Search This Blog

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

Tuesday, December 15, 2020

GOSPEL* _Go and tell John what you have seen and heard._ *🕯A reading from the Holy Gospel according to Luke 7:18-23*

*📖GOSPEL* 

_Go and tell John what you have seen and heard._ 

*🕯A reading from the Holy Gospel according to Luke 7:18-23* 
The disciples of John gave him all this news, and John, summoning two of his disciples, sent them to the Lord to ask, 'Are you the one who is to come, or are we to expect someone else?' When the men reached Jesus they said, 'John the Baptist has sent us to you to ask, "Are you the one who is to come or are we to expect someone else?" ' At that very time he cured many people of diseases and afflictions and of evil spirits, and gave the gift of sight to many who were blind. Then he gave the messengers their answer, 'Go back and tell John what you have seen and heard: the blind see again, the lame walk, those suffering from virulent skin-diseases are cleansed, and the deaf hear, the dead are raised to life, the good news is proclaimed to the poor; and blessed is anyone who does not find me a cause of falling.' 

*The Gospel of the Lord.* 

I believe in God, /... 

_______________





*

_Response: The heavens will send victory like snow._ *Psalms 85:9-10, 11-12, 13-14*

*𝗥𝗘𝗦𝗣𝗢𝗡𝗦𝗢𝗥𝗜𝗔𝗟* 

_Response: The heavens will send victory like snow._ 

*Psalms 85:9-10, 11-12, 13-14* 
I will listen to what the Lord God may be saying to me. For he will speak peace to his people, and to his saints, and to those who are being converted to the heart. 
So then, truly his salvation is near to those who fear him, so that glory may inhabit our land.  

Mercy and truth have met each other. Justice and peace have kissed. 
Truth has risen from the earth, and justice has gazed down from heaven.  

For so will the Lord give goodness, and our earth will give her fruit. 
Justice will walk before him, and he will set his steps upon the way.


_____ 

*🌿Before the gospel*
  
_Alleluia. Alleluia. Raise your voice, you evangelizer, and you will hear that the Lord my God is coming with power.  Alleluia._
__________

FIRST READING* _Yahweh, the Creator of the heavens -- he is God, who shaped the earth and made it,_ *A reading from the Prophet Isaiah 45:6-8, 18, 21-25*

_🌿Daily Reading for Wednesday December 16, 2020_ 

*FIRST READING* 

_Yahweh, the Creator of the heavens -- he is God, 
who shaped the earth and made it,_ 

*A reading from the Prophet Isaiah 45:6-8, 18, 21-25* 
so that it may be known from east to west that there is no one except me. I am Yahweh, and there is no other,
I form the light and I create the darkness, I make well-being, and I create disaster, I, Yahweh, do all these things. Rain down, you heavens, from above, and let the clouds pour down saving justice, let the earth open up and blossom with salvation, and let justice sprout with it; I, Yahweh, have created it!  For thus says Yahweh, the Creator of the heavens -- he is God, who shaped the earth and made it, who set it firm; he did not create it to be chaos, he formed it to be lived in: I am Yahweh, and there is no other. Speak up, present your case, let them put their heads together! Who foretold this in the past, who revealed it long ago? Was it not I, Yahweh? There is no other god except me, no saving God, no Saviour except me! Turn to me and you will be saved, all you ends of the earth, for I am God, and there is no other. By my own self I swear it; what comes from my mouth is saving justice, it is an irrevocable word: All shall bend the knee to me, by me every tongue shall swear, saying, 'In Yahweh alone are saving justice and strength,' until all those who used to rage at him come to him in shame. In Yahweh the whole race of Israel finds justice and glory. 

