Search This Blog

Translate

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்
இன்றைய புனிதர்கள் பெயர்கள் ஒலிவடிவில் நமது youtube சேனலில்

Tuesday, November 3, 2020

November 4th : Gospel Anyone who does not carry his cross and follow me cannot be my disciple.A Reading from the Holy Gospel according to St.Luke 14:25-33

November 4th :  Gospel 

Anyone who does not carry his cross and follow me cannot be my disciple.

A Reading from the Holy Gospel according to St.Luke 14:25-33 
Great crowds accompanied Jesus on his way and he turned and spoke to them. ‘If any man comes to me without hating his father, mother, wife, children, brothers, sisters, yes and his own life too, he cannot be my disciple. Anyone who does not carry his cross and come after me cannot be my disciple.
  ‘And indeed, which of you here, intending to build a tower, would not first sit down and work out the cost to see if he had enough to complete it? Otherwise, if he laid the foundation and then found himself unable to finish the work, the onlookers would all start making fun of him and saying, “Here is a man who started to build and was unable to finish.” Or again, what king marching to war against another king would not first sit down and consider whether with ten thousand men he could stand up to the other who advanced against him with twenty thousand? If not, then while the other king was still a long way off, he would send envoys to sue for peace. So in the same way, none of you can be my disciple unless he gives up all his possessions.’

The Gospel of the Lord.

November 4th : Responsorial PsalmPsalm 26(27):1,4,13-14

November 4th : Responsorial Psalm

Psalm 26(27):1,4,13-14 
The Lord is my light and my help.

The Lord is my light and my help;
  whom shall I fear?
The Lord is the stronghold of my life;
  before whom shall I shrink?

The Lord is my light and my help.

There is one thing I ask of the Lord,
  for this I long,
to live in the house of the Lord,
  all the days of my life,
to savour the sweetness of the Lord,
  to behold his temple.

The Lord is my light and my help.

I am sure I shall see the Lord’s goodness
  in the land of the living.
Hope in him, hold firm and take heart.
  Hope in the Lord!

The Lord is my light and my help.

Gospel Acclamation Ps118:88

Alleluia, alleluia!
Because of your love give me life,
and I will do your will.
Alleluia!

November 4th : First ReadingWork for your salvation, for God is working in youA Reading from the Letter of St.Paul to the Philippians 2:12-18.

November 4th :  First Reading

Work for your salvation, for God is working in you

A Reading from the Letter of St.Paul to the Philippians 2:12-18. 
My dear friends, continue to do as I tell you, as you always have; not only as you did when I was there with you, but even more now that I am no longer there; and work for your salvation ‘in fear and trembling.’ It is God, for his own loving purpose, who puts both the will and the action into you. Do all that has to be done without complaining or arguing and then you will be innocent and genuine, perfect children of God among a deceitful and underhand brood, and you will shine in the world like bright stars because you are offering it the word of life. This would give me something to be proud of for the Day of Christ, and would mean that I had not run in the race and exhausted myself for nothing. And then, if my blood has to be shed as part of your own sacrifice and offering – which is your faith – I shall still be happy and rejoice with all of you, and you must be just as happy and rejoice with me.

The Word of the Lord.

நவம்பர் 4 : நற்செய்தி வாசகம்தம் உடைமையையெல்லாம் விட்டுவிடாத எவரும் என் சீடராய் இருக்க முடியாது.லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 25-33

நவம்பர் 4 : நற்செய்தி வாசகம்

தம் உடைமையையெல்லாம் விட்டுவிடாத எவரும் என் சீடராய் இருக்க முடியாது.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 25-33
அக்காலத்தில்

பெருந்திரளான மக்கள் இயேசுவோடு சென்றுகொண்டிருந்தனர். அவர் திரும்பிப் பார்த்து அவர்களிடம் கூறியது: “என்னிடம் வருபவர் தம் தந்தை, தாய், மனைவி, பிள்ளைகள், சகோதரர் சகோதரிகள் ஆகியோரையும், ஏன், தம் உயிரையுமே என்னை விட மேலாகக் கருதினால், அவர் என் சீடராயிருக்க முடியாது. தம் சிலுவையைச் சுமக்காமல் என் பின் வருபவர் எனக்குச் சீடராய் இருக்க முடியாது.

உங்களுள் யாராவது ஒருவர் கோபுரம் கட்ட விரும்பினால், முதலில் உட்கார்ந்து, அதைக் கட்டிமுடிக்க ஆகும் செலவைக் கணித்து, அதற்கான பொருள் வசதி தம்மிடம் இருக்கிறதா எனப் பார்க்க மாட்டாரா? இல்லா விட்டால் அதற்கு அடித்தளமிட்ட பிறகு அவர் கட்டி முடிக்க இயலாமல் இருப்பதைப் பார்க்கும் யாவரும் ஏளனமாக, ‘இம்மனிதன் கட்டத் தொடங்கினான்; ஆனால் முடிக்க இயலவில்லை’ என்பார்களே!

