Search This Blog

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

Thursday, May 13, 2021

14 மே 2021, வெள்ளி, புனித மத்தியா - திருத்தூதர் விழா நற்செய்தி வாசகம் நீங்கள் என்னைத் தேர்ந்து கொள்ளவில்லை; நான்தான் உங்களைத் தேர்ந்துகொண்டேன். ✠ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 15: 9-17

14 மே 2021, வெள்ளி, புனித மத்தியா - திருத்தூதர் விழா 

நற்செய்தி வாசகம் 

நீங்கள் என்னைத் தேர்ந்து கொள்ளவில்லை; 
நான்தான் உங்களைத் தேர்ந்துகொண்டேன். 

✠ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 15: 9-17 

அக்காலத்தில் 
இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “என் தந்தை என்மீது அன்பு கொண்டுள்ளது போல நானும் உங்கள்மீது அன்பு கொண்டுள்ளேன். என் அன்பில் நிலைத்திருங்கள். நான் என் தந்தையின் கட்டளைகளைக் கடைப்பிடித்து அவரது அன்பில் நிலைத்திருப்பது போல நீங்களும் என் கட்டளைகளைக் கடைப்பிடித்தால் என் அன்பில் நிலைத்திருப்பீர்கள். என் மகிழ்ச்சி உங்களுள் இருக்கவும் உங்கள் மகிழ்ச்சி நிறைவு பெறவுமே இவற்றை உங்களிடம் சொன்னேன். 

நான் உங்களிடம் அன்பு கொண்டிருப்பது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்புகொண்டிருக்க வேண்டும் என்பதே என் கட்டளை. தம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதை விடச் சிறந்த அன்பு யாரிடமும் இல்லை. நான் கட்டளை இடுவதையெல்லாம் நீங்கள் செய்தால் நீங்கள் என் நண்பர்களாய் இருப்பீர்கள். 

இனி நான் உங்களைப் பணியாளர் என்று சொல்ல மாட்டேன். ஏனெனில் தம் தலைவர் செய்வது இன்னது என்று பணியாளருக்குத் தெரியாது. உங்களை நான் நண்பர்கள் என்றேன்; ஏனெனில் என் தந்தையிடமிருந்து நான் கேட்டவை அனைத்தையும் உங்களுக்கு அறிவித்தேன். 

நீங்கள் என்னைத் தேர்ந்து கொள்ளவில்லை; நான்தான் உங்களைத் தேர்ந்துகொண்டேன். நீங்கள் கனி தரவும், நீங்கள் தரும் கனி நிலைத்திருக்கவும் உங்களை ஏற்படுத்தினேன். ஆகவே நீங்கள் என் பெயரால் தந்தையிடம் கேட்பதையெல்லாம் அவர் உங்களுக்குக் கொடுப்பார். 

நீங்கள் ஒருவர் மற்றவரிடம் அன்புகொள்ள வேண்டும் என்பதே என் கட்டளை.” 

ஆண்டவரின் அருள்வாக்கு.

14 மே 2021, வெள்ளி, புனித மத்தியா - திருத்தூதர் விழா பதிலுரைப் பாடல் திபா 113: 1-2. 3-4. 5-6. 7-8 (பல்லவி: 8)

14 மே 2021, வெள்ளி, புனித மத்தியா - திருத்தூதர் விழா 

பதிலுரைப் பாடல் 

திபா 113: 1-2. 3-4. 5-6. 7-8 (பல்லவி: 8) 
பல்லவி: உயர்குடி மக்களிடையே அவர்களை அமரச் செய்கின்றார்! 
அல்லது: அல்லேலூயா. 

1.ஆண்டவரின் ஊழியர்களே, அவரைப் புகழுங்கள். அவரது பெயரைப் போற்றுங்கள். 

2.ஆண்டவரது பெயர் வாழ்த்தப் பெறுவதாக! இப்பொழுதும் எப்பொழுதும் வாழ்த்தப் பெறுவதாக! - பல்லவி 

3.கீழ்த்திசை முதல் மேற்றிசைவரை ஆண்டவரது பெயர் போற்றப்படுவதாக! 