*The Word of the Lord.*

நற்செய்தி வாசகம்* _நீங்கள் கண்டவற்றையும் கேட்டவற்றையும் யோவானிடம் போய் அறிவியுங்கள்._ *🕯லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 07: 18-23*

*📖நற்செய்தி வாசகம்* 

_நீங்கள் கண்டவற்றையும் கேட்டவற்றையும் யோவானிடம் போய் அறிவியுங்கள்._ 

*🕯லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 07: 18-23* 
யோவானுடைய சீடர் இவற்றையெல்லாம் அவருக்கு அறிவித்தனர். யோவான் தம் சீடருள் இருவரை வரவழைத்து "வரவிருப்பவர் நீர்தாமா? அல்லது வேறொருவரை எதிர் பார்க்க வேண்டுமா?" எனக் கேட்க ஆண்டவரிடம் அனுப்பினார். அவர்கள் அவரிடம் வந்து, ";வர இருப்பவர் நீர்தாமா? அல்லது வேறொருவரை எதிர்பார்க்க வேண்டுமா?" எனக் கேட்கத் திருமுழுக்கு யோவான் எங்களை உம்மிடம் அனுப்பினார்" என்று சொன்னார்கள். அந்நேரத்தில் பிணிகளையும் நோய்களையும் பொல்லாத ஆவிகளையும் கொண்டிருந்த பலரை இயேசு குணமாக்கினார்; பார்வையற்ற பலருக்குப் பார்வை அருளினார். அதற்கு அவர் மறுமொழியாக, "நீங்கள் கண்டவற்றையும் கேட்டவற்றையும் யோவானிடம் போய் அறிவியுங்கள்; பார்வையற்றோர் பார்வை பெறுகின்றனர்; கால் ஊனமுற்றோர் நடக்கின்றனர்; தொழுநோயாளர் நலமடைகின்றனர்; காது கேளாதோர் கேட்கின்றனர்; இறந்தோர் உயிருடன் எழுப்பப்படுகின்றனர்; ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிக்கப்படுகின்றது. என்னைத் தயக்கம் இன்றி ஏற்றுக்கொள்வோர் பேறு பெற்றோர்" என்றார். 

*இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.*

பதிலுரைப் பாடல்* திருப்பாடல் 85:8-9, 10-11, 12-13 _பல்லவி: வானங்கள் பனிமழையென வெற்றியை அனுப்பட்டும்_

*🌿பதிலுரைப் பாடல்* 

திருப்பாடல் 85:8-9, 10-11, 12-13 

_பல்லவி: வானங்கள் பனிமழையென வெற்றியை அனுப்பட்டும்_ 
ஆண்டவராம் இறைவன் உரைப்பதைக் கேட்பேன்;
தம் மக்களுக்கு, தம் பற்றுமிகு அடியார்க்கு நிறைவாழ்வை அவர் வாக்களிக்கின்றார்;
அவர்களோ மடமைக்குத் திரும்பிச் செல்லலாகாது.
அவருக்கு அஞ்சி நடப்போர்க்கு அவரது மீட்பு அண்மையில் உள்ளது என்பது உறுதி;
நம் நாட்டில் அவரது மாட்சி குடிகொள்ளும்.-பல்லவி 

பேரன்பும் உண்மையும் ஒன்றையொன்று சந்திக்கும்;
நீதியும் நிறைவாழ்வும் ஒன்றையொன்று முத்தமிடும்.
மண்ணினின்று உண்மை முளைத்தெழும்;
விண்ணினின்று நீதி கீழ்நோக்கும்.-பல்லவி 

நல்லதையே ஆண்டவர் அருள்வார்;
நல்விளைவை நம்நாடு நல்கும்.
நீதி அவர்முன் செல்லும்;
அவர்தம் அடிச்சுவடுகளுக்கு வழி வகுக்கும்.-பல்லவி


*🌿நற்செய்திக்குமுன் வாழ்த்தொலி* 

_அல்லேலுயா அல்லேலுயா "நற்செய்தி அறிவிப்பவரே, உம் குரலை எழுப்பி இதோ என் தலைவராகிய ஆண்டவர் ஆற்றலுடன் வருகின்றார் என்று முழங்கிடுவீர்"-அல்லேலுயா_

