Search This Blog

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

Tuesday, December 21, 2021

டிசம்பர் 22 : நற்செய்தி வாசகம்வல்லவராம் கடவுள் எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார்.✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 46-56

டிசம்பர் 22 :  நற்செய்தி வாசகம்

வல்லவராம் கடவுள் எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார்.

✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 46-56
மரியா கூறியது: “ஆண்டவரை எனது உள்ளம் போற்றிப் பெருமைப்படுத்துகின்றது. என் மீட்பராம் கடவுளை நினைத்து எனது மனம் பேருவகை கொள்கின்றது. ஏனெனில் அவர் தம் அடிமையின் தாழ்நிலையைக் கண்ணோக்கினார். இதுமுதல் எல்லாத் தலைமுறையினரும் என்னைப் பேறுபெற்றவர் என்பர். ஏனெனில் வல்லவராம் கடவுள் எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார். தூயவர் என்பதே அவரது பெயர். அவருக்கு அஞ்சி நடப்போருக்குத் தலைமுறை தலைமுறையாய் அவர் இரக்கம் காட்டி வருகிறார். அவர் தம் தோள் வலிமையைக் காட்டியுள்ளார்; உள்ளத்தில் செருக்குடன் சிந்திப்போரைச் சிதறடித்து வருகிறார். வலியோரை அரியணையினின்று தூக்கி எறிந்துள்ளார்; தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார். பசித்தோரை நலன்களால் நிரப்பியுள்ளார்; செல்வரை வெறுங்கையராய் அனுப்பிவிடுகிறார். மூதாதையருக்கு உரைத்தபடியே அவர் ஆபிரகாமையும் அவர்தம் வழிமரபினரையும் என்றென்றும் இரக்கத்தோடு நினைவில் கொண்டுள்ளார்; தம் ஊழியராகிய இஸ்ரயேலுக்குத் துணையாக இருந்து வருகிறார்.”

மரியா ஏறக்குறைய மூன்று மாதம் எலிசபெத்தோடு தங்கியிருந்த பின்பு தம் வீடு திரும்பினார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

டிசம்பர் 22 : பதிலுரைப் பாடல்1 சாமு 2: 1. 4-5. 6-7. 8ab (பல்லவி: 1a)பல்லவி: என் மீட்பரான ஆண்டவரில் என் இதயம் மகிழ்கின்றது.

டிசம்பர் 22 :  பதிலுரைப் பாடல்

1 சாமு 2: 1. 4-5. 6-7. 8ab (பல்லவி: 1a)

பல்லவி: என் மீட்பரான ஆண்டவரில் என் இதயம் மகிழ்கின்றது.
1
ஆண்டவரை முன்னிட்டு என் இதயம் மகிழ்கின்றது! ஆண்டவரில் என் ஆற்றல் உயர்கின்றது! என் வாய் என் எதிரிகளைப் பழிக்கின்றது! ஏனெனில் நான் நீர் அளிக்கும் மீட்பில் களிப்படைகிறேன். - பல்லவி

4
வலியோரின் வில்கள் உடைபடுகின்றன! தடுமாறினோர் வலிமை பெறுகின்றனர்!
5
நிறைவுடன் வாழ்ந்தோர் கூலிக்கு உணவு பெறுகின்றனர்; பசியுடன் இருந்தோர் பசி தீர்ந்தார் ஆகியுள்ளனர்! மலடி எழுவரைப் பெற்றெடுத்துள்ளாள், பல புதல்வரைப் பெற்றவளோ, தனியள் ஆகின்றாள்! - பல்லவி

6
ஆண்டவர் கொல்கிறார்; உயிரும் தருகின்றார்; பாதாளத்தில் தள்ளுகின்றார்; உயர்த்துகின்றார்;
7
ஆண்டவர் ஏழையாக்குகின்றார்; செல்வராக்குகின்றார்; தாழ்த்துகின்றார்; மேன்மைப்படுத்துகின்றார்! - பல்லவி

8ab
புழுதியினின்று அவர் ஏழைகளை உயர்த்துகின்றார்! குப்பையினின்று வறியவரைத் தூக்கிவிடுகின்றார்! உயர் குடியினரோடு அவர்களை அமர்த்துகின்றார்! - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! 

மக்கள் அனைவர்க்கும் அரசரே, திருச்சபையின் மூலைக்கல்லே, மண்ணிலிருந்து நீர் உருவாக்கிய மனிதனை மீட்க வாரும். அல்லேலூயா.

டிசம்பர் 22 : முதல் வாசகம்சாமுவேலின் பிறப்புக்காக அவரது தாய் அன்னா நன்றி செலுத்துகிறார்.சாமுவேல் முதல் நூலிலிருந்து வாசகம் 1: 24-28

டிசம்பர் 22 : முதல் வாசகம்

சாமுவேலின் பிறப்புக்காக அவரது தாய் அன்னா நன்றி செலுத்துகிறார்.

