Search This Blog

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

Sunday, October 4, 2020

October 5th : Gospel The good Samaritan.A Reading from the Holy Gospel according to St.Luke 10:25-37

October 5th :  Gospel 

The good Samaritan.

A Reading from the Holy Gospel according to St.Luke 10:25-37 
There was a lawyer who, to disconcert Jesus, stood up and said to him, ‘Master, what must I do to inherit eternal life?’ He said to him, ‘What is written in the Law? What do you read there?’ He replied, ‘You must love the Lord your God with all your heart, with all your soul, with all your strength, and with all your mind, and your neighbour as yourself.’ ‘You have answered right,’ said Jesus ‘do this and life is yours.’
  But the man was anxious to justify himself and said to Jesus, ‘And who is my neighbour?’ Jesus replied, ‘A man was once on his way down from Jerusalem to Jericho and fell into the hands of brigands; they took all he had, beat him and then made off, leaving him half dead. Now a priest happened to be travelling down the same road, but when he saw the man, he passed by on the other side. In the same way a Levite who came to the place saw him, and passed by on the other side. But a Samaritan traveller who came upon him was moved with compassion when he saw him. He went up and bandaged his wounds, pouring oil and wine on them. He then lifted him on to his own mount, carried him to the inn and looked after him. Next day, he took out two denarii and handed them to the innkeeper. “Look after him,” he said “and on my way back I will make good any extra expense you have.” Which of these three, do you think, proved himself a neighbour to the man who fell into the brigands‘ hands?’ ‘The one who took pity on him’ he replied. Jesus said to him, ‘Go, and do the same yourself.’

The Gospel of the Lord,.

October 5th : Responsorial PsalmPsalm 110(111):1-2,7-10 ©The Lord keeps his covenant ever in mind.orAlleluia!

October 5th :  Responsorial Psalm

Psalm 110(111):1-2,7-10 ©

The Lord keeps his covenant ever in mind.
or
Alleluia!
I will thank the Lord with all my heart
  in the meeting of the just and their assembly.
Great are the works of the Lord,
  to be pondered by all who love them.

The Lord keeps his covenant ever in mind.
or
Alleluia!

His works are justice and truth,
  his precepts are all of them sure,
standing firm for ever and ever;
  they are made in uprightness and truth.

The Lord keeps his covenant ever in mind.
or
Alleluia!

He has sent deliverance to his people
  and established his covenant for ever.
Holy his name, to be feared.
  His praise shall last for ever!

The Lord keeps his covenant ever in mind.
or
Alleluia!

Gospel Acclamation cf.Jn6:63,68

Alleluia, alleluia!
Your words are spirit, Lord, and they are life;
you have the message of eternal life.
Alleluia!

October 5th : First readingThe Good News I preached is not a human message but from Jesus ChristA Reading from the Letter of St.Paul to the Galatians 1:6-12

October 5th : First reading

The Good News I preached is not a human message but from Jesus Christ

A Reading from the Letter of St.Paul to the Galatians 1:6-12 
I am astonished at the promptness with which you have turned away from the one who called you and have decided to follow a different version of the Good News. Not that there can be more than one Good News; it is merely that some troublemakers among you want to change the Good News of Christ; and let me warn you that if anyone preaches a version of the Good News different from the one we have already preached to you, whether it be ourselves or an angel from heaven, he is to be condemned. I am only repeating what we told you before: if anyone preaches a version of the Good News different from the one you have already heard, he is to be condemned. So now whom am I trying to please – man, or God? Would you say it is men’s approval I am looking for? If I still wanted that, I should not be what I am – a servant of Christ.
  The fact is, brothers, and I want you to realise this, the Good News I preached is not a human message that I was given by men, it is something I learnt only through a revelation of Jesus Christ.

The Word of the Lord.

அக்டோபர் 5 : நற்செய்தி வாசகம்எனக்கு அடுத்திருப்பவர் யார்?லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 25-37

அக்டோபர்  5 :  நற்செய்தி வாசகம்

எனக்கு அடுத்திருப்பவர் யார்?

