Search This Blog

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

Sunday, September 20, 2020

September 21st : Gospel It is not the healthy who need the doctor, but the sick.A Reading from the Holy Gospel according to St.Matthew 9:9-13

September 21st : Gospel 

It is not the healthy who need the doctor, but the sick.

A Reading from the Holy Gospel according to St.Matthew 9:9-13 
As Jesus was walking on, he saw a man named Matthew sitting by the customs house, and he said to him, ‘Follow me.’ And he got up and followed him.
  While he was at dinner in the house it happened that a number of tax collectors and sinners came to sit at the table with Jesus and his disciples. When the Pharisees saw this, they said to his disciples, ‘Why does your master eat with tax collectors and sinners?’ When he heard this he replied, ‘It is not the healthy who need the doctor, but the sick. Go and learn the meaning of the words: What I want is mercy, not sacrifice. And indeed I did not come to call the virtuous, but sinners.’

The Gospel of the Lord.

September 21st : Responsorial PsalmPsalm 18(19):2-5 Their word goes forth through all the earth.

September 21st :  Responsorial Psalm

Psalm 18(19):2-5 

Their word goes forth through all the earth.
The heavens proclaim the glory of God,
  and the firmament shows forth the work of his hands.
Day unto day takes up the story
  and night unto night makes known the message.

Their word goes forth through all the earth.

No speech, no word, no voice is heard
  yet their span extends through all the earth,
  their words to the utmost bounds of the world.

Their word goes forth through all the earth.

Gospel Acclamation cf.Te Deum

Alleluia, alleluia!
We praise you, O God,
we acknowledge you to be the Lord.
The glorious company of the apostles praise you, O Lord.
Alleluia!

September 21st : First ReadingWe are all to come to unity, fully mature in the knowledge of the Son of God.A Reading from the Letter of St.Paul to the Ephesians 4:1-7,11-13.

September 21st : First Reading

We are all to come to unity, fully mature in the knowledge of the Son of God.

A Reading from the Letter of St.Paul to the Ephesians 4:1-7,11-13. 
I, the prisoner in the Lord, implore you to lead a life worthy of your vocation. Bear with one another charitably, in complete selflessness, gentleness and patience. Do all you can to preserve the unity of the Spirit by the peace that binds you together. There is one Body, one Spirit, just as you were all called into one and the same hope when you were called. There is one Lord, one faith, one baptism, and one God who is Father of all, over all, through all and within all.
  Each one of us, however, has been given his own share of grace, given as Christ allotted it. To some, his gift was that they should be apostles; to some, prophets; to some, evangelists; to some, pastors and teachers; so that the saints together make a unity in the work of service, building up the body of Christ. In this way we are all to come to unity in our faith and in our knowledge of the Son of God, until we become the perfect Man, fully mature with the fullness of Christ himself.

The Word of the Lord.

செப்டம்பர் 21 : நற்செய்தி வாசகம்இயேசு ``என்னைப் பின்பற்றி வா'' என்றார். மத்தேயுவும் எழுந்து இயேசுவைப் பின்பற்றிச் சென்றார்.மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 9-13

செப்டம்பர் 21 : நற்செய்தி வாசகம்

இயேசு ``என்னைப் பின்பற்றி வா'' என்றார். மத்தேயுவும் எழுந்து இயேசுவைப் பின்பற்றிச் சென்றார்.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 9-13
அக்காலத்தில்

மத்தேயு என்பவர் சுங்கச்சாவடியில் அமர்ந்திருந்ததை இயேசு கண்டார்; அவரிடம், “என்னைப் பின்பற்றி வா” என்றார். அவரும் எழுந்து இயேசுவைப் பின்பற்றிச் சென்றார். பின்பு அவருடைய வீட்டில் பந்தியில் அமர்ந்திருந்த போது வரிதண்டுபவர்கள், பாவிகள் ஆகிய பலர் வந்து இயேசுவோடும் அவருடைய சீடரோடும் விருந்துண்டனர்.

இதைக் கண்ட பரிசேயர் அவருடைய சீடரிடம், “உங்கள் போதகர் வரி தண்டுபவர்களோடும் பாவிகளோடும் சேர்ந்து உண்பது ஏன்?” என்று கேட்டனர். இயேசு இதைக் கேட்டவுடன், “நோயற்றவர்க்கு அல்ல, நோயுற்றவர்க்கே மருத்துவர் தேவை. ‘பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்’ என்பதன் கருத்தை நீங்கள் போய்க் கற்றுக்கொள்ளுங்கள்; ஏனெனில் நேர்மையாளரை அல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

செப்டம்பர் 21 : பதிலுரைப் பாடல்திபா 19: 1-2. 3-4 . (பல்லவி: 4a)பல்லவி: படைப்புகளின் அறிக்கை உலகெங்கும் சென்றடைகின்றது.