4.மக்களினங்கள் அனைத்திற்கும் ஆண்டவர் மேலானவர்; வானங்களையும் விட உயர்ந்தது அவரது மாட்சி. - பல்லவி 

5.நம் கடவுளாகிய ஆண்டவருக்கு நிகர் யார்? அவர் போல வானளாவிய உயரத்தில் வீற்றிருப்பவர் யார்? 

6.அவர் வானத்தையும் வையகத்தையும் குனிந்து பார்க்கின்றார். - பல்லவி 

7.ஏழைகளைத் தூசியிலிருந்து அவர் தூக்கி நிறுத்துகின்றார்; வறியவரைக் குப்பை மேட்டிலிருந்து கைதூக்கி விடுகின்றார்; 

8.உயர்குடி மக்களிடையே - தம் மக்களுள் உயர்குடி மக்களிடையே -அவர்களை அமரச் செய்கின்றார். - பல்லவி
______ 

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி 

யோவா 15: 16 

அல்லேலூயா, அல்லேலூயா! நான்தான் உங்களைத் தேர்ந்து கொண்டேன். நீங்கள் கனி தரவும், நீங்கள் தரும் கனி நிலைத்திருக்கவும் உங்களை ஏற்படுத்தினேன், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

14 மே 2021, வெள்ளி, புனித மத்தியா - திருத்தூதர் விழா முதல் வாசகம் சீட்டு மத்தியா பெயருக்கு விழவே அவர் பதினொரு திருத்தூதர்களோடும் சேர்த்துக்கொள்ளப்பட்டார்.

14 மே 2021, வெள்ளி, புனித மத்தியா - திருத்தூதர் விழா 

முதல் வாசகம் 

சீட்டு மத்தியா பெயருக்கு விழவே அவர் பதினொரு திருத்தூதர்களோடும் சேர்த்துக்கொள்ளப்பட்டார். 
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 1: 15-17, 20-26 

ஒரு நாள், ஏறக்குறைய நூற்றிருபது சகோதரர் சகோதரிகள் ஒரே இடத்தில் கூடியிருக்கும்போது பேதுரு அவர்கள் நடுவே எழுந்து நின்று கூறியது: “அன்பர்களே, இயேசுவைக் கைது செய்தவர்களுக்கு வழிகாட்டிய யூதாசைக் குறித்துத் தூய ஆவியார் தாவீதின் வாயிலாக முன்னுரைத்த மறைநூல் வாக்கு நிறைவேறவேண்டியிருந்தது. அவன் நம்மில் ஒருவனாய் எண்ணப்பட்டு நாம் ஆற்றும் பணியில் பங்கு பெற்றிருந்தான். 

திருப்பாடல்கள் நூலில், ‘அவன் வீடு பாழாவதாக! அதில் எவரும் குடிபுகாதிருப்பாராக!’ என்றும் ‘அவனது பதவியை வேறொருவர் எடுத்துக்கொள்ளட்டும்!’ என்றும் எழுதப்பட்டுள்ளது. 

ஆகையால் ஆண்டவர் இயேசுவின் உயிர்த்தெழுதலுக்குச் சாட்சியாய் விளங்க, அவர் நம்மிடையே செயல்பட்ட காலத்தில் நம்மோடு இருந்த ஒருவரைச் சேர்த்துக்கொள்ள நாம் கூடிவரவேண்டியது தேவையாயிற்று. யோவான் திருமுழுக்குக் கொடுத்துவந்த காலமுதல் ஆண்டவர் இயேசு நம்மிடமிருந்து விண்ணேற்றமடைந்த நாள்வரை அவர் நம்மோடு இருந்திருக்க வேண்டும்.” 

அத்தகையோருள் இருவரை முன்னிறுத்தினார்கள். ஒருவர் யோசேப்பு என்னும் பெயர் கொண்ட பர்சபா. இவருக்கு யுஸ்து என்னும் பெயரும் உண்டு. மற்றவர் மத்தியா. 

பின்பு அவர்கள் அனைவரும், “ஆண்டவரே, அனைவரின் உள்ளங்களையும் அறிபவரே, யூதாசு திருத்தொண்டையும் திருத்தூதுப் பணியையும் விட்டகன்று தனக்குரிய இடத்தை அடைந்துவிட்டான். அந்த யூதாசுக்குப் பதிலாக யாரைத் தெரிந்தெடுக்க வேண்டும் என இந்த இருவருள் ஒருவரை எங்களுக்குக் காண்பியும்” என்று இறைவனிடம் வேண்டிக்கொண்டனர். 