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 25-37
அக்காலத்தில்

திருச்சட்ட அறிஞர் ஒருவர் எழுந்து இயேசுவைச் சோதிக்கும் நோக்குடன், “போதகரே, நிலைவாழ்வை உரிமையாக்கிக்கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார்.

அதற்கு இயேசு, “திருச்சட்ட நூலில் என்ன எழுதியிருக்கிறது? அதில் நீர் என்ன வாசிக்கிறீர்?” என்று அவரிடம் கேட்டார். அவர் மறுமொழியாக, “ ‘உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு ஆற்றலோடும், முழு மனத்தோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்புகூர்வாயாக. உன்மீது நீ அன்புகூர்வதுபோல் உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்பு கூர்வாயாக’ என்று எழுதியுள்ளது” என்றார். இயேசு, “சரியாய்ச் சொன்னீர்; அப்படியே செய்யும்; அப்பொழுது வாழ்வீர்” என்றார்.

அவர், தம்மை நேர்மையாளர் எனக் காட்ட விரும்பி, “எனக்கு அடுத்திருப்பவர் யார்?” என்று இயேசுவிடம் கேட்டார்.

அதற்கு அவர் மறுமொழியாகக் கூறிய உவமை: “ஒருவர் எருசலேமிலிருந்து எரிகோவுக்குப் போகும்போது கள்வர் கையில் அகப்பட்டார். அவருடைய ஆடைகளை அவர்கள் உரிந்துகொண்டு, அவரை அடித்துக் குற்றுயிராக விட்டுப் போனார்கள். குரு ஒருவர் தற்செயலாய் அவ்வழியே வந்தார். அவர் அவரைக் கண்டதும் மறுபக்கமாக விலகிச் சென்றார். அவ்வாறே லேவியர் ஒருவரும் அவ்விடத்துக்கு வந்து அவரைக் கண்டதும் மறுபக்கமாய் விலகிச் சென்றார்.

ஆனால் அவ்வழியே பயணம் செய்துகொண்டிருந்த சமாரியர் ஒருவர் அருகில் வந்து அவரைக் கண்டபோது அவர்மீது பரிவு கொண்டார். அவர் அவரை அணுகி, காயங்களில் திராட்சை மதுவும் எண்ணெயும் வார்த்து, அவற்றைக் கட்டி, தாம் பயணம் செய்த விலங்கின்மீது ஏற்றி, ஒரு சாவடிக்குக் கொண்டு போய் அவரைக் கவனித்துக்கொண்டார்.

மறுநாள் இரு தெனாரியத்தை எடுத்து, சாவடிப் பொறுப்பாளரிடம் கொடுத்து, ‘இவரைக் கவனித்துக்கொள்ளும்; இதற்கு மேல் செலவானால் நான் திரும்பி வரும்போது உமக்குத் தருவேன்” என்றார்.

“கள்வர் கையில் அகப்பட்டவருக்கு இம்மூவருள் எவர் அடுத்திருப்பவர் என உமக்குத் தோன்றுகிறது?” என்று இயேசு கேட்டார். அதற்குத் திருச்சட்ட அறிஞர், “அவருக்கு இரக்கம் காட்டியவரே” என்றார். இயேசு, “நீரும் போய் அப்படியே செய்யும்” என்று கூறினார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

அக்டோபர் 5 : பதிலுரைப் பாடல்திபா 111: 1-2. 7-8. 9,10c . (பல்லவி: 5b)பல்லவி: ஆண்டவர் தமது உடன்படிக்கையை என்றும் நினைவில் கொள்கின்றார். அல்லது: அல்லேலூயா.

அக்டோபர் 5 : பதிலுரைப் பாடல்

திபா 111: 1-2. 7-8. 9,10c . (பல்லவி: 5b)

பல்லவி: ஆண்டவர் தமது உடன்படிக்கையை என்றும் நினைவில் கொள்கின்றார். அல்லது: அல்லேலூயா.
1.நெஞ்சார ஆண்டவருக்கு நன்றி செலுத்துவேன்; நீதிமான்களின் மன்றத்திலும் சபையிலும் அவருக்கு நன்றி செலுத்துவேன்.
2.ஆண்டவரின் செயல்கள் உயர்ந்தவை; அவற்றில் இன்பம் காண்போர் அனைவரும் அவற்றை ஆய்ந்துணர்வர். - பல்லவி