செப்டம்பர் 21 : பதிலுரைப் பாடல்

திபா 19: 1-2. 3-4 . (பல்லவி: 4a)

பல்லவி: படைப்புகளின் அறிக்கை உலகெங்கும் சென்றடைகின்றது.
1.வானங்கள் இறைவனின் மாட்சிமையை வெளிப்படுத்துகின்றன; வான்வெளி அவர்தம் கைகளின் வேலைப்பாட்டை விவரிக்கின்றது.
2.ஒவ்வொரு பகலும் அடுத்த பகலுக்கு அச்செய்தியை அறிவிக்கின்றது; ஒவ்வோர் இரவும் அடுத்த இரவுக்கு அதைப்பற்றிய அறிவை வழங்குகின்றது. - பல்லவி

3.அவற்றுக்குச் சொல்லுமில்லை, பேச்சுமில்லை; அவற்றின் குரல் செவியில் படுவதுமில்லை.
4.ஆயினும், அவற்றின் அறிக்கை உலகெங்கும் சென்றடைகின்றது; அவை கூறும் செய்தி உலகின் கடையெல்லை வரை எட்டுகின்றது, இறைவன் அங்கே கதிரவனுக்கு ஒரு கூடாரம் அமைத்துள்ளார். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! இறைவா, உம்மை வாழ்த்துகிறோம், ஆண்டவர் நீரெனப் போற்றுகிறோம். திருத்தூதர்களின் அருளணியும் ஆண்டவரே, உம்மைப் போற்றிடுமே. அல்லேலூயா.

முதல் வாசகம்இறைமக்களை ஆயத்தப்படுத்தவும் தம் மறையுடலைக் கட்டியெழுப்பவுமே கிறிஸ்து எங்களை ஏற்படுத்தினார்.திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 4: 1-7, 11-13

செப்டம்பர் 21 : புனித மத்தேயு - திருத்தூதர், நற்செய்தியாளர் விழா

முதல் வாசகம்

இறைமக்களை ஆயத்தப்படுத்தவும் தம் மறையுடலைக் கட்டியெழுப்பவுமே கிறிஸ்து எங்களை ஏற்படுத்தினார்.

திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 4: 1-7, 11-13
சகோதரர் சகோதரிகளே,

ஆண்டவர் பொருட்டுக் கைதியாக இருக்கும் நான் உங்களைக் கெஞ்சிக் கேட்கிறேன்; நீங்கள் பெற்றுக்கொண்ட அழைப்புக்கு ஏற்ப வாழுங்கள். முழு மனத்தாழ்மையோடும் கனிவோடும் பொறுமையோடும் ஒருவரையொருவர் அன்புடன் தாங்கி, அமைதியுடன் இணைந்து வாழ்ந்து, தூய ஆவி அருளும் ஒருமைப்பாட்டைக் காத்துக்கொள்ள முழு முயற்சி செய்யுங்கள்.

நீங்கள் ஒரே எதிர்நோக்கு கொண்டு வாழ அழைக்கப்பட்டிருக்கிறீர்கள். ஒரே எதிர்நோக்கு இருப்பதுபோல, உடலும் ஒன்றே; தூய ஆவியும் ஒன்றே. அவ்வாறே ஆண்டவர் ஒருவரே; நாம் கொண்டுள்ள நம்பிக்கை ஒன்றே; திருமுழுக்கு ஒன்றே. எல்லாருக்கும் கடவுளும் தந்தையுமானவர் ஒருவரே; அவர் எல்லாருக்கும் மேலானவர்; எல்லார் மூலமாகவும் செயலாற்றுபவர்; எல்லாருக்குள்ளும் இருப்பவர்.

கிறிஸ்து கொடுக்க விரும்பும் அளவுக்கேற்ப நம் ஒவ்வொருவருக்கும் அருள் அளிக்கப்பட்டுள்ளது. அவரே சிலரைத் திருத்தூதராகவும், சிலரை இறைவாக்கினராகவும், வேறு சிலரை நற்செய்தியாளர்களாகவும், ஆயர்களாகவும், போதகர்களாகவும் ஏற்படுத்தினார். திருத்தொண்டாற்ற இறைமக்களை ஆயத்தப்படுத்தவும், கிறிஸ்துவின் உடலைக் கட்டி எழுப்பவும் இவர்களை அவர் ஏற்படுத்தினார். அதனால் நாம் எல்லாரும் இறைமகனைப் பற்றிய அறிவிலும் நம்பிக்கையிலும் ஒருமைப்பாட்டை அடைவோம். கிறிஸ்துவிடம் காணப்பட்ட நிறைவைப் பெறுமளவுக்கு நாம் முதிர்ச்சி அடைவோம்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

(செப்டம்பர் 21)பொதுக்காலம் இருபத்து ஐந்தாம் வாரம் திங்கட்கிழமை