல்லவி

4.என் வாழ்க்கை முழுவதும் இவ்வண்ணமே உம்மைப் போற்றுவேன்; கைகூப்பி உமது பெயரை ஏத்துவேன்.
5.அறுசுவை விருந்தில் நிறைவடைவதுபோல என் உயிர் நிறைவடையும்; என் வாய் மகிழ்ச்சிமிகு இதழ்களால் உம்மைப் போற்றும். - பல்லவி

6.நான் படுத்திருக்கையில் உம்மை நினைப்பேன்; இரா விழிப்புகளில் உம்மைப் பற்றியே ஆழ்ந்து சிந்திப்பேன்.
7.ஏனெனில், நீர் எனக்குத் துணையாய் இருந்தீர்; உம் இறக்கைகளின் நிழலில் மகிழ்ந்து பாடுகின்றேன். - பல்லவி

நவம்பர் 8 : முதல் வாசகம்ஞானத்தைத் தேடுவோர், அதைக் கண்டடைவர்.சாலமோனின் ஞான நூலிலிருந்து வாசகம் 6: 12-16

நவம்பர் 8 : முதல் வாசகம்

ஞானத்தைத் தேடுவோர், அதைக் கண்டடைவர்.

சாலமோனின் ஞான நூலிலிருந்து வாசகம் 6: 12-16
ஞானம் ஒளிமிக்கது; மங்காதது. அதன்பால் அன்புகூர்வோர் அதை எளிதில் கண்டுகொள்வர்; அதைத் தேடுவோர் கண்டடைவர். தன்னை நாடுவோர்க்கு அது தன்னையே விரைந்து வெளிப்படுத்தும்.

வைகறையில் அதைத் தேடுவோர் தளர்ச்சி அடைய மாட்டார்கள்; ஏனெனில் தம் கதவு அருகில் அது அமர்ந்திருப்பதை அவர்கள் காண்பார்கள். அதன்மீது மனத்தைச் செலுத்துவதே ஞானத்தின் நிறைவு. அதன் பொருட்டு விழிப்பாய் இருப்போர், கவலையிலிருந்து விரைவில் விடுபடுவர்.

தனக்குத் தகுதியுள்ளவர்களை ஞானம் தேடிச் செல்கிறது; அவர்களுடைய வழியில் கனிவுடன் தன்னையே காட்டுகிறது; அவர்களின் ஒவ்வொரு நினைவிலும் அது அவர்களை எதிர்கொள்கிறது.

ஆண்டவரின் அருள்வாக்கு.