சாமுவேல் முதல் நூலிலிருந்து வாசகம் 1: 24-28
அந்நாள்களில்

சாமுவேல் பால்குடி மறந்ததும், அன்னா அவனைத் தூக்கிக்கொண்டு மூன்று காளை, இருபது படி அளவுள்ள ஒரு மரக்கால் மாவு, ஒரு தோல் பை திராட்சை இரசம் ஆகியவற்றுடன் சீலோவிலிருந்து ஆண்டவரின் இல்லத்திற்கு வந்தார். அவன் இன்னும் சிறு பையனாகவே இருந்தான். அவர்கள் காளையைப் பலியிட்ட பின், பையனை ஏலியிடம் கொண்டு வந்தார்கள். பின் அவர் கூறியது: “என் தலைவரே! உம் மீது ஆணை! என் தலைவரே! உம்முன் நின்று ஆண்டவரிடம் வேண்டிக்கொண்டிருந்த பெண் நானே. இப்பையனுக்காகவே நான் வேண்டிக்கொண்டேன். நான் ஆண்டவரிடம் விண்ணப்பித்த என் வேண்டுகோளை அவர் கேட்டருளினார். ஆகவே நான் அவனை ஆண்டவருக்கு அர்ப்பணிக்கிறேன். அவன் தன் வாழ்நாள் அனைத்தும் ஆண்டவருக்கே அர்ப்பணிக்கப்பட்டவன்.” அங்கே அவர்கள் ஆண்டவரைத் தொழுதார்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

December 22nd : Gospel The Almighty has done great things for me.A Reading form the Holy Gospel according to St.Luke 1: 46-56

December 22nd : Gospel 

The Almighty has done great things for me.

A Reading form the Holy Gospel according to St.Luke 1: 46-56 
Mary said:

‘My soul proclaims the greatness of the Lord
and my spirit exults in God my saviour;
because he has looked upon his lowly handmaid.
Yes, from this day forward all generations will call me blessed,
for the Almighty has done great things for me.
Holy is his name,
and his mercy reaches from age to age for those who fear him.
He has shown the power of his arm,
he has routed the proud of heart.
He has pulled down princes from their thrones and exalted the lowly.
The hungry he has filled with good things, the rich sent empty away.
He has come to the help of Israel his servant, mindful of his mercy
– according to the promise he made to our ancestors –
of his mercy to Abraham and to his descendants for ever.’
Mary stayed with Elizabeth about three months and then went back home.

The Word of the Lord.

December 22nd : Responsorial Psalm1 Samuel 2: 1,4-8 My heart exults in the Lord my Saviour.

December 22nd :  Responsorial Psalm

1 Samuel 2: 1,4-8 

My heart exults in the Lord my Saviour.
My heart exults in the Lord.
  I find my strength in my God;
my mouth laughs at my enemies
  as I rejoice in your saving help.

My heart exults in the Lord my Saviour.

The bows of the mighty are broken,
  but the weak are clothed with strength.
Those with plenty must labour for bread,
  but the hungry need work no more.
The childless wife has children now
  but the fruitful wife bears no more.

My heart exults in the Lord my Saviour.

It is the Lord who gives life and death,
  he brings men to the grave and back;
it is the Lord who gives poverty and riches.
  He brings men low and raises them on high.

My heart exults in the Lord my Saviour.

He lifts up the lowly from the dust,
  from the dungheap he raises the poor
to set him in the company of princes
  to give him a glorious throne.
For the pillars of the earth are the Lord’s,
  on them he has set the world.

My heart exults in the Lord my Saviour.

Gospel Acclamation 

Alleluia, alleluia!
Root of Jesse,
set up as a sign to the peoples,
come to save us
and delay no more.
Alleluia!

December 22nd : First ReadingThis is the child I prayed for: he is made over to the Lord.1 Samuel 1: 24-28

December 22nd :     First Reading

This is the child I prayed for: he is made over to the Lord.

1 Samuel 1: 24-28 
When Hannah had weaned the infant Samuel, she took him up with her together with a three-year-old bull, an ephah of flour and a skin of wine, and she brought him to the temple of the Lord at Shiloh; and the child was with them. They slaughtered the bull and the child’s mother came to Eli. She said, ‘If you please, my lord. As you live, my lord, I am the woman who stood here beside you, praying to the Lord. This is the child I prayed for, and the Lord granted me what I asked him. Now I make him over to the Lord for the whole of his life. He is made over to the Lord.’
  There she left him, for the Lord.

The Word of the Lord.