Search This Blog

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

Thursday, November 19, 2020

📖𝗚𝗢𝗦𝗣𝗘𝗟_ _You made my house a burglar's den._*A reading from the holy Gospel according to Luke 19:45-48*

_📖𝗚𝗢𝗦𝗣𝗘𝗟_
                 
_You made my house a burglar's den._

*A reading from the holy Gospel according to Luke 19:45-48*
Then he went into the Temple and began driving out those who were busy trading, saying to them,  'According to scripture, my house shall be a house of prayer but you have turned it into a bandits' den.' He taught in the Temple every day. The chief priests and the scribes, in company with the leading citizens, tried to do away with him, but they could not find a way to carry this out because the whole people hung on his words.

*The Gospel of the Lord*

I believe in God, /...

_🌿𝗥𝗘𝗦𝗣𝗢𝗡𝗦𝗢𝗥𝗜𝗔𝗟__Respons. How sweet are your words to my tongue!_*Psalms 119:14, 24, 72, 103, 111, 131*

_🌿𝗥𝗘𝗦𝗣𝗢𝗡𝗦𝗢𝗥𝗜𝗔𝗟_

_Respons. How sweet are your words to my tongue!_

*Psalms 119:14, 24, 72, 103, 111, 131*
14 In the way of your instructions lies my joy, a joy beyond all wealth. 

24 Your instructions are my delight, your wishes my counsellors. 

72 The Law you have uttered is more precious to me than all the wealth in the world. 

103 How pleasant your promise to my palate, sweeter than honey in my mouth! 

111 Your instructions are my eternal heritage, they are the joy of my heart. 

131 I open wide my mouth, panting eagerly for your commandments.
______ 
_🌿Before the gospel_
 
*John 10: 27*

𝗔𝗟𝗟𝗘𝗟𝗨𝗜𝗔, 𝗔𝗟𝗟𝗘𝗟𝗨𝗜𝗔! My sheep listen to my voice. I know them too. They also follow me, says the Lord. 𝗔𝗟𝗟𝗘𝗟𝗨𝗜𝗔. 

_🍂Daily Reading for Friday November 20/11/2020_*𝗙𝗜𝗥𝗦𝗧 𝗥𝗘𝗔𝗗𝗜𝗡𝗚*_Brochure and ate it._*Revelation 10:8-11*

_🍂Daily Reading for Friday November 20/11/2020_

*𝗙𝗜𝗥𝗦𝗧 𝗥𝗘𝗔𝗗𝗜𝗡𝗚*

_Brochure and ate it._

*Revelation 10:8-11*
Then I heard the voice I had heard from heaven speaking to me again. 'Go', it said, 'and take that open scroll from the hand of the angel standing on sea and land.' I went to the angel and asked him to give me the small scroll, and he said, 'Take it and eat it; it will turn your stomach sour, but it will taste as sweet as honey.' So I took it out of the angel's hand, and I ate it and it tasted sweet as honey, but when I had eaten it my stomach turned sour. Then I was told, 'You are to prophesy again, this time against many different nations and countries and languages and kings.'

*It is a blessing from the Lord.*

*📖நற்செய்தி வாசகம்*_நீங்கள் என் இல்லத்தைக் கள்வர் குகையாக்கினீர்கள்._*லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 19: 45-48*

*📖நற்செய்தி வாசகம்*

_நீங்கள் என் இல்லத்தைக் கள்வர் குகையாக்கினீர்கள்._

*லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 19: 45-48*
அக்காலத்தில் இயேசு கோவிலுக்குள் சென்று அங்கு விற்பனை செய்து கொண்டிருந்தோரை வெளியே துரத்தத் தொடங்கினார். அவர்களிடம், `` `என் இல்லம் இறைவேண்டலின் வீடு' என்று மறைநூலில் எழுதியுள்ளதே; ஆனால் நீங்கள் இதைக் கள்வர் குகையாக்கினீர்கள்'' என்று கூறினார். இயேசு ஒவ்வொரு நாளும் கோவிலில் கற்பித்து வந்தார். தலைமைக் குருக்களும் மறைநூல் அறிஞர்களும் மக்களின் தலைவர்களும் அவரை ஒழித்துவிட வழி தேடினார்கள். ஆனால் என்ன செய்வது என்று யாருக்கும் தெரியவில்லை. ஏனென்றால் மக்கள் அனைவரும் அவர் போதனையைக் கேட்டு அவரையே பற்றிக்கொண்டிருந்தனர். 

*இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.*

_🌿பதிலுரைப் பாடல்_*திபா 119: 14,24. 72,103. 111,131*_பல்லவி: உம் சொற்கள் என் நாவுக்கு எத்துணை இனிமையானவை!_

_🌿பதிலுரைப் பாடல்_

*திபா 119: 14,24. 72,103. 111,131*

_பல்லவி: உம் சொற்கள் என் நாவுக்கு எத்துணை இனிமையானவை!_
14 பெருஞ்செல்வத்தில் மகிழ்ச்சி அடைவது போல்,
நான் உம் ஒழுங்குமுறைகளின்படி நடப்பதில் மகிழ்ச்சியுறுகின்றேன்.
24 ஏனெனில், உம் ஒழுங்குமுறைகள் எனக்கு இன்பம் தருகின்றன;
அவை எனக்கு அறிவுரை தருகின்றன. -பல்லவி


72 நீர் திருவாய் மலர்ந்த சட்டம், ஆயிரக்கணக்கான பொன்,
வெள்ளிக் காசுகளை விட எனக்கு மேலானது.
103 உம் சொற்கள் என் நாவுக்கு எத்துணை இனிமையானவை!
என் வாய்க்குத் தேனினும் இனிமையானவை. -பல்லவி


111 உம் ஒழுங்குமுறைகளை என்றும் என் உரிமைச் சொத்தாய்க் கொண்டுள்ளேன்.
ஆகவே, அவை என் இதயத்தை மகிழ்விக்கின்றன.
131 வாயை `ஆ'வெனத் திறக்கின்றேன்; பெருமூச்சு விடுகின்றேன்;
ஏனெனில், உம் கட்டளைகளுக்காக ஏங்குகின்றேன். -பல்லவி 

_________


*🌿நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி*

அல்லேலூயா, அல்லேலூயா! என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப் பின் தொடர்கின்றன, என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

_20/11/2020. ஆண்டின் பொதுக்காலம் 33 வெள்ளி_*முதல் வாசகம்*_திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம் 10: 8-11_

_20/11/2020. ஆண்டின் பொதுக்காலம் 33 வெள்ளி_

*முதல் வாசகம்*

_திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம் 10: 8-11_
சகோதரர் சகோதரிகளே, விண்ணகத்திலிருந்து நான் கேட்ட குரல் என்னிடம் மீண்டும் பேசி, ``கடலின்மீதும் நிலத்தின்மீதும் நிற்கின்ற வானதூதரின் கையில் உள்ள பிரிக்கப்பட்ட சுருளேட்டை நீ போய் வாங்கிக்கொள்'' என்றது. நானும் அந்த வானதூதரிடம் சென்று, அந்தச் சிற்றேட்டை என்னிடம் தரும்படி கேட்டேன். அவரோ, ``இதை எடுத்துத் தின்றுவிடு; இது உன் வயிற்றில் கசக்கும், ஆனால் வாயில் தேனைப் போல் இனிக்கும்'' என்று என்னிடம் சொன்னார். உடனே வானதூதரின் கையிலிருந்து அந்தச் சிற்றேட்டை எடுத்துத் தின்றேன். அது என் வாயில் தேனைப் போல் இனித்தது; ஆனால் அதைத் தின்றபொழுது என் வயிற்றில் கசந்தது. ``பல்வேறு மக்களினத்தார், நாட்டினர், மொழியினர், மன்னர் பற்றி நீ மீண்டும் இறைவாக்கு உரைக்க வேண்டும்'' என்று எனக்குச் சொல்லப் பட்டது. 

*இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.*