வேறு ஓர் அரசரோடு போர் தொடுக்கப்போகும் அரசர் ஒருவர், இருபதாயிரம் பேருடன் தமக்கு எதிராக வருபவரைப் பத்தாயிரம் பேரைக் கொண்டு எதிர்க்க முடியுமா என்று முதலில் உட்கார்ந்து சிந்தித்துப் பார்க்க மாட்டாரா? எதிர்க்க முடியாதெனில், அவர் தொலையில் இருக்கும் போதே தூதரை அனுப்பி, அமைதிக்கான வழியைத் தேடமாட்டாரா? அப்படியே, உங்களுள் தம் உடைமையையெல்லாம் விட்டுவிடாத எவரும் என் சீடராய் இருக்க முடியாது.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

நவம்பர் 4 : பதிலுரைப் பாடல்திபா 27: 1. 4. 13-14 . (பல்லவி: 1a)பல்லவி: ஆண்டவரே என் ஒளி; அவரே என் மீட்பு.

நவம்பர் 4 :  பதிலுரைப் பாடல்

திபா 27: 1. 4. 13-14 . (பல்லவி: 1a)

பல்லவி: ஆண்டவரே என் ஒளி; அவரே என் மீட்பு.
1.ஆண்டவரே என் ஒளி; அவரே என் மீட்பு; யாருக்கு நான் அஞ்சவேண்டும்? ஆண்டவரே என் உயிருக்கு அடைக்கலம்; யாருக்கு நான் அஞ்சி நடுங்க வேண்டும்? - பல்லவி

4. நான் ஆண்டவரிடம் ஒரு விண்ணப்பம் செய்தேன்; அதையே நான் நாடித் தேடுவேன்; ஆண்டவரின் இல்லத்தில் என் வாழ்நாள் எல்லாம் நான் குடியிருக்க வேண்டும், ஆண்டவரின் அழகை நான் காண வேண்டும்; அவரது கோவிலில் அவரது திருவுளத்தைக் கண்டறிய வேண்டும். - பல்லவி

13. வாழ்வோரின் நாட்டினிலே ஆண்டவரின் நலன்களைக் காண்பேன் என்று நான் இன்னும் நம்புகின்றேன்.
14. நெஞ்சே! ஆண்டவருக்காகக் காத்திரு; மன உறுதிகொள்; உன் உள்ளம் வலிமை பெறட்டும்; ஆண்டவருக்காகக் காத்திரு. - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

1 பேது 4: 14

அல்லேலூயா, அல்லேலூயா! கிறிஸ்துவின் பொருட்டுப் பிறர் உங்கள்மீது வசை கூறும்போது நீங்கள் பேறுபெற்றவர்கள். ஏனெனில், கடவுளின் மாட்சிமிக்க தூய ஆவி உங்கள்மேல் தங்கும். அல்லேலூயா.

நவம்பர் 4 : முதல் வாசகம்கடவுளே நீங்கள் செயல்படுவதற்கான விருப்பத்தையும் ஆற்றலையும் தருகிறார்.திருத்தூதர் பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 2: 12-18

நவம்பர் 4 :  முதல் வாசகம்

கடவுளே நீங்கள் செயல்படுவதற்கான விருப்பத்தையும் ஆற்றலையும் தருகிறார்.

திருத்தூதர் பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 2: 12-18
என் அன்பர்களே, நீங்கள் எப்பொழுதும் கீழ்ப்படிந்து வருகிறீர்கள்; நான் உங்களிடம் வந்தபோது மட்டுமல்ல, அதைவிட அதிகமாக உங்களோடு இல்லாத இப்பொழுதும் கீழ்ப்படிந்து வருகிறீர்கள். எனவே நீங்கள் அச்சத்தோடும் நடுக்கத்தோடும் உங்கள் மீட்புக்காக உழைத்து வாருங்கள். ஏனெனில், கடவுளே உங்களுள் செயலாற்றுகின்றார். அவரே தம் திருவுளப்படி நீங்கள் செயல்படுவதற்கான விருப்பத்தையும் ஆற்றலையும் தருகிறார்.

முணுமுணுக்காமலும், வாதாடாமலும் யாவற்றையும் செய்யுங்கள். அப்பொழுதுதான் நீங்கள் நெறிகெட்ட, சீரழிந்த தலைமுறையினரிடையே குற்றமும் கபடுமற்றவர்களாய்க் கடவுளின் மாசற்ற குழந்தைகளெனத் திகழ்வீர்கள்; உலகில் ஒளிரும் சுடர்களாகத் துலங்குவீர்கள். கிறிஸ்துவின் நாளில் நான் பெருமையடையும் வகையில், வாழ்வின் வார்த்தையைப் பற்றிக்கொள்ளுங்கள். வீணாக நான் ஓடவில்லை, வெறுமனே நான் உழைக்கவில்லை என்பது அதனால் தெளிவாகும்.

நம்பிக்கையால் நீங்கள் படைக்கும் பலியில் நான் என் இரத்தத்தையே பலிப்பொருளாக வார்க்கவேண்டியிருப்பினும் அது எனக்கு மகிழ்ச்சியே. அம்மகிழ்ச்சியை நான் உங்கள் அனைவரோடும் பகிர்ந்துகொள்கிறேன். அது போலவே நீங்களும் மகிழ்ச்சியடையுங்கள். உங்கள் மகிழ்ச்சியை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.