அதன்பின் அவர்கள் சீட்டுக் குலுக்கினார்கள். சீட்டு மத்தியா பெயருக்கு விழவே அவர் பதினொரு திருத்தூதர்களோடும் சேர்த்துக் கொள்ளப்பட்டார். 

ஆண்டவரின் அருள்வாக்கு.

FRIDAY MAY 14, 2021 RESPONSORIAL Respons : The Lord placed him among the princes of his people. Or: Hallelujah. Psalm 112 (113)

FRIDAY MAY 14, 2021 

RESPONSORIAL 

Respons : 
The Lord placed him among the princes of his people. 
Or: Hallelujah. 

Psalm 112 (113)

Praise, servants of the Lord,
praise the name of the Lord!
Blessed be the name of the Lord,
now and for ever and ever! R 

From sunrise to sunset,
praise the name of the Lord!
The Lord rules over all peoples,
his glory rules the heavens. R 

Who is like the Lord our God?
He sits up there.
But he lowers his gaze
to the sky and to the earth. R 

From the dust he lifts up the weak; he raises the
poor from the ashes
to sit among the princes,
among the princes of his people. R
________________ 

🌿Gospel Acclamation. 

Hallelujah, Hallelujah! I chose you. I have made you to bear fruit and to bear the fruit you give, says the Lord. Hallelujah. 

____________________________.,

FRIDAY MAY 14, 2021 📖GOSPEL "It is not you who have chosen me, it is I who have chosen you" A Reading From The Holy Gospel According To John (15, 9-17)

FRIDAY MAY 14, 2021 

📖GOSPEL 

"It is not you who have chosen me, 
it is I who have chosen you" 

A Reading From The Holy Gospel According To John (15, 9-17) 
At that time, Jesus was saying to his disciples: “As the Father has loved me, so I have loved you. Remain in my love. If you keep my commandments, you will abide in my love, as I have kept my Father's commandments, and I abide in his love. I told you this so that my joy might be in you, and your joy might be perfect. My commandment is this: Love one another as I have loved you. There is no greater love than to lay down your life for those you love. You are my friends if you do as I command you. I no longer call you servants, for a servant does not know what his master is doing; I call you my friends, for all that I have heard from my Father I have made known to you. It was not you who chose me, it is I who have chosen you and appointed you to go and bear fruit, and your fruit to endure. So, whatever you ask the Father in my name, he will give it to you. This is what I command you: to love one another. " 

The Gospel of the Lord.

FRIDAY MAY 14, 2021 FIRST READING "The lot fell on Matthias, who was therefore associated by suffrage with the eleven Apostles" A Reading from the book of Acts of the Apostles (1, 15-17.20-26)

FRIDAY MAY 14, 2021 

FIRST READING 

"The lot fell on Matthias, who was therefore associated by suffrage with the eleven Apostles" 

A Reading from the book of Acts of the Apostles (1, 15-17.20-26) 
In those days Peter stood up among the brethren who were gathered in number of about one hundred and twenty people, and he declared: “Brethren, the Scripture must be fulfilled. In fact, through the mouth of David, the Holy Spirit had spoken in advance of Judas, who came to serve as a guide for the people who arrested Jesus: this Judas was one of us and had received his share of our ministry. It is written in the book of Psalms: Let his domain become a wilderness, and let no one dwell there, and again, Let another take his charge. Now, there are men who have accompanied us throughout the time that the Lord Jesus lived among us, from the beginning, during the baptism given by John, until the day when he was taken up from us. One of them must therefore become, with us, a witness of his resurrection. Two of them were introduced: Joseph called Barsabbas, then nicknamed Justus, and Matthias. Then we said this prayer: "You, Lord, who know all hearts, designate which of the two you have chosen so that it takes, in the apostolic ministry, the place which Judas deserted by going to the place which is now. hers. Lot was drawn between them, and the lot fell on Matthias, who was therefore associated by suffrage with the eleven Apostles. 

The Word of the Lord.
_________________________________.