16/12/2020 திருவருகை காலம்-மூன்றாம் வாரம், புதன்_ *முதல் வாசகம்* _விண்ணுலகைப் படைத்த ஆண்டவர் கூறுவது இதுவே; அவரே கடவுள்; மண்ணுலகைப் படைத்து உருவாக்கியவர் அவரே;_ *இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 45:6-8, 18, 21-25*

_🌿16/12/2020 திருவருகை காலம்-மூன்றாம் வாரம், புதன்_ 

*முதல் வாசகம்* 

_விண்ணுலகைப் படைத்த ஆண்டவர் கூறுவது இதுவே; அவரே கடவுள்; மண்ணுலகைப் படைத்து உருவாக்கியவர் அவரே;_ 

*இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 45:6-8, 18, 21-25* 
கதிரவன் உதிக்கும் திசை தொடங்கி மறையும் திசை வரை என்னையன்றி வேறு எவரும் இல்லை என்று மக்கள் அறியும்படி இதைச் செய்கிறேன்; நானே ஆண்டவர்; வேறு எவரும் இல்லை. நான் ஒளியை உண்டாக்குகிறேன்; இருளைப் படைக்கிறேன்; நல் வாழ்வை அமைப்பவன் நான்; தீமையைப் படைப்பவனும் நானே; இவை அனைத்தையும் செய்யும் ஆண்டவர் நானே. வானங்கள், பனிமழையென வெற்றியை அனுப்பட்டும்; மேகங்கள் மாரியென அதைப் பொழியட்டும்; மண்ணுலகம் வாய்திறந்து விடுதலைக்கனி வழங்கட்டும், அதனுடன் நீதி துளிர்க்கச் செய்யட்டும்; இவற்றைச் செய்பவர் ஆண்டவராகிய நானே. ஏனெனில் விண்ணுலகைப் படைத்த ஆண்டவர் கூறுவது இதுவே; அவரே கடவுள்; மண்ணுலகைப் படைத்து உருவாக்கியவர் அவரே; அதை நிலைநிறுத்துபவரும் அவரே; வெறுமையாய் இருக்குமாறு படைக்காது, மக்கள் வாழுமாறு அதை உருவாக்கினார். நானே ஆண்டவர், என்னையன்றி வேறு எவரும் இல்லை. அறிவியுங்கள்; உங்கள் வழக்கை எடுத்துரையுங்கள்; ஒன்றாகச் சிந்தித்து முடிவெடுங்கள்; தொடக்கத்திலிருந்து இதை வெளிப்படுத்தியவர் யார்? முதன் முதலில் இதை அறிவித்தவர் யார்? ஆண்டவராகிய நான் அல்லவா? என்னையன்றிக் கடவுள் வேறு எவரும் இல்லை; நீதியுள்ளவரும் மீட்பு அளிப்பவருமான இறைவன் என்னையன்றி வேறு எவரும் இல்லை. மண்ணுலகின் அனைத்து எல்லை நாட்டோரே! என்னிடம் திரும்பி வாருங்கள்; விடுதலை பெறுங்கள்; ஏனெனில் நானே இறைவன்; என்னையன்றி வேறு எவருமில்லை. நான் என்மேல் ஆணையிட்டுள்ளேன்; என் வாயினின்று நீதிநிறை வாக்கு புறப்பட்டுச் சென்றது; அது வீணாகத் திரும்பி வராது; முழங்கால் அனைத்தும் எனக்குமுன் மண்டியிடும்; நா அனைத்தும் என்மேல் ஆணையிடும். "ஆண்டவரில் மட்டும் எனக்கு நீதியும் ஆற்றலும் உண்டு" என்று ஒவ்வொருவனும் சொல்லி அவரிடம் வருவான்; அவருக்கு எதிராகச் சீறி எழுந்தவர் அனைவரும் வெட்கக்கேடு அடைவர். இஸ்ரயேலின் வழி மரபினர் அனைவரும் ஆண்டவரால் ஏற்புடையோராகப் பெற்று அவரைப் போற்றுவர். 

*இது ஆண்டவரின் அருள்வாக்கு*