Search This Blog

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

Sunday, August 1, 2021

ஆகஸ்ட் 2 : நற்செய்தி வாசகம்இயேசு அப்பங்களைப் பிட்டுச் சீடர்களிடம் கொடுத்தார். சீடர்களும் மக்களுக்குக் கொடுத்தார்கள்.✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 13-21.

ஆகஸ்ட் 2 :  நற்செய்தி வாசகம்

இயேசு அப்பங்களைப் பிட்டுச் சீடர்களிடம் கொடுத்தார். சீடர்களும் மக்களுக்குக் கொடுத்தார்கள்.

✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 13-21.
அக்காலத்தில்

திருமுழுக்கு யோவான் கொலையுண்டதைக் கேள்வியுற்ற இயேசு அங்கிருந்து புறப்பட்டுப் படகிலேறிப் பாலை நிலத்திலுள்ள தனிமையான ஓர் இடத்திற்குச் சென்றார். இதைக் கேள்விப்பட்ட திரளான மக்கள் ஊர்களிலிருந்து கால்நடையாக அவரைப் பின்தொடர்ந்தனர். இயேசு அங்குச் சென்றபோது பெருந்திரளான மக்களைக் கண்டு அவர்கள்மீது பரிவு கொண்டார்; அவர்களிடையே உடல் நலமற்றிருந்தோரைக் குணமாக்கினார்.

மாலையானபோது, சீடர் அவரிடம் வந்து, “இவ்விடம் பாலைநிலம் ஆயிற்றே, நேரமும் ஆகிவிட்டது. ஊர்களுக்குச் சென்று தங்களுக்குத் தேவையான உணவு வாங்கிக்கொள்ள மக்கள் கூட்டத்தை அனுப்பிவிடும்” என்றனர். இயேசு அவர்களிடம், “அவர்கள் செல்ல வேண்டியதில்லை; நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்” என்றார். ஆனால் அவர்கள் அவரைப் பார்த்து, “எங்களிடம் இங்கே ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களும் தவிர வேறு எதுவும் இல்லை” என்றார்கள். அவர், “அவற்றை என்னிடம் இங்கே கொண்டு வாருங்கள்” என்றார்.

மக்களைப் புல் தரையில் அமருமாறு ஆணையிட்டார். அவர் அந்த ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் எடுத்து, வானத்தை அண்ணாந்து பார்த்து, கடவுளைப் போற்றி, அப்பங்களைப் பிட்டுச் சீடர்களிடம் கொடுத்தார். சீடர்களும் மக்களுக்குக் கொடுத்தார்கள்; அனைவரும் வயிறார உண்டனர். எஞ்சிய துண்டுகளைப் பன்னிரண்டு கூடைகள் நிறைய எடுத்தனர். பெண்களும் சிறு பிள்ளைகளும் நீங்கலாக உணவு உண்ட ஆண்களின் தொகை ஏறத்தாழ ஐயாயிரம்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

ஆகஸ்ட் 2 : பதிலுரைப் பாடல்திபா 81: 11-12. 13-14. 15-16 (பல்லவி: 1a)பல்லவி: நமது வலிமையாகிய கடவுளை மகிழ்ந்து பாடுங்கள்

ஆகஸ்ட்  2 :  பதிலுரைப் பாடல்

திபா 81: 11-12. 13-14. 15-16 (பல்லவி: 1a)

பல்லவி: நமது வலிமையாகிய கடவுளை மகிழ்ந்து பாடுங்கள்.
11
என் மக்கள் என் குரலுக்குச் செவிசாய்க்கவில்லை; இஸ்ரயேலர் எனக்குப் பணியவில்லை.
12
எனவே, அவர்கள் தங்கள் எண்ணங்களின்படியே நடக்குமாறு, அவர்களின் கடின இதயங்களிடமும் அவர்களை விட்டுவிட்டேன். - பல்லவி

13
என் மக்கள் எனக்குச் செவிசாய்த்திருந்தால், இஸ்ரயேலர் நான் காட்டிய வழியில் நடந்திருந்தால், எவ்வளவோ நலமாயிருந்திருக்கும்.
14
நான் விரைவில் அவர்கள் எதிரிகளை அடக்குவேன், என் கை அவர்களின் பகைவருக்கு எதிராகத் திரும்பும். - பல்லவி