7.அவர்தம் ஆற்றல்மிகு செயல்கள் நம்பிக்கைக்குரியவை; நீதியானவை; அவர்தம் கட்டளைகள் அனைத்தும் நிலையானவை.
8.என்றென்றும் எக்காலமும் அவை நிலைமாறாதவை; உண்மையாலும் நீதியாலும் அவை உருவானவை. - பல்லவி

9.தம் மக்களுக்கு அவர் மீட்பை அளித்தார்; தம் உடன்படிக்கை என்றென்றும் நிலைக்குமாறு செய்தார்; அவரது திருப்பெயர் தூயது; அஞ்சுதற்கு உரியது.
10c.அவரது புகழ் என்றென்றும் நிலைத்துள்ளது. - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 13: 34

அல்லேலூயா, அல்லேலூயா! புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

அக்டோபர் 5 : முதல் வாசகம்இயேசு கிறிஸ்து அருளிய வெளிப்பாட்டின் வாயிலாக நற்செய்தி எனக்குக் கிடைத்தது.திருத்தூதர் பவுல் கலாத்தியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1: 6-12

அக்டோபர் 5 : முதல் வாசகம்

இயேசு கிறிஸ்து அருளிய வெளிப்பாட்டின் வாயிலாக நற்செய்தி எனக்குக் கிடைத்தது.

திருத்தூதர் பவுல் கலாத்தியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1: 6-12
சகோதரர் சகோதரிகளே,

கிறிஸ்துவின் பொருட்டு அருள்கூர்ந்து உங்களை அழைத்த அவரை விட்டுவிட்டு இவ்வளவு குறுகிய காலத்தில் வேறு ஒரு நற்செய்தியை ஏற்றுக்கொண்டுவிட்டீர்களே! எனக்கே வியப்பாய் இருக்கிறது. வேறு ஒரு நற்செய்தி இருக்கிறது என்று நான் சொல்ல வரவில்லை. மாறாகச் சிலர் உங்கள் மனத்தைக் குழப்பிக் கிறிஸ்துவின் நற்செய்தியைத் திரித்துக் கூற விரும்புகின்றனர் என்பதுதான் உண்மை. நாங்கள் உங்களுக்கு அறிவித்த நற்செய்தியினின்று மாறுபட்ட ஒன்றை நாங்களோ, விண்ணிலிருந்து வந்த தூதரோ, யார் அறிவித்தாலும் அவர்கள் சபிக்கப்படுக! ஏற்கெனவே சொல்லியிருக்கிறோம்; இப்பொழுது மீண்டும் சொல்கிறேன்: நீங்கள் பெற்றுக்கொண்ட நற்செய்தியினின்று மாறுபட்ட ஒன்றை யாராவது உங்களுக்கு அறிவித்தால் அவர்கள் சபிக்கப்படுக! இப்படிப் பேசும்போது நான் நாடுவது மனிதருடைய நல்லெண்ணமா? கடவுளுடைய நல்லெண்ணமா? நான் மனிதருக்கு உகந்தவனாய் இருக்கவா பார்க்கிறேன்? நான் இன்னும் மனிதருக்கு உகந்தவனாய் இருக்கப் பார்த்தால் கிறிஸ்துவுக்குப் பணியாளனாய் இருக்க முடியாது.

சகோதரர் சகோதரிகளே, உங்களுக்கு ஒன்று தெரிவிக்க விரும்புகிறேன்: நான் உங்களுக்கு அறிவித்த நற்செய்தி மனிதரிடமிருந்து வந்ததல்ல. எந்த மனிதரிடமிருந்தும் நான் அதைப் பெற்றுக் கொள்ளவில்லை; எந்த மனிதரும் அதை எனக்குக் கற்றுக்கொடுக்கவில்லை. மாறாக இயேசு கிறிஸ்து அருளிய வெளிப்பாட்டின் வாயிலாக அது எனக்குக் கிடைத்தது.

ஆண்டவரின் அருள்வாக்கு.

அக்டோபர் 05. பொதுக்காலம் இருபத்து ஏழாம் வாரம் திங்கட்கிழமை