Search This Blog

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

Saturday, December 12, 2020

GOSPEL*```Someone you do not know stands among you.```*🕯A reading from the Holy Gospel according to John (1:6-8, 19-28)*

*📖GOSPEL*

```Someone you do not know stands among you.```

*🕯A reading from the Holy Gospel according to John (1:6-8, 19-28)*
There was a man sent from God, whose name was John. He came as a witness,
to bear witness about the light, that all might believe through him. He was 
not the light, but came to bear witness about the light. And this is the 
testimony of John, when the Jews sent priests and Levites from Jerusalem to 
ask him, “Who are you?” He confessed, and did not deny, but confessed, “I am 
not the Christ.” And they asked him, “What then? Are you Elijah?” He said, “I 
am not.” “Are you the Prophet?” And he answered, “No.” So they said to him, 
“Who are you? We need to give an answer to those who sent us. What do you 
say about yourself?” He said, “I am the voice of one crying out in the 
wilderness, ‘Make straight the way of the Lord,’ as the prophet Isaiah said.” 
(Now they had been sent from the Pharisees.) They asked him, “Then why 
are you baptizing, if you are neither the Christ, nor Elijah, nor the Prophet?” 
John answered them, “I baptize with water, but among you stands one you 
do not know, even he who comes after me, the strap of whose sandal I am 
not worthy to untie.” These things took place in Bethany across the Jordan, 
where John was baptizing. 

*The Gospel of the Lord.* 

I believe in God, /...

SECOND READING*_Brethren, rejoice always, pray without ceasing,_*A reading from the First Letter of Saint Paul to the Thessalonians (5:16-24)*

*🍁SECOND READING*

_Brethren, rejoice always, pray without ceasing,_

*A reading from the First Letter of Saint Paul to the Thessalonians 
(5:16-24)*
Brethren, rejoice always, pray without ceasing, give thanks in all 
circumstances; for this is the will of God in Christ Jesus for you. Do not 
quench the Spirit. Do not despise prophecies, but test everything; hold fast 
what is good. Abstain from every form of evil. Now may the God of peace
himself sanctify you completely, and may your whole spirit and soul and 
body be kept blameless at the coming of our Lord Jesus Christ. He who calls 
you is faithful; he will surely do it. 

*The Word of the Lord*
_____ 

*🌿Before the gospel*
  
```Alleluia. Alleluia. The Spirit of the Lord is upon me, because he has anointed 
me to proclaim good news to the poor. Alleluia.```

*🌿𝗥𝗘𝗦𝗣𝗢𝗡𝗦𝗢𝗥𝗜𝗔𝗟*Psalm, Luke 1 *Response: My soul shall exult in my God

*🌿𝗥𝗘𝗦𝗣𝗢𝗡𝗦𝗢𝗥𝗜𝗔𝗟*

Psalm, Luke 1 

*Response: My soul shall exult in my God.*
1. My soul magnifies the Lord, and my spirit rejoices in God my Saviour, for 
he has regarded the low estate of his handmaiden. For behold henceforth all 
generations will call me blessed. R/
2. For he who is mighty has done great things for me, and holy is his name. 
And his mercy is on those who fear him from generation to generation. R/
3. He has filled the hungry with good things, and the rich he has sent empty 
away. He has helped his servant Israel, in remembrance of his mercy. R/

FIRST READING*_🌿The Spirit of the LORD God is upon me,_*A reading from the Prophet Isaiah (61:1-2a, 10-11)*

_🍁3RD SUNDAY OF ADVENT 
Daily Reading for Sunday December 13, 2020_

*FIRST READING*

_🌿The Spirit of the LORD God is upon me,_

*A reading from the Prophet Isaiah (61:1-2a, 10-11)*
The Spirit of the LORD God is upon me, because the LORD has anointed  me to bring good news to the poor; he has sent me to bind up the broken 
hearted, to proclaim liberty to the captives, and the opening of the prison to those who are bound; to proclaim the year of the LORD’s favour, I will 
greatly rejoice in the LORD; my soul shall exult in my God, for he has clothed me with the garments of salvation; he has covered me with the 
robe of righteousness, as a bridegroom decks himself like a priest with a beautiful headdress, and as a bride adorns herself with her jewels. For as the earth brings forth its sprouts, and as a garden causes what is sown in 
it to sprout up, so the Lord GOD will cause righteousness and praise to sprout up before all the nations

*The Word of the Lord.*

நற்செய்தி வாசகம்* _நீங்கள் அறியாத ஒருவர் உங்களிடையே நிற்கிறார்._ *🕯️யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 6-8, 19-28*

*🍃நற்செய்தி வாசகம்* 

_நீங்கள் அறியாத ஒருவர் உங்களிடையே நிற்கிறார்._ 

*🕯️யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 6-8, 19-28* 
கடவுள் அனுப்பிய ஒருவர் இருந்தார்; அவர் பெயர் யோவான். அவர் சான்று பகருமாறு வந்தார். அனைவரும் தம் வழியாக நம்புமாறு அவர் ஒளியைக் குறித்துச் சான்று பகர்ந்தார். அவர் அந்த ஒளி அல்ல; மாறாக, ஒளியைக் குறித்துச் சான்று பகர வந்தவர். 

எருசலேமிலுள்ள யூதர்கள் குருக்களையும் லேவியர்களையும் யோவானிடம் அனுப்பி, “நீர் யார்?” என்று கேட்டபோது அவர், “நான் மெசியா அல்ல” என்று அறிவித்தார். இதை அவர் வெளிப்படையாகக் கூறி, மறுக்காமல் ஒப்புக்கொண்டார். அப்போது, “அப்படியானால் நீர் யார்? நீர் எலியாவா?” என்று அவர்கள் கேட்க, அவர், “நானல்ல” என்றார். “நீர் தாம் வரவேண்டிய இறைவாக்கினரா?” என்று கேட்டபோதும், அவர், “இல்லை” என்று மறுமொழி கூறினார். அவர்கள் அவரிடம், “நீர் யார்? எங்களை அனுப்பியவர்களிடம் நாங்கள் மறுமொழி சொல்லியாக வேண்டும்; எனவே உம்மைப்பற்றி என்ன சொல்கிறீர்?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், “‘ஆண்டவருக்காக வழியைச் செம்மையாக்குங்கள் எனப் பாலைநிலத்தில் குரல் ஒன்று கேட்கிறது’ என்று இறைவாக்கினர் எசாயா உரைத்தது என்னைப் பற்றியே” என்றார். 

பரிசேயரால் அனுப்பப்பட்ட அவர்கள் அவரிடம், “நீர் மெசியாவோ எலியாவோ வரவேண்டிய இறைவாக்கினரோ அல்லவென்றால் ஏன் திருமுழுக்குக் கொடுக்கிறீர்?” என்று கேட்டார்கள். யோவான் அவர்களிடம், “நான் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுக்கிறேன். நீங்கள் அறியாத ஒருவர் உங்களிடையே நிற்கிறார்; அவர் எனக்குப்பின் வருபவர்; அவருடைய மிதியடி வாரை அவிழ்க்கக்கூட எனக்குத் தகுதியில்லை” என்றார். இவை யாவும் யோர்தான் ஆற்றுக்கு அக்கரையிலுள்ள பெத்தானியாவில் நிகழ்ந்தன. அங்குதான் யோவான் திருமுழுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தார். 

*ஆண்டவரின் அருள்வாக்கு.*

இரண்டாம் வாசகம்* ```எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருங்கள். இடைவிடாது இறைவனிடம் வேண்டுங்கள்.```*திருத்தூதர் பவுல் தெசலோனிக்கருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 5: 16-24*