15
ஆண்டவரை வெறுப்போர் அவர்முன் கூனிக்குறுகுவர்; அவர்களது தண்டனைக் காலம் என்றென்றுமாய் இருக்கும்.
16
ஆனால், உங்களுக்கு நயமான கோதுமையை உணவாகக் கொடுப்பேன்; உங்களுக்கு மலைத் தேனால் நிறைவளிப்பேன். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மத் 4: 4b

அல்லேலூயா, அல்லேலூயா! 

மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர். அல்லேலூயா.

ஆகஸ்ட் 2 : முதல் வாசகம்நான் தனியாக இம்மக்கள் அனைவரையும் கொண்டு செல்லவே முடியாது.எண்ணிக்கை நூலிலிருந்து வாசகம் 11: 4b-15.

ஆகஸ்ட்  2 :  முதல் வாசகம்

நான் தனியாக இம்மக்கள் அனைவரையும் கொண்டு செல்லவே முடியாது.

எண்ணிக்கை நூலிலிருந்து வாசகம் 11: 4b-15.
இஸ்ரயேல் மக்கள் மீண்டும் அழுது கூறியது: “நமக்கு உண்ண இறைச்சி யார் தருவார்? நாம் எகிப்தில் செலவின்றி உண்ட மீன், வெள்ளரிக் காய், கொம்மட்டிக் காய், கீரை, வெங்காயம், வெள்ளைப் பூண்டு ஆகியவற்றின் நினைவு வருகிறது. ஆனால் இப்பொழுதோ நம் வலிமை குன்றிப் போயிற்று; மன்னாவைத் தவிர வேறெதுவும் நம் கண்களில் படுவதில்லையே!”

மன்னா கொத்துமல்லி விதை போன்றும் அதன் தோற்றம் முத்துப் போன்றும் இருந்தது. மக்கள் வெளியில் சென்று அதைச் சேகரித்தனர்; அரவைக் கல்லில் அரைத்தனர் அல்லது உரலில் போட்டு இடித்தனர்; பானைகளில் அதை வேக வைத்து அதில் அப்பங்கள் செய்தனர்; அதன் சுவை எண்ணெயில் செய்த அப்பங்களின் சுவையை ஒத்திருந்தது. இரவில், பாளையத்தின்மேல் பனி விழும்போது மன்னாவும் அதனுடன் விழுந்தது.

எல்லா வீடுகளிலும் இருந்த மக்களும் தம்தம் கூடார வாயிலில் இருந்து அழும் குரலை மோசே கேட்டார்; ஆண்டவரின் சினம் கொழுந்து விட்டெரிந்தது; மோசேக்கும் அது பிடிக்கவில்லை. மோசே ஆண்டவரிடம் கூறியது: “உம் அடியானுக்கு ஏன் இந்தக் கேடு? நீர் எனக்குக் கருணை காட்டாமல் இம்மக்களின் எல்லாப் பளுவையும் என்மேல் சுமத்தியது ஏன்? இம்மக்களையெல்லாம் நானா கருத்தரித்தேன்? நானா இவர்களைப் பெற்றெடுத்தேன்? ‘பாலுண்ணும் குழந்தையை ஏந்திச் செல்பவள் போன்று இவர்களை மார்போடு ஏந்தி, அவர்கள் மூதாதையருக்கு நான் வாக்களித்திருந்த நாட்டுக்குக் கொண்டு செல்’ என்று நீர் சொல்வானேன்? இம்மக்கள் அனைவருக்கும் கொடுக்கவேண்டிய இறைச்சிக்கு நான் எங்கு போவேன்? அவர்கள் எனக்கு முன் அழுது, ‘உண்ண எங்களுக்கு இறைச்சி தாரும்’ என்றும் கேட்கிறார்களே! நான் தனியாக இம்மக்கள் அனைவரையும் கொண்டு செல்லவே முடியாது; இது எனக்கு மிகப்பெரும் பளு. இப்படியே எனக்குச் செய்வீரானால் உடனே என்னைக் கொன்றுவிடும்; உம் பார்வையில் எனக்குத் தயை கிடைத்தால் இந்தக் கொடுமையை நான் காணாதிருக்கட்டும்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

Gospel of Jesus Christ according to Saint Matthew 14 :13-21

GOSPEL 

“Looking up to heaven, he pronounced the blessing; he broke the loaves, gave them to the disciples, and the disciples gave them to the crowd ” 
Alleluia. Alleluia.
Man does not live by bread alone,
but by every word that comes out of the mouth of God.
Alleluia. (Mt 4,4b) 

Gospel of Jesus Christ according to Saint Matthew 14 :13-21 
At that time,
    when Jesus heard of the death of John the Baptist,
he withdrew and went in a boat
to a deserted place, out of the way.
The crowds heard about it
and, leaving their towns, they followed on foot.
    On disembarking, he saw a large crowd of people;
he was seized with compassion towards them and healed their sick. 

    When evening came,
the disciples approached him and said to him,
“The place is deserted and the hour is already late.
Send the crowd away:
let them go to the villages to buy food! "
    But Jesus said:
" They do not need to go.
Feed them yourselves. "
    So they said to him:
" We only have five loaves of bread and two fish there. "
    Jesus said,
" Bring them to me. "
    Then ordering the crowd to sit down on the grass,
he took the five loaves and the two fish,
and looking up to heaven,
he said the blessing;
he broke the loaves,
he gave them to the disciples,
and the disciples gave them to the crowd.
    They all ate and were satisfied.
They picked up the pieces that remained:
that made twelve full baskets.
    Those who had eaten were about five thousand,
not counting the women and children. 

  - Let us acclaim the Word of God.

MASS READINGS MONDAY, AUGUST 2, 2021 FIRST READING "I cannot carry all this people on my own" Reading the Book of Numbers 11 : 4b-15

MASS READINGS 

MONDAY, AUGUST 2, 2021 

FIRST READING 

"I cannot carry all this people on my own" 

Reading the Book of Numbers 11 : 4b-15 
In those days,
in the desert,
    the children of Israel began to cry again:
“Ah! who will give us meat to eat?
    We still remember the fish
we ate for nothing in Egypt,
and the cucumbers, melons, leeks,
onions and garlic!
    Now our throats are parched;
we never see anything but manna! "
    The manna was like coriander seeds,
it looked like amber.
    The people dispersed to collect it;
then it was crushed under the grindstone,
or it was crushed with a pestle;
finally, it was cooked in the pot
and made into pancakes.
It tasted like an oil treat.
    When the dew descended on the camp during the night,
the manna descended on it. 

    Moses heard the people weep,
grouped into clans, each at the entrance to his tent.
The Lord was inflamed with great anger.
This displeased Moses,
    and he said to the Lord,
“Why treat your servant so badly?
Why have I not found favor in your eyes
that you have placed the burden of all these people on me?
    Was it I who conceived all these people,
was it I who gave birth to them,
so that you would say to me:
“As one carries an infant,
carry this people in your arms
to the land that I have sworn to give to your fathers ”?
    Where can I find meat
to give to all these people,
when they come to cry next to me and say,
“Give us meat to eat”?
    I cannot carry all these people on my own:
it is too heavy for me.
    If this is how you treat me, then kill me;
yes, kill me, if I have found favor in your eyes.
May I not see my misfortune! " 

    - Word of the Lord. 


RESPONSORIAL Respons: Shout for joy for God, our strength! PSALM 80 (81), 12-13, 14-15, 16-17 (Ps 80, 2a)

RESPONSORIAL 

Respons: Shout for joy for God, our strength!  

PSALM 80 (81), 12-13, 14-15, 16-17 (Ps 80, 2a) 
“My people did not listen to my voice,
Israel did not want me.
I delivered him to his hardened heart: let
him go and follow his views! 

“Ah! If my people would listen to me,
Israel, if they would follow my paths!
Immediately I would humiliate his enemies,
against his oppressors I would turn my hand. 

“My adversaries would stoop before him;
such would be their fate forever!
I would feed him with the flower of wheat,
I would satisfy him with the honey of the rock! " 

__________