*🍁இரண்டாம் வாசகம்* 

```எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருங்கள். இடைவிடாது இறைவனிடம் வேண்டுங்கள்.```

*திருத்தூதர் பவுல் தெசலோனிக்கருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 5: 16-24* 
சகோதரர் சகோதரிகளே, 

எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருங்கள். இடைவிடாது இறைவனிடம் வேண்டுங்கள். எல்லாச் சூழ்நிலையிலும் நன்றி கூறுங்கள். உங்களுக்காகக் கிறிஸ்து இயேசு வழியாய்க் கடவுள் வெளிப்படுத்திய திருவுளம் இதுவே. 

தூய ஆவியின் செயல்பாட்டைத் தடுக்க வேண்டாம். இறைவாக்குகளைப் புறக்கணிக்க வேண்டாம். அனைத்தையும் சீர்தூக்கிப் பாருங்கள். நல்லதைப் பற்றிக்கொள்ளுங்கள். எல்லா வகையான தீமைகளையும் விட்டு விலகுங்கள். 

அமைதி அருளும் கடவுள்தாமே உங்களை முற்றிலும் தூய்மையாக்குவாராக. அவரே நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வரும்போது உங்களுடைய உள்ளம், ஆன்மா, உடல் அனைத்தையும் குற்றமின்றி முழுமையாகக் காப்பாராக! உங்களை அழைக்கும் அவர் நம்பிக்கைக்குரியவர். அவர் இதைச் செய்வார். 

*ஆண்டவரின் அருள்வாக்கு.*
______

*நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி* 

*எசா 61: 1ac* 

_அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவராகிய என் தலைவரின் ஆவி என்மேல் உள்ளது; ஒடுக்கப்பட்டோருக்கு நற்செய்தி அறிவிக்க என்னை அனுப்பியுள்ளார். அல்லேலூயா._

பதிலுரைப் பாடல்* *லூக் 1: 47-48. 49-50. 53-54 . (பல்லவி: எசா 61: 10b)* _பல்லவி: என் கடவுளில் என் உள்ளம் பூரிப்படையும்._

*🌿பதிலுரைப் பாடல்* 

*லூக் 1: 47-48. 49-50. 53-54 . (பல்லவி: எசா 61: 10b)* 

_பல்லவி: என் கடவுளில் என் உள்ளம் பூரிப்படையும்._ 
47 ஆண்டவரை எனது உள்ளம் போற்றிப் பெருமைப்படுத்துகின்றது. என் மீட்பராம் கடவுளை நினைத்து எனது மனம் பேருவகை கொள்கின்றது. 48 ஏனெனில் அவர் தம் அடிமையின் தாழ்நிலையைக் கண்ணோக்கினார். இதுமுதல் எல்லாத் தலைமுறையினரும் என்னைப் பேறுபெற்றவர் என்பர். - பல்லவி 

49 ஏனெனில் வல்லவராம் கடவுள் எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார். தூயவர் என்பதே அவரது பெயர். 50 அவருக்கு அஞ்சி நடப்போருக்குத் தலைமுறை தலைமுறையாய் அவர் இரக்கம் காட்டி வருகிறார். - பல்லவி 

53 பசித்தோரை நலன்களால் நிரப்பியுள்ளார்; செல்வரை வெறுங்கையராய் அனுப்பிவிடுகிறார். 54 மூதாதையருக்கு உரைத்தபடியே அவர் ஆபிரகாமையும் அவர்தம் வழி மரபினரையும் என்றென்றும் இரக்கத்தோடு நினைவில் கொண்டுள்ளார்; தம் ஊழியராகிய இஸ்ரயேலுக்குத் துணையாக இருந்து வருகிறார். - பல்லவி

முதல் வாசகம்* ஆண்டவராகிய என் தலைவரின் ஆவி என்மேல் உளது; *இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 61: 1-2a, 10-11*

*🍃திருவருகைக்காலம் 3ஆம் வாரம் – ஞாயிறு 13/12/2020* 

*முதல் வாசகம்* 

ஆண்டவராகிய என் தலைவரின் ஆவி என்மேல் உளது; 

*இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 61: 1-2a, 10-11* 
ஆண்டவராகிய என் தலைவரின் ஆவி என்மேல் உளது; ஏனெனில், அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார்; ஒடுக்கப்பட்டோருக்கு நற்செய்தியை அறிவிக்கவும், உள்ளம் உடைந்தோரைக் குணப்படுத்தவும், சிறைப்பட்டோருக்கு விடுதலையைப் பறைசாற்றவும், கட்டுண்டோருக்கு விடிவைத் தெரிவிக்கவும், ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை முழங்கவும் என்னை அனுப்பியுள்ளார். 

ஆண்டவரில் நான் பெருமகிழ்ச்சி அடைவேன்; என் கடவுளில் என் உள்ளம் பூரிப்படையும்; மலர்மாலை அணிந்த மணமகன் போலும், நகைகளால் அழகுபடுத்தப்பட்ட மணமகள் போலும், விடுதலை என்னும் உடைகளை அவர் எனக்கு உடுத்தினார்; நேர்மை என்னும் ஆடையை எனக்கு அணிவித்தார். நிலம் முளைகளைத் துளிர்க்கச் செய்வது போன்றும், தோட்டம் விதைகளை முளைக்கச் செய்வது போன்றும், ஆண்டவராகிய என் தலைவர் பிற இனத்தார் பார்வையில் நேர்மையும் புகழ்ச்சியும் துளிர்த்தெழச் செய்வார். 

*ஆண்டவரின் அருள்வாக